April 30, 2009

”இதக் குடிடா சூர்யா !! “ சிவக்குமாரே சூர்யாவிடம் சொன்னது ஏன் ??


பின்னுட்டத்திற்க்கு முன்னூட்டம்
நன்றிகள் பல
இராகவன் நைஜிரியா ,,வேத்தியன்,, ஆதவா  ,, SUREஷ் ,, (வந்துட்டாரு இவரும் .. )
சரவணன் முதல் சூர்யா வரை -->2

சூர்யாவை புடிக்கும்ன்னு ஒருத்தர் சொன்னார்ன... கண்டிப்பா அவருடைய படங்களுக்காகவும்.. தன்னம்பிக்கைகாகவும்னு மட்டும் புடிக்கும்னு சொல்லமுடியாது.. 

தனி மனித ஒழுக்கமும் ஒரு முக்கியமான காரணம்...

இத ஒரு பாய்ண்ட்டா நான் இங்க சொல்லும் போது ... கண்டிப்பா சிவகுமார பத்தி சொல்லாம இருக்க முடியாது..  “கலையுலக மார்க்கண்டேயர்” .. ஒழுக்கம்னா
என்னன்னு ஒழுக்கமே வந்து பாத்துட்டு போகும்.. அவ்ளோ நல்லவர்... அவரைப் பற்றி சூர்யா சொல்லும் போது..

“என் அப்பாவிடம் நேரந்தவராமை என்பது எனக்குப் பிடிச்ச ஒரு நல்ல பழக்கம்.. ‘சிந்து பைரவி’ பட ஷூட்டிங் அப்போ.. ‘உன்னவிட ஒரு நாளாவது சீக்கிரம் 
வந்து காட்டுறேன் பாருன்னு சவால் விட்டு .. பின் ‘உன்கூட இந்த விஷயத்துல மோத முடியாதுப்பான்னு’ விலகிக் கொண்டாராம் பாலச்சந்தர் ..  அதே மாதிரி  
சினிமாக்காரன் வீடுன்னா.. 555 சிகரெட்.. ஆடம்பர செலவுகள்ன்னு .. இருக்கும்றத மாத்தி .. எங்க வீட்டுல செகரெட் ஆஷ்ட்ரே கூட இருக்காது.. படிக்கிற காலத்துல
5 ஸ்டார் ஓட்டல் கூட போனதில்ல... கல்லூரி காலம் வரை அப்பா அம்மா ரூம்லேயே தூங்குனோம்... மிச்ச எல்லா சினிமாகாரங்க வீட்டுல கெடக்காத விட எங்க 

வீட்டுல பாசம் கொஞ்சம் ஜாஸ்தியாவே கெடச்சுதுண்ணு அடிச்சு சொல்லுவேன் ...”


செரி இப்பிடி இருக்குற சிவக்குமார்.. சூர்யாவ ஏன் குடிக்க சொன்னார்.. ஒரு முறை பிஸினஸ் கிளாஸ் பயணம்.. மலேசியாவிற்க்கு.. கிரிஸ்டல் கிளியர் மினரல் 

வாட்டர எல்லாருக்கும் குடுத்துட்டுப் போனாங்க...
 “பச்ச தண்ணி தர்றதுல ஏன் இவ்ளோ கஞ்சத்தனம்?”ன்னு சூர்யாம் கேட்க.. 
சிவகுமாரோ.. விமான 
பணிப்பெண்ணை கூப்பிட்டு அந்த வாட்டரை வாங்கிக் குடுத்து “குடி” என்றாராம்.. அதை ஒரு வாய் குடித்டதும் .. சுரீர்ன்னு நாக்குலபட்டு.. குடலே வெளில வர்ற 

மாதிரி ஒரு உணர்வு .. “இது என்னாதுபா ??”

“இதுதாம்பா வோட்கா .. மனுஷன் சந்தோஷம்னாலும் துக்கம்னாலும் இதுலதாம்பா விழுறான்.” அப்படீன்னு சொன்னாராம்...

