May 12, 2009

கவி(ழு)த .. கவி(ழு)த .....


கல்யாணம்

“எப்போடா கல்யாணம் ??” கேட்டா அந்த மவராசி....
“எப்போவேணுன்னாலும் “ சொன்னான் அந்த மணவாளன்...

சிலநாள் கழித்து
சொன்னபடியே நடந்தது திருமணம்...

அவளுக்கு திருத்தணியில்..
அவனுக்கு திருப்பதியில்....
*********************************************************************

தோல்வி ???

அன்று 
அவர்கள் ...

இன்று 
அவன்
தன்னந்தனியாக அல்ல....
தன்னந்-தண்ணியாக !!!!

********************************************


சன் பிச்சர்ஸ் திரைப்படம்

அடிச்சு புடிச்சு 
இன்னைக்கே பாக்கனும்னு
டி.வி.டி. யில 
பாக்காதீங்க...

ஆராமர
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
டி.வி. யிலேயே 
பாருங்க....

************************************************

இறையருள் !!!

குடியும் குடித்தனமாக வாழ வேண்டுமென எல்லோரும் நினைக்கிறார்கள்,,
இறைவன் அருளுதுவதோ
சிலருக்கு குடித்தனம்..
சிலருக்கு குடி--த்தனம்..

************************************************
இது என்னது ???

கவித என்பதா??? கழுத என்பதா ??
இரண்டின் மத்தியில் இன்னோர் கலையோ ?????

இப்பிடி என்னன்னவோ எழுதி என்னன்னு தெரியாம கெடக்குது என்கைகளில்.....
இதுக்கு ரெஸ்பான்ஸ பாத்துட்டு மிச்சதெல்லாம் வரும் இடுகைகளில்......

*********************************************

ஆட்டோ அனுப்புபவர்கள்.. 
பின்னாலயே வாங்க
ஆகாஓகோன்னு பாராட்டுறவங்க
பின்னூட்டத்துல வாங்கோ!!!

26 comments:

SUBBU said...

:)) :))

வால்பையன் said...

//ஆராமர
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
டி.வி. யிலேயே
பாருங்க....//

அத்தனை விளம்பரத்தை பாக்குறதுக்கு பதிலா டீ.வி.டீயிலேயே பார்க்கலாம்

வால்பையன் said...

//ஆட்டோ அனுப்புபவர்கள்..
பின்னாலயே வாங்க
ஆகாஓகோன்னு பாராட்டுறவங்க
பின்னூட்டத்துல வாங்கோ!!!//

பின்னூட்டம் போட்டுகிட்டே ஆட்டோவும் அனுப்புவோமே!

கடைக்குட்டி said...

SUBBU
:)) :))


நல்லாஇருக்குன்றீங்களா???
இல்லன்றீங்களா????

என்னவோ போங்க.. ஒடனே வந்ததுக்கு நன்றி... :))

கடைக்குட்டி said...

வால்பையன்
//பின்னூட்டம் போட்டுகிட்டே ஆட்டோவும் அனுப்புவோமே!//

இத நோட் பண்ணலியே நானு...

முக்கோணம் said...

நல்லா இருக்கு பாஸ் தயவு செய்து தொடரவும்..(உங்களுக்கு பின்னூட்டம் போட வந்தால் ஏதோ ஒரு விளம்பர பொட்டி வந்து பயமுறுத்துது..கவனிக்கவும்)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
சிலநாள் கழித்து
சொன்னபடியே நடந்தது திருமணம்...

அவளுக்கு திருத்தணியில்..
அவனுக்கு திருப்பதியில்....//

திருமணம் தனியாக நடந்தால் கவலையில்லை தல..

திருமணம் ஒரே இடத்தில் ந்டந்து..........................................................

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தோல்வி ??? ========இறையருள் !!!

Suresh said...

:-) கலக்குறிங்க

sakthi said...

