June 09, 2009

சூர்யா -- ஜோதிகா --> காதல் ஸீன் - 2

சரவணன் முதல் சூர்யா வரை -- 5


(50வது பதிவு)

சூர்யா - ஜோதிகா காதல் ஸீன் -- 2


சண்ட போட்டாச்சா ரெண்டு பேரும்.. அட எப்பயா??  இத படிங்க மொதல்ல....

சூர்யா ‘நந்தா’ ஷூட்டிங்க்ல இருந்த நேரம். டைரக்டர் பாலா இவரை அணுஅணுவாக மாற்றிக் கொண்டிருந்தார். ‘திமிரா நட.. மொறப்பா பாரு’ன்னு வேற ஆளா மாத்திட்டு இருந்தார்.  படமும் முடிந்தது.. ஜோவுக்கு சும்மா எஸ்.எம்.எஸ் அனுப்பவதோடு சரி அந்தக் காலகட்டத்தில். சண்டையெல்லாம் மறந்து போச்சுடோய்...

நந்தா முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதெனக் கவலை... என்ன மாதிரி படம் செய்யலாம்னு ஒரு குழப்பம்... அப்போ ஜோதிகா கிட்ட இருந்து ஃபோன்

ஜோ :- ஹாய் சூர்யா
சூர் : - சொல்லுங்க...
ஜோ:- கௌதம் ஒரு கதை வெச்சு இருக்காரு... நான் நடிக்கிறேன்.. ஹீரோ செட் ஆகல..நீங்க கதை கேட்டுட்டு சொல்லுங்க
சூர் :- ஓ.கே. :-)கதை கேட்டு இவருக்கு பிடிச்சா..  தயாரிப்பாளர் கிடைக்கவில்லை... சூர்யாவ வெச்சு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாணு தயாரிக்க... படம் வளர வளர... இந்தக் காதல் ஜோடியின் காதலும் வளர்ந்தது...
படசெலவு கைமீறிப் போக .. கடைசில கௌதம்,சூர்யா,ஜோ எல்லாரும் கொஞ்சம் கைக்காசப் போட்டு முடுச்சாங்க... படமும் வெற்றி..

சூர்யா அணுஅணுவாக ஜோவை கவனிக்க ஆரம்பிச்சது இந்தக் காலகட்டத்தில்தான்...

அம்மாவும், தங்கையும் சில சொந்தங்களை மட்டும் பார்த்து வளர்ந்த மொக்கை சூர்யாவுக்கு... வரப்போற மனைவியும் இவங்க வரிசைல இருக்கணும்னு ஒரு எண்ணம்...

ஷூட்டிங் ஸ்பாட்ல ..

சூர் :- ஏன் இவ்ளோ அவசர அவசரமா சாப்புட்றீங்க???
ஜோ :- இல்ல .. ப்ரேக் முடியறதுக்குள்ள அசிஸ்டெண்ட்ஸும் சாப்டனுமே..

சூர்யா மெதுவாக சாப்பிடுவார்.. ஒரு நாள் கூட தன் உதவியாளர்களை இப்பிடி கேட்டது கூட இல்லை.. சரி இவங்கள விடுங்க.. அம்மாவக் கூட கேட்டதில்லையேன்னு நெனக்கும் போது , அவமானமா இருந்ததாம்....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சூர்யாவின் மனசுக்குள் புகுந்தார் ஜோ.. ஆனா அவர் காட்டிக்கல.. பல நூறு முறை விலகிப் போனாலும் .. புகுந்து புறப்பட்டது காதல்..


எல்லா விஷயங்களிலும் தமிழ் கலாச்சாரம் கலந்து இருக்கும் ஒரு வீட்டில்.. மொழி தெரியாத,வேறு கலாச்சாரத்தில் பிறந்த , சம்பந்தமே இல்லாத சப்பாத்தி பொண்ணு எப்பிடி சேர்ந்தார்..??? 

