June 08, 2009

சுஜாதாவும் -- தமிழர்ஸ்.காமும்

சுஜாதா ஒரு முறை சொல்லியுள்ளார்...

“கலைஞனும் எழுத்தாளனும் ஒரு அம்பை எய்கின்றனர். அது எப்போது எப்படி அடுத்தவரைத் தாக்கும் என்பது தெரியாது...”

 கமல் என்னைக்கோ நடிச்ச நாயகன் படம் இன்னைக்கு டி.வி.ல பாக்குற 10 வயசு பையனை பாதிக்கும்..  சுஜாதாவோட நைலான் கயிறு இன்னைக்கு புதுசா படிக்கிறவங்களையும் ஏதோ ஒரு வகையில ஈர்க்கும்...

 அந்த வகையில இதுவரைக்கும் நான் எழுதுன ஏதாவது ஈர்த்ததோ அல்லது இனிமேயாவது ஒழுங்கா எழுதுடா மக்கான்னு சொல்லவோ நம்மையும் இந்த வார தமிழரா தேர்ந்தெடுத்து இருக்காங்க தமிழர்ஸ்.காம் . அப்டீன்ற செய்தி ஏதோ ஒரு ஃபீலிங்கா இருந்துச்சு..
(நம்மள மொத மொத மதிச்சு இருக்காங்களே .. அதனால)


அவங்களுக்கு நன்றி. 

இப்புடி ஒரே வார்த்தைல சொல்லாம ஒரு பத்தியாவது அவங்க பத்தி சொல்லனும்னு நெனக்கிறேன்.

ஆரம்பிச்சு 2 வாரத்துக்குள்ள நல்ல தரமான ஒரு திரட்டினு பதிவர்கள் மத்தியில பேர் எடுத்து இருக்கு.

5-8 வோட்டுக்கள் பெற்றாலே முதல் பக்கத்திற்க்கு அனுப்பி விடுகிறது.  என் நண்பர்கள் தளத்திலும் பார்வையிட்டேன்.. அவர்களுக்கு தமிழர்சால் கிடைத்த ஹிட்ஸ் நல்லாவே இருந்தது. தனிப்பட்ட முறையில் நம்ம கடைக்கும் வாடிக்கையாளர்கள சேத்ததுல அவங்களுக்கு(ம்) பங்கு உண்டு.

இப்போ அட்வைஸ்

 * நீங்களும் பிற திரட்டிகள பின் பற்றாதீர்கள்.
 * புதுசா ஏதாவது தோணுதா..??கண்டிப்ப செய்ங்க.. ஆதரிக்கவும் குட்டி முன்னேற்றவும் நாங்க இருக்கோம்.


*இதோ.. இந்த வாரத் தமிழர் மாதிரி.. இன்னும் நெறய நெறய எதிர்பாக்குறோம்.
யோசிச்சு செய்ங்க..
(பத்த வெச்சுட்டியே பரட்ட.... :-)

இந்த வார்த் தமிழர்ன்னு அவங்க போடுறதுல அவங்க சைட்டு பக்கம் மக்கள திருப்புனாலும்.. அது மூலயமா நம்ம கடைக்கும் ஆள் சேக்குறாங்க... நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களை வர வைக்கும் முயற்சி. 
* இன்னைக்குத்தான் பாத்தேன் சிறந்த வலைப்பூக்கள்ன்னு இன்னோன்னு.. இதுலயும் ரிஜிஸ்டர் பண்ணுங்க... நல்லா இருக்கு...“இம்புட்டு செய்யுறதும்..மாஞ்சு மாஞ்சு எழுதுறதும்.... ‘நல்ல இருக்குடா’ன்னு உண்மையா ரசிச்சு சொல்ற ரெண்டு வார்த்தக்குத்தான்.

அப்பிடி நெறயா ரெண்டு வார்த்தைகளைத் தரப்போற தமிழர்ஸின் இந்த முயற்சிக்கு ஒரு ஸலாம்.இப்போ என் படத்தைப் பற்றி... வலையுலகில் வந்தது முதலே முக்கால்வாசி அண்ணாச்சிகள் வயதைச் சொல்வதற்க்கு தயங்கினர்.. நாங்களும் சின்ன பையந்தான்பா சொல்லிகினாங்க.. அவங்க சின்ன பசங்கனா நாங்களாம் இன்னும் பொறக்கவே இல்லியா?? 

