June 10, 2009

தமிழர்ஸ் ஓனர் யாரு??

அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...

இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...

அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...

எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...
 சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்
ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,

ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)

 சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே????  இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)


 சந்தேகம் நெம்பர் மூனு -->  லோகுநல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)

 சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்


யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்...  (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...

 சந்தேகம் நெம்பர் 5--> kricons

இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு.. 

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..  

இவர்தான்.. இவரேதான்..


 சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா


இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...

இவர்தானோ ????


 சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி


திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்... 

திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

இள ரத்தம் வேற... இவங்கதானோ???

(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)

 சந்தேகம் நெம்பர் 8-->  ப்ரியமுடன் வஸந்த்
இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...

அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு.. 

(அண்ணா.. மாட்னீங்களா????)

 சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி
அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???

(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு ) சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி


கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...

காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....

அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)


டிஸ்கி 

வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது.... 

உண்மையான ஓனரே...

உங்க பேர நான் மறந்து இருந்தா.....

நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)


69 comments:

வால்பையன் said...

எனக்கும் மேலே இருப்பதில் ரெண்டு பேர் மேல சந்தேகம் இருக்கு!

சி.பி.ஐ. விசாரணைக்கு சொல்லிறலாமா!

இராகவன் நைஜிரியா said...

இவ்வளவு சந்தேகங்களை கிளப்பிவிட்டுவிட்டு தமிழர்ஸில் இந்த இடுகையை இணைக்காமல் இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழிஷ் ஓனர், தமிழர்ஸ் ஓனர்... எந்த திரட்டி வந்தாலும், மாட்டுகின்ற ஆளில் நானும் ஒருத்தனா ஆகிட்டேம்பா...

நடக்கட்டும்..

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

எனக்கும் மேலே இருப்பதில் ரெண்டு பேர் மேல சந்தேகம் இருக்கு!

சி.பி.ஐ. விசாரணைக்கு சொல்லிறலாமா! /

சொல்லிவிடலாமே...

இராகவன் நைஜிரியா said...

// அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...//

இதுலேயும் பங்குப் போட ஆரம்பிச்சுட்டீங்களா...

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ் //

மருத்துவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு //

பதிவுதானே எழுத ஆரம்பிச்சாரு... அதை போய் வில்லங்கம் பண்றீங்க...

இராகவன் நைஜிரியா said...

// நல்லா எழுதிட்டு இருந்த பையன்... //

நல்லாத்தான் லவ் பண்ணிகிட்டு இருந்தான்.. திடீரென கல்யாணம் பண்ணிகிட்டான்னு சொல்ற மாதிரி இருக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

//
சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்

யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... //

புலி, சிங்கம், கரடி, இப்படி எது வேண்டுமானாலும் இவருக்கு கொடுக்கலாம்.. அவ்வளவு விசயங்கள் இவரிடம் இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா
இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்... //

இதெல்லாம் தேவையற்ற சந்தேகம். நீங்க தமிழ்நாடு போலிஸில் வேலைப் பார்க்க வேண்டியவர்.

கடைசில என்னை தாத்தாவாக்கிட்டீங்க...

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி

திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்...
திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

டெம்ப்ளேட் மாற்றுவது எல்லாம் திரட்டி ஆரம்பிக்க காரணமா? என்னமோ சொல்றீங்க...

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் 8--> ப்ரியமுடன் வஸந்த்


[Photo]

இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...
அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்.. //

சந்தேகம் என்னமோ ரொம்ப நல்லாத்தான் இருக்கு... அவர் ஓனரா இருந்தா அவர் பேரை போட்டுகிட மாட்டார்... அவருக்கு வேண்டப் பட்டவங்கத்தான் யாரோ இருக்காங்கன்னு நான் நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி

அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. //

அடிக்கடி காணாமல் போகின்றவர்களால், திரட்டி ஆரம்பிக்க இயலாது...

இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி

[Photo]
கம்ப்யூட்டர் எஞ்சினியர்.
புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...
காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்.... //

100% சந்தேகமில்லாம இவர்தான்....

டக்ளஸ்....... said...

கடைசி போட்டோவுல, பக்கத்துல கூட நிக்கிறவங்களோட படத்தை மறைச்சுட்டு சின்னப்புள்ள படத்த போட்ருக்கியா..!
ஒருவேளை அவருதான் ஓனரா..?
ஓனர்ன்னா ஓரமா போக வேண்டியாதுதான..? ஏன் பொளந்துக்கிட்டு போற..?

