June 14, 2009

ஃபைனல் இயர் புராஜக்டும்.. இஞ்ஜினியரிங் பொதிகழுதைகளும்...

வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... நண்பர்களுக்கு நன்றி..

குறிப்பு சட்டகம்
1.முன்னுரை
2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???
3.எப்படி செய்ய வேண்டும்??
4.என்னதான் நடக்குது??
5.என்ன தீர்வு???
6.முடிவுரை..

1.முன்னுரை:-

சமூகத்திற்க்கு ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)



2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???

ஏழு செமஸ்டர் படிச்சு முட்டுப்புட்டு.. வெளியவரப்போற ஒவ்வொரு இஞ்ஜினியரும் தனியாவோ.. அல்லது குழுவாகவோ(2 ,3அல்லது4 நபர்கள் வரை )சேர்ந்து அவர்களுக்கு புடிச்ச பிரிவில் புராஜக்ட் செய்து காமிக்க வேண்டும் என்பது வழக்கம்.. அதுக்கு 200 மார்க் இருக்கு..

3.எப்படி செய்ய வேண்டும்??



தங்களுக்கு புடிச்ச பிரிவில்.. தெரிஞ்ச டெக்னாலஜியில் ( கம்யூட்டர் பிரிவு என்றால் .நெட் அல்லது ஜாவா..) தாங்கள் நினைத்ததை புராஜக்ட்டாக செய்து காட்ட வேண்டும்.. எந்தப் பிரிவில் புராஜக்ட் செய்கிறோமோ அந்தப் பிரிவிலேயே தங்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம்.. புடிச்ச பிரிவுல புராஜக்ட் பண்ணி.. அதே துறையில வேலக்கி போனா.. கொஞ்சமாவது வேலைக்கி ஆவற மாதிரி வேல பாக்கலாம்... கரெக்ட் தானே??? ஆனா என்ன நடக்குதுன்னு பாருங்க...


4.என்னதான் நடக்குது??

மூனு வருஷமா புராஜக்ட் பத்தி பேசாத நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் புதுசா புராஜக்ட்னு ஒன்ன பத்தி சொல்லுவாங்க...செரின்னு நாமளும் .. நம்ம கனவ புராஜக்டா செய்யலாம்னு இறங்கிடுவோம்.. (உதாரணமா.. ஆர்குட்கு போட்டியா ஒரு வெப் சைட்.. பிளக்கருக்கு போட்டியா ஒரு புது கான்செப்ட்... ஒரு புது வகையான எலக்ட்ரானிக் சிப்... மற்றும் பல பல பல... கனவுகளுக்கு ஏது எல்லை??) ஆனா ..

இங்க இறங்கும் முதல் இடி..

IEEE பேப்பர்ஸ் வெச்சுதான் புராஜக்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க... செரி அதுக்கும் ஓகேன்னு மண்டையாட்டிட்டு.. அதுக்கப்புறம் IEEE பேப்பர்ஸ்னா என்னன்னு நாமளும் தெரிஞ்சுப்போம்...

அங்க இறங்கும் இடி நம்பர் இரண்டு..

IEEE பேப்பர்ஸ் என்பது.. இப்போ.. நம்முடைய துறையில ஒரு பிரச்சைனை இருக்குன்னா.. அத எப்பெடி செரி செய்யுறதுன்னு நாலுஅறிவாளிங்க யோசன சொல்லி இருப்பாங்க... செரிடா.. யோசன தானேன்னு.. படிச்சு புரிஞ்சுக்கலாம்னா...

இடி நம்பர் த்ரீ வில் ப் வய்ட்டிங் ஃபார்யூ ...

அந்த பேப்ப்ர்ஸ நாம தனியா எடுத்து படிக்க முடியாது.. அதுக்கு கொஞ்சம் பணம் கட்டி யார் உறுப்பின ஆகுறாங்களோ அவங்க மட்டும் தான் படிக்க முடியும்.. பல காலேஜ் .. அவங்களே உறுப்பினார் ஆகி இருப்பாங்க.. நாம காலேஜ்ல இருந்தே அந்த பேப்பர்ஸ் தேடலாம்.. ஆனா எங்க காலேஜ் மாதிரி கெத்து காலேஜ்ல படிச்சா.. அதுவும் கெடயாது.. நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிடுவாங்க...
கஷ்டப்பட்டு பேப்ப்ரும் எடுத்துட்டா..

இடி நம்பர் ஃபோர்..

