June 09, 2009

கவித.. கழுத.. கவுஜ .. தொடர் பதிவு



(டிஸ்கியை கண்டிப்பாக படிக்கவும்)

பாம்பே மாடல்

தெலுங்கு வில்லன்

மலையாளப் படக் கதை

ஹிந்தி தயாரிப்பாளர்

எல்லோரும் சேர்ந்து எடுத்தனர் ---- “தமிழ்ப் படம்”


 ****************************************************************



இறைவன் இருக்கான்னு நெனச்சா

நீ - நம்பிக்க

இல்லன்னு நெனச்சா

நீ - நகுந்துக்க

இவ்ளோதான் லைஃப்ஃபு...

இதுல ஏன் மாமா ஃபைட்டு ???

*******************************************************************





ஆனந்த விகடனுக்கு எழுதினேன் கவிதை.

அதில் வரவில்லை,

அன்பே !! உனக்கென எழுதினேன் அதை,

நீ என்னைத் 

திருப்பித்-தரவில்லை

*******************************************************************






கண்டபடி இப்பிடி டைப்பிட்டேன்

ஒரு டைப்பா இருக்குற இது - என்ன டைப்புன்னு 

கண்டுபுடிக்கிற பொறுப்பை உங்ககிட்ட குடுத்துட்டேன்

********************************************************************
டிஸ்கி

(இந்தப் படைப்புக்கு (??) முதல் பின்னூட்டமிடும் பதிவர் இதைப் போன்றே ஒரு தொடர் கவுஜ (கண்டமேனிக்கி கிருக்கணும்) எழுத கேட்டுக்கொள்கிறேன்)

21 comments:

இய‌ற்கை said...

இது பின்னூட்ட‌மில்லீங்க‌..ச்ச்ச்சும்மா...

கடைக்குட்டி said...

நீங்க மாட்டுனீங்க...

எழுதிட்டு சொல்லுங்க இயற்கை :-)

h.s said...

எல்லாமே புதுசு புதுசா பன்றிங்க குட்டி

நட்புடன் ஜமால் said...

தமிழ்படமும்

டிஸ்கியும் அருமைங்கோ ...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மெய்ப்பொருள்ன்னு ஒரு தமிழ்படம் தல...


அதப் பத்தியா தல//=

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ்மணத்தில ஏன் தல சேர்க்கவில்லை எதாவது தனி காரணம் இருக்கா??

பித்தன் said...

ரூம் போட்டு யோசிபியோ ?

பிரியமுடன்.........வசந்த் said...

கடைசிப்படம் நச்

கடைக்குட்டி said...

நன்றி h.s.

நீங்க யாரு??? அடிக்கடி ஃபாலோ பண்ணி வாழ்த்துறீக???

கடைக்குட்டி said...

நன்றி ஜமாலண்ணே...

ஒருநாள் நான் எழுதிய அனைத்தையும் நீங்க நல்லா இருக்குன்னு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்...

கடைக்குட்டி said...

மெய்ப்பொருள்ன்னு ஒரு தமிழ்படம் தல...
//

காண்ட கெளப்பாதீங்க டாக்டரே :-)

கடைக்குட்டி said...

தமிழ்மணத்தில ஏன் தல சேர்க்கவில்லை எதாவது தனி காரணம் இருக்கா??
//

ஆமா இருக்கு.. சேக்க தெர்ல... :-)

கடைக்குட்டி said...

பித்தன் ..

:-)

கடைக்குட்டி said...

நன்றி வஸந்தண்ணோவ்...

வணங்காமுடி...! said...

\\
பாம்பே மாடல்

தெலுங்கு வில்லன்

மலையாளப் படக் கதை

ஹிந்தி தயாரிப்பாளர்

எல்லோரும் சேர்ந்து எடுத்தனர் ---- “தமிழ்ப் படம்”
\\

மிக ரசித்தேன்... கவுஜ பிரமாதம் தலைவா...

வணங்காமுடி...! said...

\
இந்தப் படைப்புக்கு (??) முதல் பின்னூட்டமிடும் பதிவர் இதைப் போன்றே ஒரு தொடர் கவுஜ (கண்டமேனிக்கி கிருக்கணும்) எழுத கேட்டுக்கொள்கிறேன்
\\

எப்படிலாம் மாட்டி உட பிளான் பண்ணுறாங்க... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ....

கடைக்குட்டி said...

ஹ ஹா.... நன்றி வணங்காமுடி அண்ணே!!!!!

பிரசன்ன குமார் said...

//இல்லன்னு நெனச்சா
நீ - நகுந்துக்க//

பிரச்சினையே கடவுள் இருக்குனு சொல்றவங்கலுக்குள்ளே தானே??

எல்லாமே நல்லா இருக்கு :))

கடைக்குட்டி said...

பிரசன்ன குமார் said...
//இல்லன்னு நெனச்சா
நீ - நகுந்துக்க//

பிரச்சினையே கடவுள் இருக்குனு சொல்றவங்கலுக்குள்ளே தானே??

எல்லாமே நல்லா இருக்கு :))
//


இல்லைங்க இத நான் என்ன நெனச்சு எழுதுனேன்னா.. ஒரு கடவுள் இருக்குன்னு சொல்றவங்க அடுத்தவங்க கடவுள் இல்லைன்னு நெனச்சா.. நீ நகுந்துக்கன்னு.. அப்போ அவங்களுக்குள்ளெயும் பிரச்சனை வராதுல்ல..

எல்லாமே புரிதலில் இருக்குங்க :-)

Anonymous said...

பன்றிங்க குட்டி/// ROFL:))
by umakrishh..

கடைக்குட்டி said...

umakrish என்ன கலாய்க்குரீங்களா ??