சரவணன் முதல் சூர்யா வரை --4
சூர்யா -- சரவணனாக படித்து முடித்தது சென்னை லயோலா கல்லூரியில்.அந்தக் கல்லூரி சும்மா படி,படின்னு மட்டும் சொல்லாம பசங்களோட பிறதுறை ஆர்வத்தை வளர்க்கும் விதமாகவும் செயல்படும்.
அந்த ஆர்வமே அவருக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு போய்டுச்சு... சரவணனோட விஸ்காம் துறையைச் சேர்ந்த நண்பன் ”இளமையில் போதை மருந்துக்கு அடிமையாவதைப்” பற்றிய கருவுடன் ஒரு நாடகம் போடுவதென முடிவெடுத்து களமிறங்க ,உடன் சூர்யாவும்.
நாடகம் போட காசு வேணுமே என்ன செய்யுறது ?? கன நேரத்தில் தோன்றியது யோசனை.. ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை “நியூ இயர் பார்ட்டி” நடத்தி அதில் வாரும் பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்னு திட்டம்.. “ஜோடிகளுக்கு மட்டும்”ன்னு அச்சடிச்சு டிக்கெட்டும் விற்க்கப்பட்டது...டிசம்பர்31-மாலை 5 மணியளவிலேயே ஜோடிகள் வரத்துவங்கின..
அங்கதான் ஆப்பு நம்பர் 1 வைக்கப்பட்டது
ஹோட்டல்காரர்கள் கூட்டத்தப் பாத்தா விடுவாங்களா??? அதுவும் இளவயசுப் பசங்க.. “தெறடா பார்”அன்னு “பார்” திறக்கப் பட்டது.. “பார்” போற்றும் போதை ஒழிப்பு நாடகத்துக்கு பணம் சேர்க்க வந்த கூட்டத்திடம் “பார்” நடத்தி காசு பார்த்து கொண்டிருந்தார்கள்... அமைப்பாளர்கள் எவ்ளோ சொல்லியும் கேக்கவில்லை ஹோட்டல் நிர்வாகம்..
அப்டியே ரைட் கட் பண்ணா ஆப்பு நம்பர் 2
“ஜோடியாக மட்டும்”னு போட்ட இந்த பார்ட்டிக்கு ஒருவர் தனியாக வந்துவிட.. ஹோட்டல் நிர்வாகம் அவரை உள்ளேவிட மறுத்துவிட்டது.. அவர் கர்ஜித்துவிட்டு சென்றுவிட...
சிறிது நேரத்தில் போலிஸுடன் அதே விரட்டப்பட்ட இளைஞன் (அரசியல் பலம் உள்ள பிள்ளை!!)
‘பார்ட்டி” யை நடத்த லைசென்ஸ் இருக்கான்னு போலீஸ் கேட்க ..
இவர்கள் விழிக்க..
ஹோட்டல்காரகள் விலக..
”தண்ணி பார்ட்டி போலயே”ன்னு மேலும் பிடியை இறுக்க...
இவர்கள் நடுங்க...
அமைப்பாளார்கள் குழு 15 பேர் கைது.. சூர்யாவும் அடக்கம்.. க்ரீம்ஸ் சாலை காவல் நிலையத்தில் அடுத்த ஸீன்..
“நீங்க எல்லாரும் கள்ளச் சாராயம் வித்ததுக்காக உள்ள போகப் போறீங்கப்பா!!”ன்னு சொன்னபடியே ரைட்டர் பேர் விலாசம் எழுதிக் கேட்டார்..ஹையோ என்ன கொடுமை இது ?? இது திட்டமிட்ட சதிவலை.. என்ன பண்றது... எல்லோரும் திகைத்தப்படி எழுதிக்குடுக்க
சூர்யாவின் சுற்று வரும் போது அப்பா பெயர் “பழனிச்சாமி”என்று சொன்னார்.. ஃப்ரெண்ட்ஸ் எப்டீங்க சும்மா இருப்பாங்க??? “சார் அவங்க அப்பா சினிமா நடிகர் சிவகுமார் ... “ ன்னு அவங்க கடமையை செவ்வனே செஞ்சுட்டாங்க...சூர்யாவுக்கோ பயம் வூடுகட்டி உறுமி அடித்தது...
