Showing posts with label லாப-நஷ்ட கணக்கு. Show all posts
Showing posts with label லாப-நஷ்ட கணக்கு. Show all posts

November 27, 2009

(அ)-யோகி

முன் குறிப்பு
***
கதையைப் படிக்க வேறு கடைகளுக்கு செல்லவும்.. இது சும்மா நச்சுன்னு நாலு பத்தில...
****

முதல் நாள் படம் பார்ப்பது ரொம்ப கம்மியாயிடுச்சு இப்பல்லாம்... ஏன்னா பதிவர்கள் விமர்சனம் படிக்காம எதையும் பாக்குறது இல்ல..

இன்னைக்கு வேலைல இருந்து நேரடியா போய்ட்டேன் தியேட்டருக்கு.. படத்த பத்தியும் ஒன்னும் தெரியாது,.. எந்த எதிர்பார்ப்பும் இல்ல...

மனசுக்குள் ஒருகதை இருந்தது.. ஆரம்பமும் அதே மாதிரித்தான் இருந்தது.. ஆனா எப்போ காருக்குள்ள குழந்தை இருந்ததோ அப்பத்தான் நிமிர்த்து உக்காந்தேன்.. டைரக்டர் மேல ஒரு மரியாத வந்தது..

மவனே அதுக்கப்புறம் சும்மா வளச்சு வளச்சு தூங்க வெச்சுட்டானுங்க...

குழந்தை பருவத்தை தொலைத்த முன்னாள்” குழந்தையிடம் இந்நாள் குழந்தை மாட்டிக்கொண்டு அதன் பின் நாமும் அந்தக் குழந்தையும் படும் அவஸ்தை படம்.

அமீர்பாய் பாக்குறாதுக்கு நந்தா சூர்யா மாதிரி இருக்காரு.. நல்ல கதையில கலக்குங்க.

ஸ்னேகன் எனக்கு புடிக்கலீங்க.. ஹீரோயின் .. யாரும் இமேஜ் பார்த்து செய்யத் தயங்கும் வேடம்.. நன்று..

அந்தக் குழந்தைதான் டாப்பு படத்துல..

ஒளிப்பதிவு சூப்பர்.. பின்னணி இசைன்ற பேர்ல ஒரே வயலின் பீட் கடைசி வரைக்கும்.. “புடிச்ச” பாட்டையே புடிக்காத பாட்டா ஆக்கிட்டாய்ங்கடா சாமீ...

சு.சிவா அவர்களே.. இங்க்லிபிஸ் படமோ எந்த அடாசு படமோ.. சுடுங்க.. சுட்டபின் எங்களுக்கு புரியுற மாதிரி எடுங்க.. better luck next time

(அ)-யோகி :-) (போச்சே.. போச்சே.. எங்கைக்காசு போச்சே...)

May 01, 2009

பசங்க- - லாப நஷ்ட கணக்கு !!


பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...


பசங்க- - லாப நஷ்ட கணக்கு

மேட்டர்------------------------------ரூ

நடிச்ச வாண்டுகளுக்காக-----------20
படத்தில் இருந்த உயிருக்காக-----10
தைரியமான தயாரிப்புக்கு----------10
கதைக் களத்திற்க்கு-----------------15
சூப்பர் பன்ச்களுக்காக --- ----------10

----------------------------------------------------------
மொத்தம்-----------------------------65
-----------------------------------------------------------


படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ.55...
கணக்கு பார்த்தா லாபம் தான்னுதெரியுது.

எப்பவும் காதல் இல்லாட்டி சண்ட கதைய பாத்து பாத்து பொர் அடிச்சி போன நம்ப
ஜனங்களுக்கு இந்த படம் ஒரு வரம் தான்....படத்தோட கதைய சொல்றது நமக்கு புடிக்காது... 
போட்ட காசுக்கு படம் பரம திருப்தி..அதுக்கு காரணமான விஷயங்கள் இங்கே...

