May 27, 2009

நிலாவுக்கு போனது புருடாவா ???

ஜூலை 20 1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் குழுவினர் நிலாவில் கால் பதித்ததாக சொல்லப்படுகிறது.. ஆனால் அதப் பற்றி பலவிதமான கருத்துக்களே பரவியுள்ளது... முதலில் ஆச்சிரியத்தில் அனைவரும் ஒத்துக்கொண்டாலும் 1974 முதலே இது ஒரு ஹம்பக்தான் என்னு பேச்சு உள்ளது...

அதற்கு வலு சேர்க்கும் காரணங்களில் சில...


இது மிகவும் புகழ் பெற்ற படம்.. “நிலாவில் மனிதன்” . சூரிய ஒளியில் இந்தப் படத்தை எடுத்திருப்பார்களேயானால்...(சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை அங்கு) ஒளி விழுவதற்க்கு மறுபுறம் அந்த மனிதனின் உடை கண்டிப்பாகத்தெரிய முடியாது... ஆனால் zoom செய்து பார்த்தால் அவரது உடையில் அவரது பெயரே தெரிகிறது.. எப்பெடி ???

c என்னும் இடத்தைப் பார்ப்பீர்களேயானால்... அங்கு வெளிச்சம் கம்மியாக இருக்கும்.. அதெப்பெடி ?? சூரியக் கதிர்கள் ஒரு இடத்தில் ஒரு மாதிரியும் மறு இடத்தில் மறு மாதிரியும் விழும் வகையில் எந்த ஒரு தடையும் இல்லை நிலவில்... நாம் பூமியில் பயன்படுத்தும் விளக்குகள் கொண்டு எடுத்தால்தான் இப்பெடி தெரியும்.. ஆனால் நாசாவோ எந்த விளக்குகளும் அவர்களுடன் அனுப்பப்படவில்லை என்கிறது.. பின் எப்பெடி ???ஆலன் பீனின் புகைப்படம் இது.. இதை நன்கு கவனிக்க.. அவரது நெஞ்சுப் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே மாதிரிதான் எல்லாருடைய உடையிலும் பொருத்தப்பட்டது.. அது உண்மையானால்... நெஞ்சில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆலன் பீனின் ஹெல்மெட்டுக்கும் மேல் தெரிவதெப்படி ???
அதன் கோணம் மாறுகிறதே....இதன் வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம்.. நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்க கொடியை அங்கு நட .. அது காற்றில் படபடக்கும்... அதுதான் வினையே... நிலாவுலா ஏதுங்க காத்து ????


அரசியல் காரணங்கள்

1--> ரஷ்யாவை அடக்க ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.,.,
2-->பல மில்லியன் டாலர்களை வீணாக்கிவிட்ட நாசா சப்ப கட்டு கட்டுவதற்க்கு பதிலாக சப்பையாக செட்டு போட்டு முடிச்சுறுக்கலாம்...

சிம்பிள் காரணம்

ஏங்க “உலக தாதா” அமெரிக்கா... ஒரு விஷயம் ஜெயிச்சுட்டா அப்டியே உட்டுருமா ??? கண்டிப்பா இல்லை.. 1969ல் 1 மனிதன் கொடி நாட்டி இருந்தால் இந்நேரத்துக்கு 100 பேர் அங்க குடி போய் இருப்பாங்க.. இன்னும் ஆராய்ச்சி பண்றோம்னு இழுத்தடிக்க மாட்டாங்க....

இந்த மாதிரி இன்னும் ஆயிரம் ஓட்டைகள் சொல்றாங்க புகைப்பட வல்லுனர்கள்...

இதையெல்லாம் வெச்சு பாத்தா ... நெசமாவே பொய்யோ ????22 comments:

sakthi said...

ஆலன் பீனின் புகைப்படம் இது.. இதை நன்கு கவனிக்க.. அவரது நெஞ்சுப் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே மாதிரிதான் எல்லாருடைய உடையிலும் பொருத்தப்பட்டது.. அது உண்மையானால்... நெஞ்சில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆலன் பீனின் ஹெல்மெட்டுக்கும் மேல் தெரிவதெப்படி ???அதன் கோணம் மாறுகிறதே....

அதானே நம்மளை மாங்கா ஆக்கிட்டாங்களா???

sakthi said...

கடைக்குட்டி கலக்கறேள்

வாழ்த்துக்கள்

Suresh said...

