April 04, 2009

த--ற்--கொ--லை--

”சேட்டா calling"   அவளுடைய செல்ஃபோன் சிணுங்கியது..
’நியூயார்க் நகரம்’  பாடல் கேட்டது அவனுக்கு.. பால்கனியிலிருந்து வந்து ஃபோனைப் பார்த்த அவளுக்கு
சந்தோஷம்..!!

அண்ணன் திருந்தி விட்டான் போல.. மகிழ்ச்சியோடு ஃபோனை ஆன் செய்தாள்...

’ஹலோ’
’-----------------------’
’ஹலோ’
’------------------------’
‘டேய் பேசுடா’

அவன் பேசவில்லை.. பக்கத்திலுள்ள வாகன சப்தம் கேட்டது.. நிற்க!! அது ரயில் சப்தம்!!!

’டேய்!! எங்கடா இருக்க???’
’---------------------------’
‘அண்ணா பேசுடா...’

ரயில் சப்தம் அதிகமாக கேட்டது... பயந்து விட்டாள்...

‘அண்ணா!! டேய்.. நேத்து தானே அவள மறந்துட்டன்னு சொன்ன... இப்ப என்னடா??? அவ உன்ன ஏமாத்துனா நீ என்ன பண்ணுவ..?? எங்க இருக்க சொல்லு pls..."
"சொர்கத்துக்கு பக்கத்துல....”   முதல் பதில் அவனிடமிருந்து.....

“டேய் ஒளராத..!! தற்கொலதான் இதுக்கு முடிவுன்னு யார் சொன்னா?? வேணாம்டா.. எங்க இருக்க ஒழுங்கா சொல்லு அண்ணா!!”
”பல்லாவரம்.”
”வந்துட்டே இருக்கேன்....”

அவள் மனது அடித்துக்கொண்டது... படபடப்பு.. காதலை திட்டித் தீர்த்தாள்.. கடவுளை நித்தம் நினைத்தாள்... ஆட்டோவில் அவள் அங்கு சென்றடையவும்.. மக்கள் கூட்டம் நிரம்பவும் நேரம் செரியாக இருந்தது..

அவள் நெருங்கினாள்...
பார்த்ததும் நொறுங்கினாள்....

                                        “அண்ணாஆஆஆஆஆஆஆஆ.........................”


“டேய் அண்ணா!! டிவிய ஆஃப் பண்ணுடா.. போர் அடிக்குது... ஆர்த்தி சொன்னாள்.. வஸந்தின் மடியிலிருந்த ஆர்த்திக்கு அந்த சீரியல் பிடிக்கவில்லை..
“ஏய் தூங்க வா!!” ஆர்த்தி அழைத்தபடியே பார்க்க...
வஸந்த்தோ ஆழ்ந்த உறக்கத்தில்... (சீரியலின் பயணால்...)


டிஸ்கி:- இந்த கதை 14/4/07 அன்று என் மேக்ஸ் புக்கில் எழுதிய முதல் கதை... இந்த எழுத்தே இன்று என்னை எழுத்துலகு வரை கொண்டு சேர்த்துள்ளது...

உங்களுக்கு புடிச்சா ஓட்டு போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டு போடுங்க
நீங்க படிச்சா மட்டும் போதும்...நீங்க படிச்சா மட்டும் போதும்... 

16 comments:

டக்ளஸ்....... said...

\\யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???\\
ஏன் நான் இல்ல?

என்னை விட நல்லாதான் நீங்க எழுதுறீங்க!

SUREஷ் said...

// “அண்ணாஆஆஆஆஆஆஆஆ.........................”//


அப்புறம் சீரியல் என்ன ஆச்சுங்க

malar said...

ஓட்டு போட்டுவிட்டேன் ..நல்ல எழுதுறீர்கள் . யாரோ மண்டைய போடா போறா நினைத்தேன் .

நட்புடன் ஜமால் said...

ஓட்டியாச்சுங்கோ

படிச்சிட்டு தான்.

லோகு said...

மூணு வாரம் எடுக்க வேண்டிய கதையை இவ்ளோ சிறுசா சொல்லிடிங்களே..


ஓட்டு போட்டாச்சு.. எங்க ஊர்ல ஒரு ஓட்டுக்கு 1000 ரூபானு பேசிக்கறாங்க.. பாத்து போட்டுக் கொடுங்க..

ஆதவா said...

முதல் கதை...

நல்ல உரையாடல்கள், வெட்டியெடுத்த வார்த்தைகள், யதார்த்த நடை!!!

எல்லாம் இருந்தும், சட்டென்று திரும்பி டிவி சீரியல் என்று போர்ட் போட்டு வைத்தது ஒட்டுமொத்த கதைக்கே மைனஸ்..

இன்னும் இன்னும் யோசித்து நன்கு எழுதுங்கள்.. நல்ல எழுத்து நடை உங்கள் வசமிருக்கிறது. நிறைய முயலலாம்...

SASee said...

கடைக்குட்டி கதை நன்றாக இருந்தது.

தொடர்ந்து எழுதுக.

வித்யா said...

தூங்கிட்டாரா. நான் போய்ட்டாருன்னு நினைச்சேன்.

கடைக்குட்டி said...

டக்லஸ் சொன்னது
//என்னை விட நல்லாதான் நீங்க எழுதுறீங்க//

ண்ணா!! என்ன வெச்சி ஒன்னும் காமெடி கீமடி பண்ணாலியே??

கடைக்குட்டி said...

sureஷ் அண்ணன் ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்காக தற்கொலை பாகம் இரண்டு விரைவில் வெளிவரும்

கடைக்குட்டி said...

malar சொன்னது..
// யாரோ மண்டைய போடா போறா நினைத்தேன் .//

இது பொய்..!!
//நல்ல எழுதுறீர்கள் .//
இதுவும்????? :-)

கடைக்குட்டி said...

நட்புடன் ஜமால் said...
//ஓட்டியாச்சுங்கோ//

நன்றீங்கோ!!

கடைக்குட்டி said...

லோகு சொன்னது

//எங்க ஊர்ல ஒரு ஓட்டுக்கு 1000 ரூபானு பேசிக்கறாங்க.. பாத்து போட்டுக் கொடுங்க..//

உன்னயெல்லாம் விசயகாந்த் மாமாகிட்ட சொல்லிக்குடுக்கனும் (விசயகாந்தோட ”மாமா”கிட்ட ஏன் போய் சொல்றனு கலாய்க்கக் கூடாது..)

கடைக்குட்டி said...

ஆதவா சொன்னது
//நல்ல உரையாடல்கள், வெட்டியெடுத்த வார்த்தைகள், யதார்த்த நடை!!!//

நாம எழுதுறத யாராவது படிக்கிறதே பெரிய விசயம்.. அத படிச்சிட்டு இப்பிடி பிரிச்சு மேஞ்சி வெச்சுறிக்கீங்களே..!!நன்றி

கடைக்குட்டி said...

SASee சொன்னது
//தொடர்ந்து எழுதுக//

வேற வேல???

கடைக்குட்டி said...

வித்யா சொன்னது
//தூங்கிட்டாரா. நான் போய்ட்டாருன்னு நினைச்சேன்.//

ஹ ஹா.. இது கூட நல்லாத்தான் இருக்கு!!