April 16, 2011

அதிகாலை அனுப்பி வைப்போம்…

6 மாதம் முன்…

காலை..

ஒரு காலைன்னு சாதரணமாக சொல்ல முடியாத அதிகாலைஅமுதாவின் காலை அந்த மாதிரிதான் ஆகிவிட்டது…. வெரித்த பார்வையுடன் அவள்..

********************

4 வருடங்களுக்கு முன்….

காலை..

அதிகாலை 3:14 இருக்கும்

3:14தான்னு அடிச்சு சொல்லுவா அமுதா.. இருக்குமான்னு கரெக்டா தெரியலன்னு மதன் சொன்னாலும்..

இல்லீங்க எனக்கு ஞாயபகம் இருக்கு.. Mrs.மதன்.. பெண்குழந்தன்னு டாக்டர் சொல்லும் போது நான் மயக்கத்துல இருந்தேன்.. அரமயக்கம்.. ஆனாலும் எப்டியாவது நேரத்தா பாத்துடனும்னு ஆச.. நான் பாத்தேங்க.. 3:14 அப்போ…”

வெண்பா பிறந்த நேரத்த பத்தித்தான் சண்ட இப்போ..

வெண்பா அமுதாவின் புதல்வி.. குழந்தை..

மதன் ஆசை ஆசையா வெச்ச பேரு

உன் பேரும் பொண்ணு பேரும் ரைமிங்க வெச்சது ஏன் தெரியுமா.. எப்பிடியும் அவ என்ன மதிக்க போறதில்ல.. அதான்…” பிள்ளையை அவளின் ரூபமாக பார்த்தான்.. வெளியில் காட்டா விட்டாலும் .. உள்ளே காட்டாற்று பாசம்

தவளும் பிள்ளையின் மீதும்..

தழுவும் பிள்ளையின் மீதும்

********

காலை..

இப்போ என்ன அவசரமாம்.. அதுக்குள்ள பிள்ளைய பத்தி பேச்சு.. எம்புள்ளய பத்தி பேசாட்டி விடியாதே இவங்களுக்கு.. “

மதன் பெட்டில் இருந்தபடியே மணியைப் பார்த்தான்… ‘என்னடி சண்ட அங்ககாலங்காத்தால…’

பாருங்க .. இந்த அனிதா பாத்தோமா பேசுனோமான்ன்னு போகாம.. ..’ கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்தாள்..

மதனுக்கு இது பழகிவிட்டது.. அமுதா யாருடன் சண்டை போட்டாலும் சின்ன குழந்தை பாதிரி முதலில் சொல்வது அவனிடம்தான்..

சரி சொல்லு என்னாச்சு..?”

அவ இல்ல.. அனிதா.. சும்மா இல்லாம வெண்பா பத்தி கேக்குறாங்க.. 8 மாசம் ஆச்சே இன்னுமா தவக்காம இருக்கு.. எம்புள்ள எப்பவேணா தவக்கும்.. இவளுக்கு என்னவாம்..’

சரி விடுடி.. அவ ஏதோ கேட்டு இருக்கா. இத போயி ஒரு பிரச்சனைன்னு…’

இல்லீங்க.. நம்ம புள்ளைக்கு ஏதோ கொற இருக்கும்ன்னு சொல்றா.. டாக்டர்கிட்ட போணுமாம்..இனிமே நம்ம மொகத்தையே அவ பாக்க மாட்டாஅப்டிதிட்டிடேன்…”

மதனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. அவனுக்கே இருந்த சந்தேகம் கூட..

நம்ம பிள்ளைக்கு ஒன்னும் இல்லதானே.. ???’ அவளே குழந்தையாகக் கேட்டாள்..

ஒன்னுமில்ல.. ஒன்னும் இருக்காது…’ மதன் தீர்க்கமாக சொன்னான்

*************

காலை

வெண்பா .. வெண்பா.. செல்லம்ல.. எந்திரிம்மா..’

