May 07, 2009

சூர்யா--ஜோதிகா -->காதல் ஸீன்-1சரவணாaன் முதல் சூர்யா வரை -3
ஒளிமயமான ஜோடி’ என்று பத்திரிக்கை வதந்தியுலகில் பெயரெடுத்த ஜோடி.. சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரில்லாமல் எந்தக் கிசுகிசுவும் வராது...

’காக்க காக்க’ விமர்சனத்தில் ஆனந்த விகடன் “made for each other" அப்டீன்னு சொன்ன ஜோடி.. செரி.. எப்டி சேந்தாங்க??

சினிமாவை வெறுத்த சரவணன் நடிகனானதும்.. பின் அந்த மாய உலகத்திலேயே அவனுக்கு ஜோடி கிடைத்ததும் ஆச்சிர்யமே..

பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் அவர்கள் முதன்முதலில் சேர்ந்து நடித்த படம்..  அதில் நடிக்கும் போதும் ‘என்னடா நமக்கு ஆட வரமாட்டேங்குது..  நடிக்க வரமாட்டேங்குது’ன்னு சூர்யா feel பண்ணிட்டு இருந்தா .. அந்தப் பக்கம் ஜோ பொண்ணு நிறுத்து நிறுத்துன்னு சொல்லியும் நடிச்சுட்டு இருந்துருக்கு....
ஒளிமயமான ஜோடியின் வார்த்தைகள் ஒரு hi,bye யுடன்  முடிந்த காலம்...

படம் நல்லா இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை மேலும் ‘மின்சாரக் கண்ணா’ போன்ற படங்கள் ஒரே கதையுடன் வெளிவந்ததால் செரியாக ஓடவில்லை... ‘உயிரிலே கலந்தது’ என்னும் படத்தில் அடுத்து நடித்தாலும் பெரிய முன்னேற்றம் இல்லை..

அடுத்த காலகட்டம் சூர்யாவின் வாய்ஸிலேயே..... “சினிமாவ விட்டுட்டு போறதா இல்லாட்டி இன்னும் இருக்குறதான்னு தெரியாம இருந்த காலம்...  Y.m.c.a கிரவுண்டில் ஒருநாள் மண்ணும் வியர்வையுமாக நிற்க... அங்கே பக்கத்தில் ஜோதிகாவுடைய ஷூட்டிங்.. ‘நம்ம கூட நடிச்ச பொண்ணு’ குஷி,தெனாலி’ன்னு எங்கயோ போயிடுச்சு.. நாம என்னன்னா.. இப்போதான் பல்டி அடிக்கவே கத்துக்குறோம்னு ஒரு எண்ணம்..’  
சார் ஜோதிகா மேடம் உங்கள கூப்புடுறாங்கன்னு ஒருத்தர் வந்து சொல்ல.. பாக்க முடியாதுன்னு சொல்லி அனுபிச்சிட்டேன்.. திரும்பவும் அவர் வந்து கூப்பிட .. போய் பார்த்தேன்

ஜோ :- என்ன சூர்யா என்னை ஞாபகம் இருக்கா??
சூர்:- (மௌனம்..)
ஜோ:- என் படங்கள் பாப்பீங்களா??
சூர்:-ஓ.. பாப்பேங்க..
ஜோ:-அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி பாராட்ட மாட்டீங்களா??
சூர்:- உங்க ஃபோன் நெம்பர் எங்கிட்ட இல்லீங்க...
ஜோ:-ரெண்டு படத்துல சேர்ந்து நடிச்சுட்டோம்.. ஃபோன் நெம்பர் இல்லன்னு சொல்றீங்க???

         ஃபோன் நெம்பர் பரிமாறப்பட்டது... அதுக்குப் பிறகு கொஞ்சமாவது உருப்படியா ஏதாவது பண்ணனும்னு நெனச்சு ரொம்ப பொறுமையா ஒத்துக்கிட்ட படம் “friends" அந்தப் படத்தோட previewக்கு ஜோவ கூப்பிட்டு இருந்தார்.. வந்தவங்க.. கிளைமாக்ஸ்  பாக்காம கிளம்பி போய்டாங்க..  அந்தக் கிளைமாக்ஸ்தான் இருந்த கொஞ்சநஞ்ச தெறமய காமிச்சதா நெனச்சுட்டு இருந்தாரு சூர்யா... ஆனா அவங்க பாக்காம போய்டாங்க...  அதற்கு பின் ஃபோனில்...