கண்டிப்பா ஒரு சராசரி மாணவனால படிச்சு புரிஞ்ச்சுக்க முடியாது... அவங்க எத பத்தி சொல்ல வர்றாங்கன்னு புரியுறதுக்கே ஒரு மாசம் ஆய்டும்.. ஆனா ஒரு வாரத்துல புராஜக்ட் டைட்டில் கேப்பாங்க... இந்த இடில இருந்து தப்பிக்க.. நண்பர்களோ அல்லது சி(ப)ல காலேஜில் ஆசிரியர்களோ சில புராஜக்ட் செண்டர்ஸ் அல்லது கம்பெனிகளின் அட்ரெஸ் தரப்படும்... யப்பா.. நம்ம மண்டையல உளுந்த இடியெல்லாம் போய்டுச்சுடான்னா.. அதுதான் இல்ல... அடுத்த உள்பிரிவுக்கு நீங்க போறீங்க..

4.1 புராஜக்ட் செண்டர்ஸ்:-
என்னத்த சொல்றது இவங்களப் பத்தி.. பாவப்பட்ட ஜென்மங்கள்.. நீங்க மொதமொத புராஜக்ட் செண்டர் போனீங்கன்னா.. சும்மா ராஜ மரியாத தான்... ஸார்.. நாங்க அப்பிடி பண்ணித் தருவோம்.. இப்பிடி பண்ணித்தருவோம்.. அது முடியும்.. இது முடியும்.. நீங்க என்ன கேட்டலாலும் ஓகே பண்ணிடலாம் அப்படீன்னு சொல்லுவாங்க.. நிலாவுக்கு ராக்கெட் அனுப்பணும்னு சொன்னாக்கூட... நீல் ஆம்ஸ்ட்ராங் யூச் பண்ண கோடிங் நெட்ல கெடக்கும்.. நான் அத தரேன்னு சொல்லுவாங்க..

4.2:-புராஜக்ட் செண்டர்ஸ்-- ஆரம்பம்:-
IEEE பேப்பர் தர்றதுக்கே.. ஆரம்பத்துல நாம பணம் கட்டனும்.. குறைஞ்சது 500...நாமளும்... செரிடா.. கெத்து செண்டர்ல சேந்துட்டோம்.. கலக்கப்போறோம்.. அப்படீன்னு நெனச்சுட்டு இருப்போம்.. கிளஸுக்கெல்லாம் தவராம போவோம்...

4.3:-புராஜக்ட் செண்டர்ஸ்--- முதல் நிலை:-
நம்ம காலேஜ்ல நம்ம புராஜக்ட நோண்டுறதுக்காகவே ஒரு கொஸ்டின் கோயிந்து இருப்பாரு.. அவர் நம்ம புராஜக்ட பிரிச்சு மேஞ்ச்சுட்டு.. அது தப்பு.. இது தப்பு.. இந்த புராஜக்ட் செல்லாது அப்படீன்னு சொல்லுவாரு.. இந்த கொஸ்டின்ஸ புராஜக்ட் செண்டர்ஸ்ல சொன்னா... “அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லப்பா.. சமாளிச்சுக்கலாம்” அப்படீன்னு மட்டும் சொல்லுவாங்க.. நம்ம இண்ட்ரஸ்ட் கொஞ்சமா கொறையும்...

4.4:-புராஜக்ட் செண்டர்ஸ்--- இரண்டாம் நிலை:-

ரிவியூன்னு ஒன்னு வெப்பாங்க நம்ம காலேஜ்ல... அதுக்கு டாக்குமெண்ட் கேட்டு இருப்போம் நாம புராஜக்ட் செண்டர்ஸ்ல.. தர்றோம்.. தர்றோம்ன்னு சொல்லிட்டு.. கடைசி நிமிஷத்துல ஒரு டாக்குமெண்ட் அனுப்புவாங்க.. “அடப்பாவி மக்க.. நாம பண்ணி இருந்தாலே இதவிட நல்லா பண்ணி இருப்போமே. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு”ன்னு கண்டிப்பா ஒவ்வொருத்தனும் நெனப்பான்...

