January 07, 2010

ஆமீரும் கமலும் ஒரு புள்ளியில்

பின்தொடரும் 75 நண்பர்களுக்கு நன்றி

ஆமிர் கான் பாலிவுட்டின் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தமிழ்நாட்டின்(கோலிவுட்னா திட்டுவாருங்க..) ஆமிர்கன்..

இரண்டில் எது சரி ?? முதலாவதுதான் சரி.. வயதாகட்டும் .. செய்யும் பாத்திரங்களாகட்டும்.. ஆமிரைவிட கமல் மேல்தான்.. இருவருன் முயற்சிகளும் பாராட்டுக்குறியன..

முதலில் கமலை எடுத்துக் கொள்வோம்..16 வயதினிலே,, சிகப்பு ரோஜாக்கள்.. வறுமையின் நிறம் சிவப்பு இந்த மாதிரி இயக்குனர்களின் படங்களில் கலக்கினாலும்... நாயகனுக்குப் பிறகு கமலுக்கு தீனி போடும் அளவுக்கு தமிழ் சினிமா உயரவில்லை..

நாயகனுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கமல்தான் கதை திரைக்கதை.. இதுவே இவருடைய தேடலுக்கு ஒரு உதாரணம்..

இந்தப் பக்கம் ஆமிர் கானை எடுத்துக் கொண்டால் க்”கயாமத் ஸே கயாமத் தக்” படத்தில் துவங்கி..பல வழக்கமான பாலிவுட் மசாலாக்களில் நடித்து வெற்றி கண்டார்.. சில தோல்விகளும்.. ஆனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டுயட் பாடுவதே வேலை.. ரங்கீலா.. மண் எல்லாமே அப்படிதான்..

கமலுக்கு நாயகன்.. ஆமிருக்கு லகான்.. ஆஸ்கர் நாமினேசன் வரை சென்றது வரலாறு.. அந்தப் புள்ளிக்கு பிறகு கமலுடையதைப் போல் இவரின் கலைதாகமும் அதிகமானது.. வழக்கமான படங்களில் நடிக்க முடியாத நிலை.. கமல் போல் தானாக கதை திரைக்கதை அமைக்கவில்லை.. (தாரே சமீன் பர் டைரக்ட் பண்ணி இருந்தாலும்..) இவர் புது டைரக்டர்களை தேடினார்.. கண்டறிந்தார்.. வெற்றி கண்டார்..

ஒவ்வொரு படமும்.. ஒவ்வொரு அனுபவம்.. ரங் தே பசந்தி டிஜேவாகவும் கலக்குறார்.. தாரெ சமீன் பரும் நடிக்கிறார்.. தில் சஹதஹேயும் தில்லாக நடிக்கிறார்.. சமீபத்தில் 3 இடியட்ஸ்..

இருவரும் தன்னை உணர்ந்து கொண்டது ஒரு படத்திற்க்கு பிறகுதான்,,. ஆனால் அதற்கு பிறகு இருவரின் முடிவும் வெவ்வேறானவை.. யோசிக்க செய்பவை.. ஹிந்தி போல் உலக அளவில் மார்க்கெட் இல்லாட்டியும்.. உலக நாயகனின் மார்கெட் பெரிதுதானே..

இருவரும் இணைவது ஒரு புள்ளியாய் இருந்தாலும்.. இருவரில் ஒருவர் முந்துவது போல தோன்றுவதற்க்கு காரணம்??

3 இட்டியட்ஸ்க்கு இம்மி அளவும் குறைந்தது இல்லை அன்பே சிவம்.. 3 இ, இளைஞர்கள்..படிப்பு.. கல்வி பற்றி மட்டுமே பேசுகிறது.. ஆனால் அன்பே சிவம் மனிதனைப் பற்றி பேசுகிறது.. மனிதத்தை பற்றி பேசுகிறது..

