May 31, 2009

செல்வேந்திரன் வந்தாரு எங்க வூட்டு டி.வி.ல




நம்ம பதிவர் செல்வேந்திரன் வந்தாருங்க விஜய் டி.வி.யின். நீயா?நானா?வில்....
எனக்கு பாத்ததும் அவர்தானோன்னு ஒரு டவுட்டு.. இருந்தாலும் கன்ஃபார்ம் பண்ணிக்க இங்க வந்து வலையில் பாத்தா.. அதே சிரிப்பு.. ஆம. அவ்ரே தான்...

அவருடைய கவிதை ஆனந்த விகடனில் வந்ததாக கோபிநாத் சொன்னார்.. நானும் ஒன்னு ரெண்டு பின்னூட்டம் போட்டு இருக்கேன் அவ்ளோதான் அவருக்கும் நமக்கும். இதுவரைக்கும் எந்த வலைப் பதிவரையும் நான் நேரில் சந்திச்சு பேசியதில்லை... செல்வேந்திரன் அவர்களைத்தான் நான் முதன்முதலாக டி.வி.யில் பார்த்துள்ளேன்...

இவங்கள்ளாம் எழுதும் வலையுலகில் நானும் டீ ஆத்துவது எனக்குப் பெருமையே...

அப்புறம் இன்னொரு விஷயம்.. இப்போதான் அவருடைய தளத்துல அவரு நீயா நானா பத்தி சொல்லியத பாத்தேன்.. ஆஹா.. சொன்னா மாதிரியே மனுஷனுக்கு ஒரே உதரல்... ஆனா “எல்லாத்தடியும் உடச்சு பாத்துட்டே இருந்தா குடும்பத்துல சந்தோசம் நிலைக்குமான்னு “ அவர் சொன்னது ஒரு வாசகமானாலும் திருவாசகம்.

தமிழ் வலையுலகம் அடுத்த நிலைக்குப் போகிறது என்பதற்கான சான்று இது.. அந்த சந்தோசத்தை பகிரவே இந்தப் பதிவு...

செல்வேந்திரன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

நீங்களும் அவருடைய தளத்துலேயே சொல்லிடுங்க!!!

May 29, 2009

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்



காலம் :- உங்களுக்குப் பிடித்த எந்த வருடத்தை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நேரம் :- பள்ளிகள் முடிந்து அரைமணிநேரம் ஓடி இருந்தது.

சரி,இனி கதைக்குள் போவோம்.அழகப்பன் வாத்தியார்,தன் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் யாரென்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பிலை.ஏனென்றால் அவரை அழகப்பன் வாத்தியார் என்றால் யாருக்கும் தெரியாது. அவரது மனைவியைத் தவிர. “ஜம்போ மாமா” என்றால் அந்தப் பகுதி முழுவதும் பிரபலம்.

அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.குடையைப் பிடித்துக்கொண்டு,பின் ஒரு கூடையுடன் அதில் புத்தகங்கள் மற்றும் இன்னபிறவுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். என்ன? கற்பனை செய்து கொண்டீர்களா?? நிற்க அவர் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார். அதையும் சேர்த்து கற்பனை செய்து கொள்ளுங்கள்..

ஜம்போ மாமா மித வேகத்தில் தன் மிதவையில் வந்து கொண்டிருந்தார்.. வீடை அடைந்தார். சைக்கிளை விட்டுவிட்டு வீடு நோக்கி நடந்தார்.

அங்குதான் நம் கதையின் முதல் திருப்பம். the first twist.. இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் அவர் வீட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன்.

“யேய் !! யாருடா நீ ??” -ஜம்போமாமா
“அங்கிள் வீடு தெரியாம மாறி வந்துட்டேன் ஸாரி அங்கிள்..”-அந்த வாலிபன்
“என்னடா சொல்ற??” -ஜ.மா.
“யெஸ் அங்கிள் நெம்பர் கன்.. கண்ஃபூசன் அங்கிள்.. அங்கிள் பாய் அங்கிள்” அ.வா.
பதட்டமான அவன் நடையை கட்டினான்.

ஜம்போ மாமாவின் வீட்டில் ஒருவரும் இல்லை.மனைவியும்,மகனும் ஊருக்கு சென்றிருந்தனர்.ஜம்போ மாமா வீட்டின் உள்ளே நுழைந்தார்.

அப்போதுதான் ஒ.பொ.சொ.வே. கதையின் இரண்டாப் திருப்பம்.. the second twist...

வீட்டினுள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் உலவிக் கொண்டிருந்தான்.டி.வி.யின் அருகில்.. ஜம்போ மாமாவின் முகம் இப்போது எப்பெடி இருந்தது என்று என்னால் விவரிக்க இயலவில்லை.. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அந்த முகத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா எனத்ட் தெரியவில்லை.. அது பயமா? வீரமா? கோபமா? எந்த உணர்ச்சியைக் காட்டுகிறார் என்றே புரியவில்லை...

சரி அடுத்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம். குடையை வைத்து அவன் மண்டையிலேயே ஒரு அடி..

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஸார்ர்ர்ர்..........”
“யாருடா நீ??” - மாமா
“கேபிள் ஆப்பெரேட்டர் ஸார்.. உங்க டி.வி.யில சேனல் சரியா வரலைன்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்துருந்தீங்க “
“ஆமா .. அதுக்கு ஏண்டா இப்பிடி வந்து பாக்குற ?? யாரும் வீட்ல இல்ல.. ஆமா.. வீடு பூட்டி இருக்குமே எப்பிடி வந்த நீ ??”
“மொட்ட மாடி வழியா ஸார்...”
“அவ்ளோ அவசரம்னு நான் கம்ப்ளெய்ண்ட் தர்லியே.....”
“ஸார்॥ உங்க கம்ப்ளெய்ண்ட நான் சரி பண்ணிட்டேன்னு சொல்லிட்டேன்॥ இன்னைக்கு சாய்ங்காலம் எங்க மொதலாளி உங்ககிட்ட காசு வாங்க வரனும்னு சொல்லி இருந்தாரு।அவருக்கு நான் வரலைன்னு தெரிஞ்சா என் வேல காலி அதான் வந்து இப்பவே சரி பண்ணிட்டு போயிடலாம்னு...”
“அவசரமா வந்தியா???”
“மொட்ட மாடி வழியா???”
“ஆ....”
“சே!! வாய மூடுடா ராஸ்கல்.. இன்னிரு தடவ நான் உன்ன இங்க பாக்கக்கூடாது...”
அவன் விட்டால் போதுமென ஓடினான்,,,,

பாத்தீங்களா மாமாவோட வீரத்த.. ஐயோ.. அவர் பீரோ தெறந்து இருக்கே.. துணியெல்லாம் கலைஞ்சு கெடக்குதே.. மாமா.. மாமா.. யோவ்... என்ன பாக்கவே மாட்டேங்குறார்.. யோவ் ஜம்போ உம்ம பீரோவ பாருமய்யா... ஹ்ம்ம்.. குளிக்க போய்டார்.. நாம எவ்ளோ கத்தியும்பிரயோசனம் இல்லை...

குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தார்.. “ஆஆஆஆ....”

காட்சி 2:- காவல் நிலையம்
காட்சி 3:- இருவர் கைது.. உடனடியாக....
காட்சி 4:- சந்தேகத்தின் ”பலனை” இருவரும் அனுபவித்துக் கொண்டிருக்க ...

ஜம்போ மாமா பள்ளிக்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்.. மணி :8:32
தொலைபேசி சிணுங்கியது...
மறுமுனையில் அவர் மனைவி...

“ஏங்க .. வந்த இடத்துல எங்க அம்மாவுக்கு heart attack கையில பணமில்லை.. உடனடியா தேவைப்பட்டதால பாபுவ அனுப்பி என் நகையை எடுத்துக்கிட்டேங்க.. .. இப்ப அம்மாவுக்கு உடம்பு பரவாயில்லீங்க...”

‘அடிப்பாவி..’ என்ன சொவதென்றே தெரியவில்லை மாமாவுக்கு.. சாதாரண விசாரிப்புகளுடன் ஃபோனை துண்டித்தார். அவளிடம் ஏதும் சொல்லவில்லை நேற்று நடந்ததைப் பற்றி...

அவர் குளிக்கப் போய்விட்டார்.. சரி வாங்க நாம ரோட்ல காத்துருக்கலாம் மாமாவுக்காக...
மணி 8:52
வீட்டை விட்டு வெளியே வந்த மாமா நேராக பள்ளிக்குச் சென்றார்...
“என்ன மனுஷன்யா இவன்...” என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது...

அங்கு போய் ஜம்போ மாமா எடுத்த பாடம்
“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்”

”டிஸ்கி “

ஐயோ!! மாமாவ தப்பா நெனச்சுட்டீங்களா.. மாமி ஃபோன் பண்ணியது 8:32 க்கு மாமா வீட்டை விட்டு வெளியே வந்த போது மணி 8:52

அதற்கு நடுவில் அவரே காவல் நிலையத்துக்கு அலைபேசி நடந்த தப்ப ஒத்துக்கிட்டாரு...
அந்த இரண்டு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.

இது தெரியாம ஜம்போ மாமாவ திட்டிட்டீங்களே????

இதற்குதான் நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க!!!
தீர விசாரிக்காமா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்





May 28, 2009

அடுத்த ஐ.பி.எல். பாகிஸ்தானில்???




”2009 ல காண்டேத்துனதால இனிமே ஐ.பி.எல் கண்டிப்பா இந்தியால நடக்காது”ன்னு நரேந்திர மோட்டி... ச்செ... லலித் மோடி சொல்லிட்டாரு...

அதேசமயம் icc பாகிஸ்தான காண்டேத்திட்டதால... கண்டிப்பா நாட்டு மக்களுக்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேணும்னு தாலிபானும் முடிவு கட்ட...

so இந்த ரெண்டு காண்டானவங்களும் ஒண்ணு சேந்தா ?????

1--> பாகிஸ்தானுக்கு எல்லா டீமும் கள்ளத் தோனிலதான் போகனும்...
        (நேர் வழியே புடிக்காதுங்க அவனுங்களுக்கு...)

2-->மந்திரா பேடி புர்கா  என்னும் கருப்பு மேலங்கியோடதான் இருக்கனும்... 

3-->சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை... முழு கருப்பு உடையில  அவங்க பேய் ஆட்டம் ஆடனும்.. (இப்பிடி ஆடுனா அது பேயாட்டம்தான மக்கா??)

4-->நிகழ்ச்சி ஆரம்பிக்கும் அன்னைக்கும் முடியும் அன்னைக்கும் பீரங்கைகள் முழங்கும்... (குண்டு ஒன்னு வெச்சுருக்கேன்.. டுமீல்)

5-->ஒருஒரு சிக்ஸ் ,ஃபோருக்கும் குண்டு மழை

6-->ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..

7-->20 ரன்னுக்கு கீழ அவுட் ஆனா காலில் சுடப்படும்(எங்கே செல்லும் இந்தப் பாதை)

8-->ஒரு விக்கெட் கூட எடுக்கலனா “தண்ணி” தராம “விக்கல்” வந்தே சாகப் பணிக்கப்படும்.

9--> மெதுவாகப் போனதால கேட்ச் அ மிஸ் பண்ணா... ஓட ஓடதப்பு தப்பா சுட்டு ஒரு நொடியின் மகத்துவம் புரியவைக்கப்படும்.

10-->எவனாவது டீம் ஓனர கட்டிப் புடிச்சா கேபிள்கள் வெட்டப்படும் (அது ஆம்பிளயா இருந்தாலும் செரிதான்..) கேபிள்ன்னு சொன்னது கை காலங்க....

படிச்சுட்டு சிரிங்க..
சிரிக்க மட்டுமே...
நான் இங்கே கேலிக்குள்ளாக்கியுள்ளது ஆட்சியாளர்களை மட்டுமே...
பாவம் மக்கள் என்ன செய்வார்கள் ????
(ஓட்டும் பின்னூட்டமும் என் உற்சாக டானிக்..)



May 27, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது பதிவு -- டாக்டர் SUREஷ்க்கு நன்றி

யூத்ஃபுல் விகடன் பத்தி நமக்கு தெரியாதுங்க.. ஆனா திடீர்னு பாத்தா என்னுடைய
”FINDING NEMO உலக சினிமா” blogs கார்னர்ல இருக்கு....

விகடனாருக்கு நன்றி!!!

விகடனில் போய் பார்க்க இங்க அமுக்குங்க .... 


அப்புறம் டாக்டர் SUREஷ் க்கு ஏன் நன்றி ??? அவர்தான் eReffer settings செரி செய்யச் சொன்னார்.. செரி பண்ணலாம்னு அங்க போய் பாத்தா விகடன்ல இருந்து 10 பேர் வந்து இருக்காக.. எப்பூடின்னு போய் பாத்தப்பதான் இதநான் கண்டு புடிச்சேன்..

so தலக்கு நன்றி...

நாம submit பண்ணத் தேவயில்லையா?? விகடனே எடுத்துப் போட்டுப்பாங்களா??
எனக்குத் த்ரியலீங்க.. யாராவது சொல்லுங்க!!! (ஏன்னா இத நான் submit பண்ணல..)

ரொம்ப ஆராய்ச்சி பண்ணி நிலா பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. அதைப் படிக்க இங்க க்ளிக்குங்க!!!

எல்லாத்துக்கும் ஓட்டு போடுங்க சாமியோவ்!!!

நிலாவுக்கு போனது புருடாவா ???

ஜூலை 20 1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் குழுவினர் நிலாவில் கால் பதித்ததாக சொல்லப்படுகிறது.. ஆனால் அதப் பற்றி பலவிதமான கருத்துக்களே பரவியுள்ளது... முதலில் ஆச்சிரியத்தில் அனைவரும் ஒத்துக்கொண்டாலும் 1974 முதலே இது ஒரு ஹம்பக்தான் என்னு பேச்சு உள்ளது...

அதற்கு வலு சேர்க்கும் காரணங்களில் சில...