குடியோட நன்மை தீமைகள விளக்கி சொல்லி இருந்தா ஒருவேள அவர் மாறிப் போயிருக்கலாம்... ஆனா.. அந்த சம்பவம் தந்த அருவெறுப்பு.. இன்னைக்கும் 

அவருக்குள்ள... ( இது எல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆகுமா ??? )

அடுத்த பதிவு .. சூர்யா--ஜோ காதல் பற்றி...(ஐய்ய்.. ஓட்டுங்க.. அப்போதான் சொல்லுவேன்.. பின்னூட்டத்துல ஓட்டு ஓட்டுனு ஓட்டிடாதீங்கப்பா !!)

28 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// கல்லூரி காலம் வரை அப்பா அம்மா ரூம்லேயே தூங்குனோம்... மிச்ச எல்லா சினிமாகாரங்க வீட்டுல கெடக்காத விட எங்க


வீட்டுல பாசம் கொஞ்சம் ஜாஸ்தியாவே கெடச்சுதுண்ணு அடிச்சு சொல்லுவேன் ...”


//



ரொம்ப முக்கியமான அறிவுரை... தல.....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“இதுதாம்பா வோட்கா .. மனுஷன் சந்தோஷம்னாலும் துக்கம்னாலும் இதுலதாம்பா விழுறான்.” அப்படீன்னு சொன்னாராம்...//


அவர் ஒரு அருணாச்சலம் தல...

Suresh said...

அட பாவி உனக்கு பின்னூட்டம் இட்டா தான் முன்னூட்ட்மா ரொம்ப ஒவர் தான் அதுல ஒரு நல்ல மார்கெட்டிங்க் டெக்னிக்

Suresh said...

நல்ல பதிவு விக்டனில் படித்ததாய் நியாபகம் ;)

ஜெட்லி... said...

தொடருங்கள் கடைக்குட்டி.......

வால்பையன் said...

சிவக்குமார் மாதிரியே சூர்யாவுக்கும் எந்த நல்ல பழக்கமும் இல்லைன்னு கேள்வி பட்டேன், இது தானா காரணம்!

ஆதவா said...

எங்கப்பா குடிச்சு வாந்தியெடுக்கிறதப் பார்த்தப் பின்னாடிதான் வாழ்க்கையில குடிக்கவே கூடாதுன்னு முடிவெடுத்தேன்.. வயது 10. அது இன்றும் தொடர்கிறது.

சிலருக்கு அந்த அருவறுப்பு ஒட்டிக் கொள்ளும்.... எதிர்பார்த்தமாதிரியே இந்த நிகழ்வும் இருந்தது... ஜோ காதலை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

எப்பவும் பொல ஓட்டு போட்டாச்சு

அ.மு.செய்யது said...

//குடியோட நன்மை தீமைகள விளக்கி சொல்லி இருந்தா ஒருவேள அவர் மாறிப் போயிருக்கலாம்... ஆனா.. அந்த சம்பவம் தந்த அருவெறுப்பு.. இன்னைக்கும் //

வோட்கா வொர்க் அவுட் ஆவுமா" அப்படின்னு டைடில் வெச்சிருக்கலாம்னு நினைக்கிறேன்.

நல்ல கல கல பதிவு கடைக்குட்டி !!!!

Senthil said...

sivakumar is a gem of a man

தீப்பெட்டி said...

நடக்கட்டும்.. நடக்கட்டும்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஒழுக்கம்னா
என்னன்னு ஒழுக்கமே வந்து பாத்துட்டு போகும்.. அவ்ளோ நல்லவர்... //

ரோசாபூ ரவிக்கைகாரிக்கே தேசியவிருது கிடைத்திருக்கணும்...
ஆனா அதவிட பெருசா அவருக்கு இப்ப கிடைச்சிருக்கு..

malar said...

சார் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி எழுதிறீர்களே நெசமா நம்பலாமா ?

Subash said...

கலக்குங்க

வேத்தியன் said...

நல்லா இருக்கு...

வோட்டியாச்சுப்பா...

அடுத்த பதிவை சீக்கிரமா போடுங்க மாம்ஸு...
ஆவலா இருக்கேன்ல...

