May 31, 2009

செல்வேந்திரன் வந்தாரு எங்க வூட்டு டி.வி.ல




நம்ம பதிவர் செல்வேந்திரன் வந்தாருங்க விஜய் டி.வி.யின். நீயா?நானா?வில்....
எனக்கு பாத்ததும் அவர்தானோன்னு ஒரு டவுட்டு.. இருந்தாலும் கன்ஃபார்ம் பண்ணிக்க இங்க வந்து வலையில் பாத்தா.. அதே சிரிப்பு.. ஆம. அவ்ரே தான்...

அவருடைய கவிதை ஆனந்த விகடனில் வந்ததாக கோபிநாத் சொன்னார்.. நானும் ஒன்னு ரெண்டு பின்னூட்டம் போட்டு இருக்கேன் அவ்ளோதான் அவருக்கும் நமக்கும். இதுவரைக்கும் எந்த வலைப் பதிவரையும் நான் நேரில் சந்திச்சு பேசியதில்லை... செல்வேந்திரன் அவர்களைத்தான் நான் முதன்முதலாக டி.வி.யில் பார்த்துள்ளேன்...

இவங்கள்ளாம் எழுதும் வலையுலகில் நானும் டீ ஆத்துவது எனக்குப் பெருமையே...

அப்புறம் இன்னொரு விஷயம்.. இப்போதான் அவருடைய தளத்துல அவரு நீயா நானா பத்தி சொல்லியத பாத்தேன்.. ஆஹா.. சொன்னா மாதிரியே மனுஷனுக்கு ஒரே உதரல்... ஆனா “எல்லாத்தடியும் உடச்சு பாத்துட்டே இருந்தா குடும்பத்துல சந்தோசம் நிலைக்குமான்னு “ அவர் சொன்னது ஒரு வாசகமானாலும் திருவாசகம்.

தமிழ் வலையுலகம் அடுத்த நிலைக்குப் போகிறது என்பதற்கான சான்று இது.. அந்த சந்தோசத்தை பகிரவே இந்தப் பதிவு...

செல்வேந்திரன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

நீங்களும் அவருடைய தளத்துலேயே சொல்லிடுங்க!!!

18 comments:

Suresh said...

மிக அழகாக பேசினார் பொட்டில் அடித்தார் போல் பேஸ்புக், ஆர்குட், பிளாக்னு

Suresh said...

ஆமாம் முன்னாடியே சொல்லி இருந்தார் பார்க்கவில்லையா நீ

அப்புறம் ஆமாம் நீ தமிழஷ் முதலில் வோட்டு பட்ட நல்லவன் மறக்க முடியுமா

selventhiran said...

அன்பின் கடைக்குட்டி, (அட! நானும்தான் கடைக்குட்டி) உங்கள் அன்பிற்கு நன்றி.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com

லோகு said...

//தமிழ் வலையுலகம் அடுத்த நிலைக்குப் போகிறது என்பதற்கான சான்று இது..//

உண்மை..

லோகு said...

அவரோடு ஒரு முறை இணையத்தில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.. (Orkut ல Friend ஆக்கும்)...மிக இனிமையாக பேசினார்..

வால்பையன் said...

வாழ்த்த வயதில்லை!
அதனால் சலாம் போட்டுகிறேன்!

Thamira said...

இவங்கள்ளாம் எழுதும் வலையுலகில் நானும் டீ ஆத்துவது எனக்குப் பெருமையே...
// ரசித்தேன்.. நானும்தான் ரொம்ப நாளா ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக்கினுருக்கேன்.

கார்க்கிபவா said...

/ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக்கினுருக்கே//

அட ஆர்டர் பண்னேன்.. நீங்க லைட்டா போடுவ்வேன் ஸ்ராங்கா போடுவேன்.. ஆனா கடனா போட மாட்டேன்னா நான் என்ன செய்றது?

வணங்காமுடி...! said...

ஐயோ ஐயோ... ஆதிமூலகிருஷ்ணன் மாதிரி ஆளுங்களே இப்படி சொன்னா, நேத்து பொறந்த குழ்ந்தை நானெல்லாம் எங்க போயி முட்டிக்கறது...

ஆனாலும் அநியாயத்துக்கு அடக்கம் டா சாமீய்...

கடைக்குட்டி, செல்வேந்திரன் பற்றிய செய்திக்கு நன்றி. நான் இருக்கும் நாட்டில் விஜய் டிவி பார்க்க வழி இல்லை. இப்படி தெரிந்து கொண்டால் தான் உண்டு.

சுந்தர்
ருவாண்டா
கிழ்க்கு ஆப்பிரிக்கா

கடைக்குட்டி said...

நன்றி சக்கரை

**************************

கடைக்குட்டி said...

செல்வேந்திரன் அண்ணா.. வருகைக்கு நன்றி..

(சேம் பிஞ்ச்.. நீங்களும் நானும் கடைக்குட்டி..)

கடைக்குட்டி said...

கட்டபொம்மன்

லோகு

வருகைக்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

வாலு நெக்கலுக்கு ஒரு சலாம் :-)

கடைக்குட்டி said...

தாமிரா என்னும் ஆதி என்னும் பிரபல பதிவரே...


ஆனாலும் இவ்வளுவு தன்னடக்கம் ஆகாது;..

கடைக்குட்டி said...

கார்க்கி கலாசல் கமெண்டுக்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

வணங்காமுடி அண்ணே..

உங்களுக்கு புது செய்தியா???

ஓ.கே. ஓ.கே..

Chandru Manickavasagam said...

நட்பைப் பற்றி அவர் பேசியது அனைத்தும் சரிதான் ஆனால் ஃபேஸ்புக், ஆர்குட் தவிர. காரணம், உபயோகப்படுத்திக்கொள்ளும் விதத்தில்தானே அனைத்தும் இருக்கிறது..? பல வருடங்களுக்கு முன் சூழ்நிலை காரணமாக பிரிந்துபோன நண்பர்களைத் திரும்பப்பெற்றிருக்கிறேன் நான். புதிதாகக் கிடைத்த நண்பர்கள் தங்களுக்குக் கிடைத்த மிக நல்ல தகவல்களை வெளியிடுகிறார்கள். இதைவிட வேறென்னவேண்டும் திரு.செல்வேந்திரன் அவர்களே..? பெண்ணைப் கற்பழிக்க முயற்சிப்பவனையும் நட்பாக பழகத் துவங்குபவனையும் ஒரேமாதிரி சித்தரிப்பது ஜீரணிக்கமுடியாதது.