Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

June 23, 2009

நீங்கள் போங்கு பதிவரா??


நீங்கள் போங்கு பதிவரா ?? கீழேயுள்ள கேள்விகளைப் படிக்கவும்

(ஆம் / இல்லை மட்டுந்தான் அலோவ்டு.. )

1 -- > எல்லோரும் பின்னூட்டம் இடுகிறோம். அதுல இது வரைக்கும் யாரோ ஒருத்தர் பண்ண தப்ப.. “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்கன்னு “ சொல்லி இருக்கீங்களா??

2--> உங்களுக்கு புடிக்காத விஷயங்களை பதிவிட்டிருந்தா புடிக்கலைன்னு பாலிஷா இல்லாம நேரடியா சொல்லி இருக்கீங்களா??


3--> உங்களுக்கு பிடித்த ஒருவரின் இடுகையை உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறீர்களா??

4--> அனானி கமெண்டுகளை மதித்து .. அதற்கு பின்னூட்டம் போட்டாக் கூட பரவாயில்லை ஆனா தனி பதிவே போடுவீர்களா??

5--> ஒன்னுமே படிக்காம
அருமை
:-)
மிக நல்ல பதிவு
கலக்குங்க etc etc...

இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவீங்களா???

6--> மெயிலில் வந்த புகைப்படங்களை நீங்க எடுத்ததுன்னு போஸ்டா போட்டு இருக்கீங்களா???

7--> வேற வேற பேர்ல உங்களுக்கு நீங்களே அனானி கமெண்ட்ஸ்.. திரட்டிகளில் ஓட்டும் போட்டு இருக்கீங்களா???

டிஸ்கி

1.2.3 க்கு இல்லை ந்னும்

4,5,6,7, ஆமான்னும் பதில் சொல்லி இருந்தா நீங்கதான் போங்கு பதிவர் ...

இது யாருக்கும் சொல்றதுக்கு இல்ல.. உங்களுக்கு நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்:-)

இவ்ளோ தூரம் வந்துப்புட்டு.. ஓட்டும் பின்னூட்டமும் போடாம போனா அதவிட பெரிய போங்கு இருக்கா??? :-)

June 10, 2009

தமிழர்ஸ் ஓனர் யாரு??

அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...

இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...

அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...

எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...




 சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்




ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,

ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)

 சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்



அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே????  இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)


 சந்தேகம் நெம்பர் மூனு -->  லோகு



நல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)

 



சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்


யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்...  (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...

 சந்தேகம் நெம்பர் 5--> kricons

இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு.. 

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..  

இவர்தான்.. இவரேதான்..


 சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா


இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...

இவர்தானோ ????






 சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி










திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்... 

திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

இள ரத்தம் வேற... இவங்கதானோ???

(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)

 சந்தேகம் நெம்பர் 8-->  ப்ரியமுடன் வஸந்த்




இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...

அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு.. 

(அண்ணா.. மாட்னீங்களா????)

 சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி








அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???

(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு )



 சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி


கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...

காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....

அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)


டிஸ்கி 

வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது.... 

உண்மையான ஓனரே...

உங்க பேர நான் மறந்து இருந்தா.....

நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)


June 08, 2009

இவ்ளோதானா தமிழ் சினிமா???


அப்பா -- எப்பவுமே திட்டணும் . இல்ல ஃப்ரெண்டா பழகுறேன்ற 
                   பேர்ல  கேனத்தனமா இருக்கனும்.



அம்மா -- கருணை உள்ளம். 




ஹீரோயின் -- கேக்கு
ஹீரோயின் ஃபாமிலி - - பேக்கு


குழந்தைங்க -- செட் ப்ராப்பர்டி
அண்ணி -வேஸ்ட் ப்ராப்பர்டி


தங்கை -  மாசமா இருந்தா ,அவ காலி.
தம்பி - ஹீரோ மாஸ்னா , இவன் காலி.





சினிமா காலேஜ் -  பாண்டி ”மடம்”
சித்தின்னா - பயங்கரமான ”மேடம்”




படத்தின் வில்லன் - ”கடைசி”ல வேலைக்கி ஆகமாட்டான்
ஹீரோவின் நண்பன் - ”கடைசி வரைக்கும்” வேலைக்கி ஆகமாட்டான்.





கிராமத்து பண்ணையார் - ஒரு நம்பியார்
கிராமத்து வாத்தியார் - புடிச்சு வெச்ச புள்ளையார்

எக்ஸ்ட்ரா 

*அண்ணன் தம்பி இருந்தா.. பிரிஞ்சேதான் ஆகணும்,
*அம்மான்னு ஒருத்தி இருந்தா கண்டிப்பா சாகணும்




*வில்லன்னா ஏமாத்தனும்.
*ஹீரோயின் டூபீஸ் -- ஏன் மாத்தனும்??

