Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

January 05, 2010

எஞ்ஞினியா வா! -- 3



பழச படிக்க இங்க க்ளிக்குங்க..

கம்யூட்டர் பொட்டி அறிமுகமாகி.. அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து பல பண முதலைகள் (ஏங்க கெட்ட பணக்காரங்கள பண மொதலனு சொல்றாங்க??) அதன் வீரியத்தை உணர்ந்து உடனே தனியார் காலேஜ்கள் தொடங்க வில்லை..

அதுக்கு கொஞ்சம் காலமாச்சு.. ஆனால் அது அதன் பீக்கில் இருந்தது 95-2000 வரை.. அந்தக் கால கட்டத்தில் எஞ்ஞினியர் என்றாலே தனி மதிப்பு..

அந்த காலகட்டத்தில் பள்ளி படித்து கொண்டிருந்த (என் போன்ற) பிள்ளைகளுக்கெல்லாம் அப்போ வெளிநாடு போனா அண்ணங்களும் அக்காளும்தான் பெரிய இன்ஸ்ரேஷன்.. அத மனசுல வெச்சுதான் பெத்தவங்களும் அடுத்தடுத்து பிள்ளைகளை செர்க்க எஞ்ஞ்னியரிங் கல்லூரிகளைத் தேடி அலைந்தனர்..

ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி எந்த வெள்ளக்காரன அனுப்பினோமோ அவங்கிட்ட சேவகம் செய்ய பிள்ளைகளை தயார் பண்ணியது சமூகம்.. இளைஞ்ர்களின் முகம் மாறிப் போனது..

மிக அதிகமான பணம் விளையாடியது.. இளைஞர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு சென்றனர்.. பிள்ளைகளைப் பார்க்க பெத்தவங்களும்..

ஆனா என்னதான் கண்டிப்பாக இருந்த காலேஜ்களை இந்த மாதிரி கெளப்பி விட்டாலும்.. எண்ணிக்கை அதிகரித்தாலும்.. நமக்கு இன்னும் உலகக மார்க்கெட்டுல டிமாண்ட் இருக்குங்க...


இவ்ளோ பேர எஞ்ஞினியரா மாத்துறது தப்பில்ல இந்த சமூகத்துல.. ஆனா நாட்டுக்கு இது நல்லதில்லை.. சொல்வதை செய்யும் கிளிப்பிளைகள் தயாரிக்கப் படுகிறார்கள்..

அப்புறம் எப்புடிதான்பா படிக்கிறது?? அதுக்குன்னு எதுனா வழி இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு.. 2000 ல உடனே கெடச்ச அந்த பணமும் சமுதாய மதிப்பும் கெடைக்கும்னு நெனக்காம உண்மையாக படிக்கும் எஞ்ஞினியருக்கு தன் தனிதன்மையை காக்கும் எஞ்ஞினியருக்கு காலம் வாய்ப்பளிக்கும்..

எப்பூடி...???


--தொடரும்..

( ஆணி அதிகம்.. எனவே அதிகமாக எழுத முடியவில்லை.. .. பின்னூட்டமிடுங்கள்.. விவாதிக்கலாம்.. )

November 12, 2009

எஞ்ஞினியா வா! -- 2

முதல் பகுதி படிக்க இங்கு க்ளிக்கவும்...

எம்.ஜிஆர். அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த எஞ்ஞினியரிங் மேளா ரொம்ப ஜோராக நடக்க ஆரம்பித்தது 90 களின் மத்தியில்.. (இப்பவும்தான்..)

அதுக்கு முன்னாடி கம்யூட்டர் வந்த காலம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்...

நம்ம ஊரில் கணினி கால் பதித்த காலம் :

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒருத்தர சந்திக்க நேர்ந்தது.. (தெரியாதவர்களுக்கு சுய தம்பட்டம் -- நான் இங்கதன் வேலை பார்க்கிறேன்) 50 வயதைக் கடந்தவர் என்பது அவரைப் பார்த்ததும் தெரிந்தது.. ம்னுஷன் மொக்க போட போறாருடான்னு நெனச்ச போதே அவர் ஆ”ரம்”பிச்சுட்டாரு...FOX space நல்ல மென் பொருள் அது இதுன்னு.. தெரியாத பழைய மென்பொருள்களின் பேரா சொல்லிக்கிட்டு சும்மா ஸீன் போட்டாரு.. சரின்னு நான் சும்மா சார் அதல்லாம் .net ல நீங்க சொன்ன எல்லாமே இருக்கு ஸார்னு சொன்னேன்... மனுஷன் உடனே தொழில்நுட்ப ரீதியா.net ல ஒரு டவுட்டு கேட்டாரு.. மிரண்டு போய்ட்டேன்.. நேத்து காலெஜ் முடிச்ச ஒருத்தன் வந்துதான் பதில் சொல்லனும்.. சர்வர்ஸ் பத்தி அவருடைய பார்வை.. அவர் தெரிந்து வைத்திருக்கும் வேகம்... அவ்ளோ இளமையா இருந்தது அவரோட கேள்விகள்..

