July 13, 2009

எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்.


இது வாமனன் படத்துக்கு நான் எழுதுற லாப நஷ்ட கணக்குங்க,,,

வாமனன்.. தயவு செஞ்சு யாரும் இந்தக் கருமம் புடிச்ச படத்த “வெள்ளிப் பரிசிலோ” இல்லாட்டி.. “இந்தியத் தொலைக்காட்சிகளிலோ” போட்டாக் கூடபாக்காதீங்க..

வேணா.. அவ்ளோதான்.. பழைய படங்களின் கதை மாதிரி இருக்குன்னு சொல்ல விரும்பல.. கதையாய் சொல்லும் போது நல்லா இருக்கும் விஷயத்த திரையில் அதே அளவு தாக்கத்துடன் சொல்வதற்க்கு ஒரு தனித்திறமை வேண்டும்... டைரக்டர் அகமது ஸார்... பாடம் கத்துக்கிட்டீங்க... அடுத்த முற நல்லா பண்ண வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் காஸ்ட்லியான பாடம்,,)

எனக்கு இந்தப் படம் பாக்கும் போது கண்ணு முன்னாடி வந்தது டைரக்டரோட நெலமதான்.. மொத [படம்.. பாவம் .. இன்னும் ப்ளான் பண்ணி மெனக்கெட்டு எடுத்துறுக்கலாம்,,

சந்தானம்தான் முழு படமும் பாக்க வைக்கிறதுக்கு உதவுறாரு.. ஹீரோயின்ஸ் பத்தி கேக்காதீங்க,,, மொக்க.. நீயா நானா கோபிநாத் ஏண்டா நைனா நடிச்சன்னு கேக்குற மாதிரி அப்பப்போ வந்துட்டு போறாரு...

இந்தப் படத்துலயே சந்தானம் இந்தக் கலக்கு கலக்குறாரே... டைரக்டர் ஷங்கரோட மேஜிக்கோட இவரோட டைமிங்கும் சேந்தா,,, கலக்க வாழ்த்துக்கள் சந்தானம்..

டிஸ்கி

இந்தப் பக்கமே வரமுடியல கொஞ்ச நாளா.. என்னைத் தேடி வந்து ஏண்டா எழுதலன்னு இங்க கேட்ட |தல| டாக்டருக்கும்,,, மெயிலில் வந்த பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இனிமே அப்பப்போ வந்துட்டு போறேன்...

அன்பிற்க்கு நன்றி..