4.5:-புராஜக்ட் செண்டர்ஸ்--- மூன்றாம் நிலை:-

கடைசில புராஜக்ட்ன்ற பேர்ல ஒன்னு தருவாங்க.. ஸார்.. இது இல்ல.. அது இல்லன்னு நாம சொன்னா.. இவ்ளோதாம்பா பண்ண முடியும்னு ஒரு அலட்சியமான பதில்.. முடிஞ்சா நீ பண்ணி பாக்க வேண்டுயதுதானேன்னு நம்ம தெறமய கேவல படுத்துற வார்த்த அடுத்து வரும்... செரி.. புராஜக்ட் தாங்கன்னு கேட்டா.. சுத்தமா தரமாட்டாங்க... நாம கட்ட வேண்டிய 10,000 பணத்துல ஒரு 1,000 ரூபா கட்ட வேண்டியது இருந்தாக்கூட அந்தக் காச வாங்கிட்டுத்தான் தருவாங்க.. புராஜக்ட் வாங்கிட்டு நாம ஓடிடுவோமாம்... (என்னக் கொடும ஆதவா இது??)

இதுக்கப்புரம் நாம எது மாத்த சொன்னாலும் மாத்த மாட்டாங்க.. டாக்குமெண்ட்டும் அவங்க இஷ்டமா பண்ணித் தருவாங்க... (’சோதனை மேல் சோதனை...’ அந்த மாணவர்களின் காலர் டியூன்..)

5:-என்னதான் தீர்வு???:-

பல படிகளில் மாற்றம் வரவேண்டும்
1--> காலேஜுல .. இரண்டாம் ஆண்டு முதலே புராஜக்ட் பத்தி சொல்லித் தரனும்...

2-->இப்போ இருக்குற சிலபஸ் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறத ஒத்துகிட்டு.. (என்னதான் ஜாவா , .நெட் எலக்டிவ் எடுத்து படித்தாலும்...) தனியா டெக்னாலஜி கத்துக்கணும்..ஆர்வம் இருக்கனும்...

3-->ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டுல நம்ம காலேஜுக்கு பேர் வரனும்கிறதுக்காக... IEEE பேப்பர் தான் செய்யனும்ற ரூல மாத்தனும்

4--> பசங்கள காலேஜ்ல புராஜக்ட் பண்ண வெச்சா நாம பாத்துக்கனுமேன்றதுக்கு சோம்பேறித்தனம் பட்ட்டுக்கிட்டு.. அவங்கள புராஜக்ட் செண்டர் அனுப்புற (பெரும்பாலான)விரிவுரையாளர்களின் மனப்போக்கு மாறனும்......

5-->பசங்க சிக்கிட்டாங்கன்ற ஒரே காரணத்துகாக.. கண்டதெல்லாம் சொல்லலாம்ற கண்மூடித்தனமான பேமானித்தனம் புராஜக்ட் செண்டர்ஸ்ல மாறனும்...

6-->புராஜக்ட் செண்டர்ஸ்ல தெரியாத விஷயத்த தெரியலன்னு சொல்லனும்..

தனியாக புராஜக்ட் பண்ணா அந்த மாணவனுக்கு 5,000... ரெண்டு அல்லது மூனு பேர் சேந்து பண்ணா ஒரு தலைக்கு 4,000... இதுதான் இப்போ மார்க்கெட் ரேட்....

நண்பர்களே!!!

இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்... ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்... ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க...

இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

முடிவுரை:-

இதுக்கு முடிவுரை என் பத்து விரல்கள் மட்டும் எழுத முடியாது...
அவன் செய்த மாதிரி நானும் புராஜக்ட் செண்டர் போறேன்ற பொதி கழுதைத்தனம் மாறனும்..
வேற என்னத்த சொல்ல??????

(இது ஒரு மீள் பதிவு .... )


20 comments:

Suresh said...

மீள் பதிவா :-) ஹீ ஹீ

Suresh said...

:-) அனுபவ பதிவு

SUMAZLA/சுமஜ்லா said...

//வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... //

புகழனைத்தும் இறைவனுக்கே!

எது நடந்தாலும் அவனாலேன்னு நெனச்சா நமக்கு பெருமையும் கவலையும் ஏன் ???

நீங்களும் இறைவனை மட்டுமே நினைப்பவராக இருக்க விழைகிறேன்

பதிவன் said...

உங்க வலைப்பக்க template ரொம்ப நல்லா இருக்கு, கடைக்குட்டி. நானும் வலைப்பதிவின் template-ஐ மாத்தியிருக்கேன். ஆனால், வோட்டுப் பட்டைகளை இணைப்பதில் சிரமமா இருக்கு. எப்படி பிக்ஸ் பண்ணுவது? any suggestion?. The template is transfered from wordpress, but applicable to Blogger.

அப்புறம், "இவ்வார தமிழர"னாதற்கு வாழ்த்துக்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வாழ்த்துக்கள் தம்பி....!!!!! வாழ்க வளமுடன்..!!!!