3இ. விட .அ.சி சிறந்தது..ஆனால் ஓடல.. ஏன்?? இந்த மதிரி இன்னும் பல படங்கள் சொல்லலாம்..

கமல் தவறும் புள்ளி.. ஆமிர் ஜெயிக்கும் புள்ளி என்று நான் கருதுவது.. கமல் படங்களில் கமல் மட்டுமே தெரிகிறார்.. அவருடைய அறிவுஜீவித்தனம் மட்டுமே தெரிகிறது.. இந்தியன் படம்போல்.. டைரக்டரின் திறனுடன் இவரின் திறன் இணைந்து இயைந்து மாயாஜாலம் புரிவதில்லை..

(அன்பே சிவத்தின் இயக்குனர் சுந்தர்.சி... தசாவதாரம் கே.எஸ்...)

ஆனால் ஆமிரின் கதை வேறு.. 3 இடியட்ஸ் படத்தில் ஆமீரின் கேள்விகள் இருந்தாலும் அவரை விட மூளையான ஒருவரின் தாக்கம் தெரியும்.. அது டைரக்டர்..

அப்போ கமல் தலையீடு ஜாஸ்தியா ?? அப்டீன்னு கேட்டா..
என் பதில்.
கமல் என்னும் யானையை கட்டித் தீனி போட தமிழ் சினிமா டைரக்டர்களே தயாராகுக.. அவருக்கு இவர் சளச்சவரில்லை என்பதை உலகுக்கு உணர்த்துக,..

டிஸ்கி:
இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?

எப்படி எழுதுனாலும் ஓட்டு சேர மாட்டேங்குதே .. ஏன்??? :-) தெரிந்தவர்காள் மெயிலவும்..

31 comments:

♠ ராஜு ♠ said...

\\டிஸ்கி:இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?
எப்படி எழுதுனாலும் ஓட்டு சேர மாட்டேங்குதே .. ஏன்??? :-) தெரிந்தவர்காள் மெயிலவும்..\\

இதெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்..?

பிரபாகர் said...

//♠ ராஜு ♠ said...
...
இதெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்..?
//

அதானே! ஓட்டு போட்டுட்டேன், கூலிங் நண்பா!

பிரபாகர்.

கடைக்குட்டி said...

தலைங்களா..

எல்லாரும் அந்த டிஸ்கிய மட்டும் வெச்சு கும்மி அடிச்சுறாதீங்க..

அது சும்மா..

பதிவை கவனிக்கவும் :-)

உடனே புண்பட்ட நெஞ்சை ஆற்றிய ராஜூ. பிராபகருக்கு நன்றி :-)

சுப தமிழினியன் said...

நானும் கமலை ரசித்தவ்ன் தான், ரசித்துக் கொண்டிருப்பவன் தான். அன்பே சிவம் பற்றி எல்லோரும் இவ்வளவு புகழும் போது, எனக்கு ஏனோ planes,trains and automobiles நினைவுக்கு வந்து தொலைக்கிறது. கமல் ரீமெக்குகளைத் தவிர்த்து, ஒரிஜினல் ஸ்க்ரிப்டுகளை நம்பி களமிறங்குவதில் தான் கமலின் கலைத்திறமைக்கும், நமது ரசணைக்கும் தீணி கிடைக்கும். கமல் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்த்து திரைக்கதைக்கும், கதைக்கும் முன்னுரிமை தருவது தான் நல்லது, அதுவரைக்கும் அமீர் ஒரு படி மேல்தான்.

சங்கர் said...

நான் ஹிந்தி படமெல்லாம் பார்த்ததில்லை, ஆனாலும் கமலுக்காக இந்த பின்னூட்டம் :))

ஜெட்லி said...

அன்பே சிவம் டைரக்டர் சுந்தர்ரா???... தசாவதாரம் டைரக்டர் கே.எஸ்.ஆர்ஆ??...........
ரெண்டுக்குமே டைரக்டர் கமல் தான்ப்பா..

