April 06, 2009

ஃபைனல் இயர் புராஜக்டும்.. இஞ்ஜினியரிங் பொதிகழுதைகளும்...

குறிப்பு சட்டகம்
1.முன்னுரை
2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???
3.எப்படி செய்ய வேண்டும்??
4.என்னதான் நடக்குது??
5.என்ன தீர்வு???
6.முடிவுரை..

1.முன்னுரை:-

                      சமூகத்திற்க்கு   ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)

2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???

                            ஏழு செமஸ்டர் படிச்சு முட்டுப்புட்டு.. வெளியவரப்போற ஒவ்வொரு இஞ்ஜினியரும் தனியாவோ.. அல்லது குழுவாகவோ(2 ,3அல்லது4 நபர்கள் வரை )சேர்ந்து அவர்களுக்கு புடிச்ச பிரிவில் புராஜக்ட் செய்து காமிக்க வேண்டும் என்பது வழக்கம்.. அதுக்கு 200 மார்க் இருக்கு..

3.எப்படி செய்ய வேண்டும்??
                              தங்களுக்கு புடிச்ச பிரிவில்.. தெரிஞ்ச டெக்னாலஜியில் ( கம்யூட்டர் பிரிவு என்றால் .நெட் அல்லது ஜாவா..) தாங்கள் நினைத்ததை புராஜக்ட்டாக செய்து காட்ட வேண்டும்..  எந்தப் பிரிவில் புராஜக்ட் செய்கிறோமோ அந்தப் பிரிவிலேயே தங்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம்.. புடிச்ச பிரிவுல புராஜக்ட் பண்ணி.. அதே துறையில வேலக்கி போனா.. கொஞ்சமாவது வேலைக்கி ஆவற மாதிரி வேல பாக்கலாம்... கரெக்ட் தானே??? ஆனா என்ன நடக்குதுன்னு பாருங்க...


4.என்னதான் நடக்குது??

                                  மூனு வருஷமா புராஜக்ட் பத்தி பேசாத நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் புதுசா புராஜக்ட்னு ஒன்ன பத்தி சொல்லுவாங்க...செரின்னு நாமளும் .. நம்ம கனவ புராஜக்டா செய்யலாம்னு இறங்கிடுவோம்.. (உதாரணமா.. ஆர்குட்கு போட்டியா ஒரு வெப் சைட்.. பிளக்கருக்கு போட்டியா ஒரு புது கான்செப்ட்... ஒரு புது வகையான எலக்ட்ரானிக் சிப்...  மற்றும் பல பல பல... கனவுகளுக்கு ஏது எல்லை??) ஆனா .. 

இங்க இறங்கும் முதல் இடி..

 IEEE பேப்பர்ஸ் வெச்சுதான் புராஜக்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க... செரி அதுக்கும் ஓகேன்னு மண்டையாட்டிட்டு.. அதுக்கப்புறம் IEEE பேப்பர்ஸ்னா என்னன்னு நாமளும் தெரிஞ்சுப்போம்... 

அங்க இறங்கும் இடி நம்பர் இரண்டு.. 

IEEE பேப்பர்ஸ் என்பது.. இப்போ.. நம்முடைய துறையில ஒரு பிரச்சைனை இருக்குன்னா.. அத எப்பெடி செரி செய்யுறதுன்னு நாலுஅறிவாளிங்க யோசன சொல்லி இருப்பாங்க... செரிடா.. யோசன தானேன்னு.. படிச்சு புரிஞ்சுக்கலாம்னா... 

இடி நம்பர் த்ரீ வில் ப் வய்ட்டிங் ஃபார்யூ ... 

அந்த பேப்ப்ர்ஸ நாம தனியா எடுத்து படிக்க முடியாது.. அதுக்கு கொஞ்சம் பணம் கட்டி யார் உறுப்பின ஆகுறாங்களோ அவங்க மட்டும் தான் படிக்க முடியும்.. பல காலேஜ் .. அவங்களே உறுப்பினார் ஆகி இருப்பாங்க.. நாம காலேஜ்ல இருந்தே அந்த பேப்பர்ஸ் தேடலாம்.. ஆனா எங்க காலேஜ் மாதிரி கெத்து காலேஜ்ல படிச்சா.. அதுவும் கெடயாது.. நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிடுவாங்க...
கஷ்டப்பட்டு பேப்ப்ரும் எடுத்துட்டா.. 

