மக்களாட்சி-னா என்ன ???
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி எனப்படும்.. இப்பிடித்தாங்க உஸ்கூல்ல படிச்சது...
என் ஓட்டைப் பதிவு செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்த போது நான் அடைந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை.... “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டில்.. நானும் வாழ்ந்து என்னுடைய ஓட்டையும் பதிவு செய்யப் போகிறேன்” அங்க தான் வந்தது அந்த எண்ணத்திற்க்கு ஆப்பு....
(சென்னையில் நடந்த உண்மை சம்பவம்.. புனைவு அல்ல..)
முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்.. ‘எனக்கு யாரியும் புடிக்கலீங்க .. 49ஓ போடப் போறேன்’ என்று சொன்னார்... பூத்துல எல்லாருக்கும் அதிர்ச்சி... 'அட என்னங்க இவ்ளோ தூரம் வந்துட்டுன்னு’ ஒரே இழுவை... அப்புறம் ‘ஃபார்ம் கொடுத்து விடலீங்க’ என்றனர்.. அவர் சூடாகி விடவே.. “ஸார்... ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டுப் போங்க.. நாங்க உங்க பேரை டிக் பண்ணியாச்சு கண்டிப்பா கணக்கு காமிச்சு ஆகனும்.. நீங்க குடுக்குற லெட்டர் உங்க 49ஓ ஆயிடும் எனச் சொல்லி லெட்டர் வாங்கிவிட்டு அனுப்பினர்.. அவரை அனைவரும் ஏதோ ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்து அனுப்பினர்.. (அந்த மனிதர் எலெக்ஷன் கமிஷனில் அன்றே புகார் அளித்து.. பின் அவருக்கு சமாதானம் சொல்லப்பட்டு...
செரி வுடுங்க.. இப்ப மேட்டர் என்னன்னா ...
49 ஓ பற்றி சில கேள்விகள்...
1--> எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுறோம் என்பது ஒரு வாக்காளரின் உரிமை... அவர் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுறார்னு அவர் விருப்பப் பட்டால் மட்டும் சொல்லலாம்...
ஆனா 49ஓ போடுறவங்க எல்லார் முன்னாடியும் சொல்லனுமாம் ... ஏங்க இப்பிடி ???
2--> அந்த 49 ஓ க்கு 17 a படிவத்திற்க்குப் பதிலாக ஒரு பட்டனை வெச்சாத்தான் என்ன???
எல்லாம் ஒரே நாளில் மாறிடுமா???
மாறாது.. கண்டிப்பா மாறாது.. ஆனா கொஞ்சமாவது மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரியனுமா இல்லயா???
ஒரே நாளில் நடக்கனும்னா எப்பிடிபா நடக்கும் ???
கண்டிப்பா நடக்கும்... ஒரே நாளில் பத்திரிக்கைகள் முடக்கப்படும்... யாரும் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது...
எப்பிடி இப்படி சொல்றேன்னா...
இதே மனநிலையில் மக்கள் இருக்கும் போது.. “உடனடி தீர்வு“ அப்படீன்னு ஒன்னு கெடக்கும் போது... அது “சர்வாதிகார”தால மட்டும்தான் முடியும் ... சர்வாதிக்கரத்துல இப்பிடி நாம சிந்திக்க கூட முடியாது,,
இது அவநம்பிக்கையா??
கண்டிப்பா இல்ல.. மக்கள் சூடா களத்துள இறங்குனா கண்டிப்பா சர்வாதிகார முடிவுதான் கெடக்கும்... பர்மா,பாகிஸ்தான் இப்பிடி எவ்ளவோ உதாரணங்கள் இருக்கு ராணுவ ஆட்சிக்கு
அப்போ என்னதான் சொல்லவர்ற ???
ஜனநாயகம்னா இப்பிடித்தான் இருக்கும்.. இதுல இப்போ வரைக்கும் இருக்குறவங்கள புடிக்கலயா தே.மு.தி.க.வுக்கு ஓட்டு போடுங்க... சுயேட்சைக்கு ஓட்டு போடுங்க.. இல்ல நீங்களே தேர்தல்ல நில்லுங்க...
இருக்குற கண்ணுல கொஞ்சமா நொள்ளயானதும் சுத்தமா நொள்ளயானதுதான் கெடக்கும்.. ஆனா நான் நல்லகண்ணு கெடக்குற வரக்கும் இப்பிடித்தான் இருப்பேன்னா “உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா”னு போக வேண்டியதுதான்...
ஏன்னா...
