November 05, 2010

வா குவார்டர் -- உவ்வே....

பெரிய விமர்சனமெல்லாம் தேடி வந்து இருந்தா இப்பிடியே போயிடுங்க.. இந்த படம் அதுக்குலாம் வொர்த்த் இல்ல...



உவ்வேஏஎ....

ஒரே வார்த்த.. இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல..
புதுசா ட்ரை பண்றேன்னு படு மொக்கையா ஒரு படம்..
ஒரே ஒரு டவுட்டுதான்.. படம் எடுத்து இத போட்டுப் பாத்தாய்ங்களா இல்லியான்னு தெரியல..
I HATE THIS MOVIE.. பட்டாசு வெடிச்சு கரியாக்கி இருக்கலாம் இந்த மாதிரி கரி ஆக்குறதுக்கு.

வா குவார்ட்டட்-- உவ்வே -- (இந்த பஞ்ச் லைன இன்னும் பல ப்ளாக்ல பாப்பீங்க,,:-)


August 01, 2010

எந்திரன் -- என் எதிர்பார்ப்புகள்!!



“.. இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ... ”கேட்டுட்டே எழுதிட்டு இருக்கேன்...

“சிவாஜி” படம் அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் மனசுல பல விஷயம் தோனி இருக்கும்...


“சிவாஜின்ற பேரு நடிகர்திலகத்தை குறிக்கும்.. (பழைய காலத்து பேரு மதிரி பல பேர் நெனச்சு இருப்பாங்க.. அதுக்கு ஏத்த மாதிரி படம் பேரு போடும் போது பழைய கால ஸ்டைல்லதான் போடுவாங்க..)

”சிவாஜி வாயில ஜிலேபி... ” (இந்த மேட்ட்ரும் நியாபகம் வந்து இருக்கும்.. அதும் இருக்கு படத்துல...)





“ஏண்டா ஃபர்ஸ்ட் ஸீன் எப்பவுமே தலைவர் அறிவுறதான் சொல்லுவாரா?? போலிஸ் கீலீஸ்ல மாட்ட மாட்டாரான்னு தோனும்.. சிவாஜில வித்தியாசம உள்ள வந்து இருப்பாரு.. ( என்னதான் வித்தியாசம வந்தாலும்
அதே கல்வித் தந்தை .. கள்ள.. ச்சே.. நல்ல காதலன் அப்டீன்ற ஹீரோ மெட்டீரியல்ல தான் நடிச்சு இருப்பாரு...)

நான் எதுக்கு இப்ப கொசுவத்தி சுத்திட்டு இருக்கேன்னா... இந்த மாதிரி எந்திரன்ற பேரக் கேட்டதும்.. காதுல விழுற செய்திகளையும் மீறி சில எதிப்பார்ப்பு இருக்கும்.. அது என்னன்னு இப்ப பட்டியல் போடுறேன்..
படம் ரிலீஸ் ஆனதும் சரிபாத்துக்குவோம்..

நாம எதிர்பாக்குற கதை இதுதான..??

தலைவர்(வசீகரன்..) தலைசிறந்த விஞ்ஞானி.. அவர் உருவாக்குற விஞ்ஞானக் குழந்தை (ச்ச்சிட்டி..) .. அது படைப்பின் உச்சக்கட்டம்.. மனிதன் மாதிரியே.. ஆனால்
மனிதனின் குறைகளான உடல்நலக்குறைவு.. மன நலக்குறைவு .. இல்ல.. இந்த மாதிரி ஒரு காதலன் வேணும்னு பொண்ணுங்க ஏங்குற மாதிரி இருக்கும்... வசீக்கும் ஐசுக்கும் காதல்.. அதுக்கு நடுவுல
எதிரி க்ரூப் விஞ்ஞானி கையில சிட்டி மாட்டிக்க அவர் இத மாத்திட்றாரு.. கடைசில வசீ எப்புடி நாட்டையும்.. ச்சிட்டியையும் எப்புடி காப்பாத்துறாருன்னு கதையாக இருக்கலாம்..
நடுவுல ஏ.ஆர்.ஆர் பாட்டு..
பீட்டர் ஹெய்ன் சண்டைகள்..
சந்தானம் அன் ச்சிட்டி ரோபோவின் காமெடிகள்...
இந்த மசாலால இன்னும் டிடெயில்லா என்ன இருக்கலாம்ன்னு யாரோ புக் பண்ண ரூம்ல உக்காந்து யோசிச்சப்ப கெடச்சவை...




கதைலயும் உருவாக்கத்துலயையும் சுஜாதாவோட பங்கு முக்கியமானது.. அதனால படம் துவங்கும் போது அமரர்.சுஜாதாவுக்கு நன்றிகள்ன்னு டைட்டில் போடுவாங்கன்னு எதிர் பார்க்கலாம்..
(சன் பிக்சர்ஸ் அனுமதித்தால் :-)


ஜீன்ஸ் படத்துல அவங்க ரெட்டைப் புள்ளைங்கப்பான்னு சத்தியம் பண்ணாத கொறயா ப்ராசாந்த்தோட அறிமுகம் இருக்கும்.. அதே போன்று... தலைவரோட அறிமுகம் இருக்கலாம்.. அவர் விஞ்ஞானிபான்னு காமிக்க
அவரோட லாபே அவரோட வீடாகவும் இருக்கலாம்... (நியூ படத்தின் மணிவண்னன் நியாபகம் வரக் கூடாது :-)




ச்சிட்டி ரோபோ பிறப்பு கண்டிப்பா எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்கலாம்.. கற்பனைக்கு எட்டாத வகையில்..