இது மிகவும் புகழ் பெற்ற படம்.. “நிலாவில் மனிதன்” . சூரிய ஒளியில் இந்தப் படத்தை எடுத்திருப்பார்களேயானால்...(சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை அங்கு) ஒளி விழுவதற்க்கு மறுபுறம் அந்த மனிதனின் உடை கண்டிப்பாகத்தெரிய முடியாது... ஆனால் zoom செய்து பார்த்தால் அவரது உடையில் அவரது பெயரே தெரிகிறது.. எப்பெடி ???

c என்னும் இடத்தைப் பார்ப்பீர்களேயானால்... அங்கு வெளிச்சம் கம்மியாக இருக்கும்.. அதெப்பெடி ?? சூரியக் கதிர்கள் ஒரு இடத்தில் ஒரு மாதிரியும் மறு இடத்தில் மறு மாதிரியும் விழும் வகையில் எந்த ஒரு தடையும் இல்லை நிலவில்... நாம் பூமியில் பயன்படுத்தும் விளக்குகள் கொண்டு எடுத்தால்தான் இப்பெடி தெரியும்.. ஆனால் நாசாவோ எந்த விளக்குகளும் அவர்களுடன் அனுப்பப்படவில்லை என்கிறது.. பின் எப்பெடி ???



ஆலன் பீனின் புகைப்படம் இது.. இதை நன்கு கவனிக்க.. அவரது நெஞ்சுப் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே மாதிரிதான் எல்லாருடைய உடையிலும் பொருத்தப்பட்டது.. அது உண்மையானால்... நெஞ்சில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆலன் பீனின் ஹெல்மெட்டுக்கும் மேல் தெரிவதெப்படி ???
அதன் கோணம் மாறுகிறதே....



இதன் வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம்.. நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்க கொடியை அங்கு நட .. அது காற்றில் படபடக்கும்... அதுதான் வினையே... நிலாவுலா ஏதுங்க காத்து ????


அரசியல் காரணங்கள்

1--> ரஷ்யாவை அடக்க ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.,.,
2-->பல மில்லியன் டாலர்களை வீணாக்கிவிட்ட நாசா சப்ப கட்டு கட்டுவதற்க்கு பதிலாக சப்பையாக செட்டு போட்டு முடிச்சுறுக்கலாம்...

சிம்பிள் காரணம்

ஏங்க “உலக தாதா” அமெரிக்கா... ஒரு விஷயம் ஜெயிச்சுட்டா அப்டியே உட்டுருமா ??? கண்டிப்பா இல்லை.. 1969ல் 1 மனிதன் கொடி நாட்டி இருந்தால் இந்நேரத்துக்கு 100 பேர் அங்க குடி போய் இருப்பாங்க.. இன்னும் ஆராய்ச்சி பண்றோம்னு இழுத்தடிக்க மாட்டாங்க....

இந்த மாதிரி இன்னும் ஆயிரம் ஓட்டைகள் சொல்றாங்க புகைப்பட வல்லுனர்கள்...

இதையெல்லாம் வெச்சு பாத்தா ... நெசமாவே பொய்யோ ????



May 25, 2009

32 கேள்விகள் - ஒரே ஆள் (தொடர் பதிவு)

இது ஒரு சங்கிலித் தொடர் இடுகை.... 

ஸ்டார்டிங் பாயிண்ட் நிலாவும் அம்மாவும்.

அவரின் சங்கிலித் தொடர்கள்.... (எனக்குத் தெரிந்த வரை)

ரவீ.

அத்திரி.

கடையம் ஆனந்த்.

ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன்.

குமரை நிலாவன்.

சிந்துகா.

தேவா.

வேத்தியன்

என் உயிரே... அபு...

இவர்களுடன் நானும்... (என்னை நம்ம டாக்டர் SuREஷ்  கூப்பிடுவாருன்னு நான் நெனச்சுப் பாக்கல... நன்றி தல..) 32 கேள்விகள்.. கொஞ்சம் பெரிய பதிலகள்தான்.....ஓவர் டூ (நான்) ஓவரா பேசப்போகும் பதிவு

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

       எனக்கு 5 அண்ணன்,2அக்காள்... நான் கடைசி.. கடைக்குட்டி... பதிவுகள் எழுதனும்னு நெனச்சப்போ இந்தப் பேரத் தவிர வேற எதும்தோணல...

       ரொம்பப் பிடிக்கும் இந்தப் பெயரை... ஏன்னா.. பெயரப் பாத்ததும் ஒரு இன்னசன்ஸ் (ஒன்னும் தெரியாத மூஞ்சி) நியாபகம் வரும்.. அது நமக்கு வசதியும் கூட.. (தவறுகள் மன்னிக்கப்படும்.)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

 கிடைத்தது கையை விட்டு நழுவியதால் சமீபத்தில் அழுதேன்.. இனிமேல் அழும் உத்தேசமில்லை..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்புட்டு அழகா இருக்குங்கோவ்!!! படிக்காம போனாலும் கையெழுத்தாலேயே பாஸான தேர்வுகள் பல.. ஆனா கணிதம் கொஞ்சம் கஷ்டப்படும்(அங்க நம்ம கையெழுத்து செல்லாதே!!!!)

4.பிடித்த மதிய உணவு என்ன?

இனிமேல் கிடைக்காத ”நண்பர்களின் டிபன்பாக்ஸ்” (இப்போதாங்க காலேஜ் முடிஞ்சுச்சு..) மிச்சபடி அம்மா சமைக்கும் எல்லாமே!!!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நம்ம வாய் ஒட்டாதுங்க... பேசிட்டே இருக்கும்..  அதனால் புதிதாய் பழகுவது கஷ்டமல்ல...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நகரத்தில் வளர்ந்த பையன்.. ஆதலால் அருவிலாம் பாத்ததுகூட இல்லை...

கூவம் கலக்கும் மெரினாவில் குளிக்கப் பிடிக்கும் என பொய் சொல்லவும் மனமில்லை... 

(நீ குளிப்பியா மாட்டியா?? போன்ற பின்னூட்டங்கள் தடை செய்யப்படுகிறது)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தோற்றம்.. (கலர் அல்ல...)
அகத்தின்  அழகல்லவா அது...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எத செஞ்சாலும் ஏதாவது தனித்தன்மையுடன் செய்யனும்னு தோனும்.. அது புடிக்கும்...
புடிக்காததும் அதுதான்.. எப்போ பாத்தாலும் ஏதாவது புதுசா செய்யனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தா????

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரிபாதியாக நான் என் நண்பர்களைக் கருதுகிறேன்,,,
புடிச்சது :- என்னை சகித்துக் கொள்வது
புடிக்காதது:- நில் (இது இங்கிலிபீச் ”நில்”லுங்க!!)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கல்லூரியில் கிடைத்த  என் தங்கை கல்லூரியுடனே சென்று விட்டதையும்...
கல்லூரி,பள்ளி நண்பர்களும் இல்லாதது வருத்தமே ... 

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை...
(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

”திமிருக்கு மறுபெயர் நீதானே...
தினந்தினம் உன்னால் இறந்தேனே..”
என்னும் வரிகள் பாடிக்கொண்டிருக்கிறார் யுவன் ... (sms பாடல்)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?]