ஜோ:- அவசரமான வேல அதனால போய்ட்டேன் சூர்யா..  நல்லா நடிச்சுருக்கீங்க..
சூ:- படத்த பாக்காமலேயே கெடக்குற பாராட்டு எனக்கு வேணாம்...
ஜோ:- அடடா, இன்னொ முற  முழுசா பாத்துட்றேன்

           கோபத்தில் அவங்களோட பேசுறதையே நிறுத்திட்டார் சூர்யா.. அப்புறம் எப்பிடி கல்யாணாம் வரை... அட... இன்னும் இருக்குங்க.. அப்புறம் சொல்றேன்.. 

பின்னூட்டமும் .. ஓட்டும் குத்திட்டு போங்க... முடிஞ்சா side ல adds யும் கிளிக்குங்க...

இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...

(இப்படிக்கு சூர்யா புத்தகத்தையும்,, அவரின் பேட்டிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படும் தொடர் பதிவு இது)


16 comments:

sakthi said...

’காக்க காக்க’ விமர்சனத்தில் ஆனந்த விகடன் “made for each other" அப்டீன்னு சொன்ன ஜோடி.. செரி.. எப்டி சேந்தாங்க??


athane eppadi sernthanga iru pa padichitu varen

sakthi said...

(இப்படிக்கு சூர்யா புத்தகத்தையும்,, அவரின் பேட்டிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படும் தொடர் பதிவு இது)

ithan matter aa ok ok gud post pa

வால்பையன் said...

அதுகுள்ள சூர்யாவோட சுயசரிதை வந்துருச்சா?

அப்பாவி தமிழன் said...

bidvertiser மற்றும் தமிளிஷ்ள குத்திடேன்

கடைக்குட்டி said...

sakthi

நன்றிங்க!!

கடைக்குட்டி said...

@ வால்பையன்...

ஆமாங்க வந்துருச்சு..

இப்படிக்கு சூர்யா...
அல்லயன்ஸ் பதிப்பகம்...

கடைக்குட்டி said...

அப்பாவி தமிழன்

நன்றி.. இமெயில் ஐடி தரவும் :-)

பித்தன் said...

நீ சூரியாவ வச்சே ஆயுசு முழுசும் எழுதுவ போல...

எனக்கு என்னமோ நீ நல்ல மெகாதொடர் இயக்குனரா வருவன்னு நினைக்குறேன்...

கடைக்குட்டி said...

பித்தன்
//
நீ சூரியாவ வச்சே ஆயுசு முழுசும் எழுதுவ போல...
//

அண்ணே.. இதெல்லாம் சும்ம மசாலா பதிவுண்ணே!!!

சொந்த சரக்கா கத,மொக்கைஸ் எழுதிட்டுத்தான் இருக்கேன்... நீங்க இத மட்டும் படிக்கிறீங்க... :-)

கடைக்குட்டி said...

பித்தன் சொன்னது

//எனக்கு என்னமோ நீ நல்ல மெகாதொடர் இயக்குனரா வருவன்னு நினைக்குறேன்...//

உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா நல்லது... :-)

செந்தில்குமார் said...

ஹ்ம்ம்... சுவையான தகவல்கள் ! அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்..

SUREஷ் said...

இது சூர்யாவே எழுதும் வலைப்பூவா? அல்லது கார்த்தி எழுதுகிறாரா..,

ஆதவா said...

என்னங்க... இப்படி பொசுக்கு பொசுக்குனு தொடரும் போட்டுடிரீங்க.... சரி சரி.. அடுத்த பாகம்....

சூர்யா ஜோ காதலை ஆவலாக எதிர்பார்க்கும்
ஆதவா

கடைக்குட்டி said...

//
செந்தில்குமார் said...
ஹ்ம்ம்... சுவையான தகவல்கள் ! அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்..
//


நன்றிங்க !!!

கடைக்குட்டி said...

நம்ம டாக்டர் சுரேசுக்கு எவ்ளோ குசும்பு பாருங்களேன்..

தல.. அடுத்த பதிவுல வெளயாடப் போறேன் நான் :-)
//
SUREஷ் said...
இது சூர்யாவே எழுதும் வலைப்பூவா? அல்லது கார்த்தி எழுதுகிறாரா..,
//

கடைக்குட்டி said...

//சூர்யா ஜோ காதலை ஆவலாக எதிர்பார்க்கும்
ஆதவா//

நானும் ஆவலாத்தான் இருக்கேன்.. ஆனா அதப் பத்தியே போட்டுட்டு இருந்தா போரடிச்சுடும்.. so.. அப்பப்ப... :-)