Showing posts with label டிவி. Show all posts
Showing posts with label டிவி. Show all posts

November 25, 2009

தமன்னாவும்.. சில ஹெச்.ஆர்.களும்...


சில ஹெச்.ஆர்கள்தான் பதிவுக்கான மேட்டர்.. போலாமா??

நான் இதுவரைக்கும் பெரிய CMM 5லெவல் ஹெச்.ஆர். எல்லாம் பார்த்தது இல்லீங்க.. அட்டெண்ட் பண்ணது எல்லாம் சில சுமாரான ஹெச்.ஆர்கள்...

உதாரணமா ஒன்னு சொல்லலாம்.. கெல்லீஸ்ல.. அபிராமிகிட்ட.. ஒரு கம்பேபேபேனி இருக்கு.. அங்கயும் வேல தேடி போனோம் நண்பர்கள் சகிதம்..
கம்பேனி அட்ரெஸ் கண்டுபுடிச்சு போனா அங்க ஒருமளிகை கடை இருக்கு,,, அரே பாபாஜி இது என்ன சோதனைன்னு வானத்த நிமிர்ந்தா...

மூணாவது மாடில கம்பெனிக்கான போர்டு இருக்கு.. பாபா டபுள் க்ரேட்ன்னு சொல்லிட்டு நடைய கட்டினோம்.. மாடி ஏறு வழியில்..

நான் :” மச்சான்... கம்பேபேபேனி அட்டகாசமான எடத்துல இருக்கு

நண்பன்: “ஆமா மச்சான்..”

நான்: இங்கெல்லாம் என்னடா சம்பளம் தரப் போறாங்க.. தம்பி மாச கடைசில உப்பு புளி கீழ கடைல வாங்கிக்கங்கப்பான்னு சொல்வாங்கடா

நண்: அந்த மாமி மெஸ்ல இட்லி சொல்லிட்டு சில்ற நீ கொடுத்துடு ராஜான்னு சொல்வாய்ங்களே அந்த மாதிரியா..

நான்: போற வர்றதுக்கு பஸ்பாஸ் தருவாங்கடா.. அதுக்கு மேல என்ன கேக்குறது..

சிரிப்பை அடக்க முடியவில்லை.. பழைய பாழடைந்த பங்களா மாதிரி.. மோகினி இருக்குமோ அது இதுன்னு கலாய்த்தவாறே 3வது மாடியை அடைந்தோம்..

அங்க போனா அதுக்கு மேல காமெடி.. ஒருத்தன் வெய்டிங்கி இண்டர்வியூக்கு.. நாங்களும் அவனுக்கடுத்து அமர்ந்தோம்.. ஒரு தடுப்பு மாதிரி போட்டிருந்தாங்க.. அதுக்கு உள்ள இருந்து வெளிப்பட்ட பெண் அந்தப் பையனை உள்ளெ அழைத்தது.. ஆனால் அந்தப் பெண்தான் ஹெச்.ஆர்.. கூப்பிடக்கூட அளில்லை.. அட என்னட இதுன்னு நொந்துட்டோம்..

அடுத்து எங்கள் முறை.. நான் உள்ளே போனேன்... செம திமிரா என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு.. உள்ளே போய் 15 நிமிஷம் கதரகதர கேள்வி கேட்டாங்க.. ஒரு மண்ணுக்கும் பதில் தெரியல.. சமாளிக்க கூட முடியல..

எனக்கடுத்து என் நண்பன் முறை.. செத்துட்டான்.. உட்டா போதும்னு ஓடி வந்தோம் அங்கருந்து..

இத ஏன் சொல்றேன்னா.. ஹெச்.ஆர்ங்கிறவங்க எங்க இருந்தாலும் இப்பிடிதான்.. சில பேர் இங்க்லீஷ் பேசுறேன்னு நம்மளவிடமட்டமா பேசி மானத்த வாங்கிக்குவாங்க..

ஒரு கம்பேபேபேனி ஹெச்.ஆர். என் குடும்பத்தை பற்றி மட்டும் கேட்டு விட்டு நல்லா மொக்க போட்டு அனுப்சாங்க... nothin els...

நான் பாத்தவங்கள்ளயே செம கெத்துகளும் உண்டு.. இந்த மாதிரி குடுசைகளில் பார்த்த கெத்துகள் காலத்துக்கும் மறக்காது..