ம்மா…’

‘மா.. குட்டி.. ஸ்கூல் இருக்கு பாருங்க.. இன்னைக்கு ஸ்கூலுக்கு போவிங்களாம்.. வெளையாடுவீங்களாம்.. நாளைக்கு லீவாம்..’

‘ம்மா…’

எந்திரிடி குட்டிமா….

மதன் எழுப்பினான் அவளை… ஏண்டி தூக்கத்துல பேசி உயிர எடுக்குற…

கண்முழித்த அமுதா குழந்தையை பார்த்தாள்.. 1 வயது குழந்தை.. வெண்பா.. இன்னும் பட்டு போல புதுசா தெரிந்தாள்..தெரிவாள்.. தாய்க்கு எந்த காலத்திலேயும் பிள்ளைகள் புதுசுதான்…

மதனுக்கு அமுதா தூக்கத்தில் பேசுவது பழகிவிட்டது.. அவளை எழுப்பிவிட்டு தூங்கிவிடுவான்.

‘’ஏங்க…”

இல்லை இல்லை.. தூங்க முயற்சி செய்வான்.. அதற்குள் இந்த குரல் கேட்டுவிடும்…

‘ம்ம். சொல்லு…’

’இன்னைக்கு ஒரு கனவுங்க..’ அவள் வெண்பா தூங்குவதையும்.. அவளை பள்ளிக்கு அனுப்புவதையும்.. ஏற்ற இறக்கத்துடன் விவரித்தாள்…

”நீங்க வேணா பாருங்க.. நாளையோட எம்புள்ளைக்கு ஒரு வயசாகுது.. அவ உங்களையே டேய் போட்டு கூப்டுவா பாருங்க..”

“டேயா?”

“ஆமா.. நான் சொல்ல முடியாதத எம்புள்ள சொல்லுவால.. நான் சொல்லி குடுப்பேன்ல…’

அமுதா கண்ணில் ஒரு பெருமிதம் மின்னி மறையும்.. என்னவோ அந்தக் குழந்தையின் நாக்கில் உக்கார்ந்து இவள்தான் பேசப் போகிறவள் போல…

”ஆனா இன்னைக்கு கனவுல.. என்ன அம்மான்னு ஃபுல்லா கூப்டவே இல்லீங்க.. மான்னு தான் சொன்னா. அதான் ஒரு மாதிரி இருந்துச்சு…’

‘அப்டிலாம் ஒன்னுமில்ல.. கண்டத போட்டு கொழப்பிக்காத.. வெண்பா அழுவுறா பாரு.. அவள பாரு.. வெட்டிக்கத பேசிக்கிட்டு..”

மனைவியிடம்

மறுத்தாலும்…..

மனதளவில்…

மதன் நம்பிக்கை இழந்து கொண்டு இருந்தான்…

*******

முன்னிரவு….

ஊர்ல இருக்குற எல்லா சொந்தத்தையும் கூட்டி.. பெரிய விழாவாக எடுக்க வேணும் அமுதாவிற்க்கு.. செய்தும் விட்டாள் அதை போலவே..

வெண்பா பூமிக்கு வந்து 366 நாட்களும் 8 மணி நேரமும் ஆகி இருந்தது,…

ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ்.. அண்டை அயலார்ன்னு நெறயா கும்பல்..

”ஒரு வயசு புள்ளையா ??”

“இன்னுமா தவக்கல ??”

“தலையாச்சு நின்றுச்சே..”

“உக்காந்தே இருக்குமாம்மா எப்பவுமே.. ??”