கறுப்பு வெள்ளை
(பென்சில் கலரோ ?? ஏதோ சொல்லனுமேன்னு சொன்னது . ஆராய வேணாம்)

14.பிடித்த மணம்? 

குழந்தைகள் மேல் அடிக்கும் கலப்படமில்லாத மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

இது கொஞ்சம் பெரிய பதில் சொல்லியே ஆகனும்

அ) சக்கரை~
www.sakkarai.com  பிரபல பதிவர் வரிசையில் சேர்ந்து விட்டார்.. ஆனாலும் எப்போ கேட்டாலும் உதவிகள் கிடைக்கும்... ஜாலி பேர்வழி..

எங்க இருந்துதான் இப்பிடிலாம் பின்னூட்டம் போடுறாரோ.. வித்தியாசமான பார்வை.. தொடர வாழ்த்துக்கள்.....

என் வயசுப் பையன்... என்னைவிட எழுத்தில் ரௌத்திரம் ஜாஸ்தி.. விஜய் அஜித்னு சண்டைல எறங்குனது புடிக்கல.. நல்லா வருவான் என் மாப்ள..

ஈ)ஜெட்லி(san sriram சித்து natraj)
பார்த்ததும் கேட்டதும்னு கலக்குறாங்க பசங்க.. இருவது வயசு ஆர்வக் கோளாருகள்... ஜாலி கேடிகள் என்னைபோலவே :-)

kricons,சொல்லரசன்,அப்பாவி தமிழன்,புது மாப்பிளைகள் கலையரசன்,தேனி சுந்தர்லாம் கூப்பிடனும்னு தோணுது.. ஆனா ஏற்கனவே 4 பேர கூப்டாச்சு... நீங்க பாத்துக்கங்க மக்கா!!!

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
காலெஜ் பத்தி கலக்குவாரு டாக்டரு... நெம்ப புடிக்கும் அவரொடைய இந்தத் தொடர்...

17. பிடித்த விளையாட்டு?

பதிவெழுதுவதுதான்...

18.கண்ணாடி அணிபவரா?

ஹ்க்கும்.. ஏற்கனவே அழகு இதுல கண்ணாடி வேறயா ?? இல்லங்கப்பா.....

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனசைத் தொடனும்.. 

(மசாலாவோ,காமெடியோ,சீரியஸோ.... ஏதுவா இருந்தாலும் பரவாயில்லை)

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க - நண்பர்களுடன்
அயன் - டிவிடி
finding nemo - டவுன்லோட் பண்ணி கணினியில்

21.பிடித்த பருவ காலம் எது?

பள்ளி,கல்லூரிக் காலம்... 
(இதுக்கு மேல வேற எந்தக் காலமும் இன்னும் வரலீங்க..)

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஹாய் மதன்
இப்படிக்கு சூர்யா மனப்பாடம் பண்ணும் அளவுக்கு படிச்சிட்டு இருக்கேன்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாத்தனும்னு தோணும் போதெல்லாம்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தைகளின் குரல் --பிடித்த இசை (சத்தமல்ல)
வாகன இரைச்சல், ஆனந்த் சார் குரல்ன்னு எவ்ளவோ புடிக்காத சத்தமிருக்கு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

காலேஜ்தான்
(40 கி.மீ வீட்டிலிருந்து தினமும் பஸ் பயணம்)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இதுதான்னு சொல்ல முடியாது எல்லாத்தையும் அரகுறயா செய்வேன்...
உண்மையான பதில் தெரியலிங்க!!!

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

துரோகம்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம் வந்தால் வெளிவருவான்

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எனக்கே எனக்கான என் ரூம்.  சுற்றுலாவெல்லாம் ஆர்வமில்லீங்க

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

துறையில் உயரங்களையும்.......
தனி மனிதானாக உறவுகளையும் சேர்ப்பவனாக ...

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவியே இல்ல.. இதுல காரியம் வேறயா ???  யாருய்யா இதெல்லாம் சின்ன பசங்கள்ட கேக்குறது ??

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

உங்களுக்கு செரின்னு படுவதை 
அடுத்தவர்களை காயப்படுத்தாமல் 
வாழ்வது
(ஒரு வரிதாங்க கவித கவித மாதிரி..)

படித்ததற்க்கு நன்றி!!! 
எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....

May 23, 2009

Finding NEMO--உலக சினிமா


எல்லாரும் உலக சினிமா பத்தி பதிவு போடுறாங்க.. நாமளும் போடலாம் எடுறா மக்கா வண்டியன்னு கெளப்புனா.. நான் பாத்த ஒரே இங்கிலீஷ் படம் “ஷோலே”ங்கன்னு சொல்ற அளவுக்குத்தான் நம்ம உலக சினிமா அறிவு ...

இருந்தாலும் நான் பாத்த ஒன்னு ரெண்டு இங்கிலீஷ் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது “FINDING NEMO" (ஃபைண்டிங் நீமோ)என்னும் அனிமேட்டட் திரைப்படம்... அதைப் பற்றிக் காண்போமா ??

கரு
71% நீர் சூழ்ந்து இருக்கும் இந்த உலகில் ஒரு மீனின் வாழ்க்கையை சுவைபட சொல்லி உள்ளனர்

கதைச் சுருக்கம்
clown fish என்று சொல்லப்படும் ஒரு வகை மீன் இனத்தில் மார்லின் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.. 100 மீன் குஞ்சுகளைப் பெற்று அவற்றைப் பாதுக்காத்து வருகின்றனர்.. அந்த சமயத்தில் ஒரு கொடிய சுறா அவர்களை வேட்டையாட... 99 குஞ்சுகளும் இறக்கின்றன.. மிஞ்சும் ஒரே மீன் “நீமோ”...

இப்பிடி கொடிய முறையில் மற்ற பிள்ளைகள் இறந்து விட்டதால் மார்லினுக்கு மிகவும் பயம் எங்கே நீமோவிற்க்கு ஏதேனும் ஆகிவிடுமோன்னு... வருடங்கள் ஓட நீமோவை பள்ளிக்கு அனுப்பவும்  பயம் மார்லினுக்கு....(தாய் இறந்து விடுகிறார்)..ஆனாலும் தைரியமாக பள்ளிக்கு அனுப்ப...

அங்கிருந்து வேறு இடத்திற்க்கு செல்லும் நீமோ.. தந்தையின் எச்சரிக்கையும் மீறி மிக அதிக தூரம் செல்ல ..ஒருவரிடம் மாட்டி... அது சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவரின் இல்லத்தை அடைந்து விடுகிறது...

பயந்தாங்கொள்ளி மார்லின் எப்பெடி நீமோவைத் தேடிப் பிடிக்கிறது என்பதே கதை...

கவரும் விஷயங்கள்
மார்லின் தேடி வரும் பொழுது... தோரி என்னும் மீன் அதற்கு வழி காட்டும்.. அந்த மீனுக்கு “சார்ட் டெர்ம் மெமரி லாஸ்” .. அது மறக்க .. இது பறக்க.. செம காமெடி...