ஐஸுக்கும் ரஜினிக்கும் காதல் வழக்கம்போல காட்டப்படலாம்.. வித் சந்தானம் அண்ட் கருணாஸ் க்ரூப்...




சிவாஜில காட்டுன மாதிரி இதுலையும் வில்லன் இது வரைக்கும் நமக்கு அறிமுகம் இல்லாதவர்.. அதனால அவர் என்ன பண்ணாலும் புதுசாக இருக்கலாம்...


நான் முக்கியமா நெனக்குறது.. ச்சிட்டின்ற பேரு.. ரோபோ.. இந்த மேட்டர் எல்லாம் கொழந்தைகள்ளுக்கு புடிச்ச மேட்டர்.. அதனால கொழந்தைகள கவர்ற காமெடி இருக்கலாம்... (போன வருசம் வாமனன்
படத்தோட விமர்சனமே நான் “எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்”ன்னுதான் எழுதுனேன்..”)


சந்தானம் ரோபோ ரஜினிய மானாவாரியா கலாய்க்கலாம்...

தலைவரோட ஆளோட வேற ஒருத்தன் டூயட் பாட முடியாது .. ஆனா அதுவும் பாஸிபிள் இங்க.. ரோபொ ரஜினிக்கு ரெண்டு டூயட்.. ஏன்னா கிட்டத்தட்ட வில்லன் என்பவனும் ரஜினிதானே...


ரோபோ ரஜினி பொறந்ததும் அவர ஹீரோவும் ஐசும் கொழந்த மாதிரி பாத்துக்கலாம்.. அதனால முதப் பாதில ச்சிட்டி நல்லவனா இருக்கலாம்.. ஏதோ நடந்த பொறவு அதுவே ஐச டாவடிக்கலாம் :-)



ரஜினி கட் பண்ணி வெச்சிருந்த உணர்ச்சிகள ரோபோவே ஆக்டிவேட் பண்ணிக்கலாம்.. (சுஜாதாவோட டச் இந்த மாதிரி இருக்கும்னு ஒரு நெனப்பு...)

இதுக்கு மேல உங்களுக்கு என்ன தோனுதுன்னு சொல்லுங்க :-)


ஆடியோ வெளியீடு -- ஓர் பார்வை

நேத்து(31-07-2010) கோலாலம்பூர்ல ஆடியோ லாஞ்ச்.. இண்டர்நெட்ல பாத்தேன்.. விவேக்தான் தொகுத்தாரு.. அவரோட சமீபத்திய காமெடி போல மொக்கையாக..
எல்லோரும் ரஜினி சூப்பர்.. காலாநிதி சூப்பர்ன்னு பேசுனாங்க.. மாறி மாறி முதுகு சொறிஞ்சுக்குறத தவிர வேற என்ன செய்ய முடியும் அங்க..

ஆனாலும் ரஜினி பேசுறப்ப.. ஐசத் தொட கூச்சமா இருந்ததா சொன்னாரு.. அமிதாப்போட மருமக.. என்னடா இப்பிடி நடிக்கிறோமேன்னு தோணுச்சாம்...
என்ன சொல்றதுன்னு தெரியல் .. எதிர்கால இந்தியாவே.. நீ பாத்துக்க இத.. :-)

பாடல்கள் -- ஒரு கேட்வை.. (பார்வை மாதிரி :-)

“இரும்பிலே இருதயம் முழைக்குதோ... “ செம.. அ.ஆ பட “மரங்கொத்தியே..” பாடல் பீட்ல இருந்தாலும் மதன் கார்க்கி ஸ்கோர் செய்யுறாரு...

”கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு... “

வரிகள் ரசித்தேன்...

”என் இன்ஜின் நெஞ்ஞோடு
உன் நெஞ்ஞை அணைப்பேன்..

நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்... “

ஹா ஹா.. கண்டிப்பாக ஒரு ரோபட் பாடலாம் இப்படி...


வைரமுத்து வரிகள் வழக்கம்போல... ஐசுக்கே ஐசு வெக்காதன்னு சோல்லும் வரிகள் வைரமுத்து வழக்கம் போல...

நெறய கொசுவத்தி சுத்தி இருக்கேன்.. கொஞ்சம் பாத்து ஓட்டு போடுங்க சாமீய்..

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :-)

July 31, 2010

எந்திரன் ஆடியோ லாஞ்ச் --LIVE


LIVE முடிஞ்சு போச்சு...

http://rapidshare.com/files/410137596/Endhiran.320.VBR-By.Guru.rar.html

http://hotfile.com/dl/58668981/ee00768/Endhiran.320.VBR-By.Guru.rar.html

http://www.fileserve.com/file/X64frTD/Endhiran.320.VBR-By.Guru.rar

http://www.mediafire.com/?ez4eb1zurljk13b

http://www.megaupload.com/?d=9BUYDBC6

பாட்டு இங்க இருந்து எடுத்துக்கங்க :-)

February 27, 2010

ஒரு “டண்டணக்கா டணக்குணக்கா” ஆகிறதே...!!!