டக்ளஸ்....... said...

எனக்கு வாலு மேலதான் டவுட்டு..
:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆஹா.....,, முதல் இடத்தில் நம்ம படம்..............


ஓ. இது சந்தேக கேஸ்ல புக் பன்னின ஆட்களா...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நான் கம்ப்யூட்டரை தொட்டுப் பார்த்தே ஒரு வருஷம் ஆகுது.

டெக்னிக் ஐட்டம்லாம் ப்ளாக்கர்கள் மூலமாதான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ் //

மருத்துவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்...//


நன்றி ஐயா..,

Suresh said...

ஹா ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன் நண்பா இது செம காமெடி..

சரி நக்கல்

Suresh said...

@ டாக்டர் சுரேஷ்

பாவம்ய்யா பார்க்கவே அப்பாவியா ஒரு லுக் விடுறாரு..

@ சுரேஷ்

எதோ பொண்டாடி ஊரில் இல்லைனு எழுத வந்தது குத்தமா ஹீ ஹீ

Suresh said...

@ இராகவன் நைஜிரியா

சரி கும்மி தலைவா பின்னி எடுத்துடிங்க ஹீ ஹீ அவர் பதிவும் சரி, உங்க பின்னூட்டமும் சரி சும்மா சரி ஜாலி

Suresh said...

இப்போ என்ன சொல்லவர நான் பால் வடிகின்ற முகம்னு ஒரு போஸ் வேற

@ வாலு

/எனக்கும் மேலே இருப்பதில் ரெண்டு பேர் மேல சந்தேகம் இருக்கு!

சி.பி.ஐ. விசாரணைக்கு சொல்லிறலாமா//

ஹீ ஹீ சொல்லிடலாம்..

வணங்காமுடி...! said...

அய்யய்யோ.. சத்தியமா அது நான் இல்லீங்க்ணா...

\\இராகவன் நைஜிரியா said..
அடிக்கடி காணாமல் போகின்றவர்களால், திரட்டி ஆரம்பிக்க இயலாது..\\

உண்மையான வார்த்தைகள்...

எனக்கென்னவோ, அந்த கடைசி ஆள் தான் என்று தோன்றுகிறது... :-)))

இருந்தாலும், உங்கள் வலைப்பூவில் எனது போடோ பார்த்ததும் ஒரு சந்தோஷம் குப்பென்று நெஞ்சை அடைத்தது உண்மை தான்.... நன்றி கடைக்குட்டி.. உங்களால் இன்னும் பலர் என் வலைப்பூ-வை பார்க்கக்கூடும்... இனிமேலாவது காணாமல் போகாமல் தொடர்ந்து எழுத முயல்கிறேன்....

Subankan said...

எனக்கு மூணு பேர் மேல சந்தேகம்.

தமிழ்நெஞ்சம் - ஏற்கனவே தமிழிஷ் ஓனர் இவர்தான்னு ரொம்பப்பேர் கன்பாம் பண்ணிட்டாங்க. பேர் வேற ஒரே மாதிரி இருக்கு. வேற என்ன வேணும்?.

சக்கரை - திரட்டி ஆரம்பிப்பது எப்படீன்னு பதிவு போடப் போறதா மிரட்டறாரு . கோடிங் தல வேற என்ன வேணும்?

மூணாவது - ஒருவேளை அது நானா இருக்குமோ?

//so மொத்தத்தில்.....//

மீ த தாப்பத்தியெட்டு!!!

Rajesh said...

oru koottamae vettiya irukku pola.. hehe.. idhula naan vere "pinnudangal" ezhudittirukkeen.. appo naan evvalavu vetti.. hehe

சித்து said...

பரவா இல்லையே பெரிய தலைங்க இருக்குற இம்மாம் பெரிய லிஸ்டுல நம்ம பேரும் இருக்கே, அட பொகைப்படம் வேற?? யாரும் டென்ஷன் ஆகாதீங்க காரி துப்பிடாதீங்க.

தம்பி கடைக்குட்டி ஏன் இப்படியெல்லாம் உனக்கு மட்டும் தோனுது?? ரூம் போட்டு யோசிப்பியோ?? நானே நம்ம லோகு பயல பாத்துதேன் ஈ அடிச்சான் காப்பி அடிச்சேன். நமக்கு அதுக்கே நாக்கு தள்ளுது. இதுல ஒரு திரட்டி வேற ஆரம்பிக்கறதா??