மீன்கள் உலகம் அவ்வளவு அழகு... அமைதி...அற்புதம்...

இசையும் .. கிராஃபிக்சும் படத்திற்க்கு பலம்...

ஏன் பாக்கனும்
ஒரு மாறுதலுக்காக... ஒரு மசாலா படத்துக்கான அத்தனை அம்சங்களோடு போரடிக்காமல் போகிறுது...

யார் பாக்கலாம்
குழந்தைகள்
குழந்தை மனப் படைச்ச வளர்ந்த குழந்தைகள்

andrew standon கதை திரைக்கதையில்2003ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் இப்போ டி.வி.யில கூட போடுறாங்க... பாருங்க

இதுக்கு ஓட்டுப் போடாமா போனா அடுத்து கேப்டனின் மரியாதை என்னும் உலக சினிமா பற்றி எழுதப்படும்...

May 22, 2009

சூர்யா சாராய கேஸில் ???


சரவணன் முதல் சூர்யா வரை --4
 
                        சூர்யா -- சரவணனாக படித்து முடித்தது சென்னை லயோலா கல்லூரியில்.அந்தக் கல்லூரி சும்மா படி,படின்னு மட்டும் சொல்லாம பசங்களோட பிறதுறை ஆர்வத்தை வளர்க்கும் விதமாகவும் செயல்படும்.
                         
                        அந்த ஆர்வமே அவருக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு போய்டுச்சு... சரவணனோட விஸ்காம் துறையைச் சேர்ந்த நண்பன் ”இளமையில் போதை மருந்துக்கு அடிமையாவதைப்” பற்றிய கருவுடன் ஒரு நாடகம் போடுவதென முடிவெடுத்து களமிறங்க ,உடன் சூர்யாவும்.

                         நாடகம் போட காசு வேணுமே என்ன செய்யுறது ?? கன நேரத்தில் தோன்றியது யோசனை.. ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை “நியூ இயர் பார்ட்டி” நடத்தி அதில் வாரும் பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்னு திட்டம்.. “ஜோடிகளுக்கு மட்டும்”ன்னு அச்சடிச்சு டிக்கெட்டும் விற்க்கப்பட்டது...டிசம்பர்31-மாலை 5 மணியளவிலேயே ஜோடிகள் வரத்துவங்கின.. 

அங்கதான் ஆப்பு நம்பர் 1 வைக்கப்பட்டது 

ஹோட்டல்காரர்கள் கூட்டத்தப் பாத்தா விடுவாங்களா??? அதுவும் இளவயசுப் பசங்க.. “தெறடா பார்”அன்னு “பார்” திறக்கப் பட்டது.. “பார்” போற்றும் போதை ஒழிப்பு நாடகத்துக்கு பணம் சேர்க்க வந்த கூட்டத்திடம் “பார்” நடத்தி காசு பார்த்து கொண்டிருந்தார்கள்... அமைப்பாளர்கள் எவ்ளோ சொல்லியும் கேக்கவில்லை ஹோட்டல் நிர்வாகம்..

அப்டியே ரைட் கட் பண்ணா ஆப்பு நம்பர் 2 

“ஜோடியாக மட்டும்”னு போட்ட இந்த பார்ட்டிக்கு ஒருவர் தனியாக வந்துவிட.. ஹோட்டல் நிர்வாகம் அவரை உள்ளேவிட மறுத்துவிட்டது.. அவர் கர்ஜித்துவிட்டு சென்றுவிட...

சிறிது நேரத்தில் போலிஸுடன் அதே விரட்டப்பட்ட இளைஞன் (அரசியல் பலம் உள்ள பிள்ளை!!)
 ‘பார்ட்டி” யை நடத்த லைசென்ஸ் இருக்கான்னு போலீஸ் கேட்க .. 
இவர்கள் விழிக்க.. 
ஹோட்டல்காரகள் விலக..
”தண்ணி பார்ட்டி போலயே”ன்னு மேலும் பிடியை இறுக்க...
இவர்கள் நடுங்க...

அமைப்பாளார்கள் குழு 15 பேர் கைது.. சூர்யாவும் அடக்கம்.. க்ரீம்ஸ் சாலை காவல் நிலையத்தில் அடுத்த ஸீன்..

“நீங்க எல்லாரும் கள்ளச் சாராயம் வித்ததுக்காக உள்ள போகப் போறீங்கப்பா!!”ன்னு சொன்னபடியே ரைட்டர் பேர் விலாசம் எழுதிக் கேட்டார்..ஹையோ என்ன கொடுமை இது ?? இது திட்டமிட்ட சதிவலை.. என்ன பண்றது... எல்லோரும் திகைத்தப்படி எழுதிக்குடுக்க

சூர்யாவின் சுற்று வரும் போது அப்பா பெயர் “பழனிச்சாமி”என்று சொன்னார்.. ஃப்ரெண்ட்ஸ் எப்டீங்க சும்மா இருப்பாங்க??? “சார்  அவங்க அப்பா சினிமா நடிகர் சிவகுமார் ... “ ன்னு அவங்க கடமையை செவ்வனே செஞ்சுட்டாங்க...சூர்யாவுக்கோ பயம் வூடுகட்டி உறுமி அடித்தது... 

"ஸார் நான் சிவகுமார் பையந்தான் ஒத்துக்குறேன்.. வீட்டுக்கு தெரியவேணாம்”ன்னு கெஞ்ச.. 
“நீ சிவக்குமார் பையனான்றதே டவுட்ட இருக்கே.. இப்பிடி இருக்க “ன்னு ரைட்டர் கேட்க..
“அடப்பாவி பீர் அடி உடம்ப தேத்துடான்னா... இப்போ பாரு ரைட்டர் மண்ட காய யோசிக்கிறாரு”ன்னு அந்த நேரத்துலயும் கலாய்ச்சுறுக்காங்க.. (நண்பண்டா!!!)

ஒருவழியாக அவரும் சமாதானமாகிவிட.. அடுத்து வந்த ஐ.பி.ஸ் அதிகாரி கண்டிப்பா கோர்ட்ல அபராதத் தொகய கட்டுங்கடான்னு சொல்ல..கட்டிட்டு எஸ்கேப்...

ஒருத்தனுக்கு எந்த “ நல்ல பழக்கமும் “ இல்லன்னா “ஞானப்பழம்” லிஸ்ட்லதான் வெப்பாய்ங்க காலேஜ்ல.. அப்படி ஒரு ஞானப்பழமான சூர்யா வாழ்க்கைல இந்த ஸீன் ஒரு டெரர் ஸீன்தான்..


இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...

பின்னூட்டமும் .. ஓட்டும் குத்திட்டு போங்க... முடிஞ்சா side ல adds யும் கிளிக்குங்க...


May 19, 2009

வாரணம் ஆயிரம் படத்தின் ஒரே தவறு


அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம்  கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “ வாரணம் ஆயிரம் “ 

அந்தப் படத்தை ஏற்கனவே அனைவரும் அலசி காயப் போட்டு விட்டாலும் , சூரயா கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை மறுபடியும் டி.வி.யி.ல் தற்போது பார்க்கும் வாய்ப்பு வந்தது. 