வீட்டை சூர்யா எப்பிடி அனுகினார்??? எல்லாக் காதலிலுமே , அவர்கள் காதலின் ஆழத்தை , ஆழம் பார்ப்பது எதிர்ப்பு வரும் காலம்தான்.. 

அந்தக் காலம்.... அடுத்தடுத்த பதிவுகளில்....

இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...

23 comments:

வழிப்போக்கன் said...

காதல் கதை ர்ரொம்ப ஸ்வாரஷ்யமா போகுது...
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...
:)))

வால்பையன் said...

பயங்கர இண்டஸ்டிங்கா போகுதே!

Joe said...

கடைக்குட்டி கலக்குறீங்க!

Subankan said...

ஆகா, சூப்பராப் போகுது. கலக்குங்க!

malar said...

சார் ...

நல்ல கதைய தான் தேர்ந்தெடுத்து இருகாங்க்கீங்க

nice story.....
கலக்குங்க.....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//சூர்யா மெதுவாக சாப்பிடுவார்.. ஒரு நாள் கூட தன் உதவியாளர்களை இப்பிடி கேட்டது கூட இல்லை.. சரி இவங்கள விடுங்க.. அம்மாவக் கூட கேட்டதில்லையேன்னு நெனக்கும் போது , அவமானமா இருந்ததாம்....//


நார்த் இண்டியன் கல்ச்சர் சும்மா புகுந்து விளையாடுறாங்கப்பா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்லா வந்து படிங்க மக்கா..,

நாமெல்லாம் லவ் பண்ண பொண்ணு தேடிடலா,ம்

Thamizhmaangani said...

இந்த கதையெல்லாம் எப்படி தெரியுது?

anyway, நல்லா interestingஆ போகுது பாஸ்!

டக்ளஸ்....... said...

50க்கு வாழ்த்துக்கள்.

ஆனா, ஒன்னே ஒன்னுதான் கேக்கத்தோணுது.
யோவ்..உனக்கு எப்டியா தெரியும் இதெல்லாம்...?

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள்

h.s said...

super pa kutti

வணங்காமுடி...! said...

அது எப்படிங்க வேற எங்கயும் படிக்காத, புது புது விஷயங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு? பதிவு அட்டகாசம். தொடர காத்திருக்கிறோம்.

கடைக்குட்டி said...

வழிப்போக்கா நன்றி :-)

கடைக்குட்டி said...

வால்பையன்

அவ்ளோ இண்ட்ரெஸ்டாவா போகுது :-)

கடைக்குட்டி said...

நன்றி joe :-)

கடைக்குட்டி said...

நன்றி subhankan :-)

கடைக்குட்டி said...

நல்ல கதையா ???

நன்றி மலர் :-)

கடைக்குட்டி said...

//நாமெல்லாம் லவ் பண்ண பொண்ணு தேடிடலா,ம்
//

ஹா ஹா டாக்டரே உங்க பார்வையே வித்தியாசம இருக்கே :-)

கடைக்குட்டி said...

Thamizhmaangani said...
anyway, நல்லா interestingஆ போகுது பாஸ்!

//

அதுதாங்க வேணும் ;-)

கடைக்குட்டி said...

//டக்ளஸ்
50க்கு வாழ்த்துக்கள்.
//

நன்றி தல :-)

//யோவ்..உனக்கு எப்டியா தெரியும் இதெல்லாம்...?
//

அத நான் எப்பவோ சொல்லிட்டேனே :-)

கடைக்குட்டி said...

அக்னி

நன்றி :-)

****************

hs

நன்றி

கடைக்குட்டி said...

//அது எப்படிங்க வேற எங்கயும் படிக்காத, புது புது விஷயங்கள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு? பதிவு அட்டகாசம். தொடர காத்திருக்கிறோம்.
//

நன்றி வணங்காமுடியண்ணே... :-)

திவ்யாஹரி said...

nice one..