ரொம்ப நாள் கழிச்சு எழுதுறதால செத்தீங்க.. நெறய படிக்கனும்.. ரெடியா???

விண்ணைத்தாண்டி வருவாயா!! படத்தோட ஸ்டில்ஸ் பாத்தப்ப மொதல்ல ஒன்னும் புரியல.. நான் சொல்றது ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ‘மின்சாரக் கனவு’ படத்தில் வரும் பாட்டு மாதிரி.. “a Gautham Film"ன்னு விளம்பரம்.. படம் சரியாக தெரியல.. அடுத்த நாள் பாத்தா “அலைபாயுதே” மாதிரி விளம்பரம்..
சிம்பு முகம்.. அடப்பாவீகளா!! கவுதம் படத்துல சிம்புவா??? நம்பவே முடியல...

அதுக்கு அப்புறம் வந்த ஸ்டில்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்ததும்.. பாடல்கள் பட்டையைக் கெளப்புறதும்.. வ-ர-லா-று..

படம் இன்னைக்கு பாத்தேன்.. கண்டிப்பா I m in love with u களும்.. m crazy abt u க்களும் இருக்கும்.. கவிதை மாதிரி .. “காதல தேடிட்டு போக முடியாது..” போன்ற இரண்டு மூன்று வார்த்தைகள் கொண்ட வசனங்களும் இருக்கும் என்று எதிர்பார்த்து போனேன்... ஏன்னா நாம என்ன எதிர்பார்ப்போட போறோம்னு இருக்குல்ல...?? அப்பத்தான் அது நிறைவேறுச்சா இல்லயான்னு தெரியும்..

நான் எதிர்பார்த்த மாதிரியே கவிதை போல பெயர் போட தொடங்கியது.. நான் படத்துக்குள்ள போய்ட்டேன்.. அறிமுக் காட்சிகளில் காக்க காக்க போல ஃபாஸ்ட் கட்டிங்.. நல்ல நேரேஷன்.. நாயகன் நாயகி அறிமுகம்.. வழக்கம் போல் கதை.. வழக்கத்துக்கு மாறான ட்ரீட்மெண்ட்..

முதல் பாதி அருமைங்க.. உண்மைலேயே நான் என்ன எதிர் பார்த்து போனேனோ அது இருந்துச்சு..

நான் ரசித்தவை..

** வசனங்கள் பேசும் போது பின்னாலே தொடரும் இசை. .. அதாவது முதல் பாதியில் நல்லா கவனிச்சீங்கனா தெரியும்.. ஸீன் ஃபுல்லா போய்ட்டு இருக்கும் போதே பின்னால் தொடரும் இசை.. குறிப்பாக சிம்புவும் திரிஷாவும் முதல் முதலாக வீட்டில் பேசும் காட்சியில்.. சான்ஸ்லெஸ்.. “கல்யாண வீடியோ பாக்கும் போது.. நமக்கு புடிச்சவங்க வரும் போது .. புடிச்ச பாட்டு பின்னாடி மிக்ஸ் பண்ணி இருந்தா எப்புடி இருக்கும்.. அந்த மாதிரி.. சுகானுபவம்...

** நாம இனிமே நண்பர்களாக இருப்போன்னு சொல்லும் போது பின்னனி இசை.. OMGOD!!!! நான் ரொம்பவே ரசித்தேன்...


**சிம்பு... “கோவில்” நான் ரொம்ப எதிர் பார்த்தேன்.. மனுஷன் அமைதியா நடிக்கிறான் நல்லா போகும்ன்னு.. போகல.. அதிலிருந்தே எல்லாரும் சொல்வாங்க சிம்பு அமைதியா நடிச்சா படம் காலின்னு.. ஆனா அத மாத்தி இருக்கு இந்தப் படம்.. மனுஷன் ரியாக்‌ஷன்ஸ் என்ன.. நடிப்பு என்ன.. அப்டியே காதல்ல கறையுறான் மனுஷன்.. ஆனா.. ஊனா.. கட்டிப் புடிச்சு காண்டேத்துறார்..நல்ல டைரக்டர்கள் கையில் மாட்டினால் இன்னும் உயரம் தொடலாம்.


**திரிஷா.. எனக்கு அவ்வளவா புடிக்காது.. ஆனா நானே ரசிக்குற அளவுல இருக்கு.. நீங்க மூனு-ஷா பைத்தியம்னா உங்க பைத்தியம் முத்தி ஏற்வாடி போய்டுவீங்க.. தியேட்டர் கமெண்ட்ஸ்--> அட என்னப்பா இந்தப் பொண்ணு இது வரைக்கும் பேசாததெல்லாம் சேத்து இந்தப் படத்துல பேசுதுன்னு.. அந்த அளவுக்கு நடிக்க வாய்ப்பு.. ஒன்னம் க்ளாசானு.. நடிப்பு..

**சிம்புவும்.. திரிஷாவும் வெளயாண்டு இருக்காங்க .. நடிப்புல.. நடிப்புல.. (தில்லு முல்லு படத்துல தேங்காய் சீனிவாசன் சொல்வாரே.. பாட்லே.. பாட்லே ன்னு.. அந்த மாதிரி..)