ஆஹா.. என்ன விஷுவல்ஸ்.. உழைப்பு.. திடீர்னு தான் படத்துல அவங்க பண்ண தவறு தெரிஞ்சது...

“உங்ககிட்ட திரும்ப வரக்கூடாதுன்னு நெனச்சேன்.. எங்கயாவது போய்டனும்னு நெனச்சேன்..” அந்த டயலாக்கிற்க்குப் பிறகு

I N T E R V A L

அப்டீன்னு போடுவாங்க அதுக்கு பதிலா...

" T H E- E N D "

அப்டீன்னு போட்டுறுக்கலாம்... ஏன்ன முதல் பாதியிலேயே பல களங்களில் கதை.. நாலு அருமையான பாட்டுன்னு சூப்பரா இருக்கு... அப்டியே முடிச்சுறுந்தா கண்டிப்பா கவிதை மாதிரியான முடிவுக்கு நல்லா ஓடி இருக்கலாம்னு நெனக்கிறேன்..உங்க கருத்த பின்னூட்டத்துல சொல்லுங்க..

ஓட்டும் பின்னூட்டமும் adds clickம் பண்ணாம போக கூடாது...

May 17, 2009

”ரஜினியின் அரசியல் “

அட என்னங்க பண்றது?? குழந்தைகள மிட்டாய் குடுத்து கூப்புடுற மாதிரி இப்பிடி ஜிகினா தலைப்பு குடுத்து படிக்க வைக்க வேண்டி இருக்கு :-) தலைப்புக்கும் இடுக்கைக்கும் சம்பந்தம் இல்லை... என் உள்ளக் குமுறலை பதிவு செய்யும் முயற்சி

மக்களாட்சி-னா என்ன ???

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி எனப்படும்.. இப்பிடித்தாங்க உஸ்கூல்ல படிச்சது...

என் ஓட்டைப் பதிவு செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்த போது நான் அடைந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை.... “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டில்.. நானும் வாழ்ந்து என்னுடைய ஓட்டையும் பதிவு செய்யப் போகிறேன்” அங்க தான் வந்தது அந்த எண்ணத்திற்க்கு ஆப்பு....

(சென்னையில் நடந்த உண்மை சம்பவம்.. புனைவு அல்ல..)
முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்.. ‘எனக்கு யாரியும் புடிக்கலீங்க .. 49ஓ போடப் போறேன்’ என்று சொன்னார்... பூத்துல எல்லாருக்கும் அதிர்ச்சி... 'அட என்னங்க இவ்ளோ தூரம் வந்துட்டுன்னு’ ஒரே இழுவை... அப்புறம் ‘ஃபார்ம் கொடுத்து விடலீங்க’ என்றனர்.. அவர் சூடாகி விடவே.. “ஸார்... ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டுப் போங்க.. நாங்க உங்க பேரை டிக் பண்ணியாச்சு கண்டிப்பா கணக்கு காமிச்சு ஆகனும்.. நீங்க குடுக்குற லெட்டர் உங்க 49ஓ ஆயிடும் எனச் சொல்லி லெட்டர் வாங்கிவிட்டு அனுப்பினர்.. அவரை அனைவரும் ஏதோ ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்து அனுப்பினர்.. (அந்த மனிதர் எலெக்‌ஷன் கமிஷனில் அன்றே புகார் அளித்து.. பின் அவருக்கு சமாதானம் சொல்லப்பட்டு...

செரி வுடுங்க.. இப்ப மேட்டர் என்னன்னா ...

49 ஓ பற்றி சில கேள்விகள்...
1--> எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுறோம் என்பது ஒரு வாக்காளரின் உரிமை... அவர் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுறார்னு அவர் விருப்பப் பட்டால் மட்டும் சொல்லலாம்...
ஆனா 49ஓ போடுறவங்க எல்லார் முன்னாடியும் சொல்லனுமாம் ... ஏங்க இப்பிடி ???
2--> அந்த 49 ஓ க்கு 17 a படிவத்திற்க்குப் பதிலாக ஒரு பட்டனை வெச்சாத்தான் என்ன???

எல்லாம் ஒரே நாளில் மாறிடுமா???
மாறாது.. கண்டிப்பா மாறாது.. ஆனா கொஞ்சமாவது மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரியனுமா இல்லயா???

ஒரே நாளில் நடக்கனும்னா எப்பிடிபா நடக்கும் ???
கண்டிப்பா நடக்கும்... ஒரே நாளில் பத்திரிக்கைகள் முடக்கப்படும்... யாரும் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது...

எப்பிடி இப்படி சொல்றேன்னா...
இதே மனநிலையில் மக்கள் இருக்கும் போது.. “உடனடி தீர்வு“ அப்படீன்னு ஒன்னு கெடக்கும் போது... அது “சர்வாதிகார”தால மட்டும்தான் முடியும் ... சர்வாதிக்கரத்துல இப்பிடி நாம சிந்திக்க கூட முடியாது,,

இது அவநம்பிக்கையா??
கண்டிப்பா இல்ல.. மக்கள் சூடா களத்துள இறங்குனா கண்டிப்பா சர்வாதிகார முடிவுதான் கெடக்கும்... பர்மா,பாகிஸ்தான் இப்பிடி எவ்ளவோ உதாரணங்கள் இருக்கு ராணுவ ஆட்சிக்கு

அப்போ என்னதான் சொல்லவர்ற ???
ஜனநாயகம்னா இப்பிடித்தான் இருக்கும்.. இதுல இப்போ வரைக்கும் இருக்குறவங்கள புடிக்கலயா தே.மு.தி.க.வுக்கு ஓட்டு போடுங்க... சுயேட்சைக்கு ஓட்டு போடுங்க.. இல்ல நீங்களே தேர்தல்ல நில்லுங்க...

இருக்குற கண்ணுல கொஞ்சமா நொள்ளயானதும் சுத்தமா நொள்ளயானதுதான் கெடக்கும்.. ஆனா நான் நல்லகண்ணு கெடக்குற வரக்கும் இப்பிடித்தான் இருப்பேன்னா “உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா”னு போக வேண்டியதுதான்...

ஏன்னா...

இந்தியா ஒரு மக்களாட்சி நடைபெறும் நாடு :-)

இங்கு
எறுமையைப் போன்ற
பொறுமை முக்கியம்...