T.V.Radhakrishnan said...

ஓட்டு போட்டுட்டேன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?

//
புதிதாகபடிப்பவர்கள் பழைய இடுகைகளைப் படித்துவிட்டு பின் தொடர்ந்துவிடுகிறார்கள்

லோகு said...

நல்ல அலசல் நண்பா, கமலின் அலைவரிசையில் சிந்திக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவுதான். அதுவும் இல்லாமல் கமர்சியலாக சில விசயங்களுக்கு Sacrifice செய்ய வேண்டிய கட்டாயம் இங்கே உண்டு. அங்கு உள்ள தயாரிப்பாளர்களுக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.அதே போல்ரசிகர்களும்.

லோகு said...

ஓட்டு, பின்னூட்டம் எல்லாம் கணக்கு பார்த்துட்டு இருந்தா எழுதவே முடியாது பாஸ்.. இன்னைக்கு ஆயிரக்கணக்கில் ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் கூட தொடர்ந்து எழுதித்தான் தற்போதைய நிலைக்கு வந்திருப்பாங்க. மனம் தளராமல் நிறைய எழுதுங்க.. நாங்கஇருக்கோம்..

கலையரசன் said...

என்ன சினிமா டைரக்டர் ஆக போறீங்களா???

vaitheshkanna said...

3 idiots ngrathu oru average film..solla vantha tha sollama bollywood masala la padam eduthu vechu irukkanga...etha eppadi anbe sivam kuda compare pannuringa ?

vaitheshkanna said...

//சுப தமிழினியன் said...
கமல் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்த்து திரைக்கதைக்கும், கதைக்கும் முன்னுரிமை தருவது தான் நல்லது, அதுவரைக்கும் அமீர் ///

RDB n TZP thavira story ku mukkiyathuvam kuduthu naditha aamir padangal evai ? Ghajini / Fanna / 3 idiots ?

Janu said...

@சுப தமிழினியன்

இதே கருத்தை பல பேர் முன் வைத்திருக்கிறார்கள். Planes,trains and Automobiles பார்த்து நகல் எடுத்து விட்டார் என்று. இவர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் அறிவாளிகள் ஆங்கில படங்கள் அனைத்தையும் பார்த்து விடுவோம்" என்ற ஒரு கர்வத்தை வெளிப்படுதுவதற்காகவே இந்த கருத்தை முன் வைக்கிறார்கள் என்பது என் ஆழ்ந்த சிந்தனை. அந்த ஆங்கிலப் படைப்பின் "கதை அமைப்பு அல்லது கதைக்களம் " மட்டுமே அன்பே சிவத்தில் கமல் பயன்படுத்தி உள்ளார். அன்பே சிவம் படத்திற்கு பெரிய பலம் என்று நான் கருதுவது மதன் அவர்களின் வசனங்கள். அன்பே சிவம் ஒரு நல்ல பாடம் .

ஸ்ரீராம். said...

அன்பே சிவம் சந்தேகம் இல்லாமல் நல்ல படம்.

நீங்கள் அலசி உள்ளதில் கமலின் தாக்கம் சரியான பார்வை. இதில் ஆளவந்தானை விட்டு விட்டேர்களே...

ஆனால் யாரையும் யாரோடும் ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்? அவரவர் திறமை அவரவருக்கு...

அன்புடன் மலிக்கா said...

கவலைப்படாதே சகோதரா..

நல்லவிளக்கம்.

அதுசரி அமீர்கான் [னா] ஆமீர்கான் [னா] தெரியவில்லை அதான் கேட்டேன் சும்மா..

R.Gopi said...

கமலுக்கு ஒரு கதை தயார் செய்து கொண்டு அவரை பார்க்க போகவும்...

நீங்கள் வயதில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கமலை சார் என்றுதான் கூப்பிட வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி...

கமல், அமீர்கான் இருவருமே நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வர் உடையர்வர்கள்தான்...

