ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு படிச்சாலும் அலுக்காத மாதிரி இருக்கனும்... இதுதான் கான்செப்ட்.. ஓவர் டூ பதிவு
1--> கேளம்பாக்கம்-பிராட்வே ரூ.14 டீலக்ஸ் பேருந்து கட்டணம்...
2-->ஏ.சி. பஸ் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் அதிகபட்ச கட்டணம் ரூ35..
3-->பிளாக்குகள் ப்ளேக் போல் பரவ ஆரம்பிச்சு... தமிழ் பதிவர் உலகம் விரிவடைந்து வருகிறது...
4-->’பரிசல்’,அதிஷா,நர்சிம்போன்றோரின் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவர ஆரம்பித்துள்ளது..
5-->சக்கர www.sakkarai.com ஆக பதவி உயர்ந்துள்ளது ... மிக வரைவில் krickcon,டக்ளஸ் போன்றோர் இந்த பதவி உயர்வை அடைவர் என எதிர்பார்க்கப் படுகிறது...
6-->உலக பொருளாதாரம் வீழ்ச்சி.. படிச்சு முடிச்சவனெல்லாம் திருப்பியும் முடிக்காம படிக்கலாமான்னு யோசிப்பு...
7-->அடுத்த படத்திற்க்குப் பின் ஆரசியல் பற்றி சொல்வதாக ரஜினி வாக்கு..
8-->விஜய் கட்சி துவங்கப் போவதாக ஒரு வதந்தி..
9--> நாளைக்கு வரப்போற தேர்தல் முடிவுலயாவது நமக்கு விடிவு காலம் பிறக்காதா?? தீவிரவாதம் ஒழியாதா??? லஞ்சம் ஒழியாதா??? வாக்காளர்கள் எதிர்பார்ப்பு .. ;-)
மைண்ட் வாய்ஸ் :-
1--8 கண்டிப்பா மாறும்ங்க... இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு படிச்சா கண்டிப்பா பேருந்து கட்டணம் ஏறி.. பதிவருலகம் மேலும் அங்கீகாரங்கள் பெற்று... உலகப் பொருளாதாரம் நிமிரும்....
ஆனா கடைசியா சொன்ன ஒன்னு மாறுமா?? அந்த நம்பிக்கையில்லீங்க.. எந்தத் தேர்தல் முடிஞ்சாலும் நீங்க வந்து இந்தப் பதிவ படிச்சுப் பாருங்க... எல்லாம் மாறி இருந்தாலும் இது அப்பிடித்தான் இருக்கும்.. ஏன் இவ்வளவு அவநம்பிக்கை.. இத மாத்த என்ன பண்ணலாம்னு வரும் பதிவில் காண்போம் ..
ஓட்டக் குத்திட்டு போங்க சாமி ..
18 comments:
மாறும் நண்பா, எல்லாமே மாறும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நம்பி கை வையுங்கள்.
//ஓட்டக் குத்திட்டு போங்க சாமி ..//
அப்போ பின்னூட்டம் வேணாமா?
s u p e r
மாறும் கவலைப் படாதீங்க..
மாறும் கவலைப் படாதீங்க..
VITHYASAMA YOSIKKA ARAMPICHUTENGA
GUD
MELUM VALARA VALTHUKKAL
மாறும் ஆனா மாறாது. :P
ஹாய் குட்டி!
கவல படாத...
மாறும்ங்கரது மாறாம இருக்காது!
மாறாதுங்கறது மாறாம இருக்காது..
முடியல!!
மாறும் மாறும் னு எத்தனை நாளைக்குத்தான் நாமளும் நினைக்கிறது... சரிதாங்க கடைக்குட்டி.
மக்கள் ஒருசேர வெகுண்டெழுவார்கள்.... அன்று பிறக்கும் இன்னொரு சுதந்திரம்... இன்னொரு இந்தியா...
காத்திருக்கிறோம்.
கடைக்குட்டி..
சுந்தர் சொன்னது போல.. மாற்றம் ஒன்று மட்டும் தான் நிலையானது...
என்ன அந்த மாற்றம் வர்றதுக்கு கொஞ்சம் நாளாகும்...அது வரைக்கும் நம்ம கொஞ்சம் தெளிவா இருக்கணும்...அவ்ளோ தான்.. பாப்போம் நம்ம மக்கள் 'சரத்பாபு'-வுக்கு எவ்ளோ காது குடுத்திருக்காங்கனு .. அத பாத்து சொல்லலாம்.
//லஞ்சம் ஒழியாதா??? //
இதுக்கு நாயகன் காலத்திலேயே விளக்கம் கொடுத்துவிட்டார்கள்
//உலக பொருளாதாரம் வீழ்ச்சி.. படிச்சு முடிச்சவனெல்லாம் திருப்பியும் முடிக்காம படிக்கலாமான்னு யோசிப்பு...//
அசத்துங்க தல..,
நல்லா இருக்கு ;) உன் மாறாத லிஸ்ட் ஹா ஹா ;)
//ஏன் இவ்வளவு அவநம்பிக்கை.. இத மாத்த என்ன பண்ணலாம்னு வரும் பதிவில் காண்போம் .. //
கண்டிப்பா மாற்றம் வரும் நண்பா காத்து இருக்கிறேன் உன் அடுத்த பதிவுக்கு
மாறும்.. ஆனா இந்த மாதிரி கலக்கல் பதிவை போடுவதை மாத்த வேண்டாம் தம்பி கடைகுட்டி...
வாழ்த்துகள்.
ரொம்ப பெருமையா இருக்கு கடைக்குட்டி இவ்வளவு நம்பிக்கை என் மேலே வச்சிருக்கீங்க... அந்த நம்பிக்கை தான் வாழ்க்கையே...
///சக்கர www.sakkarai.com ஆக பதவி உயர்ந்துள்ளது ... மிக வரைவில் kricons,டக்ளஸ் போன்றோர் இந்த பதவி உயர்வை அடைவர் என எதிர்பார்க்கப் படுகிறது...///
நல்ல சிந்தனை...
தேனீ - சுந்தர்
வால்பையன்
தமிழ்நெஞ்சம்
லோகு
Anbu
sakthi
சித்து
கலையரசன்
ஆதவா
செந்தில்குமார்
SUREஷ்
Suresh
வண்ணத்துபூச்சியார்
KRICONS
நாணல்
அனைவருக்கும் நன்றி :-)
ஆனா பின்னூட்டம் தந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள்
“மாறும் கவலப்படாதீங்க”ன்னு
சொல்லி இருக்கீங்க...
அந்த நம்பிக்கைதான் முக்கியம்... பாப்போம் :-)
நீங்களும் கவலப்படாதீங்க :-)
Post a Comment