(தலைப்பிற்க்கும் கடைசி 3 வரிக்கும் சம்பந்தம் இல்லை)

May 15, 2009

இது மாறாது ???-- ஒரு அலசல் பதிவு

ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு படிச்சாலும் அலுக்காத மாதிரி இருக்கனும்... இதுதான் கான்செப்ட்.. ஓவர் டூ பதிவு

1--> கேளம்பாக்கம்-பிராட்வே ரூ.14 டீலக்ஸ் பேருந்து கட்டணம்...
2-->ஏ.சி. பஸ்  அறிமுகப்படுத்தப்பட்டு அதில் அதிகபட்ச கட்டணம் ரூ35..
3-->பிளாக்குகள் ப்ளேக் போல் பரவ ஆரம்பிச்சு... தமிழ் பதிவர் உலகம் விரிவடைந்து வருகிறது...
4-->’பரிசல்’,அதிஷா,நர்சிம்போன்றோரின் கதைகள் ஆனந்த விகடனில்  வெளிவர ஆரம்பித்துள்ளது..
5-->சக்கர www.sakkarai.com ஆக பதவி உயர்ந்துள்ளது ... மிக வரைவில் krickcon,டக்ளஸ் போன்றோர் இந்த பதவி உயர்வை அடைவர் என எதிர்பார்க்கப் படுகிறது...
6-->உலக பொருளாதாரம் வீழ்ச்சி.. படிச்சு முடிச்சவனெல்லாம் திருப்பியும் முடிக்காம படிக்கலாமான்னு யோசிப்பு...
7-->அடுத்த படத்திற்க்குப் பின் ஆரசியல் பற்றி சொல்வதாக ரஜினி வாக்கு..
8-->விஜய் கட்சி துவங்கப் போவதாக ஒரு வதந்தி..


9--> நாளைக்கு வரப்போற தேர்தல் முடிவுலயாவது நமக்கு  விடிவு காலம் பிறக்காதா?? தீவிரவாதம் ஒழியாதா??? லஞ்சம் ஒழியாதா??? வாக்காளர்கள் எதிர்பார்ப்பு .. ;-)

மைண்ட் வாய்ஸ் :-

1--8 கண்டிப்பா மாறும்ங்க... இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு படிச்சா கண்டிப்பா பேருந்து கட்டணம் ஏறி.. பதிவருலகம் மேலும் அங்கீகாரங்கள் பெற்று... உலகப் பொருளாதாரம் நிமிரும்....

ஆனா கடைசியா சொன்ன ஒன்னு மாறுமா?? அந்த நம்பிக்கையில்லீங்க.. எந்தத் தேர்தல் முடிஞ்சாலும் நீங்க வந்து இந்தப் பதிவ படிச்சுப் பாருங்க... எல்லாம் மாறி இருந்தாலும் இது அப்பிடித்தான் இருக்கும்.. ஏன் இவ்வளவு அவநம்பிக்கை..  இத மாத்த என்ன பண்ணலாம்னு வரும் பதிவில் காண்போம் .. 

ஓட்டக் குத்திட்டு போங்க சாமி .. 

May 12, 2009

கவி(ழு)த .. கவி(ழு)த .....


கல்யாணம்

“எப்போடா கல்யாணம் ??” கேட்டா அந்த மவராசி....
“எப்போவேணுன்னாலும் “ சொன்னான் அந்த மணவாளன்...

சிலநாள் கழித்து
சொன்னபடியே நடந்தது திருமணம்...

அவளுக்கு திருத்தணியில்..
அவனுக்கு திருப்பதியில்....
*********************************************************************

தோல்வி ???

அன்று 
அவர்கள் ...

இன்று 
அவன்
தன்னந்தனியாக அல்ல....
தன்னந்-தண்ணியாக !!!!

********************************************


சன் பிச்சர்ஸ் திரைப்படம்

அடிச்சு புடிச்சு 
இன்னைக்கே பாக்கனும்னு
டி.வி.டி. யில 
பாக்காதீங்க...

ஆராமர
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
டி.வி. யிலேயே 
பாருங்க....

************************************************

இறையருள் !!!

குடியும் குடித்தனமாக வாழ வேண்டுமென எல்லோரும் நினைக்கிறார்கள்,,
இறைவன் அருளுதுவதோ
சிலருக்கு குடித்தனம்..
சிலருக்கு குடி--த்தனம்..

************************************************
இது என்னது ???

கவித என்பதா??? கழுத என்பதா ??
இரண்டின் மத்தியில் இன்னோர் கலையோ ?????

இப்பிடி என்னன்னவோ எழுதி என்னன்னு தெரியாம கெடக்குது என்கைகளில்.....
இதுக்கு ரெஸ்பான்ஸ பாத்துட்டு மிச்சதெல்லாம் வரும் இடுகைகளில்......

*********************************************

ஆட்டோ அனுப்புபவர்கள்.. 
பின்னாலயே வாங்க
ஆகாஓகோன்னு பாராட்டுறவங்க
பின்னூட்டத்துல வாங்கோ!!!

May 08, 2009

3வரி--ஒரு நாளில் 5 நிமிஷம்-- $ல் சம்பளம்

ஆமாங்க.. ஒரு நாளைக்கி 5 நிமிஷம் செலவளிச்சு... 3 வரி கமெண்ட் போட்டா காசு தர்றாங்க...

awsurveys சைட் தாங்க அப்டி தர்றது...           

ஏன் தர்றாங்க??

ஒரு சைட்ட பாத்துட்டு அது எப்டி இருக்குன்னு ஒரு மூனு வரியில சொல்லனும்...
ஒவ்வொரு சைட்டுக்கும் ரேட் ஒரு மாதிரி.. (1$,5$)அப்டி..

எப்போ காசு தருவாங்க ??

75$ சேந்த்தும் உங்க paypal அக்கௌண்ட்க்கு மாத்திடுவாங்க... (யாராவது தயவு செய்து paypal account பத்தி விரிவான பதிவு போடவும் )

கொஞ்சம் கொஞ்சமா அவ்ளோ பணம் எப்டிபா கெடக்கும் ??

ஒரு survey முடிச்சா மிகக் குறஞ்சபட்சம் 1$-6$ வரை தராங்க... கண்டிப்பா ஒரு வாரத்துல சேத்துடலாம்...

நம்பலாமா???

நானும் இப்பத்தான் சேந்துருக்கேன்.. நீங்களும் சேருங்க.. எல்லாரும் பாப்போம்..

செரி எப்டி சேரணும் ??


இந்த படத்த  க்ளிக் பண்ணி சேருங்க!!!

எப்டிபா பண்றது ??
register பண்ணியதும் current survies available for u னு சொல்லி அதன் விலைகளையும் சொல்வாங்க,,, நீங்க choose பண்ணி கமெண்டலாம்..

ரிஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் இருக்கா ??

பைசா செலவு பண்ண வேணாம்... செஞ்சுதான் பாப்போமே...வந்தா மல..... :-)
 லிங்குகள் அடுத்த page க்கு போகும் வித்தயை சொன்ன t.v.s50 க்கு நன்றி..
இங்க போய் பாருங்க :-)

இதுல சேந்து எனக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் target reach பண்ணி காசு பார்க்க வாழ்த்துக்கள்..

சந்தேகங்கள பின்னூட்டத்துல கேளுங்க... 
சமத்தா எல்லாரும் சேரணும் இதுல.. செரியா ????

May 07, 2009

<----32வது பதிவு ---> சூர்யாவும் நானும்...


இது எனது 32வது பதிவு ... ஏன் 50 ,100 மட்டும் தான் சொல்லனுமா ???? நானும் சொல்லுவேன்.. மனசு இருக்குறவங்க வாழ்த்தட்டும்... 