என்னாமா ஓசிக்கிறா ;0

SUREஷ் said...

நடந்தது என்ன

அலசல் ரிப்போர்ட்


பார்த்து மகிழுங்கள்

மூன்ரேகர்

ஜேம்ஸ் பாண்டு அங்கிள் புரட்டி எடுத்தது

மின்னுது மின்னல் said...

நிலாவுலா ஏதுங்க காத்து
//

magnetic flag !!!

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

The Rebel said...

This Report originated more than 4 years ago..
NASA gave its standpoint too..
Too late to publish this..

கடைக்குட்டி said...

@ sakthi

நன்றிங்க!!!

(இதெல்லாம் சந்தேகம் தான்..உண்மையான்னு தெரியல)

கடைக்குட்டி said...

நன்றி சக்கர :-)

கடைக்குட்டி said...

//
நடந்தது என்ன

அலசல் ரிப்போர்ட்


பார்த்து மகிழுங்கள்

மூன்ரேகர்

ஜேம்ஸ் பாண்டு அங்கிள் புரட்டி எடுத்தது
//

என்ன சொல்றீங்கன்னு புரியல..

இருந்தாலும் நன்றி தல:-)

கடைக்குட்டி said...

மின்னுது மின்னல்..
//
magnetic flag !!!
//

ஹ ஹா.. தெரியலீங்க!!!

கடைக்குட்டி said...

The Rebel said...
//
This Report originated more than 4 years ago..
NASA gave its standpoint too..
Too late to publish this....
//

thanks rabel for ur valuable comment...

i know only today.. if any ONE came to know through my blog tht s enough 4 me buddy...

keep in touch :-)

SUREஷ் said...

மூன்ரேகர் படம் பாருங்க தல


இந்த மாதிரி செட் நிறையப் போட்டு

விண்கலன்கள் காணாமல் போய் நம்ம பாண்டு அண்ணாச்சி தன்னோட டார்லிங்ஸோட புரண்டு எந்திரிச்சு கடைசியில என்ன நடந்திச்சு கண்டுபிடிப்பாங்க.


நீங்க கேட்டிருக்கற கேள்விகளோட அந்தப் படம் பார்த்தீங்கண்ணா
உண்மை எவ்வளவு பொய் என்பது புரியும்

பித்தன் said...

இந்த சின்ன பய்யனுக்கு இம்புட்டு அறிவான்னு, நாசா காரங்க எல்லாம் மூக்குமேல விரல வைகுராங்கலாம்

Anonymous said...

ஆஹா.. பத்தவைச்சிட்டியே பரட்டை!

mathi - india said...

கம்மூஸ்ட்டுகளால் கட்ட பட்ட கதை இது ,

நாசாவால் சரியான விளக்கம் தரப் பட்டு நிறைய காலமாச்சு ,

ஒரே விசயம் , அந்த கொடி ,

மேல்பக்கம் ஒரு கம்பி நுழைக்கபட்டுள்ளது ,அதனால் சாயாது உள்ளது (படத்தை உற்று பாருங்க) நிலாவில் காற்று இல்லை என நாசாவுக்கு முன்பே தெரியுமே ?

நாம் பொய்யையே நம்ப விரும்புகிறோம் , நிலாவாயினும் , பிரபாகரன் மரணமாயினும்.

(பிந்ரன்வாலே இன்னும் சாகவில்லை என பஞ்சாப்பில் நிறயபேர் நம்புகிறார்கள் தெரியுமா?)

வழிப்போக்கன் said...

இத மாதிரி ஒரு ஆய்வ நான் பாத்ததே இல்ல...
கலக்கல் பதிவு !!!
:)))

கடைக்குட்டி said...

ஓகே டாக்டரே பாத்துருவோம். :-)

கடைக்குட்டி said...

நன்றி பித்தன்

******************

ஹா ஹா.. நன்றி கவின்

கடைக்குட்டி said...

mathi indis

நன்றிங்க வருகைக்கு...

உங்கள் கருத்துக்கு நன்றி..

ஆனா ரொம்ப சாதாரணமா யோசிச்சு சொல்லுங்க... உலக தாதா ஒருமுறை ஜெயிச்சுட்டு திரும்பவும் செய்யாம இருக்குமா???

கடைக்குட்டி said...

நன்றி வழிப்போக்கா... :-)

malar said...

இந்த சேதி முனாலையே விகடனில் வந்தாச்சு