November 21, 2009
நாங்கள்ளாம் அந்தக் காலத்துல...
November 01, 2009
உன்னைப் போல் ஒருவன்

”உன்னைப் போல் ஒருவனை “ இரண்டு மாதம் கழித்து போஸ்ட் மார்ட்டம் செய்யும் பதிவல்ல இது..
April 26, 2009
விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு

April 03, 2009
தமிழ் சினிமாவில் இதற்கு என்ன அர்த்தம்???
பல படங்கள் பார்க்கும் போது.. (யாருபா அது பலான படம்ன்னு படிக்கிறது..) ஏற்பட்ட சந்தேகங்களின் தொகுப்பு. (முழுக்க முழுக்க என் சந்தேகங்கள்.. எங்கயும் சுடலபா...!!)
சிவாஜி
தலைவர் கல்வித்தந்தையாக கலாசிய படம்.. இதில் இண்டெர்வெலுக்கு முன்னாடி வரும் ஒரு சீனில் ஒரு குழந்தை தொழிலாளிகரெண்ட் ஷாக் அடித்து இறக்கும் நிலைக்கு போக .. ரகுவரன் காப்பாற்றுவார்.. அதுக்கு என்னடா இப்போ?? அப்டீன்றீங்களா??? … ஆனா..இண்டெர்வெலுக்கு அப்புறம் தலைவர் ஒரு பஜ்ஜி கடையில ஆதிய மிரட்டுவார்… இந்த கடையில ஒரு சின்ன பையன் டீ எடுத்துட்டு வந்துவெப்பான்.. தலைவர் ”நன்றி தலைவா” அப்டீன்னு சொல்லுவார்.. கல்வித்தந்தை காரெக்டருக்கு இது அழகா???இந்த இடத்துல அவர் தட்டி கேட்ருக்க வேணாமோ ???

அன்புச் செல்வனை பழிவாங்க பாண்டியா , மாயாவை கடத்திக் கொண்டு போய்விடுவான்.. அதே சமயம் ஸ்ரீகாந்தின் மனைவியும்பாண்டியாவின் வசம் இருப்பாள்..அவர்கள் இருவரையும் சம்பல் சீமா என்னும் இடத்திற்க்கு வர சொல்லிவிடுவான்.. போலீசார் அங்கு செல்வர்.அங்கே ரெண்டு மரப் பெட்டியில் அன்பு செல்வன் என்றும் ..ஸ்ரீகாந்த் என்றும் எழுதி தனித்தனியாக வைக்கப்பட்டு இருக்கும்.. ஸ்ரீகாந்திற்க்கு வந்தபெட்டியில் அவனது மனைவியின் தலை இருக்கும்.. அன்பு செல்வனுக்கு வந்த பெட்டியில் என்ன இருக்கும்????? ஒன்னுமே இல்லாட்டி..அதற்கு முந்தய சீனில் ஜோவின் கைகளை பாண்டியா பிடித்து ஏதோ செய்வது போல இருக்கும்.. பாண்டியா என்ன அனுப்பினான்?? ஒன்னுமேஅனுப்பலனா இந்த சீன் எதுக்கு??

மன்மதன்

’மன்மதன்’ சிம்புவுக்கு மூக்குல ரத்தம் வரும்.. ஏன்?? பெண்களை கட்டி பிடித்தால் ரத்தம் வருமா?? அவர் தம்பி மொட்ட மதனின் காலை கட்டிப் பிடிக்கும் போதுதான் முதலில் ரத்தம் வரும்.. அவர் ஆம்பிளையாச்சே…. கொல பண்ண போறோம் அப்படீன்னு நெனச்சா ரத்தம் வருமா?? அப்போ கடைசில ஜோ வ கட்டி பிடிக்கும் போது ஏன் ரத்தம் வருது???

தனுஷ் , சோனியா அகர்வாலுடன் காட்டில் தங்கி இருக்கும் போது அங்கு அரிசி , பருப்புனு எல்லா சாமானும் இருக்கும்.. எப்பிடி???

இது உண்மை கதையா?? கேனத்தனாமா கேக்குறேனா?? செரி விளக்கமா கேக்குறேன்.. கருணாநிதி-எம்.ஜி.ஆர். நட்பு படத்தின் அடிநாதம் என்றால் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் உண்மையா?? சிலது பினைவு (ரெண்டு ஐஸ்வர்யா..) என்றால்.. எது எது எல்லாம் புனைவு??? (யாராவது முழு பதிவே போடுங்கப்பா…
நான் கடவுள்
சமீபகாலமாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்தான்… அந்த கிளைமாக்ஸுக்கு என்னதான் அர்த்தம்..???கிளைமாக்ஸ்…. கங்காவை காப்பாற்றியது யார்??? மன நல மருத்துவரானா தலைவரா.. அல்லது ராம கிருஷ்ன ஆச்சரியாரா?? ரெண்டு பேரும்தான்.. அப்ப்டீனா.. மனோ தத்துவ முறையோ.. ஆன்மீகமோ தனித்தனியாக யூஸ் பண்ண முடியாததா??மிக்ஸ் பண்ணாத்தான் ரிசல்ட் கெடக்குமா??
மேதை

எல்லா படத்துக்கும் ரெண்டு வரியாவது போட்டேன்.. இந்த படத்துக்கு என் பதிவோட தலைப்பே பொருந்தும்..
“இதுக்கு என்ன அர்த்தம்…?????”
உங்களுக்கு புடிச்சா வோட்டு போடுங்க.. புடிக்காட்டியும் வோட்டு போடுங்க.. நீங்க படிச்சா மட்டும் போதும்.. நீங்க படிச்சா மட்டும் போதும்..
March 31, 2009
ஏன் எழுதவில்ல.. இவ்வளவு நாளா????
January 19, 2009
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்கு தீங்கு!!!
”மகளிர் மட்டும்” படத்தில் வரும் இந்தக் காட்சி முக்கால்வாசி பேருக்கு நியாபம் இருக்கலாம்... நாகேஷ் அவர்கள் பிணமாக நடிக்க ,அவரை எப்படியாவது தொலைத்து விட்டு வரவேண்டுமென்று அந்த மூணு ஹீரோயினும் முயற்சி செய்வாங்க...December 20, 2008
நான் பார்த்த முதல் சாலை மறியல்..!!