மதனால் பொறுக்கவே முடியவில்லை.. வந்தவளில் எவளுமே மனித ஜாதி இல்லை போலும்.. விசாரிக்கிறோம் என்ற பெயரில்.. நரக வேதனை…

பக்கத்து வீட்டு அனிதா ஒரு வார்த்த சொன்னதுக்கெ குதிச்ச அமுதா இன்னைக்கு இவ்ளோ பேர் வித விதமாக அறிந்தும்ம்ம்ம் அறியாமலும் வெண்பாவைப் பற்றிக் கேட்க.. எல்லோருக்கும் கேக் கொடுத்துக் கொண்டு எப்படித்தான் சிரிக்கிறாளோ…

மதனால் தாங்க முடியவில்லை. அவனுக்கு தெரிந்தவர்கள் என்று யாருமில்லை அந்தக் கூட்டத்தில்.. அவன் யாரையும் கூப்பிடவில்லை.. எல்லாம் அமுதாவின் கூட்டாளிகள்..

மதன் அமுதாவை கவனித்தான்.. கல்யாணத்தன்று பார்த்த பயந்த பெண்ணல்ல அமுதா இப்போது.. ஒரு பெண்ணின் தாய்.. பொறுப்பு வந்துவிட்டது.. அல்லது பொறுப்பு வந்தவள் போல் காட்டிக்கொண்டாள்…

”வெண்பா… அவர்தான் வெச்சாரு.. அவருக்கு தமிழ் ஆர்வம் ஜாஸ்தி.. ” 100வது முறையாக சொல்லிக் கொண்டிருந்தாள்…

எவனாவது பிள்ளைக்கு பேர் என்னன்னு கேட்டான்.. செத்தான்.. அவனுக்கு தேவையே இல்லாமா மதன் 9வதுல பேச்சுப்போட்டில பரிசு வாங்குனதும்.. ‘பொன்னியின் செல்வனை 15 வயதிலேயே படித்து முடித்தவன் என்பதும் உப உப தகவல்களாக வந்து சேரும்…

வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..

அனைவரும் பசியாரிவிட்டு சென்றுவிட.. வீட்டை சுத்தம் செய்துவிட்டு வந்தாள் அமுதா..

வெண்பா மதனின் மேல் தூங்கிகொண்டிருந்தாள்…

என்னங்க…’

இந்த குரலை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் மதன். அல்லது அவளை எப்படி தேற்றுவது என்று…

‘சொல்லு..’ மனதுக்குள் கண்டிப்பாகத் தெரியும்.. இன்னைக்கு ஏதோ தப்பா நடந்துடுச்சுன்னு… ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது.

அமுதாவை மணந்த மணாளன் அவளின் மனமறிந்தவன்………

‘அந்த அனிதாவும்.. லதாவும்.. நம்ம புள்ளைய வெச்சு வெளையாண்டாளுங்க பாத்தீங்களா..?”

”பாத்தேன் சொல்லு.. அதுக்கென்ன இப்போ..

“இல்லீங்க.. லதா அனிதாகிட்ட குழந்த இருக்கும் போது அவ வளையல குலுக்கி குலுக்கி காமிச்சு குழந்தய பாக்க வெச்சாங்க..”

“உலக அதிசயமாடி இது ???”

உடைந்து அழுதாள்.. மதனுக்கு புரியவில்லை.. “என்னாச்சு சொல்லித் தொலை…”

“ம்ம்.. அவ.. வ.. அவ.. அந்த லதா இருக்கால.. நம்ம வெண்பா அவ கை ஆட்ற பக்கமெல்லாம் பாத்துட்டே இருந்தாளா.. மாத்தி மாத்தி ஆட்டுனா லதா.. வெண்பா எல்லா பக்காமும் பாத்தாளா… உடனே லதா அனிதாகிட்ட சொல்றா.. பரவாயில்ல.. காதுலாம் நல்லாத்தாண்டி கேக்குதுன்னு….”

ஓவென அழ ஆரம்பித்தாள்…மதனுக்கும் அழுகை வந்தது.. அவனும் அழுதால் யார் தேற்றுவது.. ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே….அந்த உணர்வும் நல்லதுக்குத்தான்.. இல்லையென்றால் உலக்ம் என்பது ஒப்பாரி வைக்கும் மயனாமாகிவிடும்…

அவளை தேற்றியவாறே தூங்கிப்போனான்.. அவளும்..

