
பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...
பசங்க- - லாப நஷ்ட கணக்கு
நடிச்ச வாண்டுகளுக்காக-----------20
படத்தில் இருந்த உயிருக்காக-----10
தைரியமான தயாரிப்புக்கு----------10
கதைக் களத்திற்க்கு-----------------15
சூப்பர் பன்ச்களுக்காக --- ----------10
----------------------------------------------------------
மொத்தம்-----------------------------65
-----------------------------------------------------------
படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ.55...
தைரியமான தயாரிப்புக்கு----------10
கதைக் களத்திற்க்கு-----------------15
சூப்பர் பன்ச்களுக்காக --- ----------10
----------------------------------------------------------
மொத்தம்-----------------------------65
-----------------------------------------------------------
படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ.55...
கணக்கு பார்த்தா லாபம் தான்னுதெரியுது.
எப்பவும் காதல் இல்லாட்டி சண்ட கதைய பாத்து பாத்து பொர் அடிச்சி போன நம்ப
ஜனங்களுக்கு இந்த படம் ஒரு வரம் தான்....படத்தோட கதைய சொல்றது நமக்கு புடிக்காது...
போட்ட காசுக்கு படம் பரம திருப்தி..அதுக்கு காரணமான விஷயங்கள் இங்கே...
ஃப்ரெஷ்ஷான தமிழ் வசனங்கள் சூப்பர்.. (அத என்னமா இங்லீசுல சொன்னே பாத்தீங்களா???)
திட்றதுக்கு கூட புதிய வார்த்தைகளை பயன்படுத்தி
இருக்காங்க...உதாரணத்துக்கு வாத்தியார் , பசங்கள கெளவன் பொண்டாட்டி,கெளவி புருஷன்னு கூப்புட்றது... (இது ஒரு சோறுதான்....)
காதல் இல்லாம ஒரு படம் இருக்குமா பாஸூ ?? இந்த படத்துல வரும் காதலும் இயல்பா இருக்கு..
சின்னப் பசங்க சண்டய மட்டும் காட்டாம... சிலபல மெசேஜ்கள் ஆங்காங்கே.. பளிச்...
படம் தொடக்கத்துலெயும் ..முடியும் போதும் வரும் பஞ்ச் ... அருமை... பக்கோடா நறுக்...
அந்த புஜ்ஜிக்குட்டியும் ,ரெண்டு வயசு வாண்டும்..யப்பா.... இந்தியா ஒளிர்கிறது..
பாடல்கள் சுமார்தான்... எடிட்டிங்,ஒளிப்பதிவு உழைப்பு தெரியுது...
டைரக்டர் பாண்டியராஜ்,தயாரிப்பாளர் சசிக்குமார்...தமிழ் சினிமா 150 வயது ஆனாலும் நினைவில் கொள்ளும்...
ரொம்ப நாள் கழித்து ஒரு படத்துக்கு முதல்லேர்ந்து முடிவு வரை claps....
பசங்க -- >’செம’ங்க !!