இடி நம்பர் ஃபோர்..

கண்டிப்பா ஒரு சராசரி மாணவனால படிச்சு புரிஞ்ச்சுக்க முடியாது... அவங்க எத பத்தி சொல்ல வர்றாங்கன்னு புரியுறதுக்கே ஒரு மாசம் ஆய்டும்.. ஆனா ஒரு வாரத்துல புராஜக்ட் டைட்டில் கேப்பாங்க... இந்த இடில இருந்து தப்பிக்க.. நண்பர்களோ அல்லது சி(ப)ல காலேஜில் ஆசிரியர்களோ சில புராஜக்ட் செண்டர்ஸ் அல்லது கம்பெனிகளின் அட்ரெஸ் தரப்படும்... யப்பா.. நம்ம மண்டையல உளுந்த இடியெல்லாம் போய்டுச்சுடான்னா.. அதுதான் இல்ல...  அடுத்த உள்பிரிவுக்கு நீங்க போறீங்க..

4.1  புராஜக்ட் செண்டர்ஸ்:-
                              என்னத்த சொல்றது இவங்களப் பத்தி.. பாவப்பட்ட ஜென்மங்கள்.. நீங்க மொதமொத புராஜக்ட் செண்டர் போனீங்கன்னா.. சும்மா ராஜ மரியாத தான்... ஸார்.. நாங்க அப்பிடி பண்ணித் தருவோம்.. இப்பிடி பண்ணித்தருவோம்.. அது முடியும்.. இது முடியும்.. நீங்க என்ன கேட்டலாலும் ஓகே  பண்ணிடலாம் அப்படீன்னு சொல்லுவாங்க.. நிலாவுக்கு ராக்கெட் அனுப்பணும்னு சொன்னாக்கூட... நீல் ஆம்ஸ்ட்ராங் யூச் பண்ண கோடிங் நெட்ல கெடக்கும்.. நான் அத தரேன்னு சொல்லுவாங்க..

4.2:-புராஜக்ட் செண்டர்ஸ்-- ஆரம்பம்:-
                             IEEE பேப்பர் தர்றதுக்கே.. ஆரம்பத்துல நாம பணம் கட்டனும்.. குறைஞ்சது 500...
நாமளும்... செரிடா.. கெத்து செண்டர்ல சேந்துட்டோம்.. கலக்கப்போறோம்.. அப்படீன்னு நெனச்சுட்டு இருப்போம்.. கிளஸுக்கெல்லாம் தவராம போவோம்...

4.3:-புராஜக்ட் செண்டர்ஸ்--- முதல் நிலை:-
                             நம்ம காலேஜ்ல நம்ம புராஜக்ட நோண்டுறதுக்காகவே ஒரு கொஸ்டின் கோயிந்து இருப்பாரு.. அவர் நம்ம புராஜக்ட பிரிச்சு மேஞ்ச்சுட்டு.. அது தப்பு.. இது தப்பு.. இந்த புராஜக்ட் செல்லாது அப்படீன்னு சொல்லுவாரு.. இந்த கொஸ்டின்ஸ புராஜக்ட் செண்டர்ஸ்ல சொன்னா... “அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லப்பா.. சமாளிச்சுக்கலாம்” அப்படீன்னு மட்டும் சொல்லுவாங்க.. நம்ம இண்ட்ரஸ்ட் கொஞ்சமா கொறையும்...

4.4:-புராஜக்ட் செண்டர்ஸ்--- இரண்டாம் நிலை:-
                             ரிவியூன்னு ஒன்னு வெப்பாங்க நம்ம காலேஜ்ல... அதுக்கு டாக்குமெண்ட் கேட்டு இருப்போம் நாம புராஜக்ட் செண்டர்ஸ்ல.. தர்றோம்.. தர்றோம்ன்னு சொல்லிட்டு.. கடைசி நிமிஷத்துல ஒரு டாக்குமெண்ட் அனுப்புவாங்க.. “அடப்பாவி மக்க.. நாம பண்ணி இருந்தாலே இதவிட நல்லா பண்ணி இருப்போமே. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு”ன்னு கண்டிப்பா ஒவ்வொருத்தனும் நெனப்பான்... 