ஒன்றுமறியா.. புரியா.. வெண்பா அவர்களின் நடுவே நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டு படுத்திருந்தாள்…

அதே சிரிப்புடன்…

*****************

காலை…

கண்டிப்பாக மதனுக்கு தெரியும்.. இன்னைக்கு ஏதாவது முக்கிய முடிவு எட்டப்படும்னு..

அமுதாவிற்க்கு ஒவ்வொரு காலையும் ஒரு யுகம்.. குழந்தையை உற்று பார்ப்பாள்.. ‘டக்குன்னு எந்திரிச்சு.. இவ்ளோ நாளா உன்ன ஏமாத்துனேனேன்னு சொன்னபடடியே ஓடமாட்டாளான்னு இருக்கும்..

ஒருநாளும் அப்படி விடியவில்லை..

‘என்னங்க…”

ஆபீஸ் புறப்பட்டுக்கொண்டு இருந்த மதனுக்கு அவளின் குரல் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் .. கேளேன்.. என்பது போல் இருந்தது,,,

இல்ல… நம்ம மகள.. ஏதாவது டாக்டர்கிட்ட கொண்டு போய் காமிக்கலாமேன்னு…”

அதேதான். அவனும் ஒத்துக் கொண்டான்…

******************


காலை…

’ரொம்ப பெரிய டாக்டராங்க.. கைராசிக்காரர்ன்னு வேற சொல்றாங்க.. வெண்பா நடக்கப்போறா.. பேசப் போறா.. ஆடப் போறா…பாடப் போறா…” மதன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்…

’ம்..’கொட்டுவதைவிட ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை…பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்…

என்னாதான் மதனுக்கும் டாக்டரைப் போய் பார்ப்பது சந்தோஷமாக இருந்தாலும்… மனதினுள் ஏதோ உருத்திக் கொண்டே இருந்தது..

’ஆட்டோலையே போயிடலாம்ங்க.. எம்மக நீங்கஓட்டுற வண்டிலலாம் வரமாட்டா…’

‘ஆமா.. என் வண்டில வர மாட்டா.. கண்ட ஆட்டோ டிரைவர் வண்டில போவாளா.. ஏதாவது பேசனுமேன்னு பேசாதடி.. வா..’

இந்த வார்த்தையை எத்தனை முறை சொன்னாலும் மறுபடியும் மறுபடியும் பேசிக்கொண்டே இருப்பாள்.. சில சமயம் வேண்டுமென்றே திட்டு வாங்குவதற்க்காக பேசுகிறாளோ என்றிருக்கும்..

மாலை டாக்டரிடம் சென்றுவிட்டு திருப்பிவந்து கொண்டு இருக்கையில். இருவரும் சோர்ந்து போய்த்தான் இருந்தார்கள்.. வெண்பாவும்தான்..

வீட்டின் உள் நுழைந்ததும்.. ‘என்னங்க டாக்டர் அவன்.. இதுக்கு அந்த லதாவே பரவாயில்லை.. கையகால ஒடச்சுடுவான் போல…. பாவங்க எம்புள்ள..’

‘டாக்டருக்கு பின்ன எப்டிதாம்மா தெரியும்.. நம்ம மகளுக்கு என்னன்னு.. பாத்தாத்தானே கண்டு புடிக்க முடியும்..’

’இருந்தாலும்.. கண்ணு தெரியுதான்னு டார்ச் அடிச்சு பாக்குறான்.. ‘

‘அவர் எதுக்கு பாத்தாருன்னு தெரியுமா.. நீ என்ன பெரிய டாக்டரா.. விடுடி..’

‘போங்கங்க.. உணர்ச்சி இருக்கான்னு கைய கால கிள்ளி பாக்குறான்.. கடன்காரன்.. பிஸியோரெரப்பிஸ்ட் அட்ரெஸ் வாங்குறதுக்கா இவன்கிட்ட போனோம்”

காலையில்

கைராசிக்காரர்ன்னு பேர் எடுத்த டாக்டர்..