21 வயதே நிறம்பிய வாலிபனின் படத்தை (கடைக்குட்டியாக இருந்தாலும்)  எப்பிடி வெளியிடுவது என்றிருந்தேன். (லேடி ஃபேன்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆய்டும் யூ நோ??)

தனிப்பட்ட முறையில் யாரிடமும் வழிஞ்சு பேசாமல்.காக்கா புடிக்காமல் இவன் என்னமாவது கிறுக்கி இருப்பான்பான்னு நெனக்கிற அளவுக்கு ஒரு நண்பர்கள் கூட்டம் கெடக்குற வரைக்கும் என் முகத்தைக் காட்டக் கூடாதுன்னு நெனச்சேன்..

இப்போ நெனச்சத அடஞ்சுட்டேன்னு நெனக்குறேன்.... 

அதனால பிடியுங்கள் ”கடைக்குட்டி” அராஃபத்-ன் தரிசனம்.

22 comments:

anbudan said...

இவ்வார தமிழனுக்கு வாழ்த்துக்கள்

கார்க்கி said...

very smart dude..

வாழ்த்துகள்..

வணங்காமுடி...! said...

உளம் கனிந்த வாழ்த்துகள் கடைக்குட்டி... இன்னும் நீங்கள் உயரங்கள் தொட விழைகிறேன்

சித்து said...

வாவ் வாழ்த்துக்கள் கடைக்குட்டி சும்மா கலக்குங்க

Suresh said...

வாழ்த்துகள் கடைக்குட்டி :-)

h.s said...

super.......ரொம்ப சந்தோஷமா இருக்கு...........வாழ்த்துகள்

பித்தன் said...

ரொம்ப அழகா இருக்க...

பி.கு :: நீ சொல்ல சொன்ன மாதரியே சொல்லிட்டேன் -:)

கடைக்குட்டி said...

அன்புடன்க்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

thanks karki buddy :-)

வாழ்த்துக்கள்க்கு நன்றி

கடைக்குட்டி said...

நன்றி வணங்காமுடி ..

கடைக்குட்டி said...

நன்றி சித்து :-)

கடைக்குட்டி said...

நன்றி சக்கர...

என்னா லேட்டா வருது உங்க வாழ்த்துக்கள்...??

கடைக்குட்டி said...

அன்பிற்க்கு நன்றி h.s.

கடைக்குட்டி said...

பித்தன்..

அதுக்கு பதிலாதான் நான் நீங்க சொன்ன மாதிரியே பின்னூட்டம்போட்டேனே உங்களுக்கு..

:-)

வால்பையன் said...

வாழ்த்துக்கள் கடைக்குட்டி!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//சுஜாதா ஒரு முறை சொல்லியுள்ளார்...

“கலைஞனும் எழுத்தாளனும் ஒரு அம்பை எய்கின்றனர். அது எப்போது எப்படி அடுத்தவரைத் தாக்கும் என்பது தெரியாது...”//


எடுத்துக்காட்டு பிரமாதம்

கடைக்குட்டி said...

நன்றிங்க வால்பையன் :-)

கடைக்குட்டி said...

நன்றி தல டாக்டர்.. :-)

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் அராஃபத்

மேன்மேலும் உயர்வினிற்குச் செல்ல வாழ்த்துகள்

பதிவன் said...

வாழ்த்துகள்...படத்திலிருக்கும் உங்க போட்டோ-வ நீங்களே எடுத்த மாதிரி இருக்கு..??.

கடைக்குட்டி said...

cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் அராஃபத்

மேன்மேலும் உயர்வினிற்குச் செல்ல வாழ்த்துகள்
********************

உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

பதிவன் said...
வாழ்த்துகள்...படத்திலிருக்கும் உங்க போட்டோ-வ நீங்களே எடுத்த மாதிரி இருக்கு..??.
//

இதுக்கு முன்னாடி துப்பறியும் வேலையில் இருந்தீங்களா????

கரெக்கிட்டு தான் :-) ஒரு வருடம் முன் எடுத்தது