                                                இதெல்லாம் வெச்சு சும்மா குலுக்கிப் போட்டு “கொஞ்சம் பாட்டு,ஃபைட்டு”ன்னு தூவி ஒரு பாம்பே மாடல் , போட்டு எடுத்தா பின்நவீனத்துவ பக்கா “அக்மார்க் தமிழ் படம்” ரெடி.

எப்புடி நம்ம ஃபார்முலா ?? 
(இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா...)

June 07, 2009

பதிவர்கள் நல்லவர்களா??


நீங்க நல்ல பதிவரா?? கெட்ட பதிவரா?? (நாயகன் ஸ்டைல்ல படிக்கவும் ((அட நம்ம ஜே.கே. அண்ணனின் நாயகன் இல்லைப்பா..)படம் சும்மாப்பா..)

தெரிஞ்சுக்கணுமா??? அடுத்த பத்திய முழுசா படிச்சுட்டு (ஒரு முறை மட்டும்)  அதுக்கடுத்து  வரும் கேள்விக்கு விடையளிக்க...)

டெஸ்ட் ஸ்டார்ட்ஸ்... 

(மஞ்சளில் இருக்கும்வார்த்தைகளை நோட் செய்க)

 “அவன் அந்தத் தெருவில் வலப்புறம் திரும்பி, பின் செல்லும் வழியில் கொள்ளை கொள்ளும் அழகை கொல்லையில் நின்று பார்க்க.. “எந்தக் கொல்லைல போறவனோ பாத்துட்டான்னு” அவ கத்த... அவன் பதறி சிதறி ஓடினால் டி.வி.யில். ஒபாமா.. “i need CHANGE” என்று கேட்டது கலைஞர் அல்ல பக்கத்தில் 100 ரூபாய் நோட்டுடன் ஒருவன்.. கடன்காரர்களை சமாளிக்க சமோசா சாப்பிட்ட அவன் ஆஸ்பத்திரியில் நித்திரை கொள்ளும் வரை 

விடாது கருப்பு

ஓயாது அலை “

படிச்சாச்சா?? திருப்பி படிக்காதீங்க.. கேள்விக்கு போங்க..


1--> இன்னைக்கு எழுத மேட்டரே இல்லாததால நம்ம அண்ணன் ஜே.கே ரித்தீஷ் எம்.பி. அவர்களின் படத்தை மட்டும் போட்டு கைக்கு வந்ததை டைப்பி, பாருங்க மக்கான்னு நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக வந்திருக்கீக....

நீங்கதாங்க நல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு..

 (இதுக்கு ஓட்டு போட்டு அடுத்தவரை காய உட்றது உங்க இஷ்டம் :-)


May 28, 2009

அடுத்த ஐ.பி.எல். பாகிஸ்தானில்???




”2009 ல காண்டேத்துனதால இனிமே ஐ.பி.எல் கண்டிப்பா இந்தியால நடக்காது”ன்னு நரேந்திர மோட்டி... ச்செ... லலித் மோடி சொல்லிட்டாரு...

அதேசமயம் icc பாகிஸ்தான காண்டேத்திட்டதால... கண்டிப்பா நாட்டு மக்களுக்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேணும்னு தாலிபானும் முடிவு கட்ட...

so இந்த ரெண்டு காண்டானவங்களும் ஒண்ணு சேந்தா ?????

1--> பாகிஸ்தானுக்கு எல்லா டீமும் கள்ளத் தோனிலதான் போகனும்...
        (நேர் வழியே புடிக்காதுங்க அவனுங்களுக்கு...)

2-->மந்திரா பேடி புர்கா  என்னும் கருப்பு மேலங்கியோடதான் இருக்கனும்... 

3-->சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை... முழு கருப்பு உடையில  அவங்க பேய் ஆட்டம் ஆடனும்.. (இப்பிடி ஆடுனா அது பேயாட்டம்தான மக்கா??)

4-->நிகழ்ச்சி ஆரம்பிக்கும் அன்னைக்கும் முடியும் அன்னைக்கும் பீரங்கைகள் முழங்கும்... (குண்டு ஒன்னு வெச்சுருக்கேன்.. டுமீல்)

5-->ஒருஒரு சிக்ஸ் ,ஃபோருக்கும் குண்டு மழை

6-->ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..

7-->20 ரன்னுக்கு கீழ அவுட் ஆனா காலில் சுடப்படும்(எங்கே செல்லும் இந்தப் பாதை)

8-->ஒரு விக்கெட் கூட எடுக்கலனா “தண்ணி” தராம “விக்கல்” வந்தே சாகப் பணிக்கப்படும்.

9--> மெதுவாகப் போனதால கேட்ச் அ மிஸ் பண்ணா... ஓட ஓடதப்பு தப்பா சுட்டு ஒரு நொடியின் மகத்துவம் புரியவைக்கப்படும்.

10-->எவனாவது டீம் ஓனர கட்டிப் புடிச்சா கேபிள்கள் வெட்டப்படும் (அது ஆம்பிளயா இருந்தாலும் செரிதான்..) கேபிள்ன்னு சொன்னது கை காலங்க....