மாலையில்

கடன்காரன் என்னும் பெயர் எடுத்தார்..

அவளுக்கு இருந்த நம்பிக்கை என்னும் புள்ளியில் சிறிது வெளிச்சம் குறைந்தது..

‘இனிமே எங்கயும் எம்புள்ளைய கொண்டு போறதா இல்லீங்க…”

*******

காலை..

வெண்பாவிற்க்கு 2 வயது ஆகி இருந்தது.. வெண்பாவும் அமுதாவும் கிளாசுக்குகிளம்பிக் கொண்டு இருந்தார்கள்..

எங்கேயும் கொண்டு செல்வதில்லை என்ற சபதம் எடுத்த அடுத்த காலையிலிருந்தே இந்த பிஸியோதெரோபிஸ்ட் ஸ்கூல் வர ஆரம்பித்தாள்..

எவ்வளவு குழந்தைகள்.. எவ்வளவோ குழந்தைகள்… ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று முடியவில்லை…

3 வயதாகியும் தலை நிற்காத குழந்தையைப் பார்த்தாள்.. ஆண்டவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்த நாள்…

“வெண்பாங்க பேரு.. உக்காருவா.. அவங்க அப்பா குரல் கேட்டா சிரிப்பா.. நான் விட்டு நகர்ந்தா அழ ஆரம்பிச்சுடுவா… நல்லா அடையாளம்லாம் தெரியுது.. அது என்னவோ தெரியல.. தவக்க மாட்றா.. நிக்க மாட்றா… இப்போ பாருங்களேன் ….ட்டா.. சொன்னா சிரிப்பா பாருங்களேன்…”

யாரோ ஒரு அம்மாவிடம்.. உம்ம்புள்ள அளவுக்கு இல்ல.. என் புள்ள அறிவானதாக்கும்ன்னு ப்ரூவ் பண்ணுவதற்காக பேசிக் கொண்டு இருந்தாள்..

.’ட்ட்டாஆ,..’

வெண்பா சட்டையே பண்ணாம பார்த்துக் கொண்டு இருந்தாள்..

‘தா… வெண்பமா… ட்டா டா…’

ம்ம்கூம்.. ஒன்னும் ரியாக்சன் இல்ல…

அந்த யாரோ ஒரு அம்மா சொன்னாள்.. ’சரி விடுமா.. தூக்கத்தில இருக்கும்.. அழகு பெத்த புள்ள நல்லாயிரும் பாரு..’

அந்த அம்மாவின் குழந்தையும் நல்லாஆக வேண்டுமென வேண்டிக்கொண்டாள்…

ஆனாலுன் சிறிது கோவம்தான் வெண்பா மேல்… பாவிமக இப்பிடி படுத்துறாளேன்னு வெண்பாவை திட்டுவதாக நினைத்து அவளையே பாவியாய் திட்டிக் கொண்டாள் அந்த அப்பாவி…

*************************************

காலை…

4 வயதாகி இருந்தது வெண்பாவிற்க்கு…

4 நிமிடமாக கதையை படித்துக் கொண்டிருந்த உங்களுக்கே இது எப்போது முடியுமென அயற்சி ஏற்பட.. 4 வருடமாக.. அந்தப் பிள்ளையை மனதில் மட்டுமல்லாது கையிலும் சேர்த்து சுமப்பவர்களுக்கு… சொல்ல ஒன்னா துக்கம்..

மதனுக்கு அந்த அயற்சி ஏற்பட்டது உண்மை…

இப்போதெல்லாம் பிஸியோதெரபி க்ளாஸுக்கும் செல்வதில்லை.. படிப்படியாக குழந்தை படுத்த படுக்கை ஆயிட்டா…

தூக்கி சுமக்க முடியாத அளவிற்கும் வளர்ந்துவிட்டாள்…

ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக தெரிந்தார்கள்..