4.5:-புராஜக்ட் செண்டர்ஸ்--- மூன்றாம் நிலை:-
                             கடைசில புராஜக்ட்ன்ற பேர்ல ஒன்னு தருவாங்க.. ஸார்.. இது இல்ல.. அது இல்லன்னு நாம சொன்னா.. இவ்ளோதாம்பா பண்ண முடியும்னு ஒரு அலட்சியமான பதில்.. முடிஞ்சா நீ பண்ணி பாக்க வேண்டுயதுதானேன்னு நம்ம தெறமய கேவல படுத்துற வார்த்த அடுத்து வரும்... செரி.. புராஜக்ட் தாங்கன்னு கேட்டா.. சுத்தமா தரமாட்டாங்க... நாம கட்ட வேண்டிய 10,000 பணத்துல ஒரு 1,000 ரூபா கட்ட வேண்டியது இருந்தாக்கூட அந்தக் காச வாங்கிட்டுத்தான் தருவாங்க.. புராஜக்ட் வாங்கிட்டு நாம ஓடிடுவோமாம்... (என்னக் கொடும ஆதவா இது??)

                                இதுக்கப்புரம் நாம எது மாத்த சொன்னாலும் மாத்த மாட்டாங்க.. டாக்குமெண்ட்டும் அவங்க இஷ்டமா பண்ணித் தருவாங்க... (’சோதனை மேல் சோதனை...’ அந்த மாணவர்களின் காலர் டியூன்..)

5:-என்னதான்  தீர்வு???:-

               பல படிகளில் மாற்றம் வரவேண்டும்
1--> காலேஜுல .. இரண்டாம் ஆண்டு முதலே புராஜக்ட் பத்தி சொல்லித் தரனும்...

2-->இப்போ இருக்குற சிலபஸ் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறத ஒத்துகிட்டு.. (என்னதான் ஜாவா , .நெட் எலக்டிவ் எடுத்து படித்தாலும்...) தனியா டெக்னாலஜி கத்துக்கணும்..ஆர்வம் இருக்கனும்...

3-->ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டுல நம்ம காலேஜுக்கு பேர் வரனும்கிறதுக்காக... IEEE பேப்பர் தான் செய்யனும்ற ரூல மாத்தனும்

4--> பசங்கள காலேஜ்ல புராஜக்ட் பண்ண வெச்சா நாம பாத்துக்கனுமேன்றதுக்கு சோம்பேறித்தனம் பட்ட்டுக்கிட்டு.. அவங்கள புராஜக்ட் செண்டர் அனுப்புற (பெரும்பாலான)விரிவுரையாளர்களின் மனப்போக்கு மாறனும்......

5-->பசங்க சிக்கிட்டாங்கன்ற ஒரே காரணத்துகாக.. கண்டதெல்லாம் சொல்லலாம்ற கண்மூடித்தனமான பேமானித்தனம் புராஜக்ட் செண்டர்ஸ்ல மாறனும்...

6-->புராஜக்ட் செண்டர்ஸ்ல தெரியாத விஷயத்த தெரியலன்னு சொல்லனும்..

                       தனியாக புராஜக்ட் பண்ணா அந்த மாணவனுக்கு 5,000... ரெண்டு அல்லது மூனு பேர்  சேந்து பண்ணா ஒரு தலைக்கு 4,000... இதுதான் இப்போ மார்க்கெட் ரேட்.... 

நண்பர்களே!!!

                   இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்... ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்...   ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க... 

இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

முடிவுரை:-

                   இதுக்கு முடிவுரை என் பத்து விரல்கள் மட்டும் எழுத முடியாது...  
அவன் செய்த மாதிரி நானும் புராஜக்ட் செண்டர் போறேன்ற பொதி கழுதைத்தனம் மாறனும்..
வேற என்னத்த சொல்ல??????



 உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க...
நீங்க படிச்சா மட்டும் போதும்.. நீங்க படிச்சா மட்டும் போதும்.. 
(சிவாஜி ‘ரஜினி’ ஸ்டைலில் படிக்கவும்...)


19 comments:

ஆதவா said...

ரொம்ப வித்தியாசமான பதிவு!! தேர்வில் கட்டுரைகள் எழுதுவதைப் போன்றே.... இப்படி இணையத்தில் எவரெழுதியும் பார்த்ததில்லை!!

பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல.. பிரச்சனைகளைப் பத்தி பேசுறது பெரிய விஷ்யமில்லை..


ஆனால் தீர்வையும் சேர்த்து சொல்றீங்களே தல..


