May 08, 2009

3வரி--ஒரு நாளில் 5 நிமிஷம்-- $ல் சம்பளம்

ஆமாங்க.. ஒரு நாளைக்கி 5 நிமிஷம் செலவளிச்சு... 3 வரி கமெண்ட் போட்டா காசு தர்றாங்க...

awsurveys சைட் தாங்க அப்டி தர்றது...           

ஏன் தர்றாங்க??

ஒரு சைட்ட பாத்துட்டு அது எப்டி இருக்குன்னு ஒரு மூனு வரியில சொல்லனும்...
ஒவ்வொரு சைட்டுக்கும் ரேட் ஒரு மாதிரி.. (1$,5$)அப்டி..

எப்போ காசு தருவாங்க ??

75$ சேந்த்தும் உங்க paypal அக்கௌண்ட்க்கு மாத்திடுவாங்க... (யாராவது தயவு செய்து paypal account பத்தி விரிவான பதிவு போடவும் )

கொஞ்சம் கொஞ்சமா அவ்ளோ பணம் எப்டிபா கெடக்கும் ??

ஒரு survey முடிச்சா மிகக் குறஞ்சபட்சம் 1$-6$ வரை தராங்க... கண்டிப்பா ஒரு வாரத்துல சேத்துடலாம்...

நம்பலாமா???

நானும் இப்பத்தான் சேந்துருக்கேன்.. நீங்களும் சேருங்க.. எல்லாரும் பாப்போம்..

செரி எப்டி சேரணும் ??


இந்த படத்த  க்ளிக் பண்ணி சேருங்க!!!

எப்டிபா பண்றது ??
register பண்ணியதும் current survies available for u னு சொல்லி அதன் விலைகளையும் சொல்வாங்க,,, நீங்க choose பண்ணி கமெண்டலாம்..

ரிஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் இருக்கா ??

பைசா செலவு பண்ண வேணாம்... செஞ்சுதான் பாப்போமே...வந்தா மல..... :-)
 லிங்குகள் அடுத்த page க்கு போகும் வித்தயை சொன்ன t.v.s50 க்கு நன்றி..
இங்க போய் பாருங்க :-)

இதுல சேந்து எனக்கு முன்னாடியே நீங்க எல்லாரும் target reach பண்ணி காசு பார்க்க வாழ்த்துக்கள்..

சந்தேகங்கள பின்னூட்டத்துல கேளுங்க... 
சமத்தா எல்லாரும் சேரணும் இதுல.. செரியா ????

17 comments:

SUREஷ் said...

அவுங்க ஏன் நமக்கு காசு கொடுக்கணும் தல..,

SUREஷ் said...

ஓட்டுப் போட்டாச்சு

டக்ளஸ்....... said...

Raittu...!

கடைக்குட்டி said...

இந்த மாதிரி surveyக்கள் பண்ண சொல்லி comapny களே சொல்லும்...awsurvey அந்த மாதிரி comapanyகளிடம் இந்த contract வாங்கி அந்த பணத்த தரும்..

ஆதவா said...

தல... இதில எல்லாம் நம்பாதீங்க. நான் நிறைய ஏமாந்திருக்கேன்...

அனுபவப்பட்டவன் சொல்றேன்... !!!!

வழக்கம் போல ஓட்டு போட்டாச்சு!!

முக்கோணம் said...

துட்டு தருவாங்களோ தர மாட்டாங்களோ,ஆனா எல்லோரும் பயனடையணும்னு
நினைச்சீங்க பாருங்க அது தான் முக்கியம்.

KRICONS said...

///நீங்கள் AWsurveys இல் பணம் சம்பாதிக்கலாம் என்று எழுதியிருக்கிறீர்கள் அது ஒரு ஏமாற்று வேலை நானும் ஒரு காலத்தில் இதை நம்பி ஒரு தனிப் பதிவே இட்டேன் பின் இது பொய் என தெரிந்ததும் அப் பதிவையே நீக்கி விட்டேஎன் 75$ சேர்ந்ததும் உங்கள் Paypal அட்ரஸ் கேட்பார்கள் அனால் பணம் மட்டும் வராது எமர்ந்திடாமல் இருந்தால் சரி

நன்றி
TamilhackX///

இப்படி ஒரு பின்னூட்டம் எனக்கு நேற்று வந்துள்ளது.

கலையரசன் said...

கடைக்குட்டி அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

AWsurveys இல் பணம் சம்பாதிக்கலாம் என்று நானும் 2 மாதம் முன்பு சேர்ந்தேன், ஆனால் அவர்கள் புதிய சர்வேவை மாதம் 1 அல்லது 2 தான் கொடுக்கின்றார்கள். என்னத்த... 75$ வந்து.. என்னத்த சாம்பாரிக்க?

வால்பையன் said...

எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கே!

கடைக்குட்டி said...

ஆதவா said...
//
தல... இதில எல்லாம் நம்பாதீங்க. நான் நிறைய ஏமாந்திருக்கேன்...
//

காசா பணமா ?? செஞ்சுதான் பாப்போமே...

அக்கறைக்கு நன்றி..

கடைக்குட்டி said...

KRICKON

பாப்போம் தல... :-)

கடைக்குட்டி said...

முக்கோணம் said...

//துட்டு தருவாங்களோ தர மாட்டாங்களோ,ஆனா எல்லோரும் பயனடையணும்னு
நினைச்சீங்க பாருங்க அது தான் முக்கியம்.
//

யாம் பெற்ற இன்பம் :-)

கடைக்குட்டி said...

கலையரசன் said...
//கடைக்குட்டி அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!
//

ஸ்பெஷல் நன்றிகள் :-)

கடைக்குட்டி said...

கலையரசன்
//AWsurveys இல் பணம் சம்பாதிக்கலாம் என்று நானும் 2 மாதம் முன்பு சேர்ந்தேன், ஆனால் அவர்கள் புதிய சர்வேவை மாதம் 1 அல்லது 2 தான் கொடுக்கின்றார்கள். என்னத்த... 75$ வந்து.. என்னத்த சாம்பாரிக்க?//

பாப்போம் தல... :-)

கடைக்குட்டி said...

வால்பையன் said...

//எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கே!
//

நெறயா ஆங்கிலம்ல... இனிமே குறச்சுக்க பாக்குறேன்..

ஆதி said...

எல்லோரும் சம்பாதிக்கனும்னு நினைக்கிற உங்க நல்ல எண்ணத்துக்கு நன்றியும், வாழ்த்துகளும். 6 மாசத்துக்கு முன்பே அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி 75 $ எப்போ வரும்னு காத்திருக்கேன், இன்னும் வரல. இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு ஒரு ஓட்டு போட்டுட்டேன் நண்பா.

செந்தில்குமார் said...

நண்பா.. எல்லாரும் பயனடயனும்ங்கற உங்க எண்ணம் நல்லது.. அதுக்காக இந்த விஷயத்த பகிர்ந்துக்கிட்டதுக்கு பாராட்டுக்கள்..

அனால் இங்கே சிலர் குறிப்பிட்டிருக்கற மாதிரி இந்த சர்வே சமாசாரம் ஒரு ஏமாத்து வேலை-னு தான் எனக்கும் தோணுது... இதே போல என்னோட நண்பர்கள் பல பேர் முயற்சி செஞ்சு பாத்தாங்க ... ஆனா காசு மட்டும் வரலே..