வீட்டில் சில நால்கள் பிஸியோ செய்தார்கள்.. சித்தா.. ஆயூர்வேதம்.. பயிற்சிகள்.. ஒன்றும் நடக்கவில்லை.. வெண்பா சிரித்தபடியே இருந்தாள்.. ‘ஏண்டா இவ்ளோ கஷ்டப்படுறீங்கன்னு’ கேக்குற மாதிரி.. தெய்வீக சிரிப்பு.. கடவுளின் நேரடி பிள்ளை அல்லவா…

வெண்பாவை மடியில் கிடத்தியபடி.. அவளுக்கு பாலுடன் பிஸ்கெட்டையும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. இப்போதெல்லாம் பிள்ளை ஒன்றையும் விழுங்குவது இல்லை.. தொண்டை வரை உணவை வைத்துவிட வேண்டி இருந்தது.. அது கண்டிப்பாய் புதிதாய் பார்ப்பவர்களின் மனதை ஏதோ செய்யும்…

மதன் ஆபீஸ் முடிந்து வந்து சேர்ந்தான்..

‘ஏங்க.. உங்க மக உங்க குரல் கேட்டாலே குஷியாயிடுறாங்க.. சிரிக்கிறா பாருங்களேன்…’

‘ம்ம்.. மதன் ஒரு 2 நிமிடம் கிட்ட அமர்ந்து பார்த்தான்.. இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..

அன்று வெண்பா சாப்பிட ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டாள்…

மதனுக்கு திடீரென்று வெண்பாவைப் பற்றி கேள்வி கேட்பவர்களைப் பற்றி சிந்தனை திரும்பியது..

‘பிள்ளை நடக்கலயா.. ஆயூர்வேதா ட்ரை பண்ணிங்களா..?’ என்னவோ எம்புள்ள மேல இவர்களுக்குத்தான் அக்கரை போல.. ‘அடுத்தவன் கேட்டுடுவானோன்னு சீக்கிரம் புள்ள பெத்துக்க முடியும்.. அடுத்தவன் கேட்டுடுவானோன்னு இந்தப் புள்ளைகளும் எல்லாத்தையும் செய்யாதா…

‘என்னங்காஅ………’

அவன் பதறியபடி வெளியில் வந்தான்.. இந்த என்னங்கவின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது அதனாலேயே பயந்த படி வந்தான்…

அவன் நினைத்தது சரிதான்.. அதேதான்..

‘ஏங்க.. ஏங்க.. மடில சாப்டுட்டே இருந்தாங்க.. தண்ணி குடுத்தேங்க.. குடிச்சா… அதுக்கப்புறம் குடுத்தா தலை மடியிலேயே நிக்கலைங்க.. கீழ விழுந்துட்டே இருக்கு.. கைய புடிக்கவே பயமா இருக்கு.. கொஞ்சம் நீங்க………..’

அவன் பார்த்தான்.

நம்ம பிள்ளைக்கு ஒன்னும் இல்லதானே.. ???’ அவளே குழந்தையாகக் கேட்டாள்..

மதன் பதில் சொல்லவேயில்லை…

ஆம் வெண்பா

ஆண்டவனடி சேர்ந்தாள்…

***************************

இன்று

அதிகாலை…

‘என் செல்லம்ல..

வெண்பா குட்டி..

ஹாப்பி ஹாப்பி பர்த் டே டி குட்டி….’

மதன் அவனது மனைவியை எழுப்பவில்லை..

கனவிலாவது வெண்பாவுடன் அமுதா வாழட்டுமே என்று…

அல்பாயுசில் எடுத்துக்கொண்ட மகளை

அதிகாலையில் மட்டுமே

அனுப்பி வைக்கிறான்

ஆண்டவன்…

அவள்

அம்மாவிடம்…

20 comments:

கோமாளி செல்வா said...