ஃப்ரெஷ்ஷான தமிழ் வசனங்கள் சூப்பர்.. (அத என்னமா இங்லீசுல சொன்னே பாத்தீங்களா???)
திட்றதுக்கு கூட புதிய வார்த்தைகளை பயன்படுத்தி
இருக்காங்க...உதாரணத்துக்கு வாத்தியார் , பசங்கள கெளவன் பொண்டாட்டி,கெளவி புருஷன்னு கூப்புட்றது... (இது ஒரு சோறுதான்....)


காதல் இல்லாம ஒரு படம் இருக்குமா பாஸூ ?? இந்த படத்துல வரும் காதலும் இயல்பா இருக்கு..

சின்னப் பசங்க சண்டய மட்டும் காட்டாம... சிலபல மெசேஜ்கள் ஆங்காங்கே.. பளிச்...

படம் தொடக்கத்துலெயும் ..முடியும் போதும் வரும் பஞ்ச் ... அருமை... பக்கோடா நறுக்...

அந்த புஜ்ஜிக்குட்டியும் ,ரெண்டு வயசு வாண்டும்..யப்பா.... இந்தியா ஒளிர்கிறது..

பாடல்கள் சுமார்தான்... எடிட்டிங்,ஒளிப்பதிவு உழைப்பு தெரியுது...

டைரக்டர் பாண்டியராஜ்,தயாரிப்பாளர் சசிக்குமார்...தமிழ் சினிமா 150 வயது ஆனாலும் நினைவில் கொள்ளும்...

ரொம்ப நாள் கழித்து ஒரு படத்துக்கு முதல்லேர்ந்து முடிவு வரை claps....

பசங்க -- >’செம’ங்க !!



April 08, 2009

அயன் - லாப நஷ்ட கணக்கு!!






மேட்டர்----------------------------------ரூ
சூர்யாவிற்க்கு - - - ----------------------10
படத்தில் தெரியும் ரிச்னஸிற்க்கு-----10
புது ஐடியாக்களுக்கு --------------------15
கதைக் களத்திற்க்கு--------------------10
-----------------------------------------------------------------------
மொத்தம்---------------------------------45
-----------------------------------------------------------------------
 
                                  படம் பார்க்க நான் செலவளிச்சது  ரூ50... கணக்கு பார்த்தா லைட்டா நஷ்டம் மாதிரித்தான் தெரியுது.. நஷ்டம் கொஞ்சம்தாங்கோ.. அதுக்காக ரொம்ப மொக்கையோன்னு நெனச்சுக்காதீங்க...

இந்த மாதிரி விமர்சனங்களில் படத்தின் கதையை  சொல்வது எனக்குப் பிடிக்காது.. நான் போட்ட காசுக்கு படம் என்ன எந்த அளவுக்கு திருப்தி படுத்தி இருக்குன்னு பார்ப்பேன்..

சூர்யா.. சிக்ஸ் பாக் உடம்பென்ன.. ஏர்போட்டில் பீட்டர் விடுவதும்.. வெளியில் வந்ததும் “அய்யே”ன்னு கலாய்ப்பதும்-- ஒரிஜினல் “அயன்”ஆக நிற்கிறார்...

தமன்ணா..தியேட்டரில்  ஜொள்ளு விட உதவினாலும்.. நடிப்புன்றது சுத்தமா வரல.. அவருடைய கோபம் காதல்.. எல்லாமே படு செயற்கை...

நண்டு இனிமே ஒரு ரவுண்டு வருவார்... (இவருக்குள்ள என்னமோஇருந்துருக்கு பாரேன்.!!)பிரபுவும் சூப்பர்..

ஏதோ ஷங்கர் படத்துக்கு வந்த ஒரு ஃபிலிங்.. அவ்ளோ ரிச்னஸ் படத்துல.. பல நாடுகளுக்கு பயணம் செய்தாலும் கதையோட போவதால நம்மால் ரசிக்கமுடிகிறது..