ஆயினும், கமல் அளவு அமீர்கான் பட வேலைகளில் நுழைந்து இம்சை செய்ய மாட்டார் என்றே தொன்றுகிறது... ஆகவே, நல்ல மர்றும் வெற்றிப்படங்கள் பின்னவருக்கு கூடுகிறது...

Tech Shankar said...

வித்தியாசமான பகிர்வு. நன்றி

கடைக்குட்டி said...

சுப தமிழினியன் said...
நானும் கமலை ரசித்தவ்ன் தான், ரசித்துக் கொண்டிருப்பவன் தான். அன்பே சிவம் பற்றி எல்லோரும் இவ்வளவு புகழும் போது, எனக்கு ஏனோ planes,trains and automobiles நினைவுக்கு வந்து தொலைக்கிறது. கமல் ரீமெக்குகளைத் தவிர்த்து, ஒரிஜினல் ஸ்க்ரிப்டுகளை நம்பி களமிறங்குவதில் தான் கமலின் கலைத்திறமைக்கும், நமது ரசணைக்கும் தீணி கிடைக்கும். கமல் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்த்து திரைக்கதைக்கும், கதைக்கும் முன்னுரிமை தருவது தான் நல்லது, அதுவரைக்கும் அமீர் ஒரு படி மேல்தான்.
//

உங்க அளவுக்கு ஒலகப் பட ஞானம் இல்லீங்க..
“நான் கடைசியா பாத்த இங்கிலீஷ் படம் ஷோலேங்க!!!

கடைக்குட்டி said...

:-)) க்கு நன்றி சங்கர்..

*************

ஹா ஹா.. ஆமா ஜெட்லி.. கரெக்ட்டு..
ஆனா பேர் அப்டித்தான் போட்டாங்க..

கடைக்குட்டி said...

நன்றி TVR :-)

கடைக்குட்டி said...

புதிதாகபடிப்பவர்கள் பழைய இடுகைகளைப் படித்துவிட்டு பின் தொடர்ந்துவிடுகிறார்கள்
//

நன்றி டாக்டரே.. சரியான புரிதல்..

நானே உங்கள அப்பிடித்தான் பிந்தொடர ஆரம்பித்தேன்..

கடைக்குட்டி said...

லோகு said...
நல்ல அலசல் நண்பா, கமலின் அலைவரிசையில் சிந்திக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவுதான். அதுவும் இல்லாமல் கமர்சியலாக சில விசயங்களுக்கு Sacrifice செய்ய வேண்டிய கட்டாயம் இங்கே உண்டு. அங்கு உள்ள தயாரிப்பாளர்களுக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.அதே போல்ரசிகர்களும்.
//

மறு பேச்சே இல்ல...

ஆமா சாமீ ஆமா...

கடைக்குட்டி said...

லோகு said...
ஓட்டு, பின்னூட்டம் எல்லாம் கணக்கு பார்த்துட்டு இருந்தா எழுதவே முடியாது பாஸ்.. இன்னைக்கு ஆயிரக்கணக்கில் ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் கூட தொடர்ந்து எழுதித்தான் தற்போதைய நிலைக்கு வந்திருப்பாங்க. மனம் தளராமல் நிறைய எழுதுங்க.. நாங்கஇருக்கோம்..
//

நன்றி நண்பா.. ச்சே.. என்ன பாசம்.. ஓரம ஒக்காந்து அழப் போறேன்..

கடைக்குட்டி said...

கலையரசன் said...
என்ன சினிமா டைரக்டர் ஆக போறீங்களா???
//

அடப் பாவீகளா.. இந்த அளவுக்கு தெரிஞ்சா டைரக்குடரு ஆயிரலாமா???

ஒரு இன்ஞினியரிங் சீட் வேஸ்ட்டு.. வட போச்சே..