லோகு said...

/அதை ஒரு வாய் குடித்டதும் .. சுரீர்ன்னு நாக்குலபட்டு.. குடலே வெளில வர்ற

மாதிரி ஒரு உணர்வு .. //

அப்படி எல்லா இருக்காதே..

ஆராய்ச்சி !! said...

நடிகனை துதி படும் அடிவருடிகளே நீங்க எல்லாம் படிச்சும் கூட திருந்தாம கேவலமா இருகீங்கலேட !!!!!!!!!!

சித்து said...

நல்லா இருக்கு, சீக்கிரமாக அடுத்த பாகத்தை வெளியிடவும்.

கடைக்குட்டி said...

SUREஷ் said
//

அவர் ஒரு அருணாச்சலம் தல...
/

ஆமா தல...

கடைக்குட்டி said...

சக்கர SURESH,ஜெட்லி,வால்பையன்..


படித்ததற்கும்.. (பின்னூட்டம்)
அடித்ததற்க்கும்..

நன்றிகள் பல...

கடைக்குட்டி said...

ஆதவா said
//
எங்கப்பா குடிச்சு வாந்தியெடுக்கிறதப் பார்த்தப் பின்னாடிதான் வாழ்க்கையில குடிக்கவே கூடாதுன்னு முடிவெடுத்தேன்.. வயது 10. அது இன்றும் தொடர்கிறது.
//

உங்களுக்காக நான் வருத்ப்படுகிறேன்..

கடைக்குட்டி said...

அ.மு.செய்யது said..
//

வோட்கா வொர்க் அவுட் ஆவுமா" அப்படின்னு டைடில் வெச்சிருக்கலாம்னு நினைக்கிறேன்.//

ச்சே.. சூப்பர் தலைப்புங்க,, மிஸ் பண்ணிட்டேன்...

கடைக்குட்டி said...

senthil ,தீப்பெட்டி

வருகைக்கு நன்றி..!!

கடைக்குட்டி said...

//
பித்தன் said...
//ஒழுக்கம்னா
என்னன்னு ஒழுக்கமே வந்து பாத்துட்டு போகும்.. அவ்ளோ நல்லவர்... //

ரோசாபூ ரவிக்கைகாரிக்கே தேசியவிருது கிடைத்திருக்கணும்...
ஆனா அதவிட பெருசா அவருக்கு இப்ப கிடைச்சிருக்கு..//


நியாயமான பாராட்டுதானே... :-)

கடைக்குட்டி said...

malar,subash.வேத்தியன்

வருகைக்கு நன்றி!!!

கடைக்குட்டி said...

லோகு said...
/அதை ஒரு வாய் குடித்டதும் .. சுரீர்ன்னு நாக்குலபட்டு.. குடலே வெளில வர்ற

மாதிரி ஒரு உணர்வு .. //

அப்படி எல்லா இருக்காதே..

//

மாட்னியா ??? இறி.. அம்மாகிட்ட சொல்றேன்...

கடைக்குட்டி said...

ஆராய்ச்சி !! said...
நடிகனை துதி படும் அடிவருடிகளே நீங்க எல்லாம் படிச்சும் கூட திருந்தாம கேவலமா இருகீங்கலேட !!!!!!!!!!
//

நடிகனைத் துதிபாடும் பதிவை படித்து விட்டுத்தான் நீங்களும் இங்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் நண்பரே...

தயவு செஞ்சு புடிக்கலனா படிக்காதீங்க... நாகரிகமில்லாம இந்தமாதிரி பேசுறதுக்கு...

“இனிய உளவாக “ தல...

கடைக்குட்டி said...

சித்து said...
நல்லா இருக்கு, சீக்கிரமாக அடுத்த பாகத்தை வெளியிடவும்.//

போட்றுவோம்.. :-)

Prabhu said...

சிவக் குமார் ஒழுக்கத்துக்குன்னே பெயர் பெற்றவரில்ல. மேடையில பேசுனப்ப கூட இதப் பத்தி காட்டமா பேசுனாரு...