January 02, 2010

ங்ஙே!!


வாழ்க்கைல "ங்ஙே!!"ன்னு நாம முழிக்கிற தருணங்கள் ரொம்ப சங்கடமானவை...
என்ன பண்றதுன்னே தெரியாது.. ஆனா நெனச்சு பார்த்தா காமெடியா இருக்கும்.. அவற்றில் சில..

எச்சரிக்கை.. இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள்

*********

ராஜேஷ் : “மச்சி ”paa” பாக்கலட இன்னும்”
ராஜா : “இன்னும் paa பாக்கல??
ராஜேஷ் :அட ஆமாடா...
ராஜா : அட என்னடா... இங்க வா..
(”பா”ன்னு கைல எழுதுனான்.) தோ பாரு மச்சி..

ராஜேஷ் : ங்ஙே!!!

********



அந்த லாப்டாப் சரி செய்யும் அதிகாரி வேலை நிமித்தமாக ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.. அதே லாப்டாப்பை சரி செய்யுறது 4வது தடவ..
அடிக்கடி போனலும் உடனே சரி பண்ணிடுவாரு.. இந்த முறையும் சரி பண்ணியாச்சு..
அந்த வீட்ல இருந்த ஒரு பாட்டி..

பாட்டி : தம்பி
அதிகாரி : சொல்லுங்க பாட்டி
பாட்டி: அடிக்கடி என் புள்ள் தொல்ல குடுக்குறானா தம்பி..
அதிகாரி; அட பரவாயில்ல பாட்டி.. இது என் வேலதானே..
பாட்டி: இல்ல.. அது வந்து
(தன் வேலையை இன்னும் புகழப் போறாங்கன்னு நெனச்சாரு அந்த அதிகாரி..)
பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.. அத சரி செய்வியாப்பா ????

அதிகாரி : ங்ஙே!!!

(அட பிச்சைக்கு பொறந்த பிச்ச
என்னை ஏண்டா இஞ்ஞனியரிங் படிக்க வெச்ச???)

*************

50+ அரசு உயரதிகாரி அவரு..
நம்மாளு 20 வயசு சாஃப்ட்வேர் பட்டாசு..
எப்புடியாவது தான் வேல பாக்குற பகுதிய கணினிமயமாக்கிடனும்னு ராப்பகலா ஒழச்சு ஒரு சாப்ட்வேர் உருவாக்கி இருந்தான்..
அத அந்த அதிகாரி கிட்ட காட்ட போனான்,,

பையன் : ஸார்
அதிகாரி : சொல்லுங்க ...
பையன்: ஒரு விஷயம்..
அதிகாரி : சொல்லுப்பா...
பையன்: ஸார் ஒரு சாஃப்ட்வேர் செஞ்சு இருக்கேன்,, பாக்குறீங்களா??
அதிகாரி : நான் ஏற்கனவே சாப்டேன்பா...

பையன் : ங்ஙே !!

*****
வருடத்தை சிரிப்போடு ஆரம்பிப்போம்!!
சிறப்பாக வாழ்ந்து வைப்போம்.. !! :-)
அனைவருக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

21 comments:

ஸ்ரீராம். said...

ஆனாலும் நீங்க ரொம்பத் தாராளம்..எல்லோருக்கும் ஒரு வாழ்த்து சொல்லும் இந்நாளில் 2010 வாழ்த்து சொல்றீங்களே....

sarvan said...

ங்ஙே !!

பிரியமுடன்...வசந்த் said...

ஹேப்பி நியூ இயர் தம்பி

சின்னப்புள்ளையாவே இருக்கீங்க இன்னும்..!

நைஸ் ஜோக்ஸ்...

:)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.//

அதானே பாட்டி சொன்னா கேட்க மாட்டீங்க...,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.//

அதானே பாட்டி சொன்னா கேட்க மாட்டீங்க...,

பின்னோக்கி said...

வாஷிங்மெஷின் சூப்பர்.

என் அண்ணன் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்தவுடன், உறவினர்களில் பலர், தன் வீட்டு டி.வி ரிப்பேர் செய்ய முடியுமா (சாதாரண எலக்ட்ரீசியன் சரி பண்றான். நீ இஞ்சினியரிங் படிச்சுருக்க) என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

அன்புடன் மலிக்கா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடைக்குட்டி.

சிரிப்பான ஜோக்குகள் சூப்பர்..

ஹேமா said...

படம் அழகு...உங்களைப்போலவே !

அன்புடன் அருணா said...

ங்ஙே!!

ஜெட்லி said...

//ங்ஙே!!
//

யோ என்னயா இது...

கடைக்குட்டி said...

ஸ்ரீராம். said...
ஆனாலும் நீங்க ரொம்பத் தாராளம்..எல்லோருக்கும் ஒரு வாழ்த்து சொல்லும் இந்நாளில் 2010 வாழ்த்து சொல்றீங்களே....
//

ஓஹோ. வருஷ தொடக்கத்துலேயே ஆரம்பிச்சுட்றதா?? சரி சரி..

கடைக்குட்டி said...

sarvan said...
ங்ஙே !!
//

அதேதாங்க.. :-)

கடைக்குட்டி said...

பிரியமுடன்...வசந்த் said...
ஹேப்பி நியூ இயர் தம்பி

சின்னப்புள்ளையாவே இருக்கீங்க இன்னும்..!

நைஸ் ஜோக்ஸ்...

:)//

எவ்ளோ வளர்ந்தாலும் நமக்குள்ள இரூகுற கொழந்தைய தொலச்சிறக் கூடாது அண்ணே...

கடைக்குட்டி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.//

அதானே பாட்டி சொன்னா கேட்க மாட்டீங்க...,
//

ஹா ஹா தல.. வழக்கம் போல ..

கடைக்குட்டி said...

பின்னோக்கி said...
வாஷிங்மெஷின் சூப்பர்.

என் அண்ணன் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்தவுடன், உறவினர்களில் பலர், தன் வீட்டு டி.வி ரிப்பேர் செய்ய முடியுமா (சாதாரண எலக்ட்ரீசியன் சரி பண்றான். நீ இஞ்சினியரிங் படிச்சுருக்க) என்று கேட்டது நினைவுக்கு வருகிறது

//


நியாயமான பேச்சுங்க.. நம்ம மக்கள் கிட்ட அப்படி ஒரு புரிதல் இருக்கு,, :-)

கடைக்குட்டி said...

அன்புடன் மலிக்கா said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடைக்குட்டி.

சிரிப்பான ஜோக்குகள் சூப்பர்..
//

ஜோக்குன்றதே சிரிப்பானதுதானே..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. :-)

கடைக்குட்டி said...

ஹேமா said...
படம் அழகு...உங்களைப்போலவே !
//

ரிப்பீட்டு..

அதாவது..
படம் அழகு.. உங்களைப்போலவே !
(யார் கிட்ட...?? :-)

கடைக்குட்டி said...

அன்புடன் அருணா said...
ங்ஙே!!
//

அதேதாங்க.. :-)

கடைக்குட்டி said...

ஜெட்லி said...
//ங்ஙே!!
//

யோ என்னயா இது..

//

நெம்ப டென்சன் ஆவாதீங்க.. ங்ஙேன்னு ஒரு தொடர் பதிவு எழுத போறேன்.. :-)

கலையரசன் said...

கடைக்குட்டி : ஒரு பதிவு போட போறேன்..

கலையரசன் : ங்ஙே!!

கடைக்குட்டி said...

கலை.. உங்களால நான்

ங்ஙே!!!