April 03, 2009

தமிழ் சினிமாவில் இதற்கு என்ன அர்த்தம்???

பல படங்கள் பார்க்கும் போது.. (யாருபா அது பலான படம்ன்னு படிக்கிறது..) ஏற்பட்ட சந்தேகங்களின் தொகுப்பு. (முழுக்க முழுக்க என் சந்தேகங்கள்.. எங்கயும் சுடலபா...!!)

சிவாஜி  

தலைவர் கல்வித்தந்தையாக கலாசிய படம்.. இதில் இண்டெர்வெலுக்கு முன்னாடி வரும் ஒரு சீனில் ஒரு குழந்தை தொழிலாளிகரெண்ட் ஷாக் அடித்து இறக்கும் நிலைக்கு போக .. ரகுவரன் காப்பாற்றுவார்.. அதுக்கு என்னடா இப்போ?? அப்டீன்றீங்களா??? … ஆனா..இண்டெர்வெலுக்கு அப்புறம் தலைவர் ஒரு பஜ்ஜி கடையில ஆதிய மிரட்டுவார்… இந்த கடையில ஒரு சின்ன பையன் டீ எடுத்துட்டு வந்துவெப்பான்.. தலைவர் ”நன்றி தலைவா” அப்டீன்னு சொல்லுவார்.. கல்வித்தந்தை காரெக்டருக்கு இது அழகா???இந்த இடத்துல அவர் தட்டி கேட்ருக்க வேணாமோ ???காக்க காக்க

அன்புச் செல்வனை பழிவாங்க பாண்டியா , மாயாவை கடத்திக் கொண்டு போய்விடுவான்.. அதே சமயம் ஸ்ரீகாந்தின் மனைவியும்பாண்டியாவின் வசம் இருப்பாள்..அவர்கள் இருவரையும் சம்பல் சீமா என்னும் இடத்திற்க்கு வர சொல்லிவிடுவான்.. போலீசார் அங்கு செல்வர்.அங்கே ரெண்டு மரப் பெட்டியில் அன்பு செல்வன் என்றும் ..ஸ்ரீகாந்த் என்றும் எழுதி தனித்தனியாக வைக்கப்பட்டு இருக்கும்.. ஸ்ரீகாந்திற்க்கு வந்தபெட்டியில் அவனது மனைவியின் தலை இருக்கும்.. அன்பு செல்வனுக்கு வந்த பெட்டியில் என்ன இருக்கும்????? ஒன்னுமே இல்லாட்டி..அதற்கு முந்தய சீனில் ஜோவின் கைகளை பாண்டியா பிடித்து ஏதோ செய்வது போல இருக்கும்.. பாண்டியா என்ன அனுப்பினான்?? ஒன்னுமேஅனுப்பலனா இந்த சீன் எதுக்கு??மன்மதன்   ’மன்மதன்’ சிம்புவுக்கு மூக்குல ரத்தம் வரும்.. ஏன்?? பெண்களை கட்டி பிடித்தால் ரத்தம் வருமா?? அவர் தம்பி மொட்ட மதனின் காலை கட்டிப் பிடிக்கும் போதுதான் முதலில் ரத்தம் வரும்.. அவர் ஆம்பிளையாச்சே…. கொல பண்ண போறோம் அப்படீன்னு நெனச்சா ரத்தம் வருமா?? அப்போ கடைசில ஜோ வ கட்டி பிடிக்கும் போது ஏன் ரத்தம் வருது???

காதல் கொண்டேன்

தனுஷ் , சோனியா அகர்வாலுடன் காட்டில் தங்கி இருக்கும் போது அங்கு அரிசி , பருப்புனு எல்லா சாமானும் இருக்கும்.. எப்பிடி???

