
(டிஸ்கியை கண்டிப்பாக படிக்கவும்)
பாம்பே மாடல்
தெலுங்கு வில்லன்
மலையாளப் படக் கதை
ஹிந்தி தயாரிப்பாளர்
எல்லோரும் சேர்ந்து எடுத்தனர் ---- “தமிழ்ப் படம்”
****************************************************************

இறைவன் இருக்கான்னு நெனச்சா
நீ - நம்பிக்க
இல்லன்னு நெனச்சா
நீ - நகுந்துக்க
இவ்ளோதான் லைஃப்ஃபு...
இதுல ஏன் மாமா ஃபைட்டு ???
*******************************************************************

ஆனந்த விகடனுக்கு எழுதினேன் கவிதை.
அதில் வரவில்லை,
அன்பே !! உனக்கென எழுதினேன் அதை,
நீ என்னைத்
திருப்பித்-தரவில்லை
*******************************************************************
கண்டபடி இப்பிடி டைப்பிட்டேன்
ஒரு டைப்பா இருக்குற இது - என்ன டைப்புன்னு
கண்டுபுடிக்கிற பொறுப்பை உங்ககிட்ட குடுத்துட்டேன்
********************************************************************
டிஸ்கி
(இந்தப் படைப்புக்கு (??) முதல் பின்னூட்டமிடும் பதிவர் இதைப் போன்றே ஒரு தொடர் கவுஜ (கண்டமேனிக்கி கிருக்கணும்) எழுத கேட்டுக்கொள்கிறேன்)