Showing posts with label ஷாக் கதைகள். Show all posts
Showing posts with label ஷாக் கதைகள். Show all posts

June 26, 2009

ஷாக் ஷாக் ஷாக்.....

<<<<இது மாதிரிஒன்ன ஏற்கனவே படிச்சு இருந்தா நீங்க ஓட்டோ பின்னூட்டமோ போட வேணா... ஆனா முடிக்கம் போது ஷாக் ஆயிட்டா. கண்டிப்பா செய்வீங்க தானே????>>>>>



.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

.....’திட்டிட்டாளே அவ’ குமுறுயது மனசு ...

.....கார்த்தி சொன்னான் ‘விடு மச்சான்’  .....

..... ”இவள்களுக்குத் தேவை லட்சங்கள் சில... கோடிகள் சில... ” .....

.....இனிமேல் ஏது சந்தோஷம் ???.....

.....  இனிமேல் பணம் எதுக்கு??? .....

..... நெருப்பில் நின்றான் .....

..... வெறுப்பில் செத்தான் .....

...... காதலும் திரும்புமோ ??? .....

..... இனி

.....சாதலும் விரும்புமோ ?? ....

.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

டிஸ்கி

இதுல என்னடா ஷாக்னு கேக்குறீங்களா ???

மேலிருந்து படிச்சாச்சுல்ல.. இப்போ கதையோட கடைசி வார்த்தைலேர்ந்து ஒரு ஒரு வார்த்தையா பின்னாடி படிச்சுட்டுப் போங்க..

// மறந்தபடியே நடக்கலானான் நடைபிணமாய்....
     விரும்புமோ  சாதலும்....................//

மேல நீங்க திருப்பியும் கதைய படிச்சு முடிக்கும் போது.. அதே காட்சி வந்து நிக்குதா கண்ணுல... 

எழுத்துக்கு உரம் சேர்க்க பின்னூக்கங்களும்... ஓட்டும் போடலாமே...

June 25, 2009

வயசாய்டிச்சுல்ல....????

ஒருநாள் .. 3:05 a.m.,

"அப்பா நாங்களும் தலையெடுத்தாச்சு... இதுக்கு அப்புறமும் நீங்க உழைக்கனும்னு என்ன தேவ இருக்கு ??” பஞ்சனதனைப் பார்த்து குறைத்தான் ராக்கி... ராக்கி பஞ்சனதனின் செல்ல மகன்...



“நல்லா சொல்லுப்பா... எத்தன தடவ சொன்னாலும் கேக்காம போய்கிட்டு இருக்காரு.. தெனமும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு...62 வயசாய்டிச்சுல்ல.. வீட்ல உக்காராம சும்மா....” இவ்ளோ உரிமையா திட்றது இவர் மனைவி பார்வதின்னு சொல்லனுமா என்ன???

“எனக்கு செய்யனும்னு தோணுது .. உங்களுக்கு என்ன??” என்றபடி வேலைக்கு கிளம்பினார் பஞ்சனதன்.

5:56 p.m.

உடல் சோர்வு வாட்ட.. அதை சொல்லவும் முடியாமல்.. செரி செஞ்சு முடிச்சுடுவோம் இன்னும் அரை மணி நேரம்தானேன்னு அன்றைய வேலையையும் முடித்தார் பஞ்சனதன்



ஆறு மாதம் கழித்து

காலெஜ் கட்டடித்த ராக்கியும் நண்பர்களும்... “ ஆண்டவன் ஆட்டம்” படம் பார்த்துவிட்டு வந்தனர்...

“யப்பா.. என்ன ஃபைட்டு.. செம படம்டா.. “ நண்பர்கள் குதூகலத்துடன்..

ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்ததும் தன் தந்தை “ட்விங்கிள் ஸ்டார்” ‘பஞ்சனதன் படும் வேதனையை கண்ணால் பார்த்த இவனால் குதூகலிக்க முடியுமோ???