ரொம்ப அருமையா இருக்குங்க .. ஒரு குழந்தைப் பெற்று அது ஒரு குறைபாடோட பிறந்திட்டா பெத்தவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க அப்படின்னு ரொம்ப உணர்வுப்பூர்வமா சொல்லிட்டீங்க.

சத்தியமா உங்க எழுத்து நடை அபாரம். அந்தப் பாவி மகள் , அப்புறம் இரண்டுபேருமே குழந்தைதான்னு சொல்லுறது , அப்புறம் ஆண்களின் ம் சொல்லுறது .. இன்னும் நிறைய ..!

ஒரு நல்ல சிறுகதை படிச்ச உணர்வு இருக்கு இப்ப . அதிலும் அப்பா அம்மா பாசத்த பத்தியும் கொஞ்சம் சொல்லிருக்கீங்க .. நான் இப்பத்தான் அம்மா பாசம் பத்தி அம்மா அப்படின்னு கூமாளில எழுதினேன் .. அந்தப் பதிவு மாதிரி சில உணர்சிகளும் இருக்கு .. ரொம்ப பிடிச்சிருக்கு :-))

Anonymous said...

superb.. Write more
- karaiyaan

நாகராஜசோழன் MA said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. தாய்மையும் குழந்தைப் பேறையும் ரொம்ப அழகான நடையில் எழுதி இருக்கீங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு சிறுவனின் எழுத்தாக இல்லை. கதை அற்புதம். படிக்கும் போது நமக்கும் ஒரு ஏக்கம். படித்து முடித்ததும் ஒரு வலி.

தல எங்கயோ போய்டீங்க

கடைக்குட்டி said...

@செல்வா - வஞ்சமே இல்லாம பாராட்டி இருக்கீங்க !! ரொம்ப நன்றி :)

மென்மேலும் மெருகேத்திக் கொள்வேன்.. கண்டிப்பாக !!

கடைக்குட்டி said...

நன்றி கரையான் :)

கடைக்குட்டி said...

@ சோழர் பரம்பரை எம்.எல்.ஏ - நெம்ப டாங்க்ஸு!!

கடைக்குட்டி said...

SUREஷ்(பழனியிலிருந்து) said...
ஒரு சிறுவனின் எழுத்தாக இல்லை. கதை அற்புதம். படிக்கும் போது நமக்கும் ஒரு ஏக்கம். படித்து முடித்ததும் ஒரு வலி.

தல எங்கயோ போய்டீங்க

//

தல ..

இந்தப் பாராட்டு நான் எதிர்பார்க்காதது !! ஆனால் மிகவும் வலிமையுள்ளது.. 2 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய கதைகளுக்கு நீங்க கொடுத்த நேர்மையான பின்னூக்கங்களே இப்போது கொஞ்சமேனும் மாற்றம் தெரியுமின் அதன் காரணம்...

ரொம்ப சந்தோசம் தல.. என்னதான் மென் உணர்வுகள் எழுதினாலும்.. இன்னும் சின்னப் பையந்தான் தல !!;)

Meens said...

நான் கோவையில் என் பக்கத்து வீட்டில் இப்படி ஒரு குழந்தையை பார்த்திருக்கிறேன். என்ன ஓடும் ஆடும். இருந்தாலும் தண்டுவடத்தில் பிரச்னை. சரி செய்யலாம் என்று ஆப்பரேஷன் செய்யப் போய் அது தவறாகி படுத்த படுக்கையாய்...
அந்தப் பெற்றோற்களின் கவலையை கண்டு கவலை கொண்டவன் நான்.
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
'கண் கலங்கியது கடைசி வரிகளில்' என்று இங்கே சொல்வது உங்கள் எழுத்தின் வெற்றியே என்று கொள்க..!

கடைக்குட்டி said...

'கண் கலங்கியது கடைசி வரிகளில்' என்று இங்கே சொல்வது உங்கள் எழுத்தின் வெற்றியே என்று கொள்க..!