**மனோஜ் பரமஹம்சா.. என்னா மேக்கிங்.. லைட்டிங்.. அதுவும் நைட்ல வரும் ஒரு ஒரு காட்சியும் கவிதை.. இவருடைய உழைப்பால மெருகேறி இருக்காங்க நடிகர்கள் எல்லாம்.. சொல்லப் போனா படமே...

**நளினி ஸ்ரீராம்.. சிம்பு உடைகள் அபாரம்.. செம ஸ்மார்ட்டா இருக்காருன்னா அதுக்கு இவங்களும் காரணம்.. என்னடா இவ்ளோ சிலாக்கிறானேன்னு நெனச்சா “காளை” படத்தின் அறிமுகப் பாடலைப் பார்க்கவும்..

பின்நவீனத்துவ புரிதல்

த்ரிஷா இரண்டாம் பாதியில்.. ஒரு கட்டத்தில் நாம பிரிஞ்சுடலாம்ன்னு சொல்வாங்க.. அடுத்த செகண்ட் கட்டி பிடிப்பாங்க.. அடுத்த 10 நொடில திருப்பியும் திட்டுவாங்க,, த்யேட்டர்ல “அட என்னதாம்மா சொல்ல வர்ற?? ஒன்னும் பிரியலயே” கமெண்ட்ஸ்...

அதானே காதல் தலைவா!!!
காண்டேத்தியவை..

**என்னத்தா கவிதை மாதிரி வசனங்கள் இருந்தாலும்.. திகட்டத் திகட்ட காதல் கொஞ்சமில்ல ரொம்ப கடுப்பாக்குது..

**எடிட்டரின் கம்யூட்டரின் மவுஸ் சரியாக cut செய்யவில்லை,.. (என்னது எடிட்டரின் கத்திரின்னு சொல்லனுமா?? அட அப்ப நீங்க இந்தப் படத்த தகுதி இல்லாமா போய்ட்டீங்க..)

**describition.. அது எப்புடி இருக்குன்னு கேட்டா.. அது போல.. இது போலன்னு சொல்வோம்.. புது வகையான உவமைகள். .. கவுதம் ஸ்பெஷல்.. இரண்டாம் பாதியிலும் தொடர்வது காண்டு..

**உமா பத்மநாபன் சிம்புவின் அம்மாவாக.. சில காட்சிகள் .. 3 வரி டயலாக்குகள் இருந்தாலும். மேடம் டி.வி. நியூஸ் வாசிக்கிற மாடுலேஷன்ல பேசுறாங்க... அடுத்த முறை திருத்திக்கட்டும்.. (அவங்க திருத்தி நடிச்சு என்ன ஆஸ்காரா வாங்க போறாங்கன்னு கேக்குறீங்களா?? ரைட்டு விடுங்க..)
.


ஆஸ்கார்ன்னு சொன்ன பொறவு ரஹ்மான் பத்தி சொல்லாட்டி எப்புடி??? . allah rakkah RAhmanனின் இசை.. அது இல்லாட்டி கண்டிப்பா தியேட்டர்ல உக்காந்து இருக்க முடியாது..
பின்னனி கலக்கல்.. ராக் இசை புடிக்கலன்னு சொல்லி இருந்தாரு ஜெட்லி.. நான் ரொம்ப ரசித்தேன்.. பின்னனி படத்திற்க்கு பலம்.. “feel gud film ஃபீலிங் தருவதில் இசைக்கு பங்கு உண்டு.. fusion கள்.. அது இதுன்னு பேர் தெரியாத என்னவோ பண்ணி இருக்காரு.. காதுக்கு நல்லா இருக்கு..

நான் தனியா சொல்லனும்னு நெனக்குற ஆளு..அந்தக் காமெராமேன்.. கமெண்டுகள் அருமை.. கவுதம் காமெடி படம் ட்ரை பண்லாம்..


விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு..,

நான் தனியா எழுதனும்னு நெனச்ச மேட்டர்.. இங்க சொல்றேன்.. நான் வேலை காரணமாக எழுத முடியாட்டியும்.. நண்பர்கள் எழுதுவதை தொடர்ந்து படிக்குறேன்.. ஆனா நான் ரொம்ப எரிச்சலானது தமிழ்ப்படம் படம் பார்த்தப்பதான்.. எல்லா ஸீன்லேயும் என்ன நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சு போச்சு.. என்னால ரசிக்க முடியல..ஏன்னா வளச்சு வளச்சு எல்லார் விமரசனமும் படித்தேன்.. அதனாலா.. ஆனாலும் நேத்து ஜெட்லி மற்றும் கேபிள் விமரசங்கள் தைரியமாக படித்தேன்,, ஏன்னா அவங்க விமர்சனம் சூப்பர்.. படம் நல்லா இருக்கா இல்லயா.. பாக்கலாமா வேனாமான்னு.. அதுதான்.. அது போதும்..

தயவு செய்து யாரும் முழு கதையையோ.. அல்லது.. முக்கியமா நீங்க ரசித்த விஷயத்தையோ சொல்லதீங்க.. படம் பாக்கும் போது கோவம் கோவமா வருது...

