April 07, 2009

உங்க ஊர்க்காரன் என்னும் பதிவருக்கு என் பகிரங்க பதில்...

என்னுடைய முந்தைய பதிவிற்க்கு.. உங்க ஊர்க்காரன் என்னும் பதிவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.. அவருக்கான பதிலை ஒரு பத்தியில் அடக்க முடியவில்லை.. அதான்...
(முந்தைய பதிவு இங்கே..)
முதலில் அவரின் பின்னூட்டம்...

///
Blogger markkandan unga oorkaran said...

நாங்களும்தான் B.E. படிச்சோம் 
நாங்கள்தான் project செஞ்சோம், ஏதோ எங்க அறிவுக்கு எட்டுன அளவு செஞ்சோம் 
ஆனா வாங்கிட்டு வந்து வச்சவனுங்க அதிக மார்க்கு வாங்கிட்டாங்க 
இருந்தாலும் எங்களுக்கு இருந்த confidence ரிவயு போகும்போது யாருக்கும் இல்ல 
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம் 

முதல்ல அடுத்தவங்கள மாற சொல்றத விட்டுட்டு நாம மாறனும் 
நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும் 
நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது 

ஏன் உங்களுக்கு மூணு வருஷம் வரைக்கும் தெரியவே தெரியாதா?
நீங்க நாலாம் வருஷம் ப்ராஜெக்ட் பண்ணனும்னு உங்க senoirs ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டுதான இருப்பாங்க 
சும்மா கத விடாதீங்க///


அண்ணே.. பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி தயவு செய்து பதிவ முழுசா படிங்க.. நீங்க என்னுடய பதிவ முழுசா படிச்சீங்களாங்கன்னு தெரியல...


//நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும் //

யார்க்குஅண்ணே இல்ல அந்த எண்ணம்?? எல்லார்க்கும் இருக்கு..அட்டாச்மெண்டோட மெயில் அனுப்பனும்.. அத ஃபோன் மூலமா அனுப்பனும்.. எந்த ஃபோன இருந்தாலும் பரவாயில்ல.. மெயில் போகனும்.. அதுதான் என் ஆச.. இதுக்கு பேஸ் பேப்ப இல்லன்ற ஒரே காரணதால ரிஜெக்ட் பண்ணாங்க.. 


//நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது //

ஆமா.. ஒத்துக்குறோம்.. கேட்டாத்தான் இந்தத் திமிர் வருது.. கேக்காம எப்பிடி பண்றதுன்ற கேள்வியும் வருதே... IEEE பேப்பர் படிச்சு புரிஞ்சுக்க முடியுமா?? ஒரு சராசரி மாணவனால்...??? நமக்கு தோன்றத சொன்னாலும் ரிஜெக்ட் பண்றாங்க.. அப்போ என்ன தான் பண்ண முடியும்??? போய்தான் கேட்டாகனும்...


//ஏதோ எங்க அறிவுக்கு எட்டுன அளவு செஞ்சோம் 

ஆனா வாங்கிட்டு வந்து வச்சவனுங்க அதிக மார்க்கு வாங்கிட்டாங்க 

இருந்தாலும் எங்களுக்கு இருந்த confidence ரிவயு போகும்போது யாருக்கும் இல்ல 
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம் //
நாங்களுந்தான் அண்ணே,.. நீங்க எப்பிடியோ எனக்குத் தெரியாது.. ஆனா.. நாங்க ப்ராஜெக்ட் செண்டர் போய்.. வேலக்கி ஆகாம.. பிப்ரவரில எங்க ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பிச்சு.. மார்ச்ல முடிச்சோம்.... இந்த மொத்த பதிவும்.. என்னுடைய மற்றும் என் பல கல்லூரி நண்பர்களின் அனுபவம் அண்ணே!!!
நீங்க சொல்றது உண்ம.. நாமளா பண்ணா ரிவ்யூல தெம்பா இருக்கலாம்.. எனக்கு புரியுது.. ஆனா.. எல்லாருக்கும் நாமாளா பண்ற வாய்ப்ப இப்போ உள்ள முறை தரலைங்கிறது என் கருத்து.. பொதிகழுதைத்தனத்தைதான் வளர்க்கிறார்கள்..
//ஏன் உங்களுக்கு மூணு வருஷம் வரைக்கும் தெரியவே தெரியாதா?நீங்க நாலாம் வருஷம் ப்ராஜெக்ட் பண்ணனும்னு உங்க senoirs ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டுதான இருப்பாங்க //
தெரியும்.. ஆனா நாங்க நெனச்சு வெச்சு இருக்குறத செய்ய முடியாதுங்கிறுதும்.. அதுக்கு காலேஜ்ல நெறய தட (IEEE.. etc etc ) போடுவாங்கன்றதும் எந்த சீனியரும் சொல்ல மாட்டான்... நான் என் பதிவில் சொன்னது போல் தெளிவாக ஒரு விளக்கம் கண்டிப்பா கெடைக்காதுங்கண்ணே!! அதனாலதான் வருஷத்துக்கு வருஷம் இந்தக் கூட்டம் அதிகமாய்ட்டே  போகுது...

