April 28, 2009

ஒ(இ)ரு ??? கதை-- உதர்வு



(உதர்வுன்னு ஒரு வார்த்த இருக்கா??? ஏதோ தோனுச்சு வெச்சுட்டேன் .. கதை ஸ்டார்ட்.. கேமரா .. ஆக்‌ஷன்...)

”இது உங்களுக்கு புரியாதுங்க... “ சொன்னான் அவன் ...

“ஏன் ..??” -- அவள்

“மனசுல இருக்குறத அப்பிடியே சொல்லனுமா ??? “ தொடர்ந்தான் அவன் 

“கண்டிப்பா.. “ -- அவள்

“எங்க நீங்க என்னை வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னுதான் நான் பொய் சொன்னேன் ...” -- தலை குனிந்தான் 

“இத ஏங்க பொய்ன்னு சொல்றீங்க ?? குதிரையேறத் தெரியனும்.. பாட்டுப் பாடத் தெரியனும்.. இதெல்லாம் இந்தக் கதையோட நாயகன் கண்டிப்பா பண்ணி ஆகனும்.. நீங்களும் கண்டிப்பா
 பண்ணாலாம்... ஆறு மாசம் இருக்கு ஷூட்டிங் போக... ஆரஅமர கத்துக்கோங்க.. “ --பகர்ந்தாள் படத்தின் டைரக்டரான அவள்...

“நீங்க தேடுறா ஆள் கண்டிப்பா நான் இல்லீங்க... எனக்கு வாழ்க்கை குடுக்கணும்னு நீங்க உங்க வாழ்க்கைய தொடக்கத்துலேயெ முடிச்சுராதீங்க... “ -- நடக்கலானான்

“இதுதான் உங்க முடிவுனா ...எனக்கும் இந்தப் படம் வேணாம்... “ -- தயாரிப்பாளருக்கு ஃபோன் போட்டாள்..

நடக்க ஆரம்பித்த அவனோ திரும்பி பார்க்கவே இல்லை.. சின்ன வயசுலேர்ந்து நெனச்சது கெடக்கலயேன்னு நெனச்சுக்கிட்டே நடந்தவனுக்கு வழித்துணையாய் அவனது விழிநீர் மட்டும்  ...

“ஸார் .. நான் இந்தப் படம் பண்ணல... ” ஃபோனைக் கட் பண்ணினாள்...

இது இல்லாட்டி இன்னோன்னு நெனச்சுகிறதா  ??? -- இல்ல 
இது இல்லாட்டி மண்ணோடுன்னு நெனச்சுகிறதா ???
அவன் குழப்பத்தில்.......

பின் குறிப்பு :-

வலையுலகிற்கு வந்தது முதல் .. எது செய்தாலும் என்னுடைய வழியில் புதியதாக செய்யனும்னு நெனக்கிறதோட இன்னொரு வெளிப்பாடுதான் இந்தக் கதை... 
ரெண்டு வெவ்வேறு காட்சிகளை ஒரே கதையில சொல்ல முயற்சி பண்ணி இருக்கேங்க....

காட்சி 1 --> ஒரு நடிகன் தன்னால் இயக்குனரின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாதுன்னு வந்த வாய்ப்பை உதர்தல்...

காட்சி 2---> ஒரு காதலன் தன் காதலியை உதர்தல்  (மஞ்சளில் இருக்கும் வரிகளை மட்டும் படிக்க .....)

முதல் முயற்சி .. நல்லா இல்லாட்டி கண்டிப்பா சொல்லிட்டுப் போங்க.. அடுத்த முற பிரிஞ்சு மேஞ்சுறுவோம் ...

நல்லா இருந்தா ஒட்ட குத்திட்டுப் போங்க ...அடுத்த முற இதேமாதிரி மேஞ்சு பிரிச்சுறுவோம்....


17 comments:

Suresh said...

அருமையான கதை இப்படி வித்தியாசம எல்லாம் எழுதி கல்க்குறிங்க

தொடர்ந்து எழுதுங்க நான் இனி உங்க பாலோவர்

லோகு said...

அருமை..

வித்தியாசமான முயற்சி..

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் கடைக்குட்டி...

மிக அருமையாக இருந்தது.

தொடரட்டும் இது மாதிரியான முயற்சிகள்

ஜெட்லி... said...

எப்படிங்க நீங்க மட்டும் இப்படி யோசிக்கிறிங்க....
கலக்கல் கதை.

gayathri said...

nalla iukupa kathia but naan inoru time padikkanum

பரிசல்காரன் said...

பின்குறிப்பு அருமை. இன்னும் இது போல பல பின்குறிப்புகளை எழுதவும்!

ஜூப்பரப்பூ!

பரிசல்காரன் said...

உதர்வு - ங்கறதுக்கு அர்த்தம் சொல்றவங்களுக்கு ஏதாவது பரிசுன்னு போட்டி அறிவிக்கக் கூடாதா?

ஆதவா said...

உதர்தல் அல்லது உதறுதல் என்றே வைத்துக் கொள்ளலாம்.

முதல் முயற்சி என்பதைவிட, இப்படியொரு முயற்சி முயன்றதற்கே பாராட்டுக்கள்... இன்னும் நன்கு செதுக்கியிருந்தால் அருமையான திரைக்கதை ரெடி!!! தொடர்ந்து எழுதுங்கள் கடைக்குட்டி!! வாழ்த்துகள்

Subash said...

தாராளமாக இப்படியான கதைகளை எழுதலாம். ( டிஸ்கில இப்ப விளக்கமா சொன்னமாதிரி எல்லாக்கதைக்கும் சொல்லுவீங்கதானே ?? )

வாழ்த்துக்கள்
முதிய முயற்சிதான்.

Unknown said...

நல்லா இருக்கு.. :)) இன்னும் கொஞ்சமா தெளிவான வசனங்கள் இருந்திருந்தா டிஸ்கியே தேவை இல்ல... :)) நல்ல முயற்சி :)))

கடைக்குட்டி said...

@ சக்கரை

நன்றிங்கோவ்!!

கடைக்குட்டி said...

@லோகு

நன்றி மச்சான் ..

கடைக்குட்டி said...

@இராகவன் நைஜிரியா ,, ஜெட்லி ,,

தாங்க்ஸூபா...

கடைக்குட்டி said...

@பரிசல்காரன்

போட்டி நடத்தி இருக்கலாந்தான்... ஹ்ம்ம்ம்.. நெக்ஸ்ட் டைம் முடிச்சுடுவோம்... :-)

கடைக்குட்டி said...

@ subash

கண்டிப்பா சொல்லிடுவேன் தல...
வருகைக்கு நன்றி..

கடைக்குட்டி said...

@ ஸ்ரீமதி

கண்டிப்பா.. எனக்கும் அப்பிடித்தான் தோணுச்சு.. அடுத்த முற நீங்க எதிர் பாக்குற அளவுக்கு எழுதிடலாம்..

கடைக்குட்டி said...

@ஆதவா

என்ன சொல்வது ?? ஒவ்வொரு முறையும்.. ஒரு நல்ல நண்பனைப் போல.. உங்களோட தெளிவான ரெண்டு வரி பின்னூட்டத்திற்க்கே பதிவெழுதலாம்..

நன்றி..