இப்போ என்னையே எடுத்துக்கங்க.. நானும் தான் விமர்சன்ம் பண்ணி இருக்கேன்.. இதுல படத்துல கே.எஸ் ரவிக்குமார் வருவதையோ.. “சிம்புவும்-திரிஷாவும்” கண்டிப்பா கடைசில சேர மாட்டாங்க போன்ற உண்மைகளை சொன்னேனா என்ன??? அந்த மாதிரி இருக்க வேணாமா விமர்சனம்னா???

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவுலகம்!!!



January 07, 2010

ஆமீரும் கமலும் ஒரு புள்ளியில்

பின்தொடரும் 75 நண்பர்களுக்கு நன்றி

ஆமிர் கான் பாலிவுட்டின் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தமிழ்நாட்டின்(கோலிவுட்னா திட்டுவாருங்க..) ஆமிர்கன்..


இரண்டில் எது சரி ?? முதலாவதுதான் சரி.. வயதாகட்டும் .. செய்யும் பாத்திரங்களாகட்டும்.. ஆமிரைவிட கமல் மேல்தான்.. இருவருன் முயற்சிகளும் பாராட்டுக்குறியன..

முதலில் கமலை எடுத்துக் கொள்வோம்..16 வயதினிலே,, சிகப்பு ரோஜாக்கள்.. வறுமையின் நிறம் சிவப்பு இந்த மாதிரி இயக்குனர்களின் படங்களில் கலக்கினாலும்... நாயகனுக்குப் பிறகு கமலுக்கு தீனி போடும் அளவுக்கு தமிழ் சினிமா உயரவில்லை..

நாயகனுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கமல்தான் கதை திரைக்கதை.. இதுவே இவருடைய தேடலுக்கு ஒரு உதாரணம்..

இந்தப் பக்கம் ஆமிர் கானை எடுத்துக் கொண்டால் க்”கயாமத் ஸே கயாமத் தக்” படத்தில் துவங்கி..பல வழக்கமான பாலிவுட் மசாலாக்களில் நடித்து வெற்றி கண்டார்.. சில தோல்விகளும்.. ஆனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டுயட் பாடுவதே வேலை.. ரங்கீலா.. மண் எல்லாமே அப்படிதான்..

கமலுக்கு நாயகன்.. ஆமிருக்கு லகான்.. ஆஸ்கர் நாமினேசன் வரை சென்றது வரலாறு.. அந்தப் புள்ளிக்கு பிறகு கமலுடையதைப் போல் இவரின் கலைதாகமும் அதிகமானது.. வழக்கமான படங்களில் நடிக்க முடியாத நிலை.. கமல் போல் தானாக கதை திரைக்கதை அமைக்கவில்லை.. (தாரே சமீன் பர் டைரக்ட் பண்ணி இருந்தாலும்..) இவர் புது டைரக்டர்களை தேடினார்.. கண்டறிந்தார்.. வெற்றி கண்டார்..

ஒவ்வொரு படமும்.. ஒவ்வொரு அனுபவம்.. ரங் தே பசந்தி டிஜேவாகவும் கலக்குறார்.. தாரெ சமீன் பரும் நடிக்கிறார்.. தில் சஹதஹேயும் தில்லாக நடிக்கிறார்.. சமீபத்தில் 3 இடியட்ஸ்..

இருவரும் தன்னை உணர்ந்து கொண்டது ஒரு படத்திற்க்கு பிறகுதான்,,. ஆனால் அதற்கு பிறகு இருவரின் முடிவும் வெவ்வேறானவை.. யோசிக்க செய்பவை.. ஹிந்தி போல் உலக அளவில் மார்க்கெட் இல்லாட்டியும்.. உலக நாயகனின் மார்கெட் பெரிதுதானே..

இருவரும் இணைவது ஒரு புள்ளியாய் இருந்தாலும்.. இருவரில் ஒருவர் முந்துவது போல தோன்றுவதற்க்கு காரணம்??


3 இட்டியட்ஸ்க்கு இம்மி அளவும் குறைந்தது இல்லை அன்பே சிவம்.. 3 இ, இளைஞர்கள்..படிப்பு.. கல்வி பற்றி மட்டுமே பேசுகிறது.. ஆனால் அன்பே சிவம் மனிதனைப் பற்றி பேசுகிறது.. மனிதத்தை பற்றி பேசுகிறது..

3இ. விட .அ.சி சிறந்தது..ஆனால் ஓடல.. ஏன்?? இந்த மதிரி இன்னும் பல படங்கள் சொல்லலாம்..

கமல் தவறும் புள்ளி.. ஆமிர் ஜெயிக்கும் புள்ளி என்று நான் கருதுவது.. கமல் படங்களில் கமல் மட்டுமே தெரிகிறார்.. அவருடைய அறிவுஜீவித்தனம் மட்டுமே தெரிகிறது.. இந்தியன் படம்போல்.. டைரக்டரின் திறனுடன் இவரின் திறன் இணைந்து இயைந்து மாயாஜாலம் புரிவதில்லை..

(அன்பே சிவத்தின் இயக்குனர் சுந்தர்.சி... தசாவதாரம் கே.எஸ்...)


