
எல்லாரும் உலக சினிமா பத்தி பதிவு போடுறாங்க.. நாமளும் போடலாம் எடுறா மக்கா வண்டியன்னு கெளப்புனா.. நான் பாத்த ஒரே இங்கிலீஷ் படம் “ஷோலே”ங்கன்னு சொல்ற அளவுக்குத்தான் நம்ம உலக சினிமா அறிவு ...
இருந்தாலும் நான் பாத்த ஒன்னு ரெண்டு இங்கிலீஷ் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது “FINDING NEMO" (ஃபைண்டிங் நீமோ)என்னும் அனிமேட்டட் திரைப்படம்... அதைப் பற்றிக் காண்போமா ??
கரு
71% நீர் சூழ்ந்து இருக்கும் இந்த உலகில் ஒரு மீனின் வாழ்க்கையை சுவைபட சொல்லி உள்ளனர்
கதைச் சுருக்கம்
clown fish என்று சொல்லப்படும் ஒரு வகை மீன் இனத்தில் மார்லின் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.. 100 மீன் குஞ்சுகளைப் பெற்று அவற்றைப் பாதுக்காத்து வருகின்றனர்.. அந்த சமயத்தில் ஒரு கொடிய சுறா அவர்களை வேட்டையாட... 99 குஞ்சுகளும் இறக்கின்றன.. மிஞ்சும் ஒரே மீன் “நீமோ”...
இப்பிடி கொடிய முறையில் மற்ற பிள்ளைகள் இறந்து விட்டதால் மார்லினுக்கு மிகவும் பயம் எங்கே நீமோவிற்க்கு ஏதேனும் ஆகிவிடுமோன்னு... வருடங்கள் ஓட நீமோவை பள்ளிக்கு அனுப்பவும் பயம் மார்லினுக்கு....(தாய் இறந்து விடுகிறார்)..ஆனாலும் தைரியமாக பள்ளிக்கு அனுப்ப...
அங்கிருந்து வேறு இடத்திற்க்கு செல்லும் நீமோ.. தந்தையின் எச்சரிக்கையும் மீறி மிக அதிக தூரம் செல்ல ..ஒருவரிடம் மாட்டி... அது சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவரின் இல்லத்தை அடைந்து விடுகிறது...
பயந்தாங்கொள்ளி மார்லின் எப்பெடி நீமோவைத் தேடிப் பிடிக்கிறது என்பதே கதை...
கவரும் விஷயங்கள்
மார்லின் தேடி வரும் பொழுது... தோரி என்னும் மீன் அதற்கு வழி காட்டும்.. அந்த மீனுக்கு “சார்ட் டெர்ம் மெமரி லாஸ்” .. அது மறக்க .. இது பறக்க.. செம காமெடி...
மீன்கள் உலகம் அவ்வளவு அழகு... அமைதி...அற்புதம்...
இசையும் .. கிராஃபிக்சும் படத்திற்க்கு பலம்...
ஏன் பாக்கனும்
ஒரு மாறுதலுக்காக... ஒரு மசாலா படத்துக்கான அத்தனை அம்சங்களோடு போரடிக்காமல் போகிறுது...
யார் பாக்கலாம்
குழந்தைகள்
குழந்தை மனப் படைச்ச வளர்ந்த குழந்தைகள்
andrew standon கதை திரைக்கதையில்2003ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் இப்போ டி.வி.யில கூட போடுறாங்க... பாருங்க
இதுக்கு ஓட்டுப் போடாமா போனா அடுத்து கேப்டனின் மரியாதை என்னும் உலக சினிமா பற்றி எழுதப்படும்...