ஹெச்.ஆரை சமாளிக்க என்ன வழி குறிப்பாக புதியவர்கள்..
1* உண்மைய பேசுங்க..
2*நெறயா பேர மீட் பண்ணுங்க.. இன்பர்மேசன் ஸ் வெல்த் தலைவா.. நிறயா அனுபவத்தை சேத்துக்கங்க .. க ல க் க லா ம்.:-)
********************************************************



சரி தமன்னாவுக்கு என்னன்னு கண்ணும் ஜொள்ளுமா கேக்கும் நண்பர்களுக்காக.. இது சீரியஸ் மேட்டர். பகிர்ந்து கொள்ள தோணியது..போன ஞாயித்துக்கிழமை.. சன் டி.வி.யில தமன்னா பேட்டி..

பேட்டி எடுப்பவர் : “நீங்க படத்துல பேசுர டயலாக் எல்லாம் சூப்பர் மேடம்..
தமன்னா ; ஓ.தாங்க் யூ..
பே எ: அதுவும் பரத் உங்கள நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமான்னுகேப்பாரே அதுதான் கலக்கல்..
தம: ஹோ.. ஸோ நைஸ் ஆஃப் யூ..
பே எ : அந்த எடத்துல ஏங்க பீஸ்ன்ற வார்த்த வந்துச்சு..
தம:ஹி ஹி..
பே..எ: நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஹி ஹி
பே.எ: சொல்லுங்க நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஆமா.. நான் ஒரு ஒரிஜினல்பீஸ்..
பே.எ: சிரித்தவாறே.. ஏன் அங்க பீஸுன்னு சொல்றாங்க மேடம்..
த்ம. அப்போத் தான் ஒர்ரு கிக்கூ.. no substitute for me .. ha ha...

என்ன கருமம் புடிச்ச பேட்டி இது.. எனக்கு சுத்தமா புடிக்கலைங்க.. மொழி தெரியாத பொண்ணுன்னா என்ன வேணா பேசிட்றதா???

அரே ஹோ பாபாஜிஜிஜிஜி.... :-)

April 26, 2009

விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு



என்னத்த சொல்றது...?? ஒரு ஒருவாரம் முன்னாடி தூக்கம் வரல.. செரி டி.வி. பாக்கலாம்னு போட்டா.. ஆதித்யால வழக்கம் போல கவுண்டம்ணி செந்திலை அடிக்கும் காமெடியை 
போட்டுக்கொண்டிருந்தனர்.. என்னாத்த பண்றதுன்னு .. சிரிப்பொலி பக்கம் போனா.. அங்க பாட்டு ஓடிட்டு இருக்கு, (இது 24 மணிநேர சிரிப்பு சானல் இல்லியோ????) 
(மிட்நைட் மாசாலா மாதிரி மேட்டர தேடி வந்து இருந்தா இப்போவே ஓட்டுப் போட்டுட்டு போயிடுங்க.. :-)  )

விஜய் டி.வி. பக்கம் போனா பதிவுக்கான மேட்டர் மாட்டியது.. ஒருத்தர் நேமாலஜி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தார்... ;இத பத்தி என்னடா எழுதுறது.. எல்லா இடத்துலயும் 
நடக்குறதுதானேன்னு விட்டுட்டேன்... ( அவர் அமெரிக்காவுல நேமாலஜி படிச்சவராம்.. இந்த அன்பரை பாராட்டி பேச வந்த (சங்கர்)கணேஷ் அவர்களின் பேச்சை போடாமலேயே இருந்துருக்கலாம்.. 
(”நான் 1006 படங்களுக்கு இசையமைச்சு இருக்கேன்,,, எல்லா நடிகைகளோடும் டூயட் பாடி இருக்கேன்.. அதனால நீங்க இவர்கிட்ட வந்து பேர மாத்திக்கங்க...”) இந்தமாதிரி
அவ்ளோ சொதப்பல்...)  அடுத்து வந்த நிகழ்ச்சிதான் கண்ணுல இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் காலி பண்ணிடுச்சு...