அப்புறம்..  ஏன்டா சூர்யாவ கட்டிட்டு அழுவுறன்னு நெறய பேரு கேக்குறாங்க... வெறும் என்னுடைய கதைகளையும் அனுபவங்களையும் போட்டா கூட்டம் சேரல..அதான்... மசாலா பதிவுகளுக்கு இடையில் எனது பதிவுச் சேவையும் தொடருகிறது.. :-) வெறும் சூர்யா புகழ் மட்டும் பாடாமல்.. என்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் நான் செயல் படுவதாகவே நினைக்கிறேன்...

















                                                              செரி இந்தப் பதிவிலும் ஏன் சூர்யாவின் படங்கள்.. அதுவும் சில வலைகளில் ஏற்கனவே வந்த படங்கள்னு நீங்க கேட்கலாம்... 

java script ஒன்னு add பண்ணி இருக்கேன்.. (tvs50 சொன்னது.. இங்க பாத்துக்கங்க..) அத check பண்ண ஃபோட்டோ பதிவு ஒன்னு போடனும் எனவே இந்தப் பதிவு...  (image ஐ click பண்ணி அது work பண்ணுதா பாருங்க.. :-)

இதையெல்லாம் வெச்சு சூர்யா வெறியன்னு நெனச்சுடாதீங்க!!! உங்களுக்கு அநத நடிகர புடிச்சாலும் புடிக்காட்டியும்.. நீங்க அவர திட்டுனாலும் திட்டாட்டியும்... நான் கவலப்பட மாட்டேன்..

ஆனா இவ்ளோ தூரம் மெனக்கெட்டு வந்துட்டு... ஓட்டோ... பின்னூட்டமோ.. addல் click ஓ பண்ணாம போனீங்க....... அப்புறம்.. 33,34,35ன்னு எல்லாத்துக்கும் இப்பிடித்தான் டார்ச்சர் பண்ணுவேன் :-) வர்டா

சூர்யா--ஜோதிகா -->காதல் ஸீன்-1



சரவணாaன் முதல் சூர்யா வரை -3
ஒளிமயமான ஜோடி’ என்று பத்திரிக்கை வதந்தியுலகில் பெயரெடுத்த ஜோடி.. சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரில்லாமல் எந்தக் கிசுகிசுவும் வராது...

’காக்க காக்க’ விமர்சனத்தில் ஆனந்த விகடன் “made for each other" அப்டீன்னு சொன்ன ஜோடி.. செரி.. எப்டி சேந்தாங்க??

சினிமாவை வெறுத்த சரவணன் நடிகனானதும்.. பின் அந்த மாய உலகத்திலேயே அவனுக்கு ஜோடி கிடைத்ததும் ஆச்சிர்யமே..

பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் அவர்கள் முதன்முதலில் சேர்ந்து நடித்த படம்..  அதில் நடிக்கும் போதும் ‘என்னடா நமக்கு ஆட வரமாட்டேங்குது..  நடிக்க வரமாட்டேங்குது’ன்னு சூர்யா feel பண்ணிட்டு இருந்தா .. அந்தப் பக்கம் ஜோ பொண்ணு நிறுத்து நிறுத்துன்னு சொல்லியும் நடிச்சுட்டு இருந்துருக்கு....
ஒளிமயமான ஜோடியின் வார்த்தைகள் ஒரு hi,bye யுடன்  முடிந்த காலம்...

படம் நல்லா இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை மேலும் ‘மின்சாரக் கண்ணா’ போன்ற படங்கள் ஒரே கதையுடன் வெளிவந்ததால் செரியாக ஓடவில்லை... ‘உயிரிலே கலந்தது’ என்னும் படத்தில் அடுத்து நடித்தாலும் பெரிய முன்னேற்றம் இல்லை..

அடுத்த காலகட்டம் சூர்யாவின் வாய்ஸிலேயே..... “சினிமாவ விட்டுட்டு போறதா இல்லாட்டி இன்னும் இருக்குறதான்னு தெரியாம இருந்த காலம்...  Y.m.c.a கிரவுண்டில் ஒருநாள் மண்ணும் வியர்வையுமாக நிற்க... அங்கே பக்கத்தில் ஜோதிகாவுடைய ஷூட்டிங்.. ‘நம்ம கூட நடிச்ச பொண்ணு’ குஷி,தெனாலி’ன்னு எங்கயோ போயிடுச்சு.. நாம என்னன்னா.. இப்போதான் பல்டி அடிக்கவே கத்துக்குறோம்னு ஒரு எண்ணம்..’  
சார் ஜோதிகா மேடம் உங்கள கூப்புடுறாங்கன்னு ஒருத்தர் வந்து சொல்ல.. பாக்க முடியாதுன்னு சொல்லி அனுபிச்சிட்டேன்.. திரும்பவும் அவர் வந்து கூப்பிட .. போய் பார்த்தேன்

ஜோ :- என்ன சூர்யா என்னை ஞாபகம் இருக்கா??
சூர்:- (மௌனம்..)
ஜோ:- என் படங்கள் பாப்பீங்களா??
சூர்:-ஓ.. பாப்பேங்க..
ஜோ:-அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி பாராட்ட மாட்டீங்களா??
சூர்:- உங்க ஃபோன் நெம்பர் எங்கிட்ட இல்லீங்க...
ஜோ:-ரெண்டு படத்துல சேர்ந்து நடிச்சுட்டோம்.. ஃபோன் நெம்பர் இல்லன்னு சொல்றீங்க???

         ஃபோன் நெம்பர் பரிமாறப்பட்டது... அதுக்குப் பிறகு கொஞ்சமாவது உருப்படியா ஏதாவது பண்ணனும்னு நெனச்சு ரொம்ப பொறுமையா ஒத்துக்கிட்ட படம் “friends" அந்தப் படத்தோட previewக்கு ஜோவ கூப்பிட்டு இருந்தார்.. வந்தவங்க.. கிளைமாக்ஸ்  பாக்காம கிளம்பி போய்டாங்க..  அந்தக் கிளைமாக்ஸ்தான் இருந்த கொஞ்சநஞ்ச தெறமய காமிச்சதா நெனச்சுட்டு இருந்தாரு சூர்யா... ஆனா அவங்க பாக்காம போய்டாங்க...  அதற்கு பின் ஃபோனில்...

ஜோ:- அவசரமான வேல அதனால போய்ட்டேன் சூர்யா..  நல்லா நடிச்சுருக்கீங்க..
சூ:- படத்த பாக்காமலேயே கெடக்குற பாராட்டு எனக்கு வேணாம்...
ஜோ:- அடடா, இன்னொ முற  முழுசா பாத்துட்றேன்

           கோபத்தில் அவங்களோட பேசுறதையே நிறுத்திட்டார் சூர்யா.. அப்புறம் எப்பிடி கல்யாணாம் வரை... அட... இன்னும் இருக்குங்க.. அப்புறம் சொல்றேன்.. 

பின்னூட்டமும் .. ஓட்டும் குத்திட்டு போங்க... முடிஞ்சா side ல adds யும் கிளிக்குங்க...

இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...

(இப்படிக்கு சூர்யா புத்தகத்தையும்,, அவரின் பேட்டிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படும் தொடர் பதிவு இது)