எல்லாரும் உலக சினிமா பத்தி பதிவு போடுறாங்க.. நாமளும் போடலாம் எடுறா மக்கா வண்டியன்னு கெளப்புனா.. நான் பாத்த ஒரே இங்கிலீஷ் படம் “ஷோலே”ங்கன்னு சொல்ற அளவுக்குத்தான் நம்ம உலக சினிமா அறிவு ...
இருந்தாலும் நான் பாத்த ஒன்னு ரெண்டு இங்கிலீஷ் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது “FINDING NEMO" (ஃபைண்டிங் நீமோ)என்னும் அனிமேட்டட் திரைப்படம்... அதைப் பற்றிக் காண்போமா ??
கரு
71% நீர் சூழ்ந்து இருக்கும் இந்த உலகில் ஒரு மீனின் வாழ்க்கையை சுவைபட சொல்லி உள்ளனர்
கதைச் சுருக்கம்
clown fish என்று சொல்லப்படும் ஒரு வகை மீன் இனத்தில் மார்லின் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.. 100 மீன் குஞ்சுகளைப் பெற்று அவற்றைப் பாதுக்காத்து வருகின்றனர்.. அந்த சமயத்தில் ஒரு கொடிய சுறா அவர்களை வேட்டையாட... 99 குஞ்சுகளும் இறக்கின்றன.. மிஞ்சும் ஒரே மீன் “நீமோ”...
இப்பிடி கொடிய முறையில் மற்ற பிள்ளைகள் இறந்து விட்டதால் மார்லினுக்கு மிகவும் பயம் எங்கே நீமோவிற்க்கு ஏதேனும் ஆகிவிடுமோன்னு... வருடங்கள் ஓட நீமோவை பள்ளிக்கு அனுப்பவும் பயம் மார்லினுக்கு....(தாய் இறந்து விடுகிறார்)..ஆனாலும் தைரியமாக பள்ளிக்கு அனுப்ப...
அங்கிருந்து வேறு இடத்திற்க்கு செல்லும் நீமோ.. தந்தையின் எச்சரிக்கையும் மீறி மிக அதிக தூரம் செல்ல ..ஒருவரிடம் மாட்டி... அது சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவரின் இல்லத்தை அடைந்து விடுகிறது...
பயந்தாங்கொள்ளி மார்லின் எப்பெடி நீமோவைத் தேடிப் பிடிக்கிறது என்பதே கதை...
கவரும் விஷயங்கள்
மார்லின் தேடி வரும் பொழுது... தோரி என்னும் மீன் அதற்கு வழி காட்டும்.. அந்த மீனுக்கு “சார்ட் டெர்ம் மெமரி லாஸ்” .. அது மறக்க .. இது பறக்க.. செம காமெடி...
மீன்கள் உலகம் அவ்வளவு அழகு... அமைதி...அற்புதம்...
இசையும் .. கிராஃபிக்சும் படத்திற்க்கு பலம்...
ஏன் பாக்கனும்
ஒரு மாறுதலுக்காக... ஒரு மசாலா படத்துக்கான அத்தனை அம்சங்களோடு போரடிக்காமல் போகிறுது...
யார் பாக்கலாம்
குழந்தைகள்
குழந்தை மனப் படைச்ச வளர்ந்த குழந்தைகள்
andrew standon கதை திரைக்கதையில்2003ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் இப்போ டி.வி.யில கூட போடுறாங்க... பாருங்க
இதுக்கு ஓட்டுப் போடாமா போனா அடுத்து கேப்டனின் மரியாதை என்னும் உலக சினிமா பற்றி எழுதப்படும்...
24 comments:
கலக்கல் விமர்சனம்!
அப்படியே புது படங்கள்
வந்திருக்கு Wall-E அப்படின்னு
அதையும் பாருங்க, நல்லாருக்கு.
நல்ல படம்தான் கடைக்குட்டி. அனிமேஷன் திரைப்படங்கள் பொதுவா நல்லா இருக்கும்.. மனசைத் தொடராப்ல சப்ஜெக்ட் இருக்கும்.. ஸ்பிரிட், ஐஸ் ஏஜ் மோன்ஸ்டர்ஸ் இங்க், ஹேப்பி ஃபீட் போன்ற பல படங்கள் எனக்கு ரொம்பவும் பிடித்த படங்கள்.
i voted
but i expect
இதுக்கு ஓட்டுப் போடாமா போனா அடுத்து கேப்டனின் மரியாதை என்னும் உலக சினிமா பற்றி எழுதப்படும்...