June 22, 2009

வேலை

”என்ன மாமா.. இப்டியே போனா பிச்சைதான் எடுக்கணும்... “  வாயில் புகையுடன் ரங்கன்...

“அய்யே மாமே.. ஒன்னும் கவல படாத..” என்றபடி பாதிப் புகையை வாங்கினான் காளி என்னும் காளிதஸ்...



“இல்ல மச்சா.. பாரு ஒரு வாரமா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம்... ஏதாவது நல்ல சேதி வந்து வேல வரும்னு பாத்தா... “...

“செரி செரி .. கடிக்கிற கொசு பத்தாதுன்னு இடையில நீ வேற..”
காளி

”நம்மகிட்ட என்னடா இல்ல..?? நம்மள மாதிரி வேலக்காரன் கெடக்கிறதுக்கு அவனவன் குடுத்து வெச்சு இருக்கனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்தாக் கூட ஓடாமா கடைசி வரைக்கும் நிப்போமேடா... நமக்கு ஏன் மாமே வேலையே கெடக்க மாட்டேங்குது...???”

”--------------”

“டேய்..காளி----------------------த்தா...  இங்க பொலம்பிட்டு இருக்கேன்... அங்க என்னத்தடா பண்ற...” ரங்கன் டென்சனாய்ட்டான்...

”டோப்படிச்சு எவ்ளோ நாளாய்டுச்சு... நாயே சாவடிக்காத நீ வேற...” காளி பரவச நிலையை அடைந்தான்..

இதுக்கு மேல ரங்கன் பொலம்பியது அவனுக்கு கேட்க வில்லை...  ரங்கனுக்கு இந்தப் பழக்கமில்லை.. ஆனால் காளி வழக்கத்துக்கு மாறாக கண்டமேனிக்கி பரவச நிலையில் இருந்ததை ரங்கன் உணர்ந்தான்.. 

‘நாம வாய் விட்டு பொலம்பிட்றோம்.. அவன் புண் பட்ட மனச இப்பிடி ஆத்திக்கிறான் போலன்னு.. எப்போ தூங்குனான்னு தெரியாமலெயே துங்கிட்டான்..

கதைக்கு சுபமான முடிவு வேனுமில்ல???

அடுத்த நாள்

                      ரங்கனுக்கு வேலை கிடைத்தது :-)

டிஸ்கி :-

நெம்ப நாளா பொணமே கெடக்காம இருந்த “வெட்டியான்” ரெங்கன் நண்பன் காளியின் உடலை புதைக்கும் பணியில் இருந்தான் .

April 28, 2009

ஒ(இ)ரு ??? கதை-- உதர்வு



(உதர்வுன்னு ஒரு வார்த்த இருக்கா??? ஏதோ தோனுச்சு வெச்சுட்டேன் .. கதை ஸ்டார்ட்.. கேமரா .. ஆக்‌ஷன்...)

”இது உங்களுக்கு புரியாதுங்க... “ சொன்னான் அவன் ...

“ஏன் ..??” -- அவள்

“மனசுல இருக்குறத அப்பிடியே சொல்லனுமா ??? “ தொடர்ந்தான் அவன் 

“கண்டிப்பா.. “ -- அவள்

“எங்க நீங்க என்னை வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னுதான் நான் பொய் சொன்னேன் ...” -- தலை குனிந்தான் 

“இத ஏங்க பொய்ன்னு சொல்றீங்க ?? குதிரையேறத் தெரியனும்.. பாட்டுப் பாடத் தெரியனும்.. இதெல்லாம் இந்தக் கதையோட நாயகன் கண்டிப்பா பண்ணி ஆகனும்.. நீங்களும் கண்டிப்பா
 பண்ணாலாம்... ஆறு மாசம் இருக்கு ஷூட்டிங் போக... ஆரஅமர கத்துக்கோங்க.. “ --பகர்ந்தாள் படத்தின் டைரக்டரான அவள்...

