ஜூலை 20 1969ல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் குழுவினர் நிலாவில் கால் பதித்ததாக சொல்லப்படுகிறது.. ஆனால் அதப் பற்றி பலவிதமான கருத்துக்களே பரவியுள்ளது... முதலில் ஆச்சிரியத்தில் அனைவரும் ஒத்துக்கொண்டாலும் 1974 முதலே இது ஒரு ஹம்பக்தான் என்னு பேச்சு உள்ளது...
அதற்கு வலு சேர்க்கும் காரணங்களில் சில...
இது மிகவும் புகழ் பெற்ற படம்.. “நிலாவில் மனிதன்” . சூரிய ஒளியில் இந்தப் படத்தை எடுத்திருப்பார்களேயானால்...(சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை அங்கு) ஒளி விழுவதற்க்கு மறுபுறம் அந்த மனிதனின் உடை கண்டிப்பாகத்தெரிய முடியாது... ஆனால் zoom செய்து பார்த்தால் அவரது உடையில் அவரது பெயரே தெரிகிறது.. எப்பெடி ???
c என்னும் இடத்தைப் பார்ப்பீர்களேயானால்... அங்கு வெளிச்சம் கம்மியாக இருக்கும்.. அதெப்பெடி ?? சூரியக் கதிர்கள் ஒரு இடத்தில் ஒரு மாதிரியும் மறு இடத்தில் மறு மாதிரியும் விழும் வகையில் எந்த ஒரு தடையும் இல்லை நிலவில்... நாம் பூமியில் பயன்படுத்தும் விளக்குகள் கொண்டு எடுத்தால்தான் இப்பெடி தெரியும்.. ஆனால் நாசாவோ எந்த விளக்குகளும் அவர்களுடன் அனுப்பப்படவில்லை என்கிறது.. பின் எப்பெடி ???
ஆலன் பீனின் புகைப்படம் இது.. இதை நன்கு கவனிக்க.. அவரது நெஞ்சுப் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதே மாதிரிதான் எல்லாருடைய உடையிலும் பொருத்தப்பட்டது.. அது உண்மையானால்... நெஞ்சில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆலன் பீனின் ஹெல்மெட்டுக்கும் மேல் தெரிவதெப்படி ???
அதன் கோணம் மாறுகிறதே....
இதன் வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம்.. நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்க கொடியை அங்கு நட .. அது காற்றில் படபடக்கும்... அதுதான் வினையே... நிலாவுலா ஏதுங்க காத்து ????
அரசியல் காரணங்கள்
1--> ரஷ்யாவை அடக்க ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.,.,
2-->பல மில்லியன் டாலர்களை வீணாக்கிவிட்ட நாசா சப்ப கட்டு கட்டுவதற்க்கு பதிலாக சப்பையாக செட்டு போட்டு முடிச்சுறுக்கலாம்...
சிம்பிள் காரணம்
ஏங்க “உலக தாதா” அமெரிக்கா... ஒரு விஷயம் ஜெயிச்சுட்டா அப்டியே உட்டுருமா ??? கண்டிப்பா இல்லை.. 1969ல் 1 மனிதன் கொடி நாட்டி இருந்தால் இந்நேரத்துக்கு 100 பேர் அங்க குடி போய் இருப்பாங்க.. இன்னும் ஆராய்ச்சி பண்றோம்னு இழுத்தடிக்க மாட்டாங்க....
இந்த மாதிரி இன்னும் ஆயிரம் ஓட்டைகள் சொல்றாங்க புகைப்பட வல்லுனர்கள்...
இதையெல்லாம் வெச்சு பாத்தா ... நெசமாவே பொய்யோ ????