அந்த படம் எனது டிவிடி library யில் இருக்கு மிக நல்ல படம் , எந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்தாலும் ஓடும் படம் நல்ல விமர்சனம் ரொம்ப சுறுக்கமா இருக்கு ;)
ஐஸ் ஏஜ் மோன்ஸ்டர்ஸ் இங்க், ஹேப்பி ஃபீட் , வால் ஈ ;)
சூப்பர் நைனா
irunthalum
டோம் and ஜெர்ரி க்கு என் vote
தல.., தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.., வாங்க வந்து தொடருங்க..,
//யார் பாக்கலாம் குழந்தைகள் குழந்தை மனப் படைச்ச வளர்ந்த குழந்தைகள் //
அது சரி.. நீ எதுக்கு பாத்தா மாப்ள..
ஈ .ரெஃபர்ல் செட்டிங் சரி செய்யுங்க தல.. கேள்விக் குறிகள் வராது.
தமிழ் சினிமாவே புரியமாட்டேன்னுது
இதுல நீங்க உலக சினிமான்னு போட்டுட்டீங்களா?
நான் அப்பிடியே திரும்பி போறேன்
யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???//
இது நல்லா இருக்கு.
அண்ணாச்சி, ஓட்டு போட்டாச்சு , வார்த்தைய காப்பாத்துங்க, மரியாதையை எழுதிராதீங்க.,
எப்படியெல்லாம் இந்த குட்டி பயமுறுத்துது..???
ஒட்டு போட்டாச்சு...
ரொம்ப நல்ல இருந்துது குட்டி....vote குத்திட்டன்
எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் படம்னா அது நீமோ படம் தான்.
நல்ல விமர்சனம்.
மான்ஸ்டர் இன்கார்பரேசன், ஹாப்பி பீட் போன்ற படங்களும் வெகு அருமையாக இருக்கும்.
அதற்கான உங்க விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.
ஓட்டு போட்டுடறேங்க. :)
உங்க பிளாக் வடிவமைப்பு டெம்லேட் ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுகள்.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. இன்னும் கொஞ்சம் டெக்னிகல் சேதிகளை அள்ளி விடுங்க
@ கலையரசன்
கண்டிப்பா பாத்துடலாம்.. லிங்க் தாங்க:-)
--------------------------------
@ ஆதவா
//
ஸ்பிரிட், ஐஸ் ஏஜ் மோன்ஸ்டர்ஸ் இங்க், ஹேப்பி ஃபீட் //
தரவிறக்க சுட்டி தாங்கப்பா...
--------------------------------
@SUREஷ்
//but i expect மரியாதை//
டாக்டரே எனக்கு அந்தத் தெம்பு இல்ல.. உட்டுருங்க சாமி :-)
@சக்கர
//
எந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்தாலும் ஓடும் படம் //
அப்டியா ?? அப்ப நான் உங்க வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா போடுவீங்க தானே???
-----------------------------------
@mayvee
tom & cherry the Best தலைவா!!
---------------------------------
@லோகு
//அது சரி.. நீ எதுக்கு பாத்தா மாப்ள..//
நான் பாக்கலாம் மாப்ள.. உன்னய மாறி ஆளுங்க பாக்கக் கூடாதுன்னுதான் சொன்னேன்.. :-)
@வசந்த்
அட என்னங்க!!! செரி இறிங்க மரியாதை பத்தி போடுறேன்
----------------------------------
@ SUREஷ்
erefferal settings தெர்ல தல.. சொல்லித்தாங்க...
அக்கறைக்கு நன்றி
--------------------------------
@ஷண்முகப்ப்ரியன்
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றிங்க!!!
-------------------------------
@தேனீ-சுந்தர்
கண்டிப்பாங்க!!!
------------------------------
@வண்ணத்துப்பூச்சியார்
ஹா ஹா.. எப்பூடி
---------------------------------
@hs
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றிங்க!!
@ பூமகள்
மொத தபா நம்ம கட பக்கம் வந்ததுக்கு நன்றி :-)
மாசுக்குறைவில்லாம பாராட்டுனதுக்கும் நன்றி..
கண்டிப்பா குறைகள் இருந்தாலும் நிறைகளை மட்டும் இறப்பமாக பாரட்டியதற்க்கு நன்றி
:-)
@கார்த்திகைப் பாண்டியன்
//
இன்னும் கொஞ்சம் டெக்னிகல் சேதிகளை அள்ளி விடுங்க
//
தெரிஞ்சா சொல்ல மாட்டோமா??? என்னங்க இது ???
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
நன்றி
தமிழ்ர்ஸ்
Post a Comment