திரும்பவும் செமஸ்டர் .... ப்ராஜக்ட்...... என்ன கொடும தம்பி இது........!!! ஒரே அலர்ஜியா இருக்குது.....!!!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல எடிட்டிங் போய் அதில் Post Options கிளிக் செய்து அதில் தேதி மாற்றி விட்டால் மீள்பதிவு ரெடி/ பழைய பின்னூட்டங்கள் சேர்ந்து வந்துவிடும். தமிழ்மணத்தில் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அந்த இடுகைகளை கழட்டிவிடுவார்கள். அதனால் திரும்பவும் கொடுக்க முடியும்.


நீங்கள் தமிழ் மணத்தை கண்டு கொள்ளாமல் விடுவதால் அந்தப் பிரச்சனையும் இல்லை.

வணங்காமுடி...! said...

இப்படித் தான் தலைவா நாங்க "Ideal Browsing Centre" னு புராஜக்ட் பண்ணோம். கடைசில தான் தெரிஞ்சது, எங்க காலேஜ்-ல நெட் பிரவுசிங் பண்ண ஏதும் சென்டர் இல்லாததுனால புராஜக்ட் பேருல எங்க தலைல கட்டிட்டாங்க. ம்ஹூம்.

\\
ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்... ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க...
\\

நானும் ஒரு 5,000 இழந்தேன் தல.

வணங்காமுடி...! said...

\\
வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... நண்பர்களுக்கு நன்றி..
\\
வாழ்த்துகள் கடைக்குட்டி. நீங்கள் விரைவில் நூறு, இருநூறு என்று மைல்கல்களை கடந்து உங்கள் பயணம் தொடர விழைகிறேன்.

ஜெட்லி... said...

ஏன்ப்பா அதெல்லாம் திருப்பியும் நினைவு படுத்துற....

ஜெட்லி... said...

ஏன்ப்பா அதெல்லாம் திருப்பியும் நினைவு படுத்துற....

Subankan said...

நல்லவேளை, நம்ம நாட்டில(இலங்கை) இதுல சில விசயங்கள் இல்லை, அது மட்டுமா,

//இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்.//

இங்கே மொத்த நாட்டிலயே வருடத்துக்கு 1500 தான்.

வாழ்த்துக்கள், ஐம்பதிற்கு!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... //

வாழ்த்துக்கள் பிரதர்

ஊர்சுற்றி said...

இந்தக் கொடுமையெல்லாம் நாங்களும் அனுபவிச்சிட்டு வந்திருக்கோம்....!!! ஹிஹிஹி.. இடுகையாகத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

sakthi said...

சமூகத்திற்க்கு ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)

கண்டிப்பாக

கடைக்குட்டி said...

சக்கரை

ஆமாங்க அனுபவமே :-)

********************************

சுமஜ்லா

நன்றி

********************************

பதிவனுக்கும் நன்றி

********************************

கடைக்குட்டி said...

லவ்டேல் மேடி

ஹா ஹா.. எப்பவுமே அலர்ஜியோ ??

**************************

நன்றி டாக்டரே ...
(கேக்காமலே நெஞ்ச நக்குறீயளே... நீங்க ரொம்ப நல்லவருங்கோவ் :-)
**************************

அப்டீங்களா வணங்காமுடி..

கொடும கொடும...

உங்க வாழ்த்துக்கு நன்றி:-)

கடைக்குட்டி said...

ஹா ஹா விடுங்க ஜெட்லி :-)

**************************

சுபாங்கனுக்கு நன்றி ;-)

**************************

நன்றி வசந்தண்ணா.. :-)

கடைக்குட்டி said...

நன்றி நசரேயன் ...

**************************

ஊர்சுற்றி விடுங்க விடுங்க

**************************

நன்றி sakthi அக்கா..:-)

Saranya said...

correct-ah solirkeenga.project center kodumayavadhu paravala. enga college la naangalae sondhama staff guidance (!!!!) la project pananum.staff ku namala pidikalanalo, namma project area pathi therila naalo (mostly ipdi dhan irukum) naama gaali.daily project hr nu 3 free period vaera. adhula staff ipa vaa apo vaa nu izhuthadikara koduma irukae, project center-ae thaevalam. avanga padichitu vara solradha padikama ponaalo, ila namaku puriyala nu sonaalo juniors munadi thitu vaangi asinga padradhukum vaaipugal adhigam.
unga blog super. tamizh font la adika konjam sombaerithanama irundhudhu. adhan tanglishlayae adichutain... kepp up d gud work.