எப்போடா கல்யாணம் ??” கேட்டா அந்த மவராசி....“எப்போவேணுன்னாலும் “ சொன்னான் அந்த மணவாளன்...
சிலநாள் கழித்துசொன்னபடியே நடந்தது திருமணம்...
அவளுக்கு திருத்தணியில்..அவனுக்கு திருப்பதியில்....

yeppa kalakara

sakthi said...

இறையருள் !!!
குடியும் குடித்தனமாக வாழ வேண்டுமென எல்லோரும் நினைக்கிறார்கள்,,இறைவன் அருளுதுவதோசிலருக்கு குடித்தனம்..சிலருக்கு குடி--த்தனம்..

mudiyalai

sakthi said...

என்னது ???
கவித என்பதா??? கழுத என்பதா இரண்டின் மத்தியில் இன்னோர் கலையோ ?????
இப்பிடி என்னன்னவோ எழுதி என்னன்னு தெரியாம கெடக்குது என்கைகளில்.....இதுக்கு ரெஸ்பான்ஸ பாத்துட்டு மிச்சதெல்லாம் வரும் இடுகைகளில்......


aalai vidunga samy

சித்து said...

சில கவிதைகள் நறுக்குன்னு இருக்கு, மிக உண்மை. தொடரப் பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள்.

செந்தில்குமார் said...

சபாசு சபாசு... அருமை.. கலக்கறேள் போங்கோ !!

ஆதவா said...

கவிதை என்பது ஒரு நிகழ்வையோ, ஒரு கருத்தையோ அல்லது ஒரு உணர்வையோ எழுப்பக் கூடியது... அது எந்த வடிவிலேனும் மக்களை அடையவேண்டும் என்பதுதான்.. இவையாவும் கவிதையெனவே எடுத்துக் கொள்ளப்படும்.....

கலையரசன் said...

//இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக டி.வி. யிலேயே
பாருங்க....//
பாக்கற மாதிரியா இருந்தா டி.வி.யில ஏன் வருது?

ஜெட்லி... said...

கடைக்குட்டி super........

கடைக்குட்டி said...

//(உங்களுக்கு பின்னூட்டம் போட வந்தால் ஏதோ ஒரு விளம்பர பொட்டி வந்து பயமுறுத்துது..கவனிக்கவும்)//

கவனித்து விட்டேன்.. நன்றி :-)

கடைக்குட்டி said...

//(உங்களுக்கு பின்னூட்டம் போட வந்தால் ஏதோ ஒரு விளம்பர பொட்டி வந்து பயமுறுத்துது..கவனிக்கவும்)//

கவனித்து விட்டேன்.. நன்றி :-)

கடைக்குட்டி said...

// SUREஷ் said...
தோல்வி ??? ========இறையருள் !!!
//

கஷ்டப்பட்டு சொன்ன விசயத்த இப்பிடி சிம்பிளா முடிச்சிடீகளே டாக்டரே..@@@

கடைக்குட்டி said...

Suresh said...

//
:-) கலக்குறிங்க

//


ன்
றி
ங்
க !!!

கடைக்குட்டி said...

sakthi சொன்னது
/
aalai vidunga samy
//

ஐ.. அதெப்படி விடுவோம்???

கடைக்குட்டி said...

சித்து said...
//
சில கவிதைகள் நறுக்குன்னு இருக்கு, மிக உண்மை. தொடரப் பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள்.//

செரிங்க!!!செஞ்சுறுவோம்

கடைக்குட்டி said...

செந்தில்குமார் said...
சபாசு சபாசு... அருமை.. கலக்கறேள் போங்கோ !!//

நன்றி :-)

கடைக்குட்டி said...

ஆதவா சொன்னது
//இவையாவும் கவிதையெனவே எடுத்துக் கொள்ளப்படும்.....//

பிறவிப்பயனை அடைந்தேன் ஆதவா :-)

கடைக்குட்டி said...

கலையரசன்,ஜெட்லி,

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி :-)