ஆனால் ஆமிரின் கதை வேறு.. 3 இடியட்ஸ் படத்தில் ஆமீரின் கேள்விகள் இருந்தாலும் அவரை விட மூளையான ஒருவரின் தாக்கம் தெரியும்.. அது டைரக்டர்..

அப்போ கமல் தலையீடு ஜாஸ்தியா ?? அப்டீன்னு கேட்டா..
என் பதில்.
கமல் என்னும் யானையை கட்டித் தீனி போட தமிழ் சினிமா டைரக்டர்களே தயாராகுக.. அவருக்கு இவர் சளச்சவரில்லை என்பதை உலகுக்கு உணர்த்துக,..


டிஸ்கி:
இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?

எப்படி எழுதுனாலும் ஓட்டு சேர மாட்டேங்குதே .. ஏன்??? :-) தெரிந்தவர்காள் மெயிலவும்..


சூர்யா டான்ஸ் ஆட வேணாம்!!



நேருக்கு நேர் முடிஞ்சு.. காதலே நிம்மதியும் ஓவர்.. படம் சுத்தமாக படுத்து விட்டது.. அடுத்து கண்டிப்பாக ஹிட் தேவை.. அப்பா சிவக்குமார் கதை கேட்டு.. கொஞ்சம் பாட்டு. , ஃபைட்டு.. ஜனரஞ்சகமா இருக்குப்பா நாடின்னு சொல்லி ஆரம்பித்த படம்
சந்திப்போமா...

டைரக்டர் லண்டன் போய் படித்து வந்தவர்.. “ஷாட்ல வலப்பக்கமா உள்ள வர்றீங்க. நிமிர்ந்து பாக்குறீங்க..’ன்னு ஒவ்வொரு ஷாட்டையும் ஸ்டோரி போர்டில் சொன்னார்.. மவனே கண்டிப்பா ஹிட் டான்னு எறங்கியாச்சு..

என்னதான் ஆக்ஸ்போர்ட்ல படிச்சாலும் ரெண்டும் ஒன்னும் மூனுதானே.. நாலில்லல.. அந்த மாதிரி அடிப்படைல ஒரு தப்பு..

சவுண் ட்,ஸ்டார்ட் கேமரா அப்டீன்னு சொன்னதுக்கு அப்புறந்தான் ஆக்‌ஷன் சொல்ல வேண்டும்.. ஆனால் இந்த லண்டன் டைரக்டர் எடுத்த உடனே ஆக்‌ஷன் சொல்லி விட்டாரு.. அட என்னப்பா இது.. மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது..

இன்று வீட்டிற்க்கு போனதும் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்பா என்று இவர் சொல்லிப் பார்த்து இருக்கிறார்.. ஆனால் அட்வான்ஸ் வாங்கியாச்சு.. நடிச்சு முடிச்சுடு.. படம் நல்லபடியா ஓடும் பாருன்னு கலையுலக மார்க்கண்டேயரும் நம்பிக்கை குடுத்து இருக்கிறார்...

இன்னும் எக்ஸ்ப்ரஷன் தாங்கன்னு கேட்டாலும் சொல்லிக் குடுத்து வாங்குற அளவுக்கு டைரக்டருக்குத் தெரியல.. சொல்லாமலே நடிக்க சூர்யாவுக்கும் தெரியல.. அடுத்த தோல்விக்கு ரெடி..

இதுக்கு நடுவுல ஜெய்ப்பூர்ல ஷூட்டிங்..ஜோத்பூர்ல முகாம்.. பத்து நாள் ஷூட்டிங் ஓவரு.. ஆனா ஹோட்டல்ல மவனே வீட்டுக்கு போவாதீங்கன்னு கேட்ட பூட்டியாச்சு. என்ன ஏதுன்னு விசாரிச்சா.. 10 நாள் காசு பாக்கி.. ஹோட்டல் பில்லே தரல.. தயாரிப்பாளர் புதுசு...

சூர்யாவ மட்டும் கெளெம்பி போயிடுங்கன்னு அங்க இருந்தவங்க சொன்னாலும்.. இவரும் வந்துட்டா அந்த யூனிட்டுக்கு யாரும் உதவ முடியாத நிலைமை...ஒரு வழியாக சூர்யாவும் சிவக்குமாருக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்ல.. பணம் புரட்டி இவர் அனுப்ப ..அதுக்கு அப்புறம் எல்லாரும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்..

இப்படி பல சாகச பராக்கிரமங்களுக்கு நடுவில் நடித்த “சந்திப்போமா” படுதோல்வி.. என்னதான் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் யாரும் முகம் கொடுத்து பேசவில்லை.. நல்லா இருக்குன்னு சொன்ன எல்லாரும் மொகத்துக்காக சொன்னாங்க.. பின்னாடி நிறைய ஏச்சு.. கேலிகள்..

சூர்யா டான்ஸ் ஆடுவதை தவிர்த்து விடுவது நல்லது “ என்று கல்கியில் விமர்சனம் செய்தார்கள்..
இப்படி முச்சந்தியில் வந்து அசிங்கப்படனுமா சூர்யா ??

சும்மா இருந்த சரவணனை சூர்யாவா மாத்திவுட்டானுங்க...

