பின்னூட்டத்திற்க்கு என் முன்னூட்டம் ...
(ஒவ்வொரு பதிவிலும் நான் பதிவிட்ட உடனேயே அதை இடித்தும் ... அடித்தும் . தட்டியும் .. இன்னும் என்னஎன்னவோ செய்யும் நண்பர்களுக்கு பின்னூட்டப்பெட்டியில் மட்டுமே நன்றி சொன்னால்.. பாக்குறாங்களோ என்னவோன்னு ஒரு எண்ணம்.. அதான் இந்த முன்னூட்டக் கலாச்சாரம் .. என்னை ஊக்கப்படுத்திய அவங்களையும் போய் படிங்க.. ஹலோ,, இந்தப் பதிவ படிச்சுட்டுப் போங்க.....)
நன்றிகள் பல......
சரவணன் முதல் சூர்யா வரை --1
சூர்யாவின் இன்றைய அடையாளங்கள்.. சிக்ஸ் பேக்ச் பாடி , துறுதுறு இளைஞர், என்ன கேரக்டர் குடுத்தாலும் செய்வாம்பா...வசீகர சிரிப்பு ... டான்ஸ் கூட முன்னேற்றம்.. ஃபைட்டெல்லாம் கூட அட்டகாசம்... ஸ்கிரீன்ல மூஞ்சிய காமிச்சமாதிரியே அழுவுறாம்பா... இன்னும் சில வருஷத்துல கமலோட இடம் இவருக்குதாம்பா...
ஆனால்...
சூர்யா.. சரவணனாக எக்ஸ்போர்ட்டில் வேலை செய்து கொண்டிடுருந்த போது... அவரின் அடையாளங்கள்... எட்டு முன் பற்களில் கிளிப் போட்டுக்கொண்டு இருந்ததால் தைரியமாக சிரிக்கக் கூட முடியாது (வசீகர சிரிப்பு..??) .. எந்த வேல குடுத்தாலும் ஊத்திக்குதேன்னு ஒரு எண்ணம் ... துவண்டு ஒடுங்கிய தோள்களோடு ஊட்டச்சத்து கிடைக்காமல்வளர்ந்த குழந்தை போல உடல்வாகு (சிக்ஸ் பேக் ..??)
எப்படி இருந்த சூர்யா இப்படி ஆகியது எப்படி ???????? அதற்கு காரணம் என்ன ??
அவமானங்கள்.. வலிகள்.. காயங்கள்... அப்படி நேர்ந்த ஒரு அவமானம்தான் இன்று நாம் பார்க்கப் போவது ...
நேருக்கு நேர் டூயட் ஷூட்டிங்கிற்காக .... கொல்கத்தா பயணம்.. ‘எங்கெங்கே’ பாடல் .. டான்ஸ் என்றாலே வேப்பங்காய்....நண்பர்கள் முன்னால் கூட ஆடி இராத சூர்யாவை ஆட சொன்னார்கள்.. அதுவும் சிம்ரன் மாதிரி ஒரு பெண் முன்னால்.. சிம்ரனோ “நிறுத்து”ன்னு சொன்னாலும் ஆடிட்டே இருந்தாங்க.. (அவங்களுக்கு தமிழ் தெரியாதுப்பா.. )
ஒரு வழியாக ஓடி ஓடி ஷூட்டிங்கை முடித்தார்கள்.. பாதி பாடல் முடித்தாகி விட்டது...
அன்று இரவு ஏழு மணி வாக்கில்... கல்கத்தாபிரியாணி என்றொரு அய்ட்டம் (சாப்புடுறதுதாங்க,..) சூர்யாவோ வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தாராம்.. (பாவம் .. ஆ(ஓ)டி கலைச்சுறுப்பாருல்ல..) அங்க வந்த டைரக்டர் வஸந்திடம்.. நேரம் தெரியாமல்.. “ஸார்.. கல்கத்த பிரியாணி சூப்பர்..” என்னு சொல்ல.. “இதை மட்டும் வக்கனையா பேசு .. பர்ஃபாமென்ஸுல கோட்ட விட்டுறு “ னு எல்லார் முன்னாடியும் கத்திட்டார்...
சூர்யாவுகோ.. அங்க இருப்பதா ?? இல்லாட்டி பறந்து போவதா எனத்தெரியவில்லை... அன்னைக்கி நைட் ரூம்ல அழுதாராம்... ”ஏண்டா நடிக்க வந்தோம்னு” நெனச்சு...பின் அவர் நடனப் பயிற்சி எடுத்து ... ஹ்ம்ம்ம்ம்.. கலக்குறார்.. (ஏத்தி ஏத்தி பாடல் இன்றைய தேதியில் அவரின் சிறந்த நடனம் என்று சொல்லலாம்... )
இப்படிக்கு சூர்யா (அல்லயன்ச் பதிப்பகம்) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு.. என் வழியில் விவரிக்கப்பட்டுள்ளது ...