படிச்சுட்டு சிரிங்க..
சிரிக்க மட்டுமே...
நான் இங்கே கேலிக்குள்ளாக்கியுள்ளது ஆட்சியாளர்களை மட்டுமே...
பாவம் மக்கள் என்ன செய்வார்கள் ????
(ஓட்டும் பின்னூட்டமும் என் உற்சாக டானிக்..)



May 04, 2009

ஐ.பி.எல். போட்டிகள் ஜேப்பியார் வசம் ???...



பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...


ஐ.பி.எல். போட்டிகள் ஜேப்பியார் வசம் சென்றால் ???...

ஒரே ஐபிஎல். அட்டகாசம் எங்க பாத்தாலும்.. எக்ஸாமுக்கு கூட படிக்க முடியல.. அதனால கவர்மெண்ட் ஐ.பி.எல் ல ஸ்டிரிக்ட் ஆக்க அதை நடத்தும் பொறுப்பை திரு.ஜேப்பியார் அவர்களிடம் கொடுத்தால்...


1--> மவனே.. எந்த டீமும் யார்க்கும் கெடயாது.,. எட்டு டீமும் அண்ணனுக்குதான்.. (வட போச்சே.. )

2--> மேட்ச் எல்லாம் சத்தியபாமா காலேஜ் கிரவுண்டில்தான் நடக்கும்.. (அதானே பாத்தேன்...)

3--> வீரர்கள் செல் ஃபோன் வெச்சுக்கக் கூடாது... அப்பிடி வெச்சுருந்தா ஆபிஸ் ரூமில் வெயிட் பண்ணனும்.. (இது சிவாஜி ஸ்டைல் ஆபிஸ் ரூமுங்கோ..)

4--> டீம் கோச் மட்டும் ஃபோன் வெச்சுக்கலாம்.. ஆனா முழுசா பொண்ணுங்க நெம்பர் இல்லன்னு செக் பண்ணி தெரிஞ்சுதக்கு அப்புறம்தான் ஃபோன் தரப்படும்... (லோகு மாதிரி ஆம்பிள பேர்ல ஸ்டோர் பண்ணி வெச்சுருந்தா மகனே கண்டம்தான்.. ஃபோனும். ஆளும்...)

5--> யாராக இருந்தாலும் கிரவுண்டுக்கு சத்தியபாமா பஸ்ஸில்தான் வரணும்.. அது அந்த கிரவுண்டுக்கு புல்லு புடுங்குறவனா  இருந்தாலும் செரிதான்.. பால் பொருக்கி போடுறவனா இருந்தாலும் செரிதான்..(ரூல்ஸ் ஸ் அ ரூல்ஸ் ஸ் அ ரூல்ஸ் ரூல்ஸ் ரூல்ஸ்..)

6--> வீரர்கள் ஃபுல் ஃபார்மில் இருக்குறாங்களோ இல்லயோ.. ஃபுல் ஃபார்மல்ஸில் (நம்ம சக்கர தல போல) ஆஜராகனும் மேட்சுக்கு ... (டக் இன் பண்ணாதவர்கள் நம்ம SUREஷ் டாக்டர்ட சொல்லி பழைய பட பாடல்களும் கூடவே அதைப் பற்றிய மொக்கைகளும் வழங்கப்படும்..)

7-->சியர் லீடர்ஸ் ..??? (மூச்....!! வால்பையன் அப்சட்.. :-(  )

8-->ஒருவேள அடம்புடிச்சு சியர் லீடர்ஸ் வெச்சுக்கிட்டாலும்.. அவங்களுக்கும் டிரெஸ்கோட்... அவங்க கிரவுண்ட் உள்ள வர்றதுக்கும் மற்றவர்கள் வர்றதுக்கும் வேற வேற வழி... ஆம்பிளங்க பாக்கக்கூடதுல ... (டக்ள்ஸ் டி.வி.ய ஆஃப் பண்ணீருவாப்ல...)

9-->கண்ட ஹேர் ஸ்டைல் எல்லாம் கண்டிப்பா நாட் அலொவுட்.. அப்படி வர்றவங்க கண்டிப்பா டிஸ்மிஸ்.. (எண்ணெய் வெச்சிதான் சீவிட்டு வரணும்..)

10-->ஒவ்வொரு மேட்சுக்கும் வீரர்கள்தான் யூனிவர்ஸிட்டிக்கு வளர்ச்சி நிதி தரணும்..  (இது நல்லா இருக்கே... )

11-> இங்கதான் தலைவரோட ஸ்ட்ரைட் பன்ஞ்...

 ஒரு மேட்சுல செரியா வெளயாடாட்டி... 
அடுத்த நாள் கண்டிப்பா அவங்க பேரண்ட்ஸோடதான் வரணும்...
 தனியா வந்தா பஸ்ல ஏத்த மாட்டாங்க.. 
(இதுக்கு அப்புறமும் எவனாவது ஐ.பிஎல் பத்தி பேசுவான் ??)

இந்தப் புனைவு யாரையும் புண்படுத்த அல்ல....

பின்னூட்டமும் , ஓட்டும் போட்டுட்டு சத்தமில்லாம போடணும்.. தெர்தா????