[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டிக்கு என் பங்களிப்பு]
நேரம் :- பள்ளிகள் முடிந்து அரைமணிநேரம் ஓடி இருந்தது.
சரி,இனி கதைக்குள் போவோம்.அழகப்பன் வாத்தியார்,தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் யாரென்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பிலை.ஏனென்றால் அவரை அழகப்பன் வாத்தியார் என்றால் யாருக்கும் தெரியாது. அவரது மனைவியைத் தவிர. “ஜம்போ மாமா” என்றால் அந்தப் பகுதி முழுவதும் பிரபலம்.
அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.குடையைப் பிடித்துக்கொண்டு,பின் ஒரு கூடையுடன் அதில் புத்தகங்கள் மற்றும் இன்னபிறவுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். என்ன? கற்பனை செய்து கொண்டீர்களா?? நிற்க அவர் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார். அதையும் சேர்த்து கற்பனை செய்து கொள்ளுங்கள்..
ஜம்போ மாமா மித வேகத்தில் தன் மிதவையில் வந்து கொண்டிருந்தார்.. வீடை அடைந்தார். சைக்கிளை விட்டுவிட்டு வீடு நோக்கி நடந்தார்.
அங்குதான் நம் கதையின் முதல் திருப்பம். the first twist.. இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் அவர் வீட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன்.
“யேய் !! யாருடா நீ ??” -ஜம்போமாமா
“அங்கிள் வீடு தெரியாம மாறி வந்துட்டேன் ஸாரி அங்கிள்..”-அந்த வாலிபன்
“என்னடா சொல்ற??” -ஜ.மா.
“யெஸ் அங்கிள் நெம்பர் கன்.. கண்ஃபூசன் அங்கிள்.. அங்கிள் பாய் அங்கிள்” அ.வா.
பதட்டமான அவன் நடையை கட்டினான்.
“அங்கிள் வீடு தெரியாம மாறி வந்துட்டேன் ஸாரி அங்கிள்..”-அந்த வாலிபன்
“என்னடா சொல்ற??” -ஜ.மா.
“யெஸ் அங்கிள் நெம்பர் கன்.. கண்ஃபூசன் அங்கிள்.. அங்கிள் பாய் அங்கிள்” அ.வா.
பதட்டமான அவன் நடையை கட்டினான்.
ஜம்போ மாமாவின் வீட்டில் ஒருவரும் இல்லை.மனைவியும்,மகனும் ஊருக்கு சென்றிருந்தனர்.ஜம்போ மாமா வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அப்போதுதான் ஒ.பொ.சொ.வே. கதையின் இரண்டாப் திருப்பம்.. the second twist...
வீட்டினுள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் உலவிக் கொண்டிருந்தான்.டி.வி.யின் அருகில்.. ஜம்போ மாமாவின் முகம் இப்போது எப்பெடி இருந்தது என்று என்னால் விவரிக்க இயலவில்லை.. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அந்த முகத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா எனத்ட் தெரியவில்லை.. அது பயமா? வீரமா? கோபமா? எந்த உணர்ச்சியைக் காட்டுகிறார் என்றே புரியவில்லை...
சரி அடுத்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம். குடையை வைத்து அவன் மண்டையிலேயே ஒரு அடி..
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஸார்ர்ர்ர்..........”
“யாருடா நீ??” - மாமா
“கேபிள் ஆப்பெரேட்டர் ஸார்.. உங்க டி.வி.யில சேனல் சரியா வரலைன்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்துருந்தீங்க “
“ஆமா .. அதுக்கு ஏண்டா இப்பிடி வந்து பாக்குற ?? யாரும் வீட்ல இல்ல.. ஆமா.. வீடு பூட்டி இருக்குமே எப்பிடி வந்த நீ ??”
“மொட்ட மாடி வழியா ஸார்...”
“அவ்ளோ அவசரம்னு நான் கம்ப்ளெய்ண்ட் தர்லியே.....”
“ஸார்॥ உங்க கம்ப்ளெய்ண்ட நான் சரி பண்ணிட்டேன்னு சொல்லிட்டேன்॥ இன்னைக்கு சாய்ங்காலம் எங்க மொதலாளி உங்ககிட்ட காசு வாங்க வரனும்னு சொல்லி இருந்தாரு।அவருக்கு நான் வரலைன்னு தெரிஞ்சா என் வேல காலி அதான் வந்து இப்பவே சரி பண்ணிட்டு போயிடலாம்னு...”
“அவசரமா வந்தியா???”
“மொட்ட மாடி வழியா???”
“ஆ....”
“சே!! வாய மூடுடா ராஸ்கல்.. இன்னிரு தடவ நான் உன்ன இங்க பாக்கக்கூடாது...”
அவன் விட்டால் போதுமென ஓடினான்,,,,
பாத்தீங்களா மாமாவோட வீரத்த.. ஐயோ.. அவர் பீரோ தெறந்து இருக்கே.. துணியெல்லாம் கலைஞ்சு கெடக்குதே.. மாமா.. மாமா.. யோவ்... என்ன பாக்கவே மாட்டேங்குறார்.. யோவ் ஜம்போ உம்ம பீரோவ பாருமய்யா... ஹ்ம்ம்.. குளிக்க போய்டார்.. நாம எவ்ளோ கத்தியும்பிரயோசனம் இல்லை...
குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தார்.. “ஆஆஆஆ....”
காட்சி 2:- காவல் நிலையம்
காட்சி 3:- இருவர் கைது.. உடனடியாக....
காட்சி 4:- சந்தேகத்தின் ”பலனை” இருவரும் அனுபவித்துக் கொண்டிருக்க ...