//சும்மா கத விடாதீங்க///

மனசுலேர்ந்து சொல்லி இருக்கேண்ணே!!! பெத்தவங்க காசு வருஷா வருஷம் வீணப்போகுது... இந்த மார்க்கெட்ல வருஷம் மொத்தமா லட்சக்கணக்குல வருமானம்.. இது ஏமாத்து வேல.. அதனால இந்தப் பணமும் கெட்ட பணம்றது என் கருத்து அண்ணே!!!


அண்ணா பல்கலைக்கழகமே... “ஆமா.. மாணவர்கள் வெளியில்தான் ப்ராஜெக்ட் செய்கிறார்கள்.. அதன் மூலம் பணம் வீணாகப் போகிறதென்பதும் தெரியும்.. ஆனா,,, செய்வதற்கொன்றும் இல்லை.. “ (ஹிந்து பத்திரிக்கையில் வந்தது..) அப்படீன்னு சொல்லி இருக்கு...


ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரிவில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் அதை செய்யட்டும்... ஆனா.. எல்லோரும் செய்யனும்னு சொல்றது தப்பில்லயா?? ஆமா. பணம் வீணாகப் போவது தெரியும்.. இருந்தாலும் வேற வழி இல்லன்னுசொல்றது செரியா அண்ணே??? sarathy அண்ணன் பின்னூட்டமெல்லாம் மனசுலேர்ந்து வந்தது... படிச்சுப் பாஅருங்க.. அதான் முக்கால்வாசி பேரின் நிலைமை..


//நாங்களும்தான் B.E. படிச்சோம் 

நாங்கள்தான் project செஞ்சோம்//
அண்ணே.. நீங்க படிச்சீங்க.. ஆனா.. நான் இப்போ கூட காலேக்கு போய்ட்டு வந்துட்டுதான் இந்தப் பதிவ எழுதுறேன்... வித்தியாசத்த உணருங்க..
முடிவா..... :-
                ”உங்க ஊர்க்காரன்” அண்ணே... நான் இந்தப் பதிவ போட்டதே இந்த விஷயத்த அலசனும்ற காரணத்துனாலதான்.. நமக்குள்ள பிரச்சனன்னு கெளப்பி விட்டுற போறாங்கண்ணே!! அடிக்கடி கட பக்கம் வாங்க..(நாளக்கி அயன் விமர்சனம் ..) நானும் வர்றேன்..

9 comments:

லோகு said...

தெரியாம சொல்லிட்டார், விடு மாப்ள.. ஏன் இந்த கோபம்..

Avish John said...

grt work :)

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டங்களுக்கே ஒரு பதிவா

பின்றீங்க


(யப்பா முழசா படிச்சிட்டேன்ப்பா)

இராகவன் நைஜிரியா said...

கண்ணா, ராசா, தம்பி, எப்படி கூப்பிடணும் சொல்லு அப்படி கூப்பிடுகின்றேன்... இந்த எழுத்து கலர மாத்துப்பா.. டார்க் கலர் பேஸ், டார்க் கலர் லெட்டர் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா..

(ஆபிசுல கம்பூயட்டரில் வேலை, ராத்திரி 11.30 பதிவு படிக்கிற வேலை.. கண்ணு வலிக்குதுப்பா.. அதனாலத்தான்.. கோச்சுகாதீங்க..)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல விஷ்யங்கள்தானே.. இப்படியெல்லாம் பிரித்து மேய்வது..

கடைக்குட்டி said...

லோகு.. கோவமெல்லாம் ஒன்னுமிலாடா.. இன்னும் இந்த விஷயத்த அலசனும்னு தொணுச்சு.. அதான். ஹி.ஹி..

கடைக்குட்டி said...

ஜமாலண்ணே.. நாங்க பின்றோமா?? நீங்க பின்னூட்டப் புலி.. என்னய போய் பின்றேன்னு சொல்லிக்கிட்டு... வருகைக்கு நன்றிங்கோ

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா அண்ணா... மன்னிச்சிடுங்க.. பின்னுட்டப் பெட்டியிலிருந்து காப்பி பண்ணி போட்டதால்.. கீழே உள்ள மேட்ட்ர் பிளாக் ஆயிடுச்சு... என்ன பண்ணினாலும்.. எத்தன தடவ மாத்தினாலும் கலர் மாறல...

தடங்கலுக்கு வருந்துகிறேன்

கடைக்குட்டி said...

தல surஷு... வாங்க வாங்க... ஹ்ம்ம்.. பிரித்து மேய்வது நல்லதுதானே.. (நம்மள யாராவது பிரித்து மேயாத வரை... :-)