இருவர்              


இது உண்மை கதையா?? கேனத்தனாமா கேக்குறேனா?? செரி விளக்கமா கேக்குறேன்.. கருணாநிதி-எம்.ஜி.ஆர். நட்பு படத்தின் அடிநாதம் என்றால் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் உண்மையா?? சிலது பினைவு (ரெண்டு ஐஸ்வர்யா..) என்றால்.. எது எது எல்லாம் புனைவு??? (யாராவது முழு பதிவே போடுங்கப்பா…

நான் கடவுள்

 சமீபகாலமாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்தான்… அந்த கிளைமாக்ஸுக்கு என்னதான் அர்த்தம்..???
கிளைமாக்ஸ்…. கங்காவை காப்பாற்றியது யார்??? மன நல மருத்துவரானா தலைவரா.. அல்லது ராம கிருஷ்ன ஆச்சரியாரா?? ரெண்டு பேரும்தான்.. அப்ப்டீனா.. மனோ தத்துவ முறையோ.. ஆன்மீகமோ தனித்தனியாக யூஸ் பண்ண முடியாததா??மிக்ஸ் பண்ணாத்தான் ரிசல்ட் கெடக்குமா??

மேதை


எல்லா படத்துக்கும் ரெண்டு வரியாவது போட்டேன்.. இந்த படத்துக்கு என் பதிவோட தலைப்பே பொருந்தும்..

 

     “இதுக்கு என்ன அர்த்தம்…?????”

 

உங்களுக்கு புடிச்சா வோட்டு போடுங்க.. புடிக்காட்டியும் வோட்டு போடுங்க.. நீங்க படிச்சா மட்டும் போதும்.. நீங்க படிச்சா மட்டும் போதும்..

                   

           

26 comments:

ஆதவா said...

இந்தமாதிரி பல கேள்விகள் உண்டு!!!! அதனால்தான் நான் தமிழ்படமே பார்க்கறதில்லை!!!

கடைக்குட்டி said...

இதுக்காக தமிழ் படம் பாக்க மாட்டீங்களா!! என்னங்க ஆதவா இது?? புளிக்குதுன்றதுக்காக புளியோதர சாப்டமாட்டேன்னு சொல்லுற மாதிரி இருக்கு...

பவானி ஷங்கர் said...

கலக்கிருகீங்க போங்க... பதிவுகள் தொடர வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சநதேகம்.தமிழிஷில் என்னுடைய முதல் பாதிப்பை இணைப்பு கொடுத்தேன். முதலில் தமிழிஷில் தோன்றிய என் பதிவு பிறகு தோன்றவில்லை. என்ன காரணமாக இருக்க முடியும்?

அறிவே தெய்வம் said...

படத்தை இவ்வளவு ஆராய்ச்சி கண்ணோட்டத்தோட பார்க்கிறீங்களா!!!

ஆராய்ச்சி பண்ணாதீங்க..

வாழ்த்துக்கள்..

கடைக்குட்டி said...

@ பவானி ஷங்கர்

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி!!

கடைக்குட்டி said...

@பவானி ஷங்கர்

//தமிழிஷில் என்னுடைய முதல் பாதிப்பை இணைப்பு கொடுத்தேன். முதலில் தமிழிஷில் தோன்றிய என் பதிவு பிறகு தோன்றவில்லை. என்ன காரணமாக இருக்க முடியும்?//

தலைவா.. ஒருமுறை நாம ஒரு பதிவ சமர்பிச்சதும் அது அப்கம்மிங்க் பிரிவில் வந்துவிடும்.. அதுக்கப்புறம் கூட பல பேர் சமர்பிப்பாங்க இல்லயா?? அதனால நம்ம பதிவு அடுத்த பக்கங்களுக்கு மாற்றப்படும்.. அடுத்த பக்கங்களில் தேடிப் பாருங்க.. ஒரு வேள சூடான பதிவா மாறி இருந்தா.. சூடனா இடுகைக்ள் பக்கங்களுக்கு மாற்றி இருப்பர்.. அங்க தேடுங்க..

malar said...

படத்தில் உள்ள குறைகளை விலாவாரியா விளாசி தள்ளி இருக்கிறீர்கள் .ஒரு காலத்தில் படமே கதி என்று இருந்தேன் இப்போது படம் சீரியல் என்றாலே கிட்டை போறதில்லை .
பதிவில் நல்ல படம் என்று விமர்சனங்கள் வருவதை பார்த்து சிலபடங்கள் பார்ப்பதுண்டு .என் மகன் படங்களை பார்த்து விட்டு சொல்லுவான் கேனத்தனமா படம் எடுக்குறாங்க
என்று .

