“அய்யே மாமே.. ஒன்னும் கவல படாத..” என்றபடி பாதிப் புகையை வாங்கினான் காளி என்னும் காளிதஸ்...
“இல்ல மச்சா.. பாரு ஒரு வாரமா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம்... ஏதாவது நல்ல சேதி வந்து வேல வரும்னு பாத்தா... “...
“செரி செரி .. கடிக்கிற கொசு பத்தாதுன்னு இடையில நீ வேற..”
காளி
”நம்மகிட்ட என்னடா இல்ல..?? நம்மள மாதிரி வேலக்காரன் கெடக்கிறதுக்கு அவனவன் குடுத்து வெச்சு இருக்கனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்தாக் கூட ஓடாமா கடைசி வரைக்கும் நிப்போமேடா... நமக்கு ஏன் மாமே வேலையே கெடக்க மாட்டேங்குது...???”
”--------------”
“டேய்..காளி----------------------த்தா... இங்க பொலம்பிட்டு இருக்கேன்... அங்க என்னத்தடா பண்ற...” ரங்கன் டென்சனாய்ட்டான்...
”டோப்படிச்சு எவ்ளோ நாளாய்டுச்சு... நாயே சாவடிக்காத நீ வேற...” காளி பரவச நிலையை அடைந்தான்..
இதுக்கு மேல ரங்கன் பொலம்பியது அவனுக்கு கேட்க வில்லை... ரங்கனுக்கு இந்தப் பழக்கமில்லை.. ஆனால் காளி வழக்கத்துக்கு மாறாக கண்டமேனிக்கி பரவச நிலையில் இருந்ததை ரங்கன் உணர்ந்தான்..
‘நாம வாய் விட்டு பொலம்பிட்றோம்.. அவன் புண் பட்ட மனச இப்பிடி ஆத்திக்கிறான் போலன்னு.. எப்போ தூங்குனான்னு தெரியாமலெயே துங்கிட்டான்..
கதைக்கு சுபமான முடிவு வேனுமில்ல???
அடுத்த நாள்
ரங்கனுக்கு வேலை கிடைத்தது :-)
டிஸ்கி :-
நெம்ப நாளா பொணமே கெடக்காம இருந்த “வெட்டியான்” ரெங்கன் நண்பன் காளியின் உடலை புதைக்கும் பணியில் இருந்தான் .