"ஸார் நான் சிவகுமார் பையந்தான் ஒத்துக்குறேன்.. வீட்டுக்கு தெரியவேணாம்”ன்னு கெஞ்ச..
“நீ சிவக்குமார் பையனான்றதே டவுட்ட இருக்கே.. இப்பிடி இருக்க “ன்னு ரைட்டர் கேட்க..
“அடப்பாவி பீர் அடி உடம்ப தேத்துடான்னா... இப்போ பாரு ரைட்டர் மண்ட காய யோசிக்கிறாரு”ன்னு அந்த நேரத்துலயும் கலாய்ச்சுறுக்காங்க.. (நண்பண்டா!!!)
ஒருவழியாக அவரும் சமாதானமாகிவிட.. அடுத்து வந்த ஐ.பி.ஸ் அதிகாரி கண்டிப்பா கோர்ட்ல அபராதத் தொகய கட்டுங்கடான்னு சொல்ல..கட்டிட்டு எஸ்கேப்...
ஒருத்தனுக்கு எந்த “ நல்ல பழக்கமும் “ இல்லன்னா “ஞானப்பழம்” லிஸ்ட்லதான் வெப்பாய்ங்க காலேஜ்ல.. அப்படி ஒரு ஞானப்பழமான சூர்யா வாழ்க்கைல இந்த ஸீன் ஒரு டெரர் ஸீன்தான்..
இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...
பின்னூட்டமும் .. ஓட்டும் குத்திட்டு போங்க... முடிஞ்சா side ல adds யும் கிளிக்குங்க...
16 comments:
ஹீரோ வின் வாழ்விலே சினிமா போன்ற சம்பவம்., சுவையாக விளக்கியமைக்கு நன்றி.
kandippa ithu soorya illenna karthi thaan
கடைக்குட்டி பயங்கரமான சூர்யா விசிறியோ????
குடிக்காமயே கேஸ் வாங்கிட்டாரா?
\\குடிக்காமயே கேஸ் வாங்கிட்டாரா?\\
repeat
சுவாரசியமான தக்வல்.... அன்னிக்கு சூரியாவோட ஜோடி யாருன்னு நீங்க சொல்லலையே??
சூர்யா வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமா?
நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க கடைக்குட்டி. வாழ்த்துக்கள்.
தேனீ - சுந்தர் said...
//
ஹீரோ வின் வாழ்விலே சினிமா போன்ற சம்பவம்., சுவையாக விளக்கியமைக்கு நன்றி.//
செரிங்க. நன்றி :-)
SUREஷ் said...
kandippa ithu soorya illenna karthi thaan//
டாக்டரே உங்க தொல்ல தாங்கலியே!!!
ஜெட்லி said...
//
கடைக்குட்டி பயங்கரமான சூர்யா விசிறியோ????//
ஹைய்யோ கண்டிப்பா இல்லீங்க!! எனக்கு எல்லாரும் புடிக்கும்.. சூர்யா பற்றிய விஷயங்கள் கொஞ்சம் தெரிஞ்சதால அப்பப்ப மசாலா பதிவுகள்!!
வால்பையன் said...
குடிக்காமயே கேஸ் வாங்கிட்டாரா?
//
அண்ணே தண்ணி மேட்டர்னதும் பாஞ்சு வந்துட்டீங்க போல...
வருகைக்கும் repeatukக்கும் நன்றி அன்பு
அன்னிக்கு சூரியாவோட ஜோடி யாருன்னு நீங்க சொல்லலையே??
ஆதவா---//
எனக்கும் தெரியலீங்க!!!
Joe said...
//
சூர்யா வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமா?
நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க கடைக்குட்டி. வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க!!!
ஒவ்வொரு பாகமும் அருமையாக இருக்கு.
நன்றி சித்து... :-)
Post a Comment