“நீங்க தேடுறா ஆள் கண்டிப்பா நான் இல்லீங்க... எனக்கு வாழ்க்கை குடுக்கணும்னு நீங்க உங்க வாழ்க்கைய தொடக்கத்துலேயெ முடிச்சுராதீங்க... “ -- நடக்கலானான்

“இதுதான் உங்க முடிவுனா ...எனக்கும் இந்தப் படம் வேணாம்... “ -- தயாரிப்பாளருக்கு ஃபோன் போட்டாள்..

நடக்க ஆரம்பித்த அவனோ திரும்பி பார்க்கவே இல்லை.. சின்ன வயசுலேர்ந்து நெனச்சது கெடக்கலயேன்னு நெனச்சுக்கிட்டே நடந்தவனுக்கு வழித்துணையாய் அவனது விழிநீர் மட்டும்  ...

“ஸார் .. நான் இந்தப் படம் பண்ணல... ” ஃபோனைக் கட் பண்ணினாள்...

இது இல்லாட்டி இன்னோன்னு நெனச்சுகிறதா  ??? -- இல்ல 
இது இல்லாட்டி மண்ணோடுன்னு நெனச்சுகிறதா ???
அவன் குழப்பத்தில்.......

பின் குறிப்பு :-

வலையுலகிற்கு வந்தது முதல் .. எது செய்தாலும் என்னுடைய வழியில் புதியதாக செய்யனும்னு நெனக்கிறதோட இன்னொரு வெளிப்பாடுதான் இந்தக் கதை... 
ரெண்டு வெவ்வேறு காட்சிகளை ஒரே கதையில சொல்ல முயற்சி பண்ணி இருக்கேங்க....

காட்சி 1 --> ஒரு நடிகன் தன்னால் இயக்குனரின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாதுன்னு வந்த வாய்ப்பை உதர்தல்...

காட்சி 2---> ஒரு காதலன் தன் காதலியை உதர்தல்  (மஞ்சளில் இருக்கும் வரிகளை மட்டும் படிக்க .....)

முதல் முயற்சி .. நல்லா இல்லாட்டி கண்டிப்பா சொல்லிட்டுப் போங்க.. அடுத்த முற பிரிஞ்சு மேஞ்சுறுவோம் ...

நல்லா இருந்தா ஒட்ட குத்திட்டுப் போங்க ...அடுத்த முற இதேமாதிரி மேஞ்சு பிரிச்சுறுவோம்....


April 04, 2009

த--ற்--கொ--லை--

”சேட்டா calling"   அவளுடைய செல்ஃபோன் சிணுங்கியது..
’நியூயார்க் நகரம்’  பாடல் கேட்டது அவனுக்கு.. பால்கனியிலிருந்து வந்து ஃபோனைப் பார்த்த அவளுக்கு
சந்தோஷம்..!!

அண்ணன் திருந்தி விட்டான் போல.. மகிழ்ச்சியோடு ஃபோனை ஆன் செய்தாள்...

’ஹலோ’
’-----------------------’
’ஹலோ’
’------------------------’
‘டேய் பேசுடா’

அவன் பேசவில்லை.. பக்கத்திலுள்ள வாகன சப்தம் கேட்டது.. நிற்க!! அது ரயில் சப்தம்!!!

’டேய்!! எங்கடா இருக்க???’
’---------------------------’
‘அண்ணா பேசுடா...’

ரயில் சப்தம் அதிகமாக கேட்டது... பயந்து விட்டாள்...

‘அண்ணா!! டேய்.. நேத்து தானே அவள மறந்துட்டன்னு சொன்ன... இப்ப என்னடா??? அவ உன்ன ஏமாத்துனா நீ என்ன பண்ணுவ..?? எங்க இருக்க சொல்லு pls..."
"சொர்கத்துக்கு பக்கத்துல....”   முதல் பதில் அவனிடமிருந்து.....