“தலைவா நீங்க யாரு..? பழைய கதையும் சொல்றீங்க.. இன்னைக்கு நடக்குறத பத்தியும் சொல்றீங்க.. எப்பிடி??” நான் கேட்டேன்..

அவர் சிரித்துக் கொண்டே.. “தம்பி நான் 1982 ல வேலக்கி சேந்து 5 வருஷம் ஆயிடுச்சுபா.. அந்த நேரத்துல கம்யூட்டர்னு ஒன்னு வந்துருக்குன்னு சொன்னாங்க.. அதல ஒரு டிப்ளோமா கோர்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. அப்ப நாங்க 12 பேர் தான் படிக்க சேந்தோம்.. (அட என்னங்க வர்ம கலை மாதிரி சொல்றீங்க..-- இது நான்) அப்போ புக் வரவே பல மாசமச்சு.. அந்த வாத்தியாருக்கும் ஒன்னும் தெரியல.. நாங்களே புக்க படிச்சு படிச்சு கத்துக்கிட்டோம்.. எக்ஸாம் எழுதி பாஸும் ஆயிட்டோம்.. “

“அதுக்கு அப்புறம் ஜாலியா வேலையா ஸார் ??“ -- நான்

“அட போப்பா.. ஏண்டா படிச்சோம்னு ஆயிடுச்சு.. கம்யூட்டர் ஒரு ரூம் ஃபுல்லா இருக்கும். செம சூடாயிடும்பா..”

“கதை உடாதீங்க..”

“நெசமாப்பா.. நான் பொய் சொல்லி என்ன ஆக போகுது சொல்லு.. பேஸிக் ப்ரோகிராம் பண்ணுவோம்.. இன்னைக்கு நீங்க யூஸ் பண்ற கம்யூட்டர் மானிட்டர் இங்க புழக்கத்துக்கு வந்ததெல்லாம் 90 களுக்கு அப்புறம்தான்.. ...............”

(இப்பிடி அவர் சொல்லிய கதைகள் ஏராளாம்.. அத பத்தி தனியாவே சொல்றேன்.. )

இதுல கவனிக்க வேண்டியது ரெண்டு விஷயம்தான்..

1* கம்யூட்டர்ன்னு ஒரு பொருள் அறிமுகமாகும் போது என்ன கெடுபிடி பாத்தீங்களா?? இது அந்த அளவுலேவே இருந்திருந்தா அவ்ளோதான்.. இன்னைக்கு நாமெல்லாம் கம்யூட்டர நோண்டுறது எங்க???

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த கோட்டையை என்ன நோக்கத்தில் உடைத்தாரோ.. ஆனால் அதன் உருப்படியான மிக நல்ல உபயோகம் கம்யூட்டர் எல்லாரையும் போய் சேந்ததுதான்..

2* கம்யூட்டர் துறையில் நீங்கள் வளர வேண்டும் என நினைத்தால்.. உங்கள் அண்ணான்மார்களைவிட,, அக்காளைவிட.. பக்கத்து வீட்டு US அங்கிள விட 10 மடங்கு உழைப்பு போடணும்...

”கணடதையும் கற்று பண்டிதன் ஆகலாம்ன்னு சொல்வாங்க...” அது இந்தத் துறையில் 100% உண்மை.. அந்த தாத்தா -- ஒரு பண்டிதன்.


இனி படிக்கப் போறவங்களுக்கும் அதான் சொல்ப் போறேன்.. “ஆர்வம்..” அத விட்றாதீங்க.. இன்னும் தேடுங்க..
கம்யூட்டர் வந்த காலத்துல, அய்யோ அத படிக்க மாட்டோம்பான்னு சொல்லி வாழ்க்கையின் பொன்வாசலை தவரவிட்டவர்கள் அதிகம்.. இப்போ கூட நீதி துறையில் முழுவது கணினி மயமாவதை மேல் மட்டத்திலே விரும்பவில்லை என்பார்கள்.. (அய்யோ அரசாங்க ரகசியத்த வெளில சொல்லிட்டேனே..)
இந்தக் காலத்துல ஏண்டா சேர்றோம்ன்னு தெரியாமயே சேந்து நொந்து போறவங்க அதிகம்...

காலத்தின் கோலம்...