இந்தப் பின்னூட்டத்திற்க்கு என் கண் கலங்கியது.. நன்றி மின்மினி.. :) நீளம் போன்ற குறைகளை அடுத்து எழுதும் கதைகளில் குறைத்துக் கொள்கிறேன் !!

chidambaram.krish said...

சிறப்பு..! அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் காலை நேரத்தில் தொடங்குகின்ற ஐடியா நன்று.! நெகிழ்ந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்..!

விக்ரமாதித்தன் வேதாளம் said...

ஒரு வலியை ஆக்க பூர்வமாக பதிவு செய்துள்ளீர்கள். வெறும் எழுத்தால் மட்டும் கண்ணீர் வர வைக்க முடியாது, எழுதுபவன் அந்த வலியை உணர்ந்திருந்தால் மட்டுமே எழுத்தினால் அந்த வலியை உணர்த்த முடியும்.

ஒவ்வொரு பாராவுக்கும் இடையில் எதிர்பார்ப்பு கூடி போகிறது.

படித்து முடித்தபின் மனது என்னவோ செய்கிறது, ஏதோ ஒரு ரணம், அப்படி நடந்திருக்க கூடாது என்று உன்னைத் திட்டத்தான் செய்கிறது.


.... இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு சகா..! நிறைய எழுதணும்.

இராஜராஜேஸ்வரி said...

உணர்வுப்பூர்வமான கதை. பாராட்டுக்கள்.

Anonymous said...

வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..

ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது
.
ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே
….
பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்

இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..
///////////////
மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா?

Anonymous said...

வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..

ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது
.
ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே
….
பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்

இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..
///////////////
மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா?
ஏதோ விளையாட்டு பையன் போன்ற தோற்றத்தில் உள்ளவரிடம் இருந்து இவ்வளவு பெரிய மனுஷத்தனமான கதை சற்று இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.தொடருங்கள்.:))

இப்படிக்கு உமாக்ரிஷ்

கடைக்குட்டி said...

//படித்து முடித்தபின் மனது என்னவோ செய்கிறது, ஏதோ ஒரு ரணம், அப்படி நடந்திருக்க கூடாது என்று உன்னைத் திட்டத்தான் செய்கிறது.
// @வேதாளம்

நன்றி சகா.. திட்டுக்கு அல்ல.. இதுதானே பாராட்டு

கடைக்குட்டி said...

@இராஜராஜேஸ்வரி - நன்றிகள்!!

கடைக்குட்டி said...

@உமாக்ரிஷ்

//மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.//

நன்றிகளும் அதிகமாக... :)

//
இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா? //


நாம எதாவது ஒன்னு ஒழுங்க எழுதும் போதுதான் இந்த மாதிரி சந்தேகத்த கெளப்புறாய்ங்க... :) கண்டிப்பாக நானே நானே..


//ஏதோ விளையாட்டு பையன் போன்ற தோற்றத்தில் உள்ளவரிடம் இருந்து இவ்வளவு பெரிய மனுஷத்தனமான கதை சற்று இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.//

:) மென் உணர்வுகள் .. இதுல பெரிய மனுஷதனத்துக்கு இடமில்லை..

//தொடருங்கள்.:))//

கண்டிப்பாக :)

Sriram said...

அருமை. உங்கள் எழுத்து நடை பிடித்து இருக்கிறது. இன்னும் நல்ல தலைப்பு தேர்ந்தேடுதுருக்கலாம்னு நினைக்கிறன்.

கடைக்குட்டி said...

@sriram

நன்றி .. ஆனா எனக்கு ரொம்ப பிடித்ததே இந்த தலைப்புதான் :)

openion differs ilaya ??? :)

அடுத்த கதைக்கு உங்களுக்கு பிடித்த மாதிரி பெயர் வைக்கிறேன் :)