இந்தியா ஒரு மக்களாட்சி நடைபெறும் நாடு :-)
இங்கு
எறுமையைப் போன்ற
பொறுமை முக்கியம்...
(தலைப்பிற்க்கும் கடைசி 3 வரிக்கும் சம்பந்தம் இல்லை)
16 comments:
//இதுல இப்போ வரைக்கும் இருக்குறவங்கள புடிக்கலயா தே.மு.தி.க.வுக்கு ஓட்டு போடுங்க... சுயேட்சைக்கு ஓட்டு போடுங்க.. இல்ல நீங்களே தேர்தல்ல நில்லுங்க...//
நல்ல யோசனை தல
49-0 உபயோகப் படுத்தும் காலகட்டம் இது அல்ல நண்பரே...
நல்லவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று அனைவரும் நின்றால் கெட்டவர் கூட நல்லவராக மாறிவிடுவார்கள்
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் கூட ஆட்சியாளர்களைத்தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தல...
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டில்.. நானும் வாழ்ந்து என்னுடைய ஓட்டையும் பதிவு செய்யப் போகிறேன்” அங்க தான் வந்தது அந்த எண்ணத்திற்க்கு ஆப்பு....
நல்ல ஆப்பு தான்
நிஜமாகவே யோசிக்க வைத்த பதிவு
எந்த ஒரு அராஜகத்திற்கும் ‘extreme' எல்லை உண்டு, அந்த எல்லை தாண்டிய பிறகே ஒரு புரட்சி அல்லது மாறுதல் வரும்.அதுவரையில் மக்கள் பொருமை காக்க வேண்டியதுதான் நன்பரே
மாமு 49 ஒ பட்டனை தான் வைக்க உடமாட்டாங்க...வைச்ச
அப்புறம் அதுல தான் நேரிய ஒட்டு உழும்.
49ஓ வை பட்டாணாக்க ஒப்புதலை கோரி உச்ச நீதிமன்றம் அரசாங்கத்துக்கு நோட்டிஸ் அனுபிவிட்டது, 6 மாதங்களாகியும் அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.....
நம்ம வலைப்பதிவர் ஒருத்தர் அப்படித்தான்49 ஓ வை போடுங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சேன். அவரோ, அங்க நிக்கிற கேண்டிடேட் ரொம்ப பவர்ஃபுல்; நான் போட்டது தெரிஞ்சிதுன்னா, பின்னிடுவாங்க என்றார்... !!! அதுக்கு ஒரு பட்டனை வெச்சிருக்கலாம்... இல்லாட்டி விஜயகாந்துக்கு ஓட்டு போட்டிருக்கலாம்...
வாழ்க ஜன(பண)நாய் அகம்!
SUREஷ் said...
//
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் கூட ஆட்சியாளர்களைத்தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தல...//
அதை நினைவு படுத்தவே இந்த பதிவு தல..
sakthi said...
நிஜமாகவே யோசிக்க வைத்த பதிவு//
அதாங்க வேணும் :-)
வேடிக்கை மனிதன் சொன்னது
//
அதுவரையில் மக்கள் பொருமை காக்க வேண்டியதுதான் நன்பரே
//
அதத்தாங்க நானும் சொல்லி இருக்கேன்
ஜெட்லி said...
மாமு 49 ஒ பட்டனை தான் வைக்க உடமாட்டாங்க...வைச்ச
அப்புறம் அதுல தான் நேரிய ஒட்டு உழும்.//
மச்சான் அதுல நெறயா ஓட்டு விழுந்தாலும் பரவாயில்ல.. ஒரு ஓட்டு ஒழுங்கா வாங்குனா கூட தேர்தல் செல்லும்னு சட்டம் சொல்லுது....
பொறுமை..
பொறுமை..
அவ்ளோதான்..
ஆதவா சொன்னது
//
வாழ்க ஜன(பண)நாய் அகம்!
//
செமங்க!!!
அக்னி பார்வை said...
//
49ஓ வை பட்டாணாக்க ஒப்புதலை கோரி உச்ச நீதிமன்றம் அரசாங்கத்துக்கு நோட்டிஸ் அனுபிவிட்டது, 6 மாதங்களாகியும் அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.....//
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!
இந்தியா மக்களாட்சி நாடா யார் சொன்னது!
ஓட்டு நாம போடுறது சும்மா பார்மல்டிக்கு தான்!
தோற்றாலும் ஜெயிச்சதா அறிவிச்சுகுவாங்க!
நாம போடாத ஓட்டெல்லாம் கணக்குல வரும்!
Post a Comment