December 24, 2008

காணாமல் போனவண் . . .!!!!

          "ஹலோ!! எந்த ஊருக்கு போறீங்க...உங்களத்தான்.. உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்..”

          “ஐயோ !! நான் காணாமல் போய்ட்டேங்க.... இங்க என்ன கொண்டுவங்த அந்த பீட்டர் என்ன அப்பிடியே விட்டுட்டு போய்ட்டான்ங்க...

      உங்களுக்கு பீட்டர் யாருன்னு தெரியாதுல்ல ?? சொல்றேன் கேளுங்க ... நீளமான முடி ,,பல்ஸர் 150 ஸிஸி பைக் , இது ரெண்டுக்கும் சொந்தக்காரன் .. இதுதவிர பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்ல .. அவனை பத்தி சொல்ல ....

      நேத்து நான் காணாம போனவுடனே என்னை தேடி ரொம்ப அலைஞ்சான்ங்க .... பதறிப்போய்ட்டாங்க ... உடனே கண்டுபிடிச்சுட்டாங்க ... இன்னைக்குப் பாருங்க இவ்வளவு நேரம் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் வந்தனா அந்த ராஸ்கல் ????

      நான் தினமும் பீட்டர் கூடதான் தூங்குவேன்ங்க .. அவன் பெட்ல நானும் அவனும் தான் .. எப்பவும்... அவன் பைக்ல நானும் அவனும்தான் .. எங்க போனாலும் ...  

 ஒரு நிமிஷம்.......

               எதோ சத்தம் கேக்குதே  என்னக்குள்ள...................................."

 

          பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீப்ப் ........................

       டமால்

        அடுத்த நாள் தலைப்புச் செய்தி ..........

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்         செல்போன்  மூலம் குண்டு வெடிப்பு ..      

பின் குறிப்பு:-  இவ்வளவு நேரம் உங்ககூட பேசிட்டு இருந்தது வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்ட அந்ந செல்ஃபோன்தாங்க....

December 20, 2008

நான் பார்த்த முதல் சாலை மறியல்..!!

அனுபவம்
                           


               இன்று சுமார் பண்ணிரெண்டரை மணியளவில் .. சென்னை பாரீஸ்.. மண்ணடி அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... இரண்டாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லையென்று.... 
போராட்ட்த்தின் துவக்கத்தை இங்கு காணாலாம் (வீடியோ)..
               
            மக்கள் கலைந்து செல்லும் அழகை காண இங்கு கிளிக்கவும்... (வீடியோ)
            அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....இப்பிடிதான் எல்லா இடத்துலையும் நடக்குதா??? இதுல யார் மேல தப்பு???



December 17, 2008

பொம்மலாட்டம்- லாப நஷ்ட கணக்கு


கதைக்கு-                              10
தில்லான தயாரிப்புக்கு 10
இயக்கத்திற்க்கு   10
                                             --------
                                                  30 
                                            ---------
நானா படேகருக்கு -       30

மொத்தம்                             60

                           நான் செலவழிச்சது - 45... ( பாப்கார்ன் உட்பட)
படம் கண்டிப்பா லாபம்தான்....

நானா படேகர் என்னும் அருமையான நடிகரை என்னைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு அறிமுகப்படுத்தியதற்கே இயக்குனர் இமயத்திற்க்கு ஒரு விழா எடுக்கலாம்... ஆகா... அந்தப் பார்வை .. மிடுக்கு... ( நிழல்கள் ரவியின் குரலுக்கும் ஒரு ஓ!!!)   இந்த மனிதனின் உழைப்பு படம் முழுவதும் பளிச்சிடுகிறது.........

ஹீரோயினின் நடிப்பும் அருமை.... அர்ஜுன் கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்... அவரும் காஜல் அகர்வாலும் லவ்வும் ஏரியா படத்திற்க்கு தேவையில்லாதது....

படத்தொகுப்பில் இருந்த பாரதிராஜாத்தனம் எனக்குப் பிடித்திருந்தது....

குறைகள் பல இருந்தாலும் இன்றைய இளைஞர்களோடு போட்டி போட்டுக்கொண்டு படம் எடுத்ததற்காகவே இமயத்தைப் பாராட்டலாம்....படத்தையும் போய் நீங்க பார்க்கலாம்...

