June 22, 2009

வேலை

”என்ன மாமா.. இப்டியே போனா பிச்சைதான் எடுக்கணும்... “  வாயில் புகையுடன் ரங்கன்...

“அய்யே மாமே.. ஒன்னும் கவல படாத..” என்றபடி பாதிப் புகையை வாங்கினான் காளி என்னும் காளிதஸ்...“இல்ல மச்சா.. பாரு ஒரு வாரமா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம்... ஏதாவது நல்ல சேதி வந்து வேல வரும்னு பாத்தா... “...

“செரி செரி .. கடிக்கிற கொசு பத்தாதுன்னு இடையில நீ வேற..”
காளி

”நம்மகிட்ட என்னடா இல்ல..?? நம்மள மாதிரி வேலக்காரன் கெடக்கிறதுக்கு அவனவன் குடுத்து வெச்சு இருக்கனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்தாக் கூட ஓடாமா கடைசி வரைக்கும் நிப்போமேடா... நமக்கு ஏன் மாமே வேலையே கெடக்க மாட்டேங்குது...???”

”--------------”

“டேய்..காளி----------------------த்தா...  இங்க பொலம்பிட்டு இருக்கேன்... அங்க என்னத்தடா பண்ற...” ரங்கன் டென்சனாய்ட்டான்...

”டோப்படிச்சு எவ்ளோ நாளாய்டுச்சு... நாயே சாவடிக்காத நீ வேற...” காளி பரவச நிலையை அடைந்தான்..

இதுக்கு மேல ரங்கன் பொலம்பியது அவனுக்கு கேட்க வில்லை...  ரங்கனுக்கு இந்தப் பழக்கமில்லை.. ஆனால் காளி வழக்கத்துக்கு மாறாக கண்டமேனிக்கி பரவச நிலையில் இருந்ததை ரங்கன் உணர்ந்தான்.. 

‘நாம வாய் விட்டு பொலம்பிட்றோம்.. அவன் புண் பட்ட மனச இப்பிடி ஆத்திக்கிறான் போலன்னு.. எப்போ தூங்குனான்னு தெரியாமலெயே துங்கிட்டான்..

கதைக்கு சுபமான முடிவு வேனுமில்ல???

அடுத்த நாள்

                      ரங்கனுக்கு வேலை கிடைத்தது :-)

டிஸ்கி :-

நெம்ப நாளா பொணமே கெடக்காம இருந்த “வெட்டியான்” ரெங்கன் நண்பன் காளியின் உடலை புதைக்கும் பணியில் இருந்தான் .

18 comments:

கடைக்குட்டி said...

ரொம்ப நாள் கழிச்சு போட்டிருக்கும் இடுகை..

பழைய முறையில் சேர்த்தால்.. ஓட்டுப் பட்டை தெரிய மாட்டேங்குது..

யாராவது ஹெல்ப்புங்கோ

லோகு said...

கதை அருமை மாப்ள..வாழ்த்துக்கள்..
எதிர்ப்பார்க்காத முடிவு..

லோகு said...

டெம்ப்ளட் மாத்தினதால அப்படி ஆகி இருக்கும்..

For Tamilmanam : http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

For Tamilish: http://blog.tamilish.com/pakkam/7

கடைக்குட்டி said...

data:post.body க்கு அப்புறம் சேத்தாலும் பிரச்சனை பண்ணுது.. ஒன்னு தெரிய மாட்டேங்குது..

லோகு said...

தமிழ் மனம், தமிழிஸ் ரெண்டுமே வர மாட்டேங்குதா....

அப்படினா டெம்ப்ளட் மாத்தி பாக்கலாம்.. எதுக்கும் ஒரு தடவை சக்கரை சுரேஷ் கிட்ட கேட்டு பாரு அவருக்கு தெரியும்...

sakthi said...

அருமையான கதை கடைக்குட்டி

ரசித்தேன்

நல்ல நடை...

வித்தியாசமாய்...

சித்து said...

இந்த Template நல்லாவே இல்ல, ரொம்ப டல் கலர். ஓட்டு பட்டை வேற தெரியல அதனால உடனே மாத்தலாமே. கதை நச்சுனு இருக்கு.

டக்ளஸ்....... said...

:)

பித்தன் said...

-:)

வழிப்போக்கன் said...

:)))vaalthukaL...

பிரியமுடன்.........வசந்த் said...

வேலை

கவலை

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழீஷ் ஓட்டுப் போட்டுவிட்டேன்.

இந்த வார்ப்பிலும் தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லையா..?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ்ர்ஸிலும் ஓட்டாச்சு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கதை ஒரு சிவாஜி படம்..,

Suresh said...

கதை மிக அருமை :-)

கடைக்குட்டி said...

நன்றி சக்தி அக்கா :-)

**************************

ஓக்கெ சித்து..:-)

**************************

டக்ளஸ் பித்தன் என்னதான் சொல்ல வர்றீங்க?? நல்லாஇருக்கா நல்லா இல்லையா?? :-)

கடைக்குட்டி said...

நன்றி வழிப்போக்கா...

**************************

வசந்தண்ணே.. கலக்குறியேள்..

**************************
அட போங்க தல சேக்க முடியல தமிழ் மணத்துல...

ஓட்டுக்கு நன்றி டாக்டரே:-)

கடைக்குட்டி said...

நன்றி சக்கர சுரேஸ் அவர்களே...