May 01, 2009

பசங்க- - லாப நஷ்ட கணக்கு !!


பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...


பசங்க- - லாப நஷ்ட கணக்கு

மேட்டர்------------------------------ரூ

நடிச்ச வாண்டுகளுக்காக-----------20
படத்தில் இருந்த உயிருக்காக-----10
தைரியமான தயாரிப்புக்கு----------10
கதைக் களத்திற்க்கு-----------------15
சூப்பர் பன்ச்களுக்காக --- ----------10

----------------------------------------------------------
மொத்தம்-----------------------------65
-----------------------------------------------------------


படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ.55...
கணக்கு பார்த்தா லாபம் தான்னுதெரியுது.

எப்பவும் காதல் இல்லாட்டி சண்ட கதைய பாத்து பாத்து பொர் அடிச்சி போன நம்ப
ஜனங்களுக்கு இந்த படம் ஒரு வரம் தான்....படத்தோட கதைய சொல்றது நமக்கு புடிக்காது... 
போட்ட காசுக்கு படம் பரம திருப்தி..அதுக்கு காரணமான விஷயங்கள் இங்கே...

ஃப்ரெஷ்ஷான தமிழ் வசனங்கள் சூப்பர்.. (அத என்னமா இங்லீசுல சொன்னே பாத்தீங்களா???)
திட்றதுக்கு கூட புதிய வார்த்தைகளை பயன்படுத்தி
இருக்காங்க...உதாரணத்துக்கு வாத்தியார் , பசங்கள கெளவன் பொண்டாட்டி,கெளவி புருஷன்னு கூப்புட்றது... (இது ஒரு சோறுதான்....)


காதல் இல்லாம ஒரு படம் இருக்குமா பாஸூ ?? இந்த படத்துல வரும் காதலும் இயல்பா இருக்கு..

சின்னப் பசங்க சண்டய மட்டும் காட்டாம... சிலபல மெசேஜ்கள் ஆங்காங்கே.. பளிச்...

படம் தொடக்கத்துலெயும் ..முடியும் போதும் வரும் பஞ்ச் ... அருமை... பக்கோடா நறுக்...

அந்த புஜ்ஜிக்குட்டியும் ,ரெண்டு வயசு வாண்டும்..யப்பா.... இந்தியா ஒளிர்கிறது..

பாடல்கள் சுமார்தான்... எடிட்டிங்,ஒளிப்பதிவு உழைப்பு தெரியுது...

டைரக்டர் பாண்டியராஜ்,தயாரிப்பாளர் சசிக்குமார்...தமிழ் சினிமா 150 வயது ஆனாலும் நினைவில் கொள்ளும்...

ரொம்ப நாள் கழித்து ஒரு படத்துக்கு முதல்லேர்ந்து முடிவு வரை claps....

பசங்க -- >’செம’ங்க !!



12 comments:

வால்பையன் said...

என்னாங்க இது பின்னூட்டம் போடும் முன்னாடியே நன்றி சொல்றிங்க!

எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க!

லோகு said...

எல்லாரும் நல்லா இருக்குன்னுதா சொல்றாங்க..


தனியா போனயா.. இல்ல..................... :)

சித்து said...

உங்கள் பதிவில் "Malware Detected" "Trojan Horse Detected" என்று காலை முதல் நான் ஒவ்வொரு முறை நுழைய முற்படும் பொழுது என் Anti Virus தடுத்து விடுகிறது,
"http://gumblar.cn/rss/?id=
JS:Downloader-AC [Trj]
http://www.ntamil.com/vote/url.php?url=http://kadaikutti.blogspot.com/2009/05/blog-post.ஹ்த்ம்ல்
JS:Redirector-H [Trj]" இதை என்னவென்று பார்க்கவும். உங்கள் கணக்கு சரி தான்.

ஜெட்லி... said...

கடைகுட்டி உங்க கணக்கு சூப்பர்....
எனக்கும் அந்த புஜ்ஜி பையனை தான் ரொம்ப பிடிக்கும்.
அவன் சொல்லும் வசனம் "எப்புடி" அழகான மழலை மொழி.

sakthi said...

appa nalla erukku nu soluthega

sari theatre la pathudalam

sarithane nan solrathu

ஆதவா said...

உங்கள் தளத்தில் வைரஸ் இருக்கிறது!!! இருந்தும் தைரியமா ஓபன் பண்ணிட்டேன்!!!

வித்தியாசமான விமர்சனம்,... கலக்கல் பாஸ்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல என்னோட கம்யூட்டர்ல இருந்தும் உங்க தளத்துக்கு வந்தா பெரும்பாலும் ஹேங் ஆகிவிடுகிறது. அதேமாதிரி ஆகும் இன்னொரு தளம் சக்கரகட்டி அவர்கிட்டயும் சொல்லனும் நெனச்சா இப்ப கிடைச்ச இங்க கிடச்ச வாய்ப்புகூட அங்க கிடைக்கல.. அதனாலதான் பின்னூட்டம் கூட மிஸ்ஸிங்

Santhosh said...

அப்ப படத்தை பாக்கலாமா? படம் நல்லா இல்லாட்டி ரணகளமாயிடும் ஆமா சொல்லிப்புட்டேன் :)..

நல்ல விமர்சனம்..

Raju said...

அப்பொ படம் பாத்துருவோம்..!

Prabhu said...

சசி குமார் படங்கள் எல்லாம் நல்லாருக்கே இதுவரைக்கும். ரெண்டுதானங்குறீங்களா?

நம்ம ஊரு ஆளுல்ல, இப்படிதான் லிப்ட் கொடுக்கனும்.

Suresh said...

மச்சான் டைடிலும் ஸ்டில்ஸும் பர்ர்த்து ரொம்ப எதிர் பார்த்துகிட்டு இருந்தேன் நீங்களும் சொல்லிட்டிங்க வெரி குட் பார்ப்போம்

கடைக்குட்டி said...

வந்தவங்க அத்தன பேருக்கும் நன்றி!!! (ஏன் இப்பிடி short ஆ சொல்றேன்னா... உங்க எல்லார் கடயிலயும் மொய் வெச்சுட்டேன் நான்:-)