சூர்யான்ற முகமூடியிம் செட்டாகல..

சரவணனையும் தொலச்சாச்சு..

அந்த சரவணன் அப்பிடி என்னதான்பா பண்ணிக்கிட்டு இருந்தாப்ல??

வரும் பதிவுகளில்...
(பழச படிக்க இங்கு க்ளிக்கவும் :-)

January 05, 2010

எஞ்ஞினியா வா! -- 3



பழச படிக்க இங்க க்ளிக்குங்க..

கம்யூட்டர் பொட்டி அறிமுகமாகி.. அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து பல பண முதலைகள் (ஏங்க கெட்ட பணக்காரங்கள பண மொதலனு சொல்றாங்க??) அதன் வீரியத்தை உணர்ந்து உடனே தனியார் காலேஜ்கள் தொடங்க வில்லை..

அதுக்கு கொஞ்சம் காலமாச்சு.. ஆனால் அது அதன் பீக்கில் இருந்தது 95-2000 வரை.. அந்தக் கால கட்டத்தில் எஞ்ஞினியர் என்றாலே தனி மதிப்பு..

அந்த காலகட்டத்தில் பள்ளி படித்து கொண்டிருந்த (என் போன்ற) பிள்ளைகளுக்கெல்லாம் அப்போ வெளிநாடு போனா அண்ணங்களும் அக்காளும்தான் பெரிய இன்ஸ்ரேஷன்.. அத மனசுல வெச்சுதான் பெத்தவங்களும் அடுத்தடுத்து பிள்ளைகளை செர்க்க எஞ்ஞ்னியரிங் கல்லூரிகளைத் தேடி அலைந்தனர்..

ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி எந்த வெள்ளக்காரன அனுப்பினோமோ அவங்கிட்ட சேவகம் செய்ய பிள்ளைகளை தயார் பண்ணியது சமூகம்.. இளைஞ்ர்களின் முகம் மாறிப் போனது..

மிக அதிகமான பணம் விளையாடியது.. இளைஞர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு சென்றனர்.. பிள்ளைகளைப் பார்க்க பெத்தவங்களும்..

ஆனா என்னதான் கண்டிப்பாக இருந்த காலேஜ்களை இந்த மாதிரி கெளப்பி விட்டாலும்.. எண்ணிக்கை அதிகரித்தாலும்.. நமக்கு இன்னும் உலகக மார்க்கெட்டுல டிமாண்ட் இருக்குங்க...


இவ்ளோ பேர எஞ்ஞினியரா மாத்துறது தப்பில்ல இந்த சமூகத்துல.. ஆனா நாட்டுக்கு இது நல்லதில்லை.. சொல்வதை செய்யும் கிளிப்பிளைகள் தயாரிக்கப் படுகிறார்கள்..

அப்புறம் எப்புடிதான்பா படிக்கிறது?? அதுக்குன்னு எதுனா வழி இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு.. 2000 ல உடனே கெடச்ச அந்த பணமும் சமுதாய மதிப்பும் கெடைக்கும்னு நெனக்காம உண்மையாக படிக்கும் எஞ்ஞினியருக்கு தன் தனிதன்மையை காக்கும் எஞ்ஞினியருக்கு காலம் வாய்ப்பளிக்கும்..

எப்பூடி...???


--தொடரும்..

( ஆணி அதிகம்.. எனவே அதிகமாக எழுத முடியவில்லை.. .. பின்னூட்டமிடுங்கள்.. விவாதிக்கலாம்.. )

January 04, 2010

காதலே நிம்மதி ஓடி இருந்தால் ????


சரவணன் முதல் சூர்யா வரை தொடரின் அடுத்த அத்தியாயம் இது.. ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க (யார் அதுன்னு கேக்கக் குடாது.. :-) என்னதான் வகை வகையா மொக்க போட்டாலும்.. இந்த தொடருக்குத்தான்ஹிட்ஸ் கெடக்கிது,.. அதான் திரும்பவும் எறங்கிட்டேன்...

‘நேருக்கு நேர்’ முடிச்சு அது 100 நாளும் ஓடியாச்சு.. அடுத்து என்ன.. ?? ‘காதல் கோட்டை’ ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ போன்ற படங்கள்ன் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பில் ’காதலே நிம்மதி ‘ படமும் துவங்கியாச்சு..

படத்தின் கதையை டைரக்டர் 20 நிமிடந்தான் சொல்லி இருக்கார்.. “எல்லாமே ட்ரீட்மெண்ட் ஸார்.. ஸ்பாட்ல பத்துக்கலாம்னு ” சொல்லிடாப்ல.. ஷூட்டிங் ஸ்பாட்ல போனா டயலாக் பேப்பர குடுத்து நடிங்கன்னு சொல்லிட்டாங்க.,, சூர்யாவ இப்பிடி நடிக்க சொன்னா எப்பூடி?? அவர் சரவணனா இருக்கிராறே.. என்னதான் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்டாலும் கூடவே பொறந்த கூச்சமும் ,தாழ்வு மனப்பான்மையும் துரத்த அவை இரண்டோடும் சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது..