என்னைப் போன்ற அரைவேக்காடுகளே கவனிக்கும் வண்ணம் ஒளிப்பதிவும்..ஆடை வடிவமைப்பும்..(நளினி ஸ்ரீராமா???)சண்டைப் பயிற்சியும் உள்ளது..(அந்த ஆப்பிரிக்கா சண்டை.. யப்பா.. சூப்பர்..)

ஏன் நஷ்டம்??

ஆங்.. இப்போதான் நியபகம் வருது.. ஏன் எனக்கு நஷ்டம்ன்னு...

1-->படத்தில் பல இடங்களில் ஒரு யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது...  பிரச்சனை காண்பிக்கப்படும்.. அடுத்த சீன்ல பிரச்சனை முடிந்துவிடும்.. இதுக்கு அப்புறம் ஏன்னு சொல்லுவாங்க... உதாரணமா.. சூர்யா ஏர்போர்ட்ல மாட்டிப்போறாறுன்னு நாம நெனக்கும்போது.. அசால்டா வெளில வந்துருவார்.. இதுக்கு அப்புறம்..அவர் எப்பிடி தப்பித்தாருன்னு சொல்லுவங்க... முதலில் இது பிடித்திருந்தாலும்.. 
படம் முழுக்க இந்த யுக்தி.. வில்லன், ஹீரோ இருக்கும் வேனை கொளுத்திவிட.. சூர்யா உயிருடன் அடுத்த சீனில்.. எப்பிடின்னு அதுக்கு அடுத்து காண்பிப்பாங்க.... இதே முறை.. கிளைமாக்ஸ் வரை.. யப்பா.. முடியலடா சாமி...

2-->இரண்டாவது காரணம்., படம் முழுதும் யூஸ் பண்ணப்பட்டுள்ள சுஜாதாதனமான ஐடியாஸ்.. முதலில் நல்லா இருந்தாலும்.. சும்மா.. நடக்குறதுகெல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா??? விட்டா... இந்த சீன்ல ஏன் இந்த ஜீன்ஸ் போட்டு வந்தேன்னு காரணம் சொல்லுவாங்க போல...

3-->மூனாவது காரணம்.. அய்யோ அந்த வில்லன்.. பொதுவா ஒரு வில்லன் என்பவர்.. எரிச்சல் ஏற்படுத்த வேண்டும். .. ஸ்கிரீன்ல பார்த்தாலே.. ஏண்டா வர்றாருன்னு தோனணும்... இந்தப் படத்துல வர்ற வில்லனைப் பார்த்தாலும் அப்பிடி தோனுது.. ஆனா ஒரு வித்தியாசம்.. மத்த படத்துல வில்லன் ஹீரோக்கு செய்யும் கொடுமைய பாத்து புடிக்காது.. ஆனா இந்தப் படத்துல இவருடைய ஓவர் ஆக்‌ஷனும்... ‘கோலங்கள்’ ஆதி டைப் டப்பிங் வாய்ஸும்.. கொடுமையின் உச்சம்டா சாமி.. 

;;;ஒரு சாரி;;;;
        நேத்து போட்ட பதிவுல கலெர் மாத்த முடியல.. ஆனா அதையும் பொருட்படுத்தாம படிச்சு பின்னூட்டம் போட்டவங்களுக்கு நன்றி.. முக்கியமா ராகவன் நைஜிரியா அண்ணனுக்கு... இந்தப் படத்தில் தேரும் ‘விழி மூடி’ பாடலை இந்த நல்ல உள்ளங்களுக்கு டெடிக்கேட் செய்கிறேன்... (இப்போலாம் டெடிக்கேட் செய்றதுதாங்கோ பேசன்... :-))


உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க... புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்......நீங்க படிச்சா மட்டும் போதும்....