December 16, 2008

ஆட்டோ கதை

 முதல் நாள் செங்கல்பட்டில் உள்ள அந்த காலேஜிற்க்கு அந்த காலேஜ் பஸ்ஸிலேயே போய் வந்துவிட்டோம்.சரி, அடுத்த நாள் நாம தனியா போயிடுவோம்ன்னு நாங்க நாலு பேர் கெளம்பிட்டோம்...

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ,எல்லாரும் வந்து சேந்துட்டோம்....செங்கல்பட்டும் போய் சேந்துட்டோம்.... ஸ்டேஷன்ல இருந்து வெளிய பொகும் போது என் நாக்குல ‘நாக்க மூக்கா’ ரேஞ்க்கு ஆடுச்சு சனியன்....

“டேய் ! மாப்ள ஆட்டோ ல போலாம்டா இங்க இருந்து அந்த காலேஜ்க்கு....”
“எவ்ளோ கேப்பாங்களோ!! வேணா மச்சி.. ஒழுங்கா பஸ்லேயே போய்டலாம்..” - என் நண்பன்
“ஏய்.. சும்மா கேட்டுப் பாப்போம்டா...”

“அண்ணா _ _ _ _ _ _  காலேஜ் போகனும்னா.. எவ்ளோனா??”
“காலேஜாபா??முப்பது ரூவா ஆவும்பா..”
எங்களுக்கு அளவில்லாத சந்தோஷம்.நாலு பேரு.. முப்பது ரூவாதான்... இருந்தாலும் சும்மா இருக்குமா நம்ம வாய்...
“என்னண்ணா?? நேத்துதான் இதே வழியா போனோம்.. இருபது ரூபாய்க்கே போய்ட்டோம்னா....”
”காலைல மொத போனிபா... இருபத்தி அஞ்சு ரூவா குடுபா .. போலாம்,,,”
“போலாம் ரைட்...”
ஒருவர் மடிமேல் ஒருவர்...இனிதே துவங்கியது எங்கள் பயணம்....

போகும் வழியில் டீசல் போட்டுக் கொள்ள கொஞ்ச நேரம் நின்றது வண்டி... (டீசலை எரிபொருள் என்று தமிழில் சொல்லக்கூடாது...அது கண்டுபுச்சவருடைய பேரு.. - நன்றி விஜய் டிவி ) தட்டுத்தடுமாறி.. அடுத்த தெருவில் போய் நின்றது...

“எறங்குபா.. காலேஜ் வந்துருச்சு...”
இறங்கிப் பார்த்தால்... அது ஒரு மருத்துவக் கல்லூரி.. நாங்க போக வேண்டியதோ ஒரு பொறியியல் கல்லூரி.. தலை சுற்றி விட்டது...

“அண்ணா.. நாங்க _ _ _ _ _ _ _ காலேஜ் போகனும்ணா... இது இல்ல”
“இதாம்பா!! காலேஜ்...”
அடக்கடவுளே... இது என்ன கன்னி பசங்களுக்கு வந்த சோதனை.... அந்த புண்ணியவான் காதுல காலேஜ் பேர் விழல...
செரி, பக்கத்துல உள்ளவங்ககிட்ட கேட்டோம்... அந்த காலேஜ் எங்க இருக்குன்னு...

காது கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு கேட்டது...  இன்னும் பத்து பண்ணெண்டு கிலோமீ போகனுமாம்....நம்ம டிரைவர் அண்ணாச்சிக்கு இது கேக்கல... வேற வழி தெரியல.. “அண்ணா... அதோ பக்கத்துலதானாம்... கெளம்பலாம்...”

வண்டி கிளம்பியது... யாருக்கும் ஒண்ணும் புரியல.. என்ன ஒரு கேவலமானா பார்வை பாத்த்னுங்க... மறக்கமுடியாது....

ஊர் முடிஞ்சு வயல் வரப்பு எல்லாம் வர ஆரம்பிடுச்சுச்சு... சோள காடெல்லாம் பாத்தோம்...ஆட்டோவ மறுபடியும் நிறுத்தி.. அவருக்கு கேக்காத மாதிரி வழி கேட்டோம்....எதோ பக்கத்துல வந்துட்டோம்னு ஒரு நெனப்பு....

ஒரு மலைய தூரத்துல பாத்தோம்.. அந்த மலையே வந்துருச்சு... காலேஜ் வரல இன்னும்....
“ஸ்டாப் ஸ்டாப்.. அதோ காலேஜ்..” உயிர் வந்தது எங்களுக்கு....