ஆனா இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்ன பாத்து இள ரத்தம்னு சொல்லிபுட்டியே . (வேண்டாம் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம் :) :) :) )

தமிழ்நெஞ்சம் said...

அண்ணே. வணக்கம். நான் ஒரு தனி ஆள். இன்னும் தோப்பு ஆகனும்னா கூட்டம் சேர்க்கனும். தோப்பு ஆகலாமான்னு ஆசைப்படுறேன்.. இங்கே பார்த்தா - என் பேர் மட்டுமில்லை - பல பேர்களை மையமாக வைத்து ஒரு புயலே அடிச்சிக்கிட்டு இருக்கு.. எ.கொ.சா. இது?

நெல்லை தமிழ் மோகன் சொன்னார் - அவர்தான் தமிழர்ஸை அறிமுகம் செய்தார். சரி. அவர் சொன்னாரேன்னு இங்கே அப்பப்போ பதிவுகளை சேர்த்துக்கொண்டிருப்பேன். ட்ராஃபிக் பற்றிக் கவலையின்றி.

திடீர்னு நம்ம பேரையும் உள்ளே இழுத்திட்டீங்க.. ஆகா... எனக்கு இன்னும் ஒரு பெரிய டவுட் என்னன்னா - கிளுக்கு அப்படிங்கரவர் தமிழிஷில் நான் எப்போ குண்டக்கமண்டக்க் கமெண்ட் போட்டாலும், உடனே ரெஸ்பான்சுவார். அவர்தான் தமிழிஷ் மாடரேட்டர் / ஓனரா இருப்பாரோன்னு சந்தேகம்.

தமிழ்நெஞ்சம் போலி said...

அடிக்கடி நீங்க நெல்லைத்தமிழ் மோகன் சொன்னார்... நெல்லைத்தமிழ் மோகன் சொன்னார்னு போட்டு ஏன் சார் நீங்க அவரை மாட்டுறீங்க...

அதாவது நானே பார்த்திருக்கேன். தமிழர்ஸ் ஆரம்பிச்ச போதே உங்க பதிவு மட்டும் தான் இருந்துச்சு. இதை விடுங்க ஜூஜிபி.

ஆனா நான் தமிழிஸ் ஆரம்பிச்சவும் உற்றுநோக்கிய நபர்களில் ஒருவன். அதில் நீங்க கூட பதிவுகளை இணைப்பது எப்படி என்டுல்லாம் எனக்கு விளக்கமே கொடுத்திருக்கீங்க...

இப்போ உங்களுக்கு மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். பரவாயில்லை. தமிழிசுக்கும் தமிழர்சுக்கும் நீங்க தான் ஓனர். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

திரட்டி நடத்துறவங்களுக்கு ஒரு விடயத்தை நான் சொல்லு வேண்டும். நீங்க வெளியிலே தெரிஞ்சா தப்பென்னா ஐயா இருக்கு.

பித்தன் said...

ஈரோட்டுகாரர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு -:)

உன்னோட மேல ஒரு சதவிதம் கூட சந்தேகம் இல்ல.. ஏன்னா தமிழர்ஸ் மெனுல சூரியா கதைய காணோம் -:)

நசரேயன் said...

நான் தான் அது உண்மையான ஓனர்

MoHaN said...

James Bonda!!! கூப்பிடலாமா ?:):)!

சித்து said...

கண்டிப்பாக வாங்க கடைக்குட்டி சும்மா ஜாலியா போய் வரலாம்.

பிரியமுடன்.........வசந்த் said...

நல்லாத்தான போய்ட்டுருந்துச்சு......

ஏன் இப்படி ஒரு சந்தேகம்

பிரியமுடன்.........வசந்த் said...

சந்தேகம் நெம்பர் 5--> kricons

//இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு..

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..

இவர்தான்.. இவரேதான்..

கிரிகன்ஸ்

//

பிரியமுடன்.........வசந்த் said...

visit http://www.tamilish.com/Anubavam/தமிழிஷின்_மோசடி/

comment section after u now

ஜெட்லி said...

//திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....
//

கடைக்குட்டி இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை...
FBIயில் இருக்க வேண்டியவர்.....


யாரோ யாரோ tamilers ஓனர் யாரோ......
யாரிங்கே சொல்வரோ ........
அது கடைக்குட்டி தான்நு நினைக்கறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

///ஈரோட்டுகாரர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு -:)///

அது யாருங்க எங்க ஊர்காரர்?

ராகவன் சார் மாங்கு மாங்குனு இவ்வளவு பதிவு போட்டிருக்கும் போதே தெரியுது, யார் ஓனர்னு?

