December 30, 2009

முடிந்தது சூர்யாவின் கதை 2010ல்...2008 கடைசில பதிவுகள் எழுத ஆரம்பிச்சு கிழிச்சது பெருசா ஒன்னுமில்ல.. 2009 முழுசும் வெட்டியாவே போச்சு... அதுக்கு காரணம் ரெண்டு..

1* என் மனத் தயக்கங்கள்..
2* முதலாவதாக சொன்னதேதான்...

மனத் தயக்கங்கள பட்டியலிடுறேன்... மனசுவிட்டு பேசுனா குறையுதான்னு பாப்போம் மனத்தயக்கம்....

** பின்னுட்ட மேனியா **

எந்த பின்னூட்டத்துக்கு நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. நம்ம பதிவ பிரிச்சு மேயுற.. புதுசா யோசிக்க வைக்குற பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாம்.. படிக்காமலேயே பின்னூட்டம் போட்டா அதுக்கும் நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???

என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..

*** பதிவுகள் இடைவெளி ***

ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க??? என்னைப் பொருத்த வரைக்கும் ஏதாவது ஒரு திரட்டில நம்ம பதிவு மொத பக்கத்துல வந்துட்டா.. அப்பா.. ஒலகமே நம்ம இடுகைய படிச்சுடுச்சுடா மக்கான்னு ஒரு சந்தோசம்..

அதாவது என்னுடைய கணக்குப்படி ஓட்டுகள்தான் அடுத்த பதிவ தீர்மானிக்குது..
யாரும் படிச்ச என்ன படிக்காடி என்னன்னு மவனே 2 ,3 தோணுனாலும் அடிச்சு ஆடிடலாமா???

*** தமிழ் மணம் **

நானெல்லாம் தமிழிஷ்ன்னு ஒன்னு ஒருக்குறதாலதான் கொஞ்சமாவது எழுதுறேன்.. டாக்டர் சுரேஷ்கிட்ட கடந்த ஆண்டு முதலே பொலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன்.. அதுல எப்புடி சேக்குறதுன்னு தெரியலன்னு..

கஷ்டப்பட்டு சேத்தாலும்.. ஒரு ஓட்டு கூட விழல.. ஏன்???
தமிழ்மணத்துல விருதுகள்ளாம் தர்றாங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு.. ஆனா அடுத்த வருஷம் நாமளும் வரணும்ல.. என்ன பண்றது..

***வயது***

இதுதாங்க ரொமப பெரிய தடை.. முக்கியமா பதிவர் சந்திப்புகள்னாலே பயமா இருக்கு.. அதுல இருக்குற எல்லார் மொகத்த பாத்தாலும்.. என்னதான் எழுத்துல கலாய்ச்சாலும்.. சில பேர் நாங்கள்ளாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டாலும்..

நாம ரொம்ப சின்ன பயலா இருப்போமோ,.. யாரும் மதிக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம்.. (வயசு 21 ஆனாலும்.. எது அந்த 20க்கு அப்புறம் வருமே அந்த 21ஆ கேட்டுடக் கூடாதில்ல..)அதான் சென்னைலயே இருந்தாலும் பதிவர்களிடம் போனில் கூட பேசியது இல்லை.. சந்திப்புகளுக்கும் போனதில்லை,.,. (ஜெட்லிகூட ஒட்டிக்கிட்டே போய் 2010ல எல்லாரையும் பாக்கலாம்ன்னு ஒரு திட்டம்.. என்ன ஜெட்லி போலாமா???)

**மேட்டர்**

பதிவுக்கானா மேட்டர்.. ரொம்ப ஆழமா ஒரே கருத்தா இருக்கனும்னு நெனப்பேன்.. நேரமிருந்தாலும் சில சமயம் இதெல்லாமா எழுதுவதுன்னு எழுதுவது இல்லை.. (சினிமாவ தவிர மிச்சதெல்லாம் கவனிக்கப் படுவதில்லையோன்ற ஒரு பயம்..)
ஆனா இப்போத்தான் குவியல்,அவியல்,காரச்சட்னின்னு எல்லா அண்ணன்மார்களும் ஏன் எழுதுறாங்கண்னு புரியுது..

நாமளும் அடுத்த வருஷம் முதல் தாக்கிடுவோம்.. ( நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்...)

மனசுல உள்ளதெல்லாம் கொட்டியாச்சுங்க.. தேறுவேனான்னு சொல்லுங்க..

பின் குறிப்பு :
-
ரொம்ப ஆசைப்பட்டு துவங்கிய இரண்டு தொடர்கள் “சரவணன் முதல் சூர்யா வரை” மற்றும் ”எஞ்ஞனியா வா” .. 2010க்குள்ள அந்த சூர்யா கதையையும் .. இந்தத் தொடரையும் முடிச்சுர்றேங்க...