அடுத்து என்ன பண்றதுனு தெரியல... நான் போனேன் .. வழக்கம் போல... “என்னண்ணா.. லேட்டா வந்துட்டீங்க....” எழுத்தில் வடிக்கமுடியவில்லை அவர் பார்த்த பார்வையை....

“தம்பீ... நூத்தி இருபது ருவா குடுங்க,,,,” அவ்ளோ காச குடுத்துட்டா.. நாங்க எப்படி திரும்பி போறது.. கைல கால்ல விழுந்து.. எழுபது ரூவா குடுத்துட்டு வந்தோம்....



இதுல யார் மேல தப்புன்னு தெரியல... ஆனா இந்த அபாரமான ஆட்டோ அனுபவத்த எங்களால மறக்க முடியல... இதை எழுதனும்னு நெனச்சேன்... முடிச்சாச்சு. .....

கிளைக் கதை – சிவாஜி –the B O S S




வேலுவின் ஒர்ருபா!!

ஏற்கனவே சினிமாவுக்காக சரவணண்ற பேர சூர்யான்னு மாத்தியாச்சு.. வேற பட்டம் எதுக்கு??

குமுதம் புக்கில் சூர்யாவின் பேட்டியை படித்துக் கொண்டிருந்த வேலுவின் மேல் அவனுடைய மகன் வந்து விழுந்தான்... ஐந்து வயது இருக்கும்..,,

அப்பா சாக்லேட் வாங்கித் தாங்க “ என்று ஒரே நச்சரிப்பு....

“அந்த சஃபாரிய அயர்ன் பண்ணி வை மா “ என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு....இருவரும் கிளம்பினர்...

பையனுடன் வெளியில் போகும்போது அவனுக்கு நல்ல உதாரணமா இருக்கனும்னு வேலு நெனப்பான்...அதனால வழியில் பார்த்த பிச்சைக்காரர் ஒருத்தருக்கு ஐந்து ரூபாய் போட்டுவிட்டுச் சென்றான்...அது அவனது வழக்கம்...

கடையில் போய் சாக்லேட் வாங்கித் தந்தான்... கூடவே ஷேவிங் க்ரீம் வாங்கினான்...பில் 112.50 .. அவனிடம் இருந்ததோ 110.. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு... இது தெரிஞ்ச கடையும் இல்லை.. தெரிஞ்ச ஒரே ஒருத்தர் அந்த பிச்சைக்காரர் மட்டுமே....

வெக்கத்தை விட்டு அவரிடம் கொடுத்த ஐந்து ரூபாயைக் கேட்டே விட்டான்..அவரும் கொடுத்துவிட்டார்...கடையில் கொடுத்து விட்டு நகர்ந்தான்.. மீதி காசில் ஒண்ணாருவாவை பிச்சைக்காரருக்குத் திருப்பிக் கொடுத்து விட்டு அந்த இடத்தில் நிர்க்கப் பிடிக்காமல் வீடு நோக்கி நடக்கலானான் அவனின் மகனுடன்...

கோர்ட்டுக்குப் போவதற்க்காக குளித்துவிட்டு அந்த சஃபாரியை மாட்டிக் கொண்டு மறக்காமல் பர்ஸை எடுத்து வைத்துக் கொண்டான்....கூடவே அந்த பிச்சைக்காரனுக்கு கொடுக்காத ஒரு ரூபாயும்....

பின்குறிப்பு :-

ஆதி சேஷன் , நம்ம தலைவர அவமானப்படுத்த கொடுத்த அந்த ஒரு ரூபா , அவரோட கைத்தடி வேலு கைக்கு எப்படி வந்திருக்கு பாத்தீங்களா....???அந்த சில்லற மட்டும் அவன்கிட்ட இல்லாம இருந்திருந்தா சிவாஜி செகண்ட் ஹாஃப் எங்க?? நம்ம தலைவர் கல்வித் தந்தை ஆவது எங்க....??

வாழ்க அந்த ஒர்ருவா ....