டிஸ்கி:-
புடிச்சுருந்தா சொல்லுங்க .. தொடரலாம் .. (சிவகுமாரே சூர்யாவை குடிக்க வைத்த கதை தெரியுமா ??? ஐய்ய்ய்.. ஓட்டுப் போடுங்க.. அப்போதான் சொல்லுவேன்..)
43 comments:
நண்பா நன்றி எல்லாம் வேணாம் உங்க பதிவு நல்லா இருக்கு அதை என் அனைத்து நன்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன் .. தொடர்ந்து நல்லா இது மாதிரி எழுதுங்கள்
//பின்னூட்டத்திற்க்கு என் முன்னூட்டம் ... //
வித்தியாசமா தான்யா யோசிக்கிறிங்க ;)
//வருத்தமே.//
வருத்த பாடாதிங்க நண்பா அவர்கள் கொஞ்சம் வேளையா இருந்து இருக்கலாம்
தொடர்ந்து எழுதுங்கள்...
உங்க பதிவு எல்லாம் சிறந்து விளங்கும் காரனம் உங்க வித்தியாசமான திங்கிங்
. இன்னும் சில வருஷத்துல கமலோட இடம் இவருக்குதாம்பா...
ஆனால்... sure
ஏண்டா நடிக்க வந்தோம்னு” நெனச்சு...பின் அவர் நடனப் பயிற்சி எடுத்து ... ஹ்ம்ம்ம்ம்.. கலக்குறார்.. (ஏத்தி ஏத்தி பாடல் இன்றைய தேதியில் அவரின் சிறந்த நடனம் என்று சொல்லலாம்... )
ya really a gud dance pa
nalla pathivu nanba
thodarnthu eluthungal
யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???
kavalai vendam nanga erukom
ni nalla aathu thola
hhahahahah
வாழ்க வளர்க.
சூர்யா பற்றிய இடுகை ரொம்ப நல்லா இருந்திச்சு.
வெரிகுட். கீப் இட் அப்.
இனிப்பா இருக்கற இடத்துக்குத்தானே 'சக்கரை' வரும்..
அவரே வரும் போது நான் வராமல் இருப்பேனா..
இது மாதிரி பதிவு எல்லாம் போட்டு நன்றி சொல்ல வேண்டாம்..
யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்..
அருமை தொடருங்கள்..
கடைக்குட்டி அடுத்த பதிவு.... சீக்கரம்
// “ஸார்.. கல்கத்த பிரியாணி சூப்பர்..”/
சிரித்து விட்டேன் , வலியும் வேதணைகளு தான் ஒரு மனிதனை தட்டி எழுப்பி வலிமை ஆக்குகிறது
நண்பா....
வேலை காரணமாக சிலரின் தளம் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தும் வர முடிவதில்லை...
அப்பிடித்தான் உங்களுடைய வலைத்தளமும்...
:-)
இனி பதிவு போட்டுப் பாருங்க...
முந்திகிட்டு வரேன்...
:-)
ஃபாலோவர் ஆயிட்டோம்ல நாம...
யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???//
ஆத்திக்கிட்டே இருங்க மாம்ஸு....
உங்களுக்குனு ஒரு கூட்டம் வராமயாப் போகும்???
:-)
அதான் நான் இருக்கேன்ல...
ஆஹா சூர்யா பத்தின பதிவா???
கலக்குறே பாஸு...
நம்ம ஃபேவரிட் தான்...
எப்ப இந்தாள வாரணம் ஆயிரத்துல பார்த்தேனோ அப்போல இருந்து நானும் ஜிம்முலயே தூங்குறேன்...
வரும் வரும் 6 பாக்ஸ்...
:-)
Me the 15...
:-)
//யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???///
kuttam ellam vanthuduchu
sari kadai kutty send me ur mail id, or send test mail to suresh.sci@gmail.com i ll tell the solution for ur issue, apprum enna follower list ungala kanom ;)
நல்லா இருக்கு.. :)) தொடரலாமே.. :))
nice post
pls continue
thanks
தொடரவும்.
தொடருங்கள் கடைக்குட்டி
நல்ல பதிவு, தொடருங்கள்..
இன்னும் தகவல் கிடைத்தாலும் எழுதுங்கள்
நல்லாத்தான் இருக்கு அடுத்த மேட்டருக்கு தாவுங்க பாஸ்....
டீக்கடைக்கும் என்னயும் எப்படியோ மறுபடியும் வரவச்சிட்டீங்க.... இனி அடிக்கடி வரேன். டீ நல்லாவே ஆத்துறீங்க. வாழ்த்துக்கள். சூர்யா பிரியரா நீங்கள்!
நல்லா இருக்கு தல... தொடர்ந்து போடுங்க.,.. நம்ம மனைக்கு வந்ததற்கும் ரொம்ப நன்றிங்க ....
வலியும் நிராசைகளும்தான் வெற்றிக்குக் காரணமோ என்றும் எண்ணத் தோணுகிறது.
