April 26, 2009

விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு



என்னத்த சொல்றது...?? ஒரு ஒருவாரம் முன்னாடி தூக்கம் வரல.. செரி டி.வி. பாக்கலாம்னு போட்டா.. ஆதித்யால வழக்கம் போல கவுண்டம்ணி செந்திலை அடிக்கும் காமெடியை 
போட்டுக்கொண்டிருந்தனர்.. என்னாத்த பண்றதுன்னு .. சிரிப்பொலி பக்கம் போனா.. அங்க பாட்டு ஓடிட்டு இருக்கு, (இது 24 மணிநேர சிரிப்பு சானல் இல்லியோ????
(மிட்நைட் மாசாலா மாதிரி மேட்டர தேடி வந்து இருந்தா இப்போவே ஓட்டுப் போட்டுட்டு போயிடுங்க.. :-)  )

விஜய் டி.வி. பக்கம் போனா பதிவுக்கான மேட்டர் மாட்டியது.. ஒருத்தர் நேமாலஜி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தார்... ;இத பத்தி என்னடா எழுதுறது.. எல்லா இடத்துலயும் 
நடக்குறதுதானேன்னு விட்டுட்டேன்... ( அவர் அமெரிக்காவுல நேமாலஜி படிச்சவராம்.. இந்த அன்பரை பாராட்டி பேச வந்த (சங்கர்)கணேஷ் அவர்களின் பேச்சை போடாமலேயே இருந்துருக்கலாம்.. 
(”நான் 1006 படங்களுக்கு இசையமைச்சு இருக்கேன்,,, எல்லா நடிகைகளோடும் டூயட் பாடி இருக்கேன்.. அதனால நீங்க இவர்கிட்ட வந்து பேர மாத்திக்கங்க...”) இந்தமாதிரி
அவ்ளோ சொதப்பல்...)  அடுத்து வந்த நிகழ்ச்சிதான் கண்ணுல இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் காலி பண்ணிடுச்சு...

“சிதம்பர ரகசியம்”ன்னு சொல்லுவாங்கள்ல... அந்த ரகசியம் ஒருத்தருக்கு தெரியுமாம்... ஸாஃப்ட்வேர் சித்த வைத்தியர் என்று பெயர் வேறு... 
கோட்டு போட்டு,.. ஐ.டி.கார்டு மாட்டிக்கிட்டு அவர் பேசியது அலம்பலின் உச்சம்... “சித்தர்களின் சிதம்பர ரகசியம் அவருக்குத் தெரியுமாம்.. ஆனா அதை 
சொல்ல மாட்டாராம் (என்னங்கடா.. விசயாகாந்த்தோட தேர்தல் அறிக்கையை போல பெரிய மேட்டரோ ??) அதை அப்படியே தரவும் முடியாதாம்.. 
மருந்து வழியா தர வழியில்லாததால்,,,  அத ஒரு சிப்ல போட்டுட்டாங்களாம்... அந்த எலக்ட்ரானிக் சிப்ல இந்த சிதம்பர ரகசிய மேட்டர்  உள்ள ஸாஃப்ட்வேர 
லோட் பண்ணிட்டாங்களாம்..  அந்த ஸாஃப்ட்வேர் இருக்குற எல்லா வியாதியையும் குணமாக்கிடுமாம்.(வைரஸ் மட்டும்தான் குணமாகுமா?? அப்போ பாக்டீரியா என்ன ஆகும்ன்னு  கேக்கக் கூடாது...)

அவங்களோட சைட் அட்ரஸ் போட்டாங்க.. நோட் பண்ண மறந்துட்டேன்.. அடுத்த முறை பாத்ததும் இங்க போட்டுட்றேன்..  நேமாலஜி,இந்த-ஆலஜி,அந்த-ஆலஜி,....
இப்படி எவ்ளவோ இருந்தாலும் .. (நான் அதை நம்பாட்டியும்..) அடுத்தவங்க நம்பிக்கையை கேலி பண்ணக் கூடாதுன்னு அத பத்தி பேசக் கூட மாட்டேன்.. ஆனா இதயெல்லாம் நம்புறதா??
இப்படி ஏமாத்துனா?????????