விஜயகாந்த காந்த் பாணியில சொன்னா

யூ ஆர் கிரேட்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

//




நச்..

நச்...

நச்......

இராகவன் நைஜிரியா said...

என்னால முடிஞ்சது ஒரு ஓட்டு போடறது மட்டும்தான். ஏன் அப்படின்னு கேட்டா, எனக்கு இந்த ப்ராஜெக்ட் பத்தி எல்லாம் ஒன்னுமே தெரியாதுங்க... அதனால என்னால முடிஞ்சது ஒரு ஓட்டு. அதைப் போட்டுட்டேன்.

Tech Shankar said...

அசத்திட்டீங்க.

வோட் போட்டுட்டோம்ல.

நன்றிகள்.

Tech Shankar said...

உங்கள் டெம்ப்ளேட் சூப்பரா இருக்குங்க

sarathy said...

நீ நல்ல வருவ தம்பி...
பழச ஞாபகபடுத்திட்ட....
நாங்க 3 பேரு சேர்ந்து 10000 கொடுத்து ஒரு கருமத்த விலைக்கி வாங்கி 196 மார்க் வாங்குனோம்..
இப்போ நினைச்சா வேடிக்கையாத்தான் இருக்கு...
டாக்குமெண்ட்-லாம் நெட்ல சுட்டோம்...

arun king said...

Great Man Good Work

Unknown said...

நாங்களும்தான் B.E. படிச்சோம்
நாங்கள்தான் project செஞ்சோம், ஏதோ எங்க அறிவுக்கு எட்டுன அளவு செஞ்சோம்
ஆனா வாங்கிட்டு வந்து வச்சவனுங்க அதிக மார்க்கு வாங்கிட்டாங்க
இருந்தாலும் எங்களுக்கு இருந்த confidence ரிவயு போகும்போது யாருக்கும் இல்ல
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம்

முதல்ல அடுத்தவங்கள மாற சொல்றத விட்டுட்டு நாம மாறனும்
நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும்
நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது

ஏன் உங்களுக்கு மூணு வருஷம் வரைக்கும் தெரியவே தெரியாதா?
நீங்க நாலாம் வருஷம் ப்ராஜெக்ட் பண்ணனும்னு உங்க senoirs ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டுதான இருப்பாங்க
சும்மா கத விடாதீங்க

லோகு said...

Ithukkutha padikkara pasanka kooda serave koodathu....
:)

கடைக்குட்டி said...

ஆதவா சொன்னது..
//இப்படி இணையத்தில் எவரெழுதியும் பார்த்ததில்லை!!//

என்ன ஊக்குவிக்க நீங்க பொய் சொல்லி புட்டீங்களே!!!

நன்றி

கடைக்குட்டி said...

தல syresஷ்.. வருகைக்கும் பின்னூட்டுத்திற்க்கும் நன்றி!!

கடைக்குட்டி said...

இராகவன் நைஜிரியா... அண்ணன்.. முதல் முறை வலைக்கு வந்து இருக்கீங்க.. நன்றி!!!

அடிக்கடி வந்து போங்க.. :-)

கடைக்குட்டி said...

தமிழ்நெஞ்சம் said...
//
அசத்திட்டீங்க.

வோட் போட்டுட்டோம்ல.//

நன்றி

கடைக்குட்டி said...

sarathy.. நீங்களும் முத முறையா வந்து இருக்கீங்க.. பின்னூட்டத்திற்க்கும் நன்றி!!!

பழச நியாபபப்படுத்திட்டேனோ???

கடைக்குட்டி said...

@ arun king.. THANKS BUDDY... :-)

கடைக்குட்டி said...

markkandan unga oorkaran said...
//
முதல்ல அடுத்தவங்கள மாற சொல்றத விட்டுட்டு நாம மாறனும்
நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும்
நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது
//

நீங்க சொல்ற பாய்ண்ட்தானுங்கோ என் பதிவின் நோக்கமே... ஆனா இப்போ இருக்குற நடைமுறை சிக்கல்களை நான் பட்டியளிட்டுள்ளேன்.. அவ்வளவே (என் புராஜக்ட் நாந்தானுங்கோ பண்ணி இருக்கேன்..) :-)

கடைக்குட்டி said...

ஹ ஹா.. சும்மாடா... லோகு பயப்படாத.. :-)

SSS said...

Super Topic thalaiva...!!
&
Nice Solutions..!!