நான் சொல்கிறேன் விடை:

தமிழர்ஸ் யாரு: நாம தாங்க!
தமிழர்ஸ் ஓனர் யாரு: நம்ம சி.எம். தாங்க!(பிளே..........டு)

வால்பையன் said...

/////ஈரோட்டுகாரர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு -:)///

அது யாருங்க எங்க ஊர்காரர்?//
ஈரோட்டில் எல்லாரும் சும்மா இருப்போர் சங்க மெம்பர்களாச்சே!

அவர்களுக்கு இம்புட்டு திறமை இருக்கா!

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

கடைக்குட்டி said...

வால் பையன் சொன்னது
//
சி.பி.ஐ. விசாரணைக்கு சொல்லிறலாமா
//

கண்டிப்பா.. ஆனா நீங்க மாட்டிக்குவீங்களேன்னு பாக்குறேன் :-)

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா சொன்னது

//இவ்வளவு சந்தேகங்களை கிளப்பிவிட்டுவிட்டு தமிழர்ஸில் இந்த இடுகையை இணைக்காமல் இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
//

இது scheduled பதிவுணே.. அதான் ..

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...

// அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...//

இதுலேயும் பங்குப் போட ஆரம்பிச்சுட்டீங்களா.
//


பின்ன இல்லாமலா???

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...
// சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ் //

மருத்துவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்...
//

அப்டிலாம் விட முடியாதுண்ணே...

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு //

பதிவுதானே எழுத ஆரம்பிச்சாரு... அதை போய் வில்லங்கம் பண்றீங்க...

//

அதெல்லாம் ஒத்துக்க முடியாதுங்க...

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...
// நல்லா எழுதிட்டு இருந்த பையன்... //

நல்லாத்தான் லவ் பண்ணிகிட்டு இருந்தான்.. திடீரென கல்யாணம் பண்ணிகிட்டான்னு சொல்ற மாதிரி இருக்குங்க.//

கும்மித் தலைவா... இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது..??

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...
//
சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்

யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... //

புலி, சிங்கம், கரடி, இப்படி எது வேண்டுமானாலும் இவருக்கு கொடுக்கலாம்.. அவ்வளவு விசயங்கள் இவரிடம் இருக்கு.
..//

ஆமாமா.. :-)

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா said...
// சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா
இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்... //

கடைசில என்னை தாத்தாவாக்கிட்டீங்க...
..//

உண்மைய சொன்னா கோவத்த பாரு :-)

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா
//
100% சந்தேகமில்லாம இவர்தான்....

//

அட நானா??? எல்லாரும் பாருங்க நானும் ரௌடி ரௌடி ரௌடி...

கடைக்குட்டி said...

டக்ளஸ்....... said...
//
கடைசி போட்டோவுல, பக்கத்துல கூட நிக்கிறவங்களோட படத்தை மறைச்சுட்டு சின்னப்புள்ள படத்த போட்ருக்கியா..!
ஒருவேளை அவருதான் ஓனரா..?

//

உனக்கு இருக்குறது கண் இல்ல .. GUN

கடைக்குட்டி said...

டக்ளஸ்....... said...
//
எனக்கு வாலு மேலதான் டவுட்டு..
:)

//

எனக்கு உங்க மேலயே டவுட்டு வந்துருச்சு ....

கடைக்குட்டி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இராகவன் நைஜிரியா said...

// சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ் //

மருத்துவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்...//


நன்றி ஐயா.//


டாக்டர் தல... என்ன பேசி வெச்சுக்கிட்டு கும்மி அடிக்கிறாப்ல இருக்கு,,, (கண்கள் பனித்தது இதயம் இனித்தது மாதிரி ..:-)

கடைக்குட்டி said...

Suresh said...
//
ஹா ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன் நண்பா இது செம காமெடி..

சரி நக்கல்

//

இது சிரிக்க மட்டுமே :-)

கடைக்குட்டி said...

வணங்காமுடி

//இருந்தாலும், உங்கள் வலைப்பூவில் எனது போடோ பார்த்ததும் ஒரு சந்தோஷம் குப்பென்று நெஞ்சை அடைத்தது உண்மை தான்.... நன்றி கடைக்குட்டி.. உங்களால் இன்னும் பலர் என் வலைப்பூ-வை பார்க்கக்கூடும்... இனிமேலாவது காணாமல் போகாமல் தொடர்ந்து எழுத முயல்கிறேன்...//

செய்ங்க தல... :-)

கடைக்குட்டி said...