கடைக்குட்டி said...

vaitheshkanna said...
3 idiots ngrathu oru average film..solla vantha tha sollama bollywood masala la padam eduthu vechu irukkanga...etha eppadi anbe sivam kuda compare pannuringa ?
//

என்னங்க சொல்றீங்க...?? அது ஆவரேஜ் படமா??

பாடம்ங்க..

IIM ல அந்தப் படத்தால செயல் முறை விளக்கப் பாடம் ஒன்னு சேத்து இருக்காங்க.. இந்தியாவின் குழந்தைகளின் தற்கொலை பற்றி சிந்திக்க வைக்கிறது...

என் சொந்த அனுபவம் சொல்றேன்..
வேலை தேடி 6 மாசம கெடைக்காம இருந்த பையன் .. இந்த படம் பார்த்ததும் தனக்கு புடிச்ச animation ல போகனும்னு course சேந்து படிக்கிறான்... இன்னும் 6 மாசத்துல தனியா கம்பெனி வெக்கப் போறான்..

கொஞ்சம் யோசிச்சு கமெண்டுங்க தலைவா!!!

கடைக்குட்டி said...

vaitheshkanna said...
//சுப தமிழினியன் said...
கமல் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்த்து திரைக்கதைக்கும், கதைக்கும் முன்னுரிமை தருவது தான் நல்லது, அதுவரைக்கும் அமீர் ///

RDB n TZP thavira story ku mukkiyathuvam kuduthu naditha aamir padangal evai ? Ghajini / Fanna / 3 idiots ?//

என்னுடைய வார்த்தைப் ப்ரயோகம் தவறாக இருக்கலாம்.. ஆனா லகான்ல கதைக்கு முக்கியத்துவம் இல்லியா?? அட என்னங்க..

ghajini.. fana .. கதை இருக்கோ இல்லியோ.. என்னன்னு நெனச்சுட்டு போனோமோ அத நிறைவேத்துது.. அது போதும்.

தயாரிப்பாளரை காயப்படுத்தும் காவியங்கள் தேவையில்லை..

கடைக்குட்டி said...

நன்றி janu

********

அன்புடன் மலிக்கா said...
கவலைப்படாதே சகோதரா..

நல்லவிளக்கம்.

அதுசரி அமீர்கான் [னா] ஆமீர்கான் [னா] தெரியவில்லை அதான் கேட்டேன் சும்மா..

//

நான் எங்கங்க கவல பட்டேன்??? பதிவ படிக்கல போல நீங்க.. :-)

கடைக்குட்டி said...

R.Gopi said...
கமலுக்கு ஒரு கதை தயார் செய்து கொண்டு அவரை பார்க்க போகவும்...

நீங்கள் வயதில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கமலை சார் என்றுதான் கூப்பிட வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி...

கமல், அமீர்கான் இருவருமே நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வர் உடையர்வர்கள்தான்...

ஆயினும், கமல் அளவு அமீர்கான் பட வேலைகளில் நுழைந்து இம்சை செய்ய மாட்டார் என்றே தொன்றுகிறது... ஆகவே, நல்ல மர்றும் வெற்றிப்படங்கள் பின்னவருக்கு கூடுகிறது...
//

ம்ம்.. கரெக்ட்டுங்க..

கரெக்டா புரிஞ்சு பின்னூட்டமிட்டு இருக்கிங்க..

ரொம்ப நன்றிங்க..

கடைக்குட்டி said...

Tech Shankar said...
வித்தியாசமான பகிர்வு. நன்றி
//

நன்றி :-)

********

ஸ்ரீராம். said...
அன்பே சிவம் சந்தேகம் இல்லாமல் நல்ல படம்.

நீங்கள் அலசி உள்ளதில் கமலின் தாக்கம் சரியான பார்வை. இதில் ஆளவந்தானை விட்டு விட்டேர்களே...

ஆனால் யாரையும் யாரோடும் ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்? அவரவர் திறமை அவரவருக்கு...

//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்.. :-)

அவரவர் திற்மை அவரவருக்கு.. :-)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in