June 25, 2009

வயசாய்டிச்சுல்ல....????

ஒருநாள் .. 3:05 a.m.,

"அப்பா நாங்களும் தலையெடுத்தாச்சு... இதுக்கு அப்புறமும் நீங்க உழைக்கனும்னு என்ன தேவ இருக்கு ??” பஞ்சனதனைப் பார்த்து குறைத்தான் ராக்கி... ராக்கி பஞ்சனதனின் செல்ல மகன்...



“நல்லா சொல்லுப்பா... எத்தன தடவ சொன்னாலும் கேக்காம போய்கிட்டு இருக்காரு.. தெனமும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு...62 வயசாய்டிச்சுல்ல.. வீட்ல உக்காராம சும்மா....” இவ்ளோ உரிமையா திட்றது இவர் மனைவி பார்வதின்னு சொல்லனுமா என்ன???

“எனக்கு செய்யனும்னு தோணுது .. உங்களுக்கு என்ன??” என்றபடி வேலைக்கு கிளம்பினார் பஞ்சனதன்.

5:56 p.m.

உடல் சோர்வு வாட்ட.. அதை சொல்லவும் முடியாமல்.. செரி செஞ்சு முடிச்சுடுவோம் இன்னும் அரை மணி நேரம்தானேன்னு அன்றைய வேலையையும் முடித்தார் பஞ்சனதன்



ஆறு மாதம் கழித்து

காலெஜ் கட்டடித்த ராக்கியும் நண்பர்களும்... “ ஆண்டவன் ஆட்டம்” படம் பார்த்துவிட்டு வந்தனர்...

“யப்பா.. என்ன ஃபைட்டு.. செம படம்டா.. “ நண்பர்கள் குதூகலத்துடன்..

ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்ததும் தன் தந்தை “ட்விங்கிள் ஸ்டார்” ‘பஞ்சனதன் படும் வேதனையை கண்ணால் பார்த்த இவனால் குதூகலிக்க முடியுமோ???

19 comments:

Anbu said...

me the first

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா

Unknown said...

// "அப்பா நாங்களும் தலையெடுத்தாச்சு... இதுக்கு அப்புறமும் நீங்க உழைக்கனும்னு என்ன தேவ இருக்கு ??” பஞ்சனதனைப் பார்த்து குறைத்தான் ராக்கி... ராக்கி பஞ்சனதனின் செல்ல மகன்...

“நல்லா சொல்லுப்பா... எத்தன தடவ சொன்னாலும் கேக்காம போய்கிட்டு இருக்காரு.. தெனமும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு...62 வயசாய்டிச்சுல்ல.. வீட்ல உக்காராம சும்மா....” இவ்ளோ உரிமையா திட்றது இவர் மனைவி பார்வதின்னு சொல்லனுமா என்ன??? ///



மச்சி .... இந்த வரிகளை படிக்கும்போது கண்ணில் துளி நீர் சற்றே எட்டியது... !! ஏனென்றால் என் வாழ்கையில் நடந்து கொண்டிருக்கும் தற்பொழுதைய சம்பவம்... !! நான் வேலைக்கு செல்கிறேனே அப்புறம் எதுக்கு நீங்களும் போறீங்க.. ஓய்வு எடுங்கன்னு நான் எவ்வளவு கூறியும் என் அப்பா கேட்க மாட்டேன்குறார்...!! ஆனால் கடின உழைப்பாளி ... இந்திய ரயில்வேயில் இருந்து வெளியேறி தற்ப்பொழுது கொங்கன் ரயில்வேயில் பணி புரிகிறார்....!!!




அருமையான பதிவு மச்சி....!! வாழ்த்துக்கள்...!!!!

அக்னி பார்வை said...

நல்ல முயற்சி

வழிப்போக்கன் said...

சிந்திக்க வைத்துள்ளது...
வாழ்த்துகள்...
:)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சக்ஸஸ்............,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டாச்சு..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

fonts and colours போய் லிங்க் கலரை மாற்றினால் தமிழ்மண எழுத்துக்கள் நன்றாகத் தெரியும் தல..,

கருப்பு பின்புலத்திற்கு தகுந்தமாதிரி பார்த்துக் கொள்ளுங்கள் தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போட்டிக் கதையா? தல

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.. மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுவிட்டது..,

Raju said...

ரொம்ப நாள் லீவு வுட்டுட்டு வந்தாக்கா, மவனே டெம்ப்ளேட்டெல்லாம் மாத்தி ஒரே குஜலா வச்ச்சுருக்க ம..!
என்னமோ போ..!

Raju said...

ம்ம்.. ந‌டத்து..!
ஆனா,ரஜினிக்கு மகனே இல்லயேப்பா..!
:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குறிச்சொல்லில் குட்டிக்கதையாய் இருந்தாலும், தொடர்கதையய் இருந்தாலும் சிறுகதை என்று போட்டால்தான் தமிழ்மணத்தின் கீழ் பகுதியில் சற்று கூடுதல் நேரம் நிற்கும் தல..,

Unknown said...

//.. ஆனா,ரஜினிக்கு மகனே இல்லயேப்பா..!..//

:-)

ஜெட்லி... said...

நல்ல கதை.....
வாழ்த்துக்கள் கடைக்குட்டி.

VISA said...

இந்த கதையை ஒரு கருத்து கதை என்றும் ஒரு காமெடி கதை என்றும் வகை படுத்தலாம். போட்டோவோடு படித்தால் காமெடி கதை. போட்டோவை மறைத்துவிட்டு படித்தால் கருத்து கதை. மொத்ததில் சூப்பர் கதை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா சொல்லியதுக்கு ஒரு சல்யூட் தம்பி.......

லோகு said...

சூப்பர் மாப்ள..

சத்தியராஜ் யை ஏன் மாப்ள வம்புக்கு இழுக்கற..

கடைக்குட்டி said...

நன்றி அன்புக்கு ...

*********************

நன்றி லவ்டேல் மேடி ... ( உங்க உள்ளத்த ஏதோ ஒரு வகையில இந்த இடுகை தொட்டதே எழுத்தின் வெற்றிதானே... அப்பா உடம்ப பாத்துக்க சொல்லுங்க..

*********************

நன்றி அக்னி

*********************

நன்றி வழிப்போக்கா.. (நல்லா யோசி...)

*********************
நன்றி டாக்டரே.. (அன்பிற்க்கும் ஊக்கத்திற்க்கும்...)

*********************

யோவ் டக்ளசூ ஏன்யா இப்பிடி மாட்டி விடுற...
:-)
*********************

பட்டிக்காட்டான் :-)

*********************

நன்றி ஜெட்லி

*********************

நன்றி visa இந்தமொக்க முயற்சிய பிரிச்சு மேஞ்சு பாராட்னதுக்கு)

*********************
ஆஹா அருமையான வாழ்த்து அருணா.. நன்றி..

*********************

நன்றி வசந்தண்ணா... (ஜெய் ஹிந்த்)

*********************

அட போ மாப்ள. நீதான் லோகு இப்போ என்ன வம்புக்கு இழுக்குற..