July 13, 2009

எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்.


இது வாமனன் படத்துக்கு நான் எழுதுற லாப நஷ்ட கணக்குங்க,,,

வாமனன்.. தயவு செஞ்சு யாரும் இந்தக் கருமம் புடிச்ச படத்த “வெள்ளிப் பரிசிலோ” இல்லாட்டி.. “இந்தியத் தொலைக்காட்சிகளிலோ” போட்டாக் கூடபாக்காதீங்க..

வேணா.. அவ்ளோதான்.. பழைய படங்களின் கதை மாதிரி இருக்குன்னு சொல்ல விரும்பல.. கதையாய் சொல்லும் போது நல்லா இருக்கும் விஷயத்த திரையில் அதே அளவு தாக்கத்துடன் சொல்வதற்க்கு ஒரு தனித்திறமை வேண்டும்... டைரக்டர் அகமது ஸார்... பாடம் கத்துக்கிட்டீங்க... அடுத்த முற நல்லா பண்ண வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் காஸ்ட்லியான பாடம்,,)

எனக்கு இந்தப் படம் பாக்கும் போது கண்ணு முன்னாடி வந்தது டைரக்டரோட நெலமதான்.. மொத [படம்.. பாவம் .. இன்னும் ப்ளான் பண்ணி மெனக்கெட்டு எடுத்துறுக்கலாம்,,

சந்தானம்தான் முழு படமும் பாக்க வைக்கிறதுக்கு உதவுறாரு.. ஹீரோயின்ஸ் பத்தி கேக்காதீங்க,,, மொக்க.. நீயா நானா கோபிநாத் ஏண்டா நைனா நடிச்சன்னு கேக்குற மாதிரி அப்பப்போ வந்துட்டு போறாரு...

இந்தப் படத்துலயே சந்தானம் இந்தக் கலக்கு கலக்குறாரே... டைரக்டர் ஷங்கரோட மேஜிக்கோட இவரோட டைமிங்கும் சேந்தா,,, கலக்க வாழ்த்துக்கள் சந்தானம்..

டிஸ்கி

இந்தப் பக்கமே வரமுடியல கொஞ்ச நாளா.. என்னைத் தேடி வந்து ஏண்டா எழுதலன்னு இங்க கேட்ட |தல| டாக்டருக்கும்,,, மெயிலில் வந்த பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இனிமே அப்பப்போ வந்துட்டு போறேன்...

அன்பிற்க்கு நன்றி..

16 comments:

ஜெட்லி said...

ஏனப்பா அவளோ பிஸிஆ....
காதலில் விழுந்து விட்டாயா?

லவ்டேல் மேடி said...

நல்ல விமர்சனம்...!! " வாமணன் " படம் பாக்லாம் என்று முடிவெடுத்திருந்தேன் , என் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு என் நன்றி.....!!!!!!

வால்பையன் said...

//காதலில் விழுந்து விட்டாயா?//

அது என்ன கிணறா?

சித்து said...

என்ன கடைக்குட்டி நெம்ப பிஸிஆ?? உன்னையும் காணல அந்த லோகு பையன் வேற கதம் கதம் சொல்லிட்டான், என்னனு புரியல.

இல்லை வால்ஸ் அது ஒரு குட்டை, பாதாளம், படுகுழி.

கடைக்குட்டி said...

வெறும் கடைக்குட்டியா இருந்தா பரவாயில்ல..

இப்போ

கடைக்குட்டி B.E.,(CSE) ஆயாச்சே,, வேல தேடிக்கிட்டு இருக்கேன் பாஸூ.. அதான் அடிக்கடி மொக்க போட முடியல......

ஏதாவது opening இருந்தா சொல்லுங்க...

கடைக்குட்டி said...

இல்ல ஜெட்லி..காரணத்த சொல்லி விட்டேன்..

வீண்சந்தேகம் வேணா..

கடைக்குட்டி said...

எப்பவுமே ஜெட்லிதான் உயிர காப்பாத்துவாரு.. நான் அவரு பதிவ படிக்காம போய் செத்துட்டேன்...

எஈங்களாவது தப்பிச்சீங்களே.. நீங்க ரொம்ப லக்கி

லவ்டேல் மேடி :-)

கடைக்குட்டி said...

வாலு அண்ணே...

ஹ்க்கும்... ரொம்ப நாள் கழிச்சு வந்த தம்பிய குசலம் விசாரிக்காம காதலப் பத்தி கமெண்டா???

கடைக்குட்டி said...

அட சித்து காரணம் சொல்லியாசுல...

விடுங்க..

இந்த லோகு பயனுக்கு என்ன ஆச்சு???

நான் கண்டிப்பா ஏதாவது மொக்க போட்டுட்டுத்தான் இருப்பேன் எப்பவும்...

தொடரும் ஆதரவுக்கு நன்றி

சந்ரு said...

ரொம்பத்தான் கலக்குறிங்க தலைவா...

சப்ராஸ் அபூ பக்கர் said...

தொடர்ந்தும் விடாம எழுதுங்க.... எதிர் பார்த்துட்டு இருக்கோம்.....

sakthi said...

இந்தப் படத்துலயே சந்தானம் இந்தக் கலக்கு கலக்குறாரே... டைரக்டர் ஷங்கரோட மேஜிக்கோட இவரோட டைமிங்கும் சேந்தா,,, கலக்க வாழ்த்துக்கள் சந்தானம்..

நீங்களும் இனி தொடர்ந்து கலக்குங்குள்

கடைக்குட்டி

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எந்திரன், சந்தானம், எதுகை நல்லா இருக்கு..,

சந்தானம், வாமணன் என்னமோ ஒற்றுமை இருக்கறமாதிரித்தான் இருக்கு

நாஞ்சில் நாதம் said...

////////என் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு என் நன்றி.....!!!!!! \\\\\\

ஹா ஹா ஹா

ஜெகநாதன் said...

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதி​வைக் / பின்னூட்டத்​தைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

ஊர்சுற்றி said...

சந்தானத்தை ரொம்பதான் மெச்சிக்கிறீங்க. !!!