June 23, 2009

நீங்கள் போங்கு பதிவரா??


நீங்கள் போங்கு பதிவரா ?? கீழேயுள்ள கேள்விகளைப் படிக்கவும்

(ஆம் / இல்லை மட்டுந்தான் அலோவ்டு.. )

1 -- > எல்லோரும் பின்னூட்டம் இடுகிறோம். அதுல இது வரைக்கும் யாரோ ஒருத்தர் பண்ண தப்ப.. “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்கன்னு “ சொல்லி இருக்கீங்களா??

2--> உங்களுக்கு புடிக்காத விஷயங்களை பதிவிட்டிருந்தா புடிக்கலைன்னு பாலிஷா இல்லாம நேரடியா சொல்லி இருக்கீங்களா??


3--> உங்களுக்கு பிடித்த ஒருவரின் இடுகையை உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறீர்களா??

4--> அனானி கமெண்டுகளை மதித்து .. அதற்கு பின்னூட்டம் போட்டாக் கூட பரவாயில்லை ஆனா தனி பதிவே போடுவீர்களா??

5--> ஒன்னுமே படிக்காம
அருமை
:-)
மிக நல்ல பதிவு
கலக்குங்க etc etc...

இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவீங்களா???

6--> மெயிலில் வந்த புகைப்படங்களை நீங்க எடுத்ததுன்னு போஸ்டா போட்டு இருக்கீங்களா???

7--> வேற வேற பேர்ல உங்களுக்கு நீங்களே அனானி கமெண்ட்ஸ்.. திரட்டிகளில் ஓட்டும் போட்டு இருக்கீங்களா???

டிஸ்கி

1.2.3 க்கு இல்லை ந்னும்

4,5,6,7, ஆமான்னும் பதில் சொல்லி இருந்தா நீங்கதான் போங்கு பதிவர் ...

இது யாருக்கும் சொல்றதுக்கு இல்ல.. உங்களுக்கு நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்:-)

இவ்ளோ தூரம் வந்துப்புட்டு.. ஓட்டும் பின்னூட்டமும் போடாம போனா அதவிட பெரிய போங்கு இருக்கா??? :-)

15 comments:

கார்க்கி said...

நான் போங்கு இல்லப்பா

Suresh said...

பதிவுலக போங்கு என்று ஒரு பதிவு என் டிராப்டிலிருக்கு ;)

உன் நல்ல பதிவு .. நான் போங்கு இல்லை

Suresh said...

உன் டிம்பிளேட் நல்லா இருக்கு :-)

வால்பையன் said...

ஓ இதுக்கு பேர் தான் போங்கா!

ஜெட்லி said...

என்னது போங்கு பதிவரா.....
ஒரு வேலை நானா இருப்பனோ?

டிம்பிளேட் மாத்தி கலக்குற போ....

பித்தன் said...

post titile ubayam by Sakkarai ?

மயாதி said...

எங்களைப் பற்றி பற்றி இப்படி வெளிப்படையாக சொல்வதை பேக்கு சபை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

வழிப்போக்கன் said...

அருமை:-)மிக நல்ல பதிவுகலக்குங்க etc etc...//

இது உங்கள் பதிவுக்கு...
:)))

நசரேயன் said...

நான் போங்குதான்

பிரியமுடன்.........வசந்த் said...

போங்கல்ல

பொங்கல்

நான்

KISHORE said...

அச்சச்சோ அப்படினா நான் போங்கா ?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பேரு சூப்பர் தல..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதற்கு சுய சோதனை மாதிரி பேர் வச்சு செகண்ட் ரிலீஸ் பண்ணிடுங்க

SUMAZLA/சுமஜ்லா said...

போங்கு இல்லைனு காட்டுறதுக்காக இல்லை இந்த பின்னூட்டம்!

சந்ரு said...

எப்படி ஐயா உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடயுது .உண்மையாகவே நீங்க பொங்கு பதிவர்தான்