கடைக்குட்டி said...

@ பவானி ஷங்கர்..

நீங்க பெருமையா மீ த ஃப்ஸ்ட் போட்டுக்கலாம்.. என் கிட்ட சந்தேகம் கேட்ட மொத ஆள் நீங்கதான்...

கடைக்குட்டி said...

அறிவே தெய்வம்
//ஆராய்ச்சி பண்ணாதீங்க.//

உக்காந்து யோசிச்சு எழுதுனதுங்கோ!!!

கடைக்குட்டி said...

அறிவே தெய்வம்
//வாழ்த்துக்கள்//

நன்றி...

கடைக்குட்டி said...

malar
//பதிவில் நல்ல படம் என்று விமர்சனங்கள் வருவதை பார்த்து சிலபடங்கள் பார்ப்பதுண்டு //

வண்ணத்துப்பூச்சியார் பேச்சக் கேட்டு இங்கிலிபீஸ் படமா பாப்பீங்களா???

கடைக்குட்டி said...

malar

//படத்தில் உள்ள குறைகளை விலாவாரியாக விளாசி தள்ளி இருக்கிறீர்கள்//

ஐய்யோ போங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. (உங்கள் பெருந்தன்மையான பின்னூட்டத்திற்க்கு நன்றி..)

கடைக்குட்டி said...

malar

//என் மகன் படங்களை பார்த்து விட்டு சொல்லுவான் கேனத்தனமா படம் எடுக்குறாங்க என்று //

இனிமே நானும் சொல்லுவேன் வந்து பாருங்க.. வருகைக்கு நன்றி

பவானி ஷங்கர் said...

ரொம்ப நன்றி மாப்ள... அப்டியே என்னோட முதல் பதிவிற்கு ஒரு ஒட்டு போட்டுட்டு போடா மாப்ள...

Anbu said...

அண்ணா முதன் முறையாக உங்கள் தளத்திற்கு வருகை புரிந்துள்ளேன்..நன்றாக இருக்கிறது..

[தாமதான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் அண்ணா]

Anbu said...

இன்று முதல் உங்கள் பாலோவராகின்றேன்..

கடைக்குட்டி said...

நன்றி அன்பு!!!

லோகு said...

Super mapla...

eppadi unnala mattum....

radha said...

kadakutty remba okandu yosepingola

radha said...

kadakutty remba okandu yosibinga pola irruku

radha said...

kadakutty remba okandu yosepingola

எட்வின் said...

உங்க கடைக்கும் வந்தாச்சு...

உங்க கேள்விகளுக்கு விடை, ஒவ்வொரு இயக்குனரையும் கேட்டா தான் தெரியும் போல இருக்கு !!

காதல் கொண்டேன் ல ... தனுஷ் ஏற்கெனவே பண்ணி வைத்த திட்டமாக இருந்திருக்கும்!

கடைக்குட்டி said...

லோகு சொன்னது
//Super mapla...

eppadi unnala mattum....//

உன் ரேஞ்ச் வருமா..?? ஏதோ என்னால முடிஞ்சது..

கடைக்குட்டி said...

ராதா சொன்னது
//kadakutty remba okandu yosepingola//

உக்காந்து மட்டுமில்லீங்க... குப்புற படுத்து.. மல்லாக்க படுத்து யோசிச்சதுங்கோ!!!

கடைக்குட்டி said...

எட்வின் சொன்னது
//காதல் கொண்டேன் ல ... தனுஷ் ஏற்கெனவே பண்ணி வைத்த திட்டமாக இருந்திருக்கும்!//

ஹ்ம்ம்... நீங்க மட்டும் தான் ஒரு சந்தேகத்த தீத்து வச்சு இருக்கீங்க..

கடைக்குட்டி said...

எட்வின்,லோகு,ராதா..

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி!!!