“டேய் ஒளராத..!! தற்கொலதான் இதுக்கு முடிவுன்னு யார் சொன்னா?? வேணாம்டா.. எங்க இருக்க ஒழுங்கா சொல்லு அண்ணா!!”
”பல்லாவரம்.”
”வந்துட்டே இருக்கேன்....”

அவள் மனது அடித்துக்கொண்டது... படபடப்பு.. காதலை திட்டித் தீர்த்தாள்.. கடவுளை நித்தம் நினைத்தாள்... ஆட்டோவில் அவள் அங்கு சென்றடையவும்.. மக்கள் கூட்டம் நிரம்பவும் நேரம் செரியாக இருந்தது..

அவள் நெருங்கினாள்...
பார்த்ததும் நொறுங்கினாள்....

                                        “அண்ணாஆஆஆஆஆஆஆஆ.........................”


“டேய் அண்ணா!! டிவிய ஆஃப் பண்ணுடா.. போர் அடிக்குது... ஆர்த்தி சொன்னாள்.. வஸந்தின் மடியிலிருந்த ஆர்த்திக்கு அந்த சீரியல் பிடிக்கவில்லை..
“ஏய் தூங்க வா!!” ஆர்த்தி அழைத்தபடியே பார்க்க...
வஸந்த்தோ ஆழ்ந்த உறக்கத்தில்... (சீரியலின் பயணால்...)


டிஸ்கி:- இந்த கதை 14/4/07 அன்று என் மேக்ஸ் புக்கில் எழுதிய முதல் கதை... இந்த எழுத்தே இன்று என்னை எழுத்துலகு வரை கொண்டு சேர்த்துள்ளது...

உங்களுக்கு புடிச்சா ஓட்டு போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டு போடுங்க
நீங்க படிச்சா மட்டும் போதும்...நீங்க படிச்சா மட்டும் போதும்... 

December 24, 2008

காணாமல் போனவண் . . .!!!!

          "ஹலோ!! எந்த ஊருக்கு போறீங்க...உங்களத்தான்.. உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்..”

          “ஐயோ !! நான் காணாமல் போய்ட்டேங்க.... இங்க என்ன கொண்டுவங்த அந்த பீட்டர் என்ன அப்பிடியே விட்டுட்டு போய்ட்டான்ங்க...

      உங்களுக்கு பீட்டர் யாருன்னு தெரியாதுல்ல ?? சொல்றேன் கேளுங்க ... நீளமான முடி ,,பல்ஸர் 150 ஸிஸி பைக் , இது ரெண்டுக்கும் சொந்தக்காரன் .. இதுதவிர பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்ல .. அவனை பத்தி சொல்ல ....

      நேத்து நான் காணாம போனவுடனே என்னை தேடி ரொம்ப அலைஞ்சான்ங்க .... பதறிப்போய்ட்டாங்க ... உடனே கண்டுபிடிச்சுட்டாங்க ... இன்னைக்குப் பாருங்க இவ்வளவு நேரம் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் வந்தனா அந்த ராஸ்கல் ????

      நான் தினமும் பீட்டர் கூடதான் தூங்குவேன்ங்க .. அவன் பெட்ல நானும் அவனும் தான் .. எப்பவும்... அவன் பைக்ல நானும் அவனும்தான் .. எங்க போனாலும் ...  

 ஒரு நிமிஷம்.......

               எதோ சத்தம் கேக்குதே  என்னக்குள்ள...................................."

 

          பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீப்ப் ........................

       டமால்

        அடுத்த நாள் தலைப்புச் செய்தி ..........

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்         செல்போன்  மூலம் குண்டு வெடிப்பு ..      

பின் குறிப்பு:-  இவ்வளவு நேரம் உங்ககூட பேசிட்டு இருந்தது வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்ட அந்ந செல்ஃபோன்தாங்க....