அதான் எறங்குற கிணறு எவ்ளோ ஆழம்.. அதுல எப்டியெல்லாம் இருக்கலாம்ன்னு நானும் எறங்கிகிட்டே சொல்றேன்.. சேந்து போவோம்.. (அட யாருப்பா கைப்புள்ள மாதிரி படிக்கிறது)

அடுத்த பதிவுல.. மத்திய காலத்தையும்.. இனிமே சேர்றவங்களுக்கு உருப்படியான யோசனைகளும் தொடரும் நீங்கள் விரும்பினால் (விரும்பாட்டியும் கூட.. ஹி ஹி..)

November 03, 2009

எஞ்ஞினியா வா!!!!


இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு..? மற்றும் நல்ல இஞ்ஞினியராக என்ன செய்வது..??

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரே ஒரு இன்ஞி. பற்றி எழுதப்போவதல்ல.. எல்லாரும் கல்யாணம் பண்ணி.. ரெசஷன்ல வேலைக்கு போயின்னு மொக்கையும் இல்ல... ”இஞ்ஞினியர்கள்” -- இந்த துறைக்கு ஏன் இத்தனை மவுசு..?? எப்பிடி வந்தது இந்த பவுசு..?? ஆழத்தைத் தேடி..

தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..

உங்க வீட்டு புள்ளையும் படிக்கும்..ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி உங்க கண்ணு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்து புள்ளைகளும் படிக்கும்...

இவ்வளவு ஏன்.?? நீங்கள் இந்தியாவில் வசிக்கும் தமிழர் என்றால்.. உங்கள் ரத்த பந்தமோ.. நெருங்கிய சொந்தமோ.. இல்லாவிட்டால்.. ஏதாவது தெரிந்த வீட்டு பிள்ளையோ.. கண்டிப்பாக இன்ஞினியரிங் படித்துக் கொண்டிருக்கும்..

இல்லையென்றால்.. உங்களால் எந்த ”இஞ்ஞினிய” முகத்தையும் மேற்கூறிய எந்த வரிகளுடனும் தொடர்பு படுத்த முடியவில்லையென்றால்.. நீங்கள் இந்த இடுகையை படிக்காமல் இருப்பது நலம்...

சரி நாம ஃப்லோவ தொடருவோம்...

1982 க்கு முன்னாடி இஞ்ஞினியர் துறையும் டாக்டர் துறை போலத்தான் இருந்ததாம்.. ஏதோ “ரொம்ப” படிச்ச புள்ளைங்க அவங்களுக்குள்ள சண்ட போட்டு இருக்குற 500--1000 சீட்ட புடிச்சுக்குங்க... அவ்ளோதான்..

ரொம்ப கெத்தா இருந்த துறையாம்.. அதுக்கப்புறம் மவராசன் “எம்.ஜி.ஆர்.” தனியார் கல்லுரிகளுக்கு அனுமதி தந்தாராம்.. (இப்போ தெரியுதா ஏன் தலைவர் படம்ன்னு...) அதுக்கும் பெரிய அளவுள டெல்லில லாபி நடந்ததுன்னு நான் இண்டர்வியூ போனப்ப ஒரு மவராசன் சொன்னப்ல... ஆச்சா.. அதுக்கப்புறம் புற்றீசல் போல காலேஜ் ஆரம்பிக்கப் படவில்லை..

ஆனா இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக தெரிந்ததும்.. சும்மா எல்லா பண முதலை திமிங்கலம் சுறா எல்லாம் இறங்கிடுச்சு... இப்போ இருக்குற நெலமை உடனே வந்துடல.. நாங்களாம் நாய் பாடுபட்டு வேலை தேடுரதுக்கு .. நம்ம அண்ணனங்கெல்லாம் அமெரிக்கால சம்பாதிக்க.. அமெரிக்கால இருந்து ஒருத்தர இந்தியா தொரத்துரதுக்கும்.. இங்க அம்ஜிகரையில ஏதோ ஒரு கம்பெனி காசு புடுங்கி ஏமாத்துறாதுக்கும் தசாவதாரம் கேயாஸ் தியரி மாதிரி ஒரு பட்டம் பூச்சியின் படபடப்பின் தொடர்பு இருக்கு (கன்சல்டன்ஸி என்னும் போலிகள பத்தி வேற சொல்லனும்ங்க.. ஹையோ வேல ஜாஸ்தி ஆகுதே...)

ரொம்ப லென்த்தா போகுதுல்ல.. சரி தொடராக்கிடுவோம்..

“எஞ்ஞினியா வா!!!” பேர் எப்பிடி இருக்கு ?? எத பத்தி எழுத போறேன்னு தெரியுதுல்ல.. நீங்களே ஒரு நல்ல தலைப்பா பின்னூட்டுங்க..

(***இது நான் செவிவழியாக கேட்ட தகவல்களை அச்சேற்றும் முயற்சி.. தவறிருந்தால்.. நான் ஏதையாவது சொல்லாமல் விட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ..***)