 

 

December 01, 2008

வாரணம் ஆயிரம் லாப நஷ்ட கணக்கு



அப்பா சூர்யாவின் நடிப்பிற்க்கு   - 20

மகன் சூர்யாவின் நடிப்பிற்க்கு    - 25

சமீரா ரெட்டி                    -  5

ரத்னவேலுவின் கேமராவிற்க்கு  - 10

ஹாரிஸ் இசைக்கு             -  10

கௌதம் இயக்கத்திற்க்கு        -  10

 

ஆக மொத்தம்                 - 80

 

               அந்த படத்திற்க்கு நான் மொத்தம் செலவளிச்சது ரூ.90 .........( ஸ்வர்ண சக்தி அபிராமி சார் !!! )

 

என்ன தான் சூரியாவுக்காக காசு சரியா போயிடுச்சுன்னு நினைச்சாலும் ... கணக்கு பார்த்தான் தான் தெரியுது எனக்கு நஷ்டம்தான்னு........

 

படத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்னு நெனக்கிறேன்....

 

வாரணம் ஆயிரம் நமக்கு சொல்ல வர்ரது என்னன்னா ....

 

இன்றைய இளைஞர்களின் கமல ஹாசன் சூர்யா...

 

கடைக்குட்டி பன்ஞ் :-

இந்த படத்தில் சூர்யா டாடி டாடின்னு 93 தடவ சொல்றாரு...

ஆனா அப்பான்னு சொல்ற இடம் ஒன்னோ ரெண்டோ.....

படம் ஜனரஞ்சகமா சரியா போகாததுக்கு இதுவும் ஒரு காரணமோ ?????????

 

ஏகன் – லாப நஷ்ட கணக்கு


 

                                             ரூ.

அஜித்தின் துணிச்சலுக்கு                    20

இமேஜ் பார்க்காததிற்க்கு                    -  10

நயன்தாராவின் ஜாக்கெட் தைத்தவிற்க்கு     - 10

 

( ஹ்ம்ம்ம் ... வேற எதும் நியாபகம் வரலியே !!)

 

ஆக மொத்தம்                              - 40

 

 

 ஏகன் பார்க்க நான் செலவளிச்சது  - ரூ.90 ( இரண்டாம் நாள்)

சங்கம் தியேட்டர் உண்மையிலேயே ஒரு மல்டி ப்ளஸ்தாங்க.......

 ரொம்ப நல்ல முன்னேற்றம் ... ரொம்ப அழகான சேர்கள்....

குஷன்லாம் போட்டு இருந்தாங்க,,, நல்ல அனுபவம் ....

 

 

ஓஹ்.. படத்த பத்தி சொல்லனும்ல..... என்னத்த சொல்றது .....

 

மொதல்ல நான் சொன்ன அஜீத்தின் துணிச்சல் என்பது அவர் திரு.ராஜு சுந்தரம் அவர்களை இயக்குனரா போட்டதுக்கு......

தல வாழ்க்கைல விளையண்டுட்டியே தலைவா !!! ( உங்களுக்கு என்ன பிரச்சனையோ போங்க !!!! )

 

 

கடைக்குட்டியின் பஞ்ச் :-

 

அஜித் அழகா இருக்கார் ( அந்த தொப்பை கூட இயக்குனர் கேட்டு வாங்கியதாம் ( என்ன கொடும சரவணன் இது ??? ) )

 

நயந்தாரா ஜாக்கெட் போல் போட்டு இருந்த வஸ்து எங்களை தியேட்டரில் உட்கார வைத்தது ........

 

தடங்கலுக்கு மன்னிக்கவும் ...

சூடா ஆரம்பிச்ச பிளாக்-ல தொடரந்து எழுத முடியாத சூழ்நிலை... பரிட்ச்சை வந்துருச்சுபா !!!!

தோ....வந்துவிட்டேன் உங்கள் கடைக்குட்டி ....

ஆஹ் ... ஸ்டார்ர்ர்ட்................ 

October 23, 2008

கதை கேக்கலியோ கதை ...

எனக்கு வாழ்த்துக்கள் என்று தட்டச்சு செய்த விரல்களுக்கு நன்றி ......


இன்ன்னிக்கி கதைகளைப் பற்றி காண்போம்.. கடைக்குட்டி என்பதால கதை கேட்டு வளந்து இருப்பேன்னு நீங்க நெனச்சா அங்க தான் தப்பு பண்றீங்க ... நான் அப்படி வளரல ... பின்ன என்ன வென்னைக்குடா இந்த தலைப்புனு கேக்குறீங்களா ??

இறிங்க சொல்றேன்..


எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து (உண்மையில் அது எந்த நாள் ?? யாரவது அன்பர்கள் அது பற்றிய பதிவை காண்பிக்கவும் ) நான் kadhai kettu தூங்கியது கெடையாது.. இருந்தாலும் நல்ல தூக்கம் தான் தூங்கி உள்ளேன் .. எனக்கு தெரிந்து நான் கேட்டு தூங்கிய முதல் கதை என் தந்தையின்டைyaது .. அவர் அவரது தந்தையை பார்த்ததே இல்லையாம் . . அவர் கருவாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து பொய் விட்டாராம் .. ஹ்ம்ம் ... கேக்கும் போதே தூக்கம் வரும் .....


இந்த வாழ்கை வரலாறை தவிர நான் கேட்ட கதை என்று எனக்கு எதுவும் நினைவில் இல்லை ... ஆறாம் வகுப்பு படிக்கு podhu ஆசிரியர் தினத்துக்காக ஒரு கதை எழுதி நாடகமாக நடித்தேன் .. அப்பவே வில்லன் ரோல் தான் ..மெட்ராஸ் பத்தி தெரியாம வரும் ஒரு கிராமதான்னிடம் ஒருவன் சென்ட்ல் ஸ்டேஷன் - அயும் லைட் ஹௌசெயும் விதுருவான் .. அந்த கிராமதான் அங்கு போக ......அவன் சொன்னதை கேட்டு அவனை எல்லோரும் பைத்தியம் என்று நெனைக்க .. அவன் சாபம் விட .. அவனை ஏமாற்றிவன் அச்சிதேன்ட் ஆக .... கதை சுபம்.. இதில் அந்த ஏமாற்றும் வில்லன் நான். . நல்ல வரவேற்பு .. அடுத்த ஆண்டு ஒரு மொக்க ஜோக்க காமெடி கதையா மாத்தி போட்டேன் .. வரவேற்பு ..


இப்போ தான் எனக்கு அந்த காலம் கண் munnaadi வந்து நிகிது... பைத்தியம் மாதிரி கதைகளை பற்றி யோசித்து கொண்டு iruppen ... பாக்கியராஜ் படங்களை பார்த்தல் எப்படி இந்த ஆள் இப்படி யோசிகிர்ரார்னு தோணும்.. பல கதைகள்.. பல பல கதைகள்.. என் மனதில் ஓடியது..


அப்படி ஓடும் கதைகளுக்கு ஒரு வடிகாலாக நான் தேடி கொண்டது தான் என் காலேஜ் நோட்ஸ் .. அதில் பின் பக்கம் கதைகள் எழுதுவேன்,,, இது வரை ஐந்து குட்டி கதைகள் எழுதி வைத்துள்ளேன் .. அதை எப்படியாவது ஏதாவது பரிசு போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது என் அவா .. காணமல் போனவன் என்னும் கதை உலகத் தரத்தில் ஒரு உள்ளூர் கதை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன் ... பதிவர்கள் யாரவதுபத்து ரூவா பணமும் படிக்கணும் னு எண்ணமும் இருந்த தொடர்பது கொள்ளவும் .. கடைக்குட்டியின் எழுத்தை ரசிக்கவும்... ( ஹப்பா !! ஒரு வாழியா நெனச்சத சுத்தி வளச்சு சொல்லியாச்சு .. :-))


குழந்தைகளுக்கு கதை சொல்லும் அன்பர்கள் முதலில் நீங்கள் சொல்லும் கதையெய் நீங்கள் கீட்பீர்கள என்று நினைத்துப் பார்த்து பின் சொல்லவும் ... கடைக்குட்டியின் வேண்டுகோள் ... ( ஹப்பா !! தலைப்புக்கு ஏத்த மாறியும் முடிச்சாச்சு ... டாட்டா :-)

October 22, 2008

ரிக்சா-காரேஇங்க

சில நாட்களுக்கு முன் பாரிஸ்சில் உள்ள என் வீட்டிற்கு வந்த என் நண்பர்கள் இருவர் ரொம்ப அதிசியமா பார்த்த விஷயம் இந்த ரிக்சா .....
"டேய் !! இன்னமும் இதெல்லாம் இருக்கா ??"
"ஆமாடா " - நான்
"அடப்பாவி !! இதெல்லாம் எங்க ஏரியா லே பாக்குறதே அதிசயம் .........."
இப்படி இதை பற்றி நிறைய ஊத்துனாங்க .... எத பத்தின்னு நானும் யோசிச்சா நம்ம ரிக்சா பத்தி.... அப்போ தான் அழிஞ்சு வரும் அற்புதம் இதுன்னு புரிஞ்சுது... அதனாலதான் என் முதல் முதல் வலைஎழுத்து ரிக்சாவிற்கு சமர்ப்பணம்...