ஜம்போ மாமா பள்ளிக்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்.. மணி :8:32
தொலைபேசி சிணுங்கியது...
மறுமுனையில் அவர் மனைவி...
“ஏங்க .. வந்த இடத்துல எங்க அம்மாவுக்கு heart attack கையில பணமில்லை.. உடனடியா தேவைப்பட்டதால பாபுவ அனுப்பி என் நகையை எடுத்துக்கிட்டேங்க.. .. இப்ப அம்மாவுக்கு உடம்பு பரவாயில்லீங்க...”
‘அடிப்பாவி..’ என்ன சொவதென்றே தெரியவில்லை மாமாவுக்கு.. சாதாரண விசாரிப்புகளுடன் ஃபோனை துண்டித்தார். அவளிடம் ஏதும் சொல்லவில்லை நேற்று நடந்ததைப் பற்றி...
அவர் குளிக்கப் போய்விட்டார்.. சரி வாங்க நாம ரோட்ல காத்துருக்கலாம் மாமாவுக்காக...
மணி 8:52
வீட்டை விட்டு வெளியே வந்த மாமா நேராக பள்ளிக்குச் சென்றார்...
“என்ன மனுஷன்யா இவன்...” என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது...
அங்கு போய் ஜம்போ மாமா எடுத்த பாடம்
“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்”
”டிஸ்கி “
ஐயோ!! மாமாவ தப்பா நெனச்சுட்டீங்களா.. மாமி ஃபோன் பண்ணியது 8:32 க்கு மாமா வீட்டை விட்டு வெளியே வந்த போது மணி 8:52
அதற்கு நடுவில் அவரே காவல் நிலையத்துக்கு அலைபேசி நடந்த தப்ப ஒத்துக்கிட்டாரு...
அந்த இரண்டு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.
இது தெரியாம ஜம்போ மாமாவ திட்டிட்டீங்களே????
இதற்குதான் நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க!!!
தீர விசாரிக்காமா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
23 comments:
நெம்ப நாளா யோசிச்சு போட்ட பதிவு..
1500 கெடக்குதோ இல்லியோ...
இதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டினால் என் எழுத்து மேம்படும்
:-)
இது உங்க சொந்த கதையா?
மொட்டைமாடி ஏறி கேபிள் ரிப்பேர் பாப்பிங்களா?
அதான் ஜம்போமாமா ஆப்பு வச்சிருக்காரு!
வாழ்த்துக்கள்
1500 க்கு
வந்தாச்சு படிச்சிட்டு வரேன்
//. the first twist.. இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் அவர் வீட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன்.//
வேற மாதிரி எதிர்பார்த்தேன்.
//யெஸ் அங்கிள் நெம்பர் கன்.. கண்ஃபூசன் அங்கிள்.. அங்கிள் பாய் அங்கிள்” அ.வா.//
இது உறுதி படுத்தியது.
//இன்னைக்கு சாய்ங்காலம் எங்க மொதலாளி உங்ககிட்ட காசு வாங்க வரனும்னு சொல்லி இருந்தாரு.. அதான் வந்து இப்பவே சரி பண்ணிட்டு போயிடலாம்னு...”//
தொழில்பக்தின்னா இப்படியெல்ல இருக்க வேண்டும்
//சந்தேகத்தின் ”பலனை” இருவரும் அனுபவித்துக் கொண்டிருக்க//
அனுபவிக்கறாங்களா..,'
அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சு தல
sssssssss..... ippave kanna kattuthe
ரொம்ப நல்ல இருக்கு, என ஓட்டை குத்திட்டேன்.
கதை நல்லா இருக்கு
நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்
நான் இமெயில் மூலம் எழுதுவதால் அனைவரின் போஸ்டிற்கு பின்னூட்டம் இடமுடியவில்லை ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனைவரின் வலைப்பூவிற்கும் சென்று என்னுடைய ஜனநாயக கடமை விளமப்ர கிளிக் செய்கிறேன். மன்னிக்கவும்
படிச்சாச்சு.... அப்பரம்..
உங்களுக்கு பிடித்த சினிமா நட்சத்திரங்களின் கல்யாணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை
காண கிளிக் http://cinemadhamaka
.blogspot.com/
நல்லாயிருக்கு கதை!!
;)) கலக்கல் ;)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))
அப்புறம் உங்க வலைப்பக்கத்தை திறந்த கூட ஒன்னும் வேற வருது அது இன்னாதுன்னு கொஞ்சம் பாருங்கள் ;)
//இது உங்க சொந்த கதையா?//
வாலுத்தனமா கேப்பீங்களே????
முழுதாக படித்ததற்க்கு நன்றி :-)
Suresh said...
//வந்தாச்சு படிச்சிட்டு வரேன்//
படிச்சுட்டு அப்டியே போய்டீங்களே தல????
மெய் மறந்து போய்டீங்களோ??
டாக்டரே...
விரிவான அலசலுக்கு நன்றி :-)
பித்தன்
சித்து
வடிவேலன் . ஆர்
முரளிகண்ணன்
vidhoosh
Mrs.Menagasathia
கோபிநாத்
***************************
வருகைக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றி
**********************************
பரிசு கெடச்சா கண்டிப்பா பின்னூட்டமிட்ட எல்லா மக்களுக்கும் ட்ரீட் வைக்கப்படும்.
நல்லா எழுதியிருக்கீங்க க.கு....!
அய்ய்ய்யோ போட்டி அதுகமாகுதோ...!
அப்போ நானு..?!?!
nalla iruku intha kathai ,, ithu pol thodara vaalthukal
Post a Comment