சூரியாவைக் குடிக்க வைத்த பதிவை எதிர்பார்க்கிறேன். வழக்கம்போல ஓட்டு போட்டாச்சு
சூர்யாவின் அன்றைய நாளையும் இன்றைய பொழுதையும் ஞாபக படுத்தியமைக்கு நன்றி நண்பரே! உழைப்பு முன் நிற்கிறதே!
வந்து விட்டேன் தல........
//.. (ஏத்தி ஏத்தி பாடல் இன்றைய தேதியில் அவரின் சிறந்த நடனம் என்று //
அவல் வருவாளா தான்........,
அவரது உள்ளத்தில் உள்ள காதல் வெளிபாடு நடன அசைவுகளில் தெரியும்
// இன்னும் சில வருஷத்துல கமலோட இடம் இவருக்குதாம்பா...//
இதே மாதிரி இவுக அப்பாவுக்கும் சொன்னாக..
ஆனால் சிவாஜி அவர்கள் வெகுகாலமாக நடித்துக் கொண்டே,,,,,,,,, இருந்து சிவக் குமாருக்கு தனி இடத்தைக் கொடுத்து விட்டார்.
//“இதை மட்டும் வக்கனையா பேசு .. பர்ஃபாமென்ஸுல கோட்ட விட்டுறு //
பாருங்க தல.. திட்டுறதுக்கு கூட திருவிளையாடல் வசனத்தை சுட்டுப் போட்டிருக்காரு
@ லோகு
/இனிப்பா இருக்கற இடத்துக்குத்தானே 'சக்கரை' வரும்..
அவரே வரும் போது நான் வராமல் இருப்பேனா..//
அது என்ன அவரே நான் எல்லாம் புதிய பதிவர் நண்பா லோகு உங்க பதிவ பார்த்து பிரம்மித்தது உண்டு...
நல்ல எழுதாளர்கள் பலரின் பெயர் உன் பின்னூட்டத்தில் கடைகுட்டி...
//இது மாதிரி பதிவு எல்லாம் போட்டு நன்றி சொல்ல வேண்டாம்..
யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்..
அருமை தொடருங்கள்..//
மிக சரியாய் சொன்னார் அப்புறம் வரவங்க பீல் பண்ணா நல்லா இருக்காது அது தான் லோகு சொல்றாரு தப்பு இல்லை இனி பண்ண வேணாம் ;) சிரித்து அடுத்த பதிவுக்கு தாவுங்க
சக்கரை சொன்னது
//
//பின்னூட்டத்திற்க்கு என் முன்னூட்டம் ... //
வித்தியாசமா தான்யா யோசிக்கிறிங்க ;)
//
எல்லாம் உங்க வழி தல...
sahthi சொன்னது
//யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துரேன்???
kavalai vendam nanga erukom
ni nalla aathu thola
hhahahahah//
கண்டிப்பாக்கா... உங்க தார்மீக ஆதரவுக்கு நன்றி.. :-)
லோகு சொன்னது
//
இது மாதிரி பதிவு எல்லாம் போட்டு நன்றி சொல்ல வேண்டாம்..
யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்..
//
அப்டியில்ல மச்சான்.. யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல என் எண்ணம்.. ஆனா.. நான் அடுத்த பதிவு போடுறேன்னா.. அதுக்கு காரணம்.. உடனே இடித்துறைக்கும் நண்பர்களாகிய நீங்கள்...
அதான்...
தடுக்காத மச்சான்...
வேத்தியன் சொன்னது
//
me the 15th :-)
//
வந்துட்டு சும்மா போற பழக்கமில்லயோ ??? எங்க போனாலும் உங்க மார்க்க போட்டுட்டு போயிடுறீங்களே !!!
@ஜெட்லி,இராகவன் நைஜிரியா
ஆதரவுக்கு நன்றி !!
@ ஸ்ரீமதி, அக்னிப்பார்வை
முரளி கண்ணன் , senthil ,
வண்ணத்துபூச்சியார், எட்வின்,
sukumar swaminathan, தீப்பெட்டி //
ஆதரவுக்கு நன்றி !!!:-)
@ஆதவா,THIRUMALAI,SUREஷ்
பின்னூட்டத்திற்க்கு நன்றி... :-)
nalla irukku.
nan rasigan aagittaen
slang good
abarnashankar
தொடரவும்.
சூர்யா மானம் போனதை எல்லார்கிட்டேயும் பரப்புறீங்க?
இருந்தாலும், அந்த மாதிரி அறுவைப் படங்களிலிருந்து, இன்னைக்கு ஒரு சில நல்ல படங்களில் நடிக்கக் கூடிய, ஒரு திறமைசாலியா வளர்ந்திருக்கிறது நல்ல விஷயம்.
நன்றி இயற்கை :-)
joe ஆமாங்க... கரெக்ட்தான் ;-)
Post a Comment