எனக்கும் ரிக்சாவிற்கும் இருக்கும் தொடர்பு ரொம்ப.. பல பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையைப் போல என் பள்ளி வாழ்க்கைக்கும் ரிக்சாவிற்கும் தொடர்புகள் நிறைய ... என் அண்ணனுடன் ரிக்சாவில் பள்ளிக்கு போனதில் இருந்து தொடங்குகிறது என் கதை .. என் பள்ளி வாழ்கையும்தான் .5 ரூவா குடுத்து போவோம் நாங்க ரெண்டு பேரும் .. நான் ஒன்னாவது படிக்கும்போது 5 ரூவா இருந்த ரிக்சா காசு .. எங்க வயசு ஒன்னு ஏறும் பொது அதுவும் ஒரு ரூவா ஏறுச்சு... அப்பவே ஏன்மா இப்டி காசு ஏறுதுன்னு கேட்ட அறிவாளி தான் இந்த கடைக்குட்டி .... சரி மேட்டர் கு வருவோம்... இப்டி ஒரு ஒரு ரூவா வா ஏறுன இந்த ரிக்சா காசு ..நான் எட்டாவது படிச்சு முடிச்சு வரும் போது 12 ரூவா ஆச்சு.... ரிக்சால ஸ்கூல் போயிடு வர்றதே ஒரு சந்தோசம் தான் ...

நான் சொல்ல மறந்த ஒன்னு... நான் ஸ்கூல் படிக்கு பொது மாச மாசம் காசு குடுத்து போகல ரிக்சா ல .. தினமும் நாங்களே தான் பேசி வரணும்.. ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு புது அனுபவம் காத்து இருக்கும் .. சில பேரு ரிக்சா நாம உக்காந்து வர்றதுகேய் ரொம்ப நல்ல இருக்கும் .. லோகேஷ் மாமா அப்டியே மயில் இறகு மாதிரி பரந்து வருவார்...சில தாத்தா வண்டி ல ஏறுனா நாம நைட் குள்ள போய்டலாம் ... ரம்பம் ... சில பேரு வண்டி ரம்பம்பம் .....

மழைகாலத்துல ரிக்சால போறதே ஒரு கலை தான் .. ப்ளூ கலர் தார் பாய் ல மூடி வச்சு இருப்பாங்க ரிக்சாவ .. அது குல ஏறி உக்காந்து .. நம்ம போற எடம் வந்ததும் சொல்லணும்.. பச்ச கலர் மசூதி பக்கதுல என்ன வீடு .. அந்த மசூதி வந்துருச்சா இல்லையானு பாக்குதே ஒரு கலை தான்.. சில சமயம் ஏதோ ஒரு பச்ச கலர் வீட்டுகிட்ட எறங்குனதும் ஒரு நியாபகம்..

இப்டி இருந்த ஒரு வாகனம் .. இப்போ அழிஞ்சு வருது .. ஏன்னு தெரியல.. இவ்ளோ பேசுற நானும் ரிக்சாலபொய் ரொம்ப நாள் ஆகுது ... இத படிச்ச பிறகு .. எங்கயாவது ரிக்சா வா பாத்தா ...ரிக்சா-காரேஇங்க daaன்னு போய்டாம ... அந்த ரிக்சா ல போக பாருங்க .. அது தன் இந்த கடைகுட்டிஒட அவா ...

( லேட் ஆ பொய் உங்க காரியம் கேடு போச்சுநா ..... அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க அண்ணா!!!!)

யார்ரா நீ ??

என்னை பற்றி இப்படி கேட்பவர்களுக்காக எழுதப்படும் இடுகை இது . . . . .
ஒரு அழகான வீட்டின் அம்சமாக கடைக்குட்டியாக வாழ்க்கையை அனுபவித்து வரும் அன்பன் நான்.....

நான் இங்கு செய்யபோவது இந்த உலகில் உள்ளவை பற்றி என்னுடைய கருத்துக்களை பதிவு செய்யப்போகிறேன் .. உலகில் உள்ள பொருட்களுக்கு முடிவில்லை ... இந்த இடுகைக்கும் தான் ...

கணிப்பொறியியல் கடைசி ஆண்டு படிக்கும் மாணவன் என்பது உபரித் தகவல் ..