மனிதருக்கு நடிக்கத் தெரியவில்லை.. டயலாக் சொல்லத் தெரியவில்லை.. சண்டைக் காட்சிகளில் அழுத்தமாக குத்து விட முடியவில்லை.. டான்ஸ் பிடிபடவில்லை.. இப்படி நிறைய இல்லைகள்.. (இந்த இல்லைகளை நீங்கள் தற்போது அந்தப் படத்தை பார்த்தால் உணர முடியும்..)



சரியான உடையும் தேர்வு செய்யத் தெரியவில்லை.. அந்த நேரத்தில் கை குடுத்து உதவுயது நாசர் மட்டுமே.. அவருடைய வழிகாட்டுதலில் நடித்தும் முடித்தாகிவிட்டது..




படம் பொங்கல் ரிலீஸ் என்று நினைவு.. மரண மொக்கை.. ஹீரோயினோட அண்ணன்கிட்ட அடிவாங்கும் ஹீரோவினை நம் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதும் லவ் பண்ணாமலேயே வருகிற சந்தேகத்தால் போட்டு பிரித்து மேய்வார்.. கொடுமடா சாமீய்ய்ய்ய்...

முதல் தோல்வி..
இந்த மாதிரி எதிர்பாராத தோல்விகளே சூர்யாவை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.. நான் இந்த தொடரை எழுத ஆரம்பித்த போது இருந்ததை விட தற்போது மாஸ் கணிசமாக உயர்ந்துள்ளது.. விஜய் டி.வி.யில் மனிதர் ஒரு பேட்டியின் போது.. கதை இலாகா ஆரம்பிக்கணும்னு சொல்றார்.. அதாவது வெறும் கதை மட்டும் எழுதி அவற்றை நூலகம் போல சேர்த்து வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று சொன்னார்..


நல்ல விஷயம்தான்.. ஆனால் காதலே நிம்மதி போன்ற மொக்கைகள் ஓடி இருந்தால் சூர்யாவின் நிலையை யோசிக்க முடியவில்லை..

தோல்வியும் நல்லது போல..

சூர்யாவின் அடுத்தடுத்த வாழ்க்கை பயணம் .. வரும் பதிவுகளில்.. பழச படிக்க இங்கு க்ளிக்குக...

January 02, 2010

ங்ஙே!!


வாழ்க்கைல "ங்ஙே!!"ன்னு நாம முழிக்கிற தருணங்கள் ரொம்ப சங்கடமானவை...
என்ன பண்றதுன்னே தெரியாது.. ஆனா நெனச்சு பார்த்தா காமெடியா இருக்கும்.. அவற்றில் சில..

எச்சரிக்கை.. இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள்

*********

ராஜேஷ் : “மச்சி ”paa” பாக்கலட இன்னும்”
ராஜா : “இன்னும் paa பாக்கல??
ராஜேஷ் :அட ஆமாடா...
ராஜா : அட என்னடா... இங்க வா..
(”பா”ன்னு கைல எழுதுனான்.) தோ பாரு மச்சி..

ராஜேஷ் : ங்ஙே!!!

********



அந்த லாப்டாப் சரி செய்யும் அதிகாரி வேலை நிமித்தமாக ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.. அதே லாப்டாப்பை சரி செய்யுறது 4வது தடவ..
அடிக்கடி போனலும் உடனே சரி பண்ணிடுவாரு.. இந்த முறையும் சரி பண்ணியாச்சு..
அந்த வீட்ல இருந்த ஒரு பாட்டி..

பாட்டி : தம்பி
அதிகாரி : சொல்லுங்க பாட்டி
பாட்டி: அடிக்கடி என் புள்ள் தொல்ல குடுக்குறானா தம்பி..
அதிகாரி; அட பரவாயில்ல பாட்டி.. இது என் வேலதானே..
பாட்டி: இல்ல.. அது வந்து
(தன் வேலையை இன்னும் புகழப் போறாங்கன்னு நெனச்சாரு அந்த அதிகாரி..)
பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.. அத சரி செய்வியாப்பா ????

அதிகாரி : ங்ஙே!!!

(அட பிச்சைக்கு பொறந்த பிச்ச
என்னை ஏண்டா இஞ்ஞனியரிங் படிக்க வெச்ச???)

*************

50+ அரசு உயரதிகாரி அவரு..
நம்மாளு 20 வயசு சாஃப்ட்வேர் பட்டாசு..
எப்புடியாவது தான் வேல பாக்குற பகுதிய கணினிமயமாக்கிடனும்னு ராப்பகலா ஒழச்சு ஒரு சாப்ட்வேர் உருவாக்கி இருந்தான்..
அத அந்த அதிகாரி கிட்ட காட்ட போனான்,,

பையன் : ஸார்
அதிகாரி : சொல்லுங்க ...
பையன்: ஒரு விஷயம்..
அதிகாரி : சொல்லுப்பா...
பையன்: ஸார் ஒரு சாஃப்ட்வேர் செஞ்சு இருக்கேன்,, பாக்குறீங்களா??
அதிகாரி : நான் ஏற்கனவே சாப்டேன்பா...

பையன் : ங்ஙே !!

*****
வருடத்தை சிரிப்போடு ஆரம்பிப்போம்!!
சிறப்பாக வாழ்ந்து வைப்போம்.. !! :-)
அனைவருக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...