Showing posts with label தமிழர்ஸ். Show all posts
Showing posts with label தமிழர்ஸ். Show all posts

June 10, 2009

தமிழர்ஸ் ஓனர் யாரு??

அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...

இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...

அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...

எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...




 சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்




ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,

ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)

 சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்



அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே????  இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)


 சந்தேகம் நெம்பர் மூனு -->  லோகு



நல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)

 



சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்


யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்...  (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...

 சந்தேகம் நெம்பர் 5--> kricons

இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு.. 

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..  

இவர்தான்.. இவரேதான்..


 சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா


இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...

இவர்தானோ ????






 சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி










திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்... 

திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

இள ரத்தம் வேற... இவங்கதானோ???

(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)

 சந்தேகம் நெம்பர் 8-->  ப்ரியமுடன் வஸந்த்




இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...

அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு.. 

(அண்ணா.. மாட்னீங்களா????)

 சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி








அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???

(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு )



 சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி


கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...

காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....

அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)


டிஸ்கி 

வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது.... 

உண்மையான ஓனரே...

உங்க பேர நான் மறந்து இருந்தா.....

நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)


June 08, 2009

சுஜாதாவும் -- தமிழர்ஸ்.காமும்





சுஜாதா ஒரு முறை சொல்லியுள்ளார்...

“கலைஞனும் எழுத்தாளனும் ஒரு அம்பை எய்கின்றனர். அது எப்போது எப்படி அடுத்தவரைத் தாக்கும் என்பது தெரியாது...”

 கமல் என்னைக்கோ நடிச்ச நாயகன் படம் இன்னைக்கு டி.வி.ல பாக்குற 10 வயசு பையனை பாதிக்கும்..  சுஜாதாவோட நைலான் கயிறு இன்னைக்கு புதுசா படிக்கிறவங்களையும் ஏதோ ஒரு வகையில ஈர்க்கும்...

 அந்த வகையில இதுவரைக்கும் நான் எழுதுன ஏதாவது ஈர்த்ததோ அல்லது இனிமேயாவது ஒழுங்கா எழுதுடா மக்கான்னு சொல்லவோ நம்மையும் இந்த வார தமிழரா தேர்ந்தெடுத்து இருக்காங்க தமிழர்ஸ்.காம் . அப்டீன்ற செய்தி ஏதோ ஒரு ஃபீலிங்கா இருந்துச்சு..
(நம்மள மொத மொத மதிச்சு இருக்காங்களே .. அதனால)


அவங்களுக்கு நன்றி. 

இப்புடி ஒரே வார்த்தைல சொல்லாம ஒரு பத்தியாவது அவங்க பத்தி சொல்லனும்னு நெனக்கிறேன்.

ஆரம்பிச்சு 2 வாரத்துக்குள்ள நல்ல தரமான ஒரு திரட்டினு பதிவர்கள் மத்தியில பேர் எடுத்து இருக்கு.

5-8 வோட்டுக்கள் பெற்றாலே முதல் பக்கத்திற்க்கு அனுப்பி விடுகிறது.  என் நண்பர்கள் தளத்திலும் பார்வையிட்டேன்.. அவர்களுக்கு தமிழர்சால் கிடைத்த ஹிட்ஸ் நல்லாவே இருந்தது. தனிப்பட்ட முறையில் நம்ம கடைக்கும் வாடிக்கையாளர்கள சேத்ததுல அவங்களுக்கு(ம்) பங்கு உண்டு.

இப்போ அட்வைஸ்

 * நீங்களும் பிற திரட்டிகள பின் பற்றாதீர்கள்.
 * புதுசா ஏதாவது தோணுதா..??கண்டிப்ப செய்ங்க.. ஆதரிக்கவும் குட்டி முன்னேற்றவும் நாங்க இருக்கோம்.


*இதோ.. இந்த வாரத் தமிழர் மாதிரி.. இன்னும் நெறய நெறய எதிர்பாக்குறோம்.
யோசிச்சு செய்ங்க..
(பத்த வெச்சுட்டியே பரட்ட.... :-)

இந்த வார்த் தமிழர்ன்னு அவங்க போடுறதுல அவங்க சைட்டு பக்கம் மக்கள திருப்புனாலும்.. அது மூலயமா நம்ம கடைக்கும் ஆள் சேக்குறாங்க... நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களை வர வைக்கும் முயற்சி. 




* இன்னைக்குத்தான் பாத்தேன் சிறந்த வலைப்பூக்கள்ன்னு இன்னோன்னு.. இதுலயும் ரிஜிஸ்டர் பண்ணுங்க... நல்லா இருக்கு...



“இம்புட்டு செய்யுறதும்..மாஞ்சு மாஞ்சு எழுதுறதும்.... ‘நல்ல இருக்குடா’ன்னு உண்மையா ரசிச்சு சொல்ற ரெண்டு வார்த்தக்குத்தான்.

அப்பிடி நெறயா ரெண்டு வார்த்தைகளைத் தரப்போற தமிழர்ஸின் இந்த முயற்சிக்கு ஒரு ஸலாம்.



இப்போ என் படத்தைப் பற்றி... வலையுலகில் வந்தது முதலே முக்கால்வாசி அண்ணாச்சிகள் வயதைச் சொல்வதற்க்கு தயங்கினர்.. நாங்களும் சின்ன பையந்தான்பா சொல்லிகினாங்க.. அவங்க சின்ன பசங்கனா நாங்களாம் இன்னும் பொறக்கவே இல்லியா?? 

21 வயதே நிறம்பிய வாலிபனின் படத்தை (கடைக்குட்டியாக இருந்தாலும்)  எப்பிடி வெளியிடுவது என்றிருந்தேன். (லேடி ஃபேன்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆய்டும் யூ நோ??)

தனிப்பட்ட முறையில் யாரிடமும் வழிஞ்சு பேசாமல்.காக்கா புடிக்காமல் இவன் என்னமாவது கிறுக்கி இருப்பான்பான்னு நெனக்கிற அளவுக்கு ஒரு நண்பர்கள் கூட்டம் கெடக்குற வரைக்கும் என் முகத்தைக் காட்டக் கூடாதுன்னு நெனச்சேன்..

இப்போ நெனச்சத அடஞ்சுட்டேன்னு நெனக்குறேன்.... 

அதனால பிடியுங்கள் ”கடைக்குட்டி” அராஃபத்-ன் தரிசனம்.