“சிதம்பர ரகசியம்”ன்னு சொல்லுவாங்கள்ல... அந்த ரகசியம் ஒருத்தருக்கு தெரியுமாம்... ஸாஃப்ட்வேர் சித்த வைத்தியர் என்று பெயர் வேறு... 
கோட்டு போட்டு,.. ஐ.டி.கார்டு மாட்டிக்கிட்டு அவர் பேசியது அலம்பலின் உச்சம்... “சித்தர்களின் சிதம்பர ரகசியம் அவருக்குத் தெரியுமாம்.. ஆனா அதை 
சொல்ல மாட்டாராம் (என்னங்கடா.. விசயாகாந்த்தோட தேர்தல் அறிக்கையை போல பெரிய மேட்டரோ ??) அதை அப்படியே தரவும் முடியாதாம்.. 
மருந்து வழியா தர வழியில்லாததால்,,,  அத ஒரு சிப்ல போட்டுட்டாங்களாம்... அந்த எலக்ட்ரானிக் சிப்ல இந்த சிதம்பர ரகசிய மேட்டர்  உள்ள ஸாஃப்ட்வேர 
லோட் பண்ணிட்டாங்களாம்..  அந்த ஸாஃப்ட்வேர் இருக்குற எல்லா வியாதியையும் குணமாக்கிடுமாம்.(வைரஸ் மட்டும்தான் குணமாகுமா?? அப்போ பாக்டீரியா என்ன ஆகும்ன்னு  கேக்கக் கூடாது...)

அவங்களோட சைட் அட்ரஸ் போட்டாங்க.. நோட் பண்ண மறந்துட்டேன்.. அடுத்த முறை பாத்ததும் இங்க போட்டுட்றேன்..  நேமாலஜி,இந்த-ஆலஜி,அந்த-ஆலஜி,....
இப்படி எவ்ளவோ இருந்தாலும் .. (நான் அதை நம்பாட்டியும்..) அடுத்தவங்க நம்பிக்கையை கேலி பண்ணக் கூடாதுன்னு அத பத்தி பேசக் கூட மாட்டேன்.. ஆனா இதயெல்லாம் நம்புறதா??
இப்படி ஏமாத்துனா?????????

அடப்போங்கடா... இதப்பத்தி யோசிசா அப்புறம் எப்படி தூங்குறது...????????

உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்..நீங்க படிச்சா மட்டும் போதும்..
       

January 19, 2009

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்கு தீங்கு!!!

”மகளிர் மட்டும்” படத்தில் வரும் இந்தக் காட்சி முக்கால்வாசி பேருக்கு நியாபம் இருக்கலாம்... நாகேஷ் அவர்கள் பிணமாக நடிக்க ,அவரை எப்படியாவது தொலைத்து விட்டு வரவேண்டுமென்று அந்த மூணு ஹீரோயினும் முயற்சி செய்வாங்க...

இத இப்ப ஏன் நான் சொல்லுறேன்னா... இந்த காட்சி வரும் போது.. பிணமாக இருக்கும் நாகேஷ் கையில ரோகிணியும்,ஊர்வசியும் சிகெரட் குடுத்து .. அவர் சிகெரட்  குடிக்கிற மாதிரி செய்வாங்க... இந்த சீன பலமுற பாத்து இருந்தாலும் அன்னக்கி கலைஞர் டிவியில பாக்கும்போது பகீர்னு இருந்துச்சு.. 

பிணத்தோட கைல சிகெரட் இருக்கும் போது  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்கு தீங்கு!! அப்படீன்னு கார்டு போட்டாங்க....

சின்ன வயசுலேர்ந்து பல முற இந்த சீன பாக்கும் போது தோணாத ஒரு விஷயம் இவங்க கார்டு போட்டு
காட்டும் போதுதான் உரைக்குது...ஐயா .. ரொம்ப மோசமான வில்லன் வரும்போது அந்த கார்ட போட்ரீங்க .. ஓ.கே...
இந்தமாறி யாருமே கவனிக்க முடியாத சீன்லயெல்லாம் போட்டு உங்க கடைமை உணர்வ காட்டணுமா???

என்ன கேட்டா இந்த எச்சரிக்கை குடுக்குற கார்டே தப்புன்னு சொல்லுவேன்.. யாருக்காக இதை டி.வி
சீரியல்லயெல்லாம் போடுறாங்களோ!!!