அடப்போங்கடா... இதப்பத்தி யோசிசா அப்புறம் எப்படி தூங்குறது...????????

உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்..நீங்க படிச்சா மட்டும் போதும்..
       

15 comments:

ஆதவா said...

பேசாம சிரிப்பொலியையும் ஆதித்யாவையும் மட்டும் பாருங்க கடைக்குட்டி...

இன்னிக்கு மோன்ஸ்டர்ஸ் இன்க் போட்டிருந்தாங்க.... சூப்பர்!!!!

கார்ட்டூன் பக்கம் கொஞ்சம் தலையைத் திருப்புங்களேன்!!!

கடைக்குட்டி said...
This comment has been removed by the author.
கடைக்குட்டி said...

@ஆதவா-->
ஃபைண்டிங் நீமோ, டாய் ஸ்டோரி எல்லாம் பாக்குரோங்கோவ்... (கடைக்குட்டின்னு பேரு வெச்சுக்கிட்டு இதக் கூட செய்யாட்டி எப்படி??? ) டோரா நெம்ப புடிக்கும்...

அதுசெரி.. இன்னும் தமிலிஷ்ல கூட சேக்கல.. அதுக்குள்ள வந்துட்டீங்க... நன்றி தலைவா...

லோகு said...

நடு ராத்திரியில உங்களக்கு இவ்ளோ பயங்கர அனுபவமா...

பாவம் நீங்க,, அதுக்கு எதாவது ஸ்போர்ட்ஸ் சேனல் பக்கம் போயிருக்கலாம்..

ஜெட்லி... said...

நான் பத்தாவது படிக்கும் பொது மிட்நைட் மசாலா பார்த்தது.....
பழைய நினைவுகள்....

கடைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி....
நீங்கள் சொல்லியது போல் காட்ஜெட் குறைத்து
கொள்கிறேன்..... comment--->work என்னனு புரியல?

இராகவன் நைஜிரியா said...

நடு ராத்திரியிலே இந்த மாதிரி விசயங்களைப் பார்க்காதீங்க...

அப்புறம் மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது தேவையில்லாத தலைவலி, வயிற்றுவலி ..

இதெல்லாம் எதுக்கு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//(மிட்நைட் மாசாலா மாதிரி மேட்டர தேடி வந்து இருந்தா//


இப்பத்தான் எஃப் டிவியெல்லாம் இருக்கே தல........

Tech Shankar said...

so மொத்தத்தில்...... மற்றுமொறு மசாலாப் பதிவு..

பின்றீங்க தல

கடைக்குட்டி said...

@லோகு...

அடப்போப்பா...

கடைக்குட்டி said...

@ஜெட்லி

பழைய நெனப்புடா.. பேராண்டி பழை ய நெனப்புடா...

கடைக்குட்டி said...

@இராகவன் நைஜிரியா..

உங்க அன்புக்கு நன்றி தல

கடைக்குட்டி said...

@SUREஷ்--

தல உங்க அளவுக்கு அனுபவம் இல்ல தல

கடைக்குட்டி said...

@தமிழ் நெஞ்சம்-->

நன்றி தல..

Vilvaraja Prashanthan said...

இத விட பெரிய comedy விஜய் டி.வி.யில் அம்மா பகவான் நிகழ்ச்சி போடுறதுதான் .....

தீப்பெட்டி said...

நைட் தூக்கம் வராட்டி இப்படியா TV பாக்குறது. அதுக்கு பேசாம ஆவி கூட பேசிட்டு இருந்திருக்கலாம்.

எப்படி பேசுறதுனு பரிசலார்கிட்ட டிப்ஸ் கேட்டுக்கோங்க...