Subankan said...
//
எனக்கு மூணு பேர் மேல சந்தேகம்.
//

எனக்கு உங்க போட்டோவ உத்துப் பாத்ஹா ஒரு வேள நீங்களா இருக்குமோ???

கடைக்குட்டி said...

Rajesh said...
oru koottamae vettiya irukku pola.. hehe.. idhula naan vere "pinnudangal" ezhudittirukkeen.. appo naan evvalavu vetti.. hehe
//

ஹாஹா.. :-)

கடைக்குட்டி said...

ஆனா இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்ன பாத்து இள ரத்தம்னு சொல்லிபுட்டியே . (வேண்டாம் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம் :) :) :) )
//

கலக்குறீயளே சித்து :-)

கடைக்குட்டி said...

தோப்பு ஆகலாமான்னு ஆசைப்படுறேன்..//

இது போதுமே தமிழ் நெஞ்சம் அண்ணே...

அவரே சொல்லிட்டாரு.. வுட்ட்ருங்கப்பா...

கடைக்குட்டி said...

தமிழ்நெஞ்சம் போலி said...
அடிக்கடி நீங்க நெல்லைத்தமிழ் மோகன் சொன்னார்... நெல்லைத்தமிழ் மோகன் சொன்னார்னு போட்டு ஏன் சார் நீங்க அவரை மாட்டுறீங்க...
//

அட யாருங்க நீங்க இங்க வந்து இப்புடி கேட்டுப் புட்டீக???


//
திரட்டி நடத்துறவங்களுக்கு ஒரு விடயத்தை நான் சொல்லு வேண்டும். நீங்க வெளியிலே தெரிஞ்சா தப்பென்னா ஐயா இருக்கு//

அதானே...

கடைக்குட்டி said...

உன்னோட மேல ஒரு சதவிதம் கூட சந்தேகம் இல்ல.. ஏன்னா தமிழர்ஸ் மெனுல சூரியா கதைய காணோம் -:)
//

ஹா ஹா..

ரசித்தேன் பித்தன் ஸ்ஸார்...

கடைக்குட்டி said...

நசரேயன் said...

நான் தான் அது உண்மையான ஓனர்

//

இப்பிடி சொன்னா நாங்க நம்பிடுவோமா???

கடைக்குட்டி said...

MoHaN said...
James Bonda!!! கூப்பிடலாமா ?:):)!
//

கூப்பிடுங்கோ.. :-)

கடைக்குட்டி said...

பிரியமுடன்.........வசந்த் said...
visit http://www.tamilish.com/Anubavam/தமிழிஷின்_மோசடி/

comment section after u now//

கண்டிப்பா பாருங்க...

உங்களுக்குப் புரியும் :-)

கடைக்குட்டி said...

கடைக்குட்டி இங்க இருக்க வேண்டிய ஆள் இல்லை...
FBIயில் இருக்க வேண்டியவர்.....//

என்னவாது சொல்லி வெரட்ட பாக்குறீயளா ஜெட்லி..

நான் போக மாட்டேன் :-)

கடைக்குட்டி said...

SUMAZLA/சுமஜ்லா said...
///ஈரோட்டுகாரர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு -:)///

அது யாருங்க எங்க ஊர்காரர்?

ராகவன் சார் மாங்கு மாங்குனு இவ்வளவு பதிவு போட்டிருக்கும் போதே தெரியுது, யார் ஓனர்னு?

நான் சொல்கிறேன் விடை:

தமிழர்ஸ் யாரு: நாம தாங்க!
தமிழர்ஸ் ஓனர் யாரு: நம்ம சி.எம். தாங்க!(பிளே..........டு)
//

யப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு :-)

கடைக்குட்டி said...

அது யாருங்க எங்க ஊர்காரர்?//
ஈரோட்டில் எல்லாரும் சும்மா இருப்போர் சங்க மெம்பர்களாச்சே!

அவர்களுக்கு இம்புட்டு திறமை இருக்கா!
//

அட வாலு தல.... என்ன சொல்றது.. :-)

கடைக்குட்டி said...

இது சிரிக்க மட்டுமே...

கும்மிய அனைவருக்கும் நன்றி :-)

Anonymous said...

அப்பாடா ,..நாந்தான்னு இன்னும் கண்டுபிடிக்கலே

கடைக்குட்டி said...

சுதந்திரா மாட்டிடீங்களா???

லோகு said...

அதெல்லாம் சரி...
தமிழர்ஸ் அப்படினா என்ன???

ரெண்டு வாரம் வரலைனா ஜன கன மன பாடிட்டயே மாப்ள..