40 comments:

ஸ்ரீநி said...

thala indha idea yepdi irukkunnu paarunga

http://sangadhi.blogspot.com/2009/12/blog-post_29.html

பேநா மூடி said...

நா கொஞ்ச நாளுல சென்னை வந்துருவேன் அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து பதிவர் சந்திப்புக்கு போவோம்... ஹி ஹி..

Bhuvanesh said...

அட என்னை மாதிரியே உங்களுக்கும் இத்தன தயக்கமா ?? (இப்ப இந்த பின்னூட்டத்துக்கு தயக்கம் இல்லாம நன்றி சொல்லுங்க!!

நானும் சென்னை தான்.. வா நண்பா பதிவர் சந்திப்புக்கு சேந்தே போவோம் !!

(போன கமெண்ட் எங்கையோ தப்பு நடந்திருச்சு.. டெலீட் பண்ணிருங்க )

ஸ்ரீராம். said...

படிச்சுட்டு எழுதறவங்க கூட உரையாடுங்க...படிக்காம டெம்ப்ளேட் பின்னூடத்திற்கு பதில் சொல்லுங்க...பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்து என்ன நடந்ததுன்னு எழுதுங்க...யார் படிக்கறாங்கன்னு தயக்கப் படாம என்ன தோணுதோ எழுதுங்க....

சங்கர் said...

//என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..//

படிச்சிட்டு போடுறாங்களோ படிக்காம போடுறாங்களோ, போடுறது தான் முக்கியம், அதனால் எல்லாத்துக்கும் நன்றி சொல்லலாம், (தனித்தனியா நன்றி சொன்னா, நாளைக்கு பார்க்கும்போது பின்னூட்டம் எண்ணிக்கை அதிகமா தெரியும், ஒரு தன்னம்பிக்கை வரும்)

சங்கர் said...

//ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க???//

நம்ம ஜெட்லி, வாரத்துக்கு 3 - 4 போதும்ன்னு சொல்றாரு, என்னை பொறுத்தவரை எழுத மேட்டர் கிடைச்சா உடனே எழுதிடணும்

சங்கர் said...

//வயசு 21 ஆனாலும்.. எது அந்த 20க்கு அப்புறம் வருமே அந்த 21ஆ கேட்டுடக் கூடாதில்ல..//

12 ன்னு சொன்னாக்கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்

கலையரசன் said...

// நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???//

ஓ... நீங்க நேரத்தை வீனாக்காமதான் எல்லாதையும் சொய்வீங்கலோ???
நன்றி சொன்னா, நன்றி சொன்னத்துக்கு நன்றி ன்னு நாங்க திருப்பி நன்றி
சொல்லுவாம்முல்ல??

கலையரசன் said...

//ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க???//

ம்... ஒன்னே முக்கா கிலோ மீட்டரு!
எதுக்குய்யா.. இடைவெளி எல்லாம் கேக்குற.. கொழந்தையா பெத்துக்க போற??

சங்கர் said...

//நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..//

இந்த வார வேட்டைன்னு வைக்கலாம், (அந்த பரிசை நீங்களே வைத்துக்கொள்ளவும்)

கலையரசன் said...

//தமிழ்மணத்துல விருதுகள்ளாம் தர்றாங்க.//
அந்த விருதை கொண்டுபோயி மார்வாடிகடையில வச்சி பொறை வாங்கலாமா பாஸூ???

//சில பேர் நாங்கள்ளாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டாலும்//
இதுக்கு நீ நேரடியவே அவர்தான்னு சொல்லியிருக்கலாம்...
யேய்! ஆனா.. என்னை சொல்லலையில்ல??

ஜெட்லி said...

யோவ்
டைடில்
பார்த்தவுடன்
மிரண்டுட்டேன்.....

ஜெட்லி said...

//என்ன ஜெட்லி போலாமா???)//

கண்டிப்பா

T.V.Radhakrishnan said...

அடுத்த பதிவர் சந்திப்புக்கு நீங்க என் கூட வர்றீங்க..

லோகு said...

நீ சொல்ற எல்லா தயக்கமும் எனக்கும் இருக்கு மாப்ள.. என்ன பண்றதுன்னு தெரியல..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நான் வருவதற்கு முன்பே ஐந்து தமிழ்மண ஓட்டுக்கள் தல,, வாழ்த்துக்கள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தல தலைப்பை மாத்துங்க..,

சுடுதண்ணி said...

தயக்கமில்லாமல் நோக்கம் போல் இருங்க ம்ச்சி :D..

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கடைக்குட்டி said...

ஸ்ரீநீ உங்க கடைல வந்து உங்களுக்கு மொய் வெச்சாச்சு..

கடைக்குட்டி said...

பேநா மூடி said...
நா கொஞ்ச நாளுல சென்னை வந்துருவேன் அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து பதிவர் சந்திப்புக்கு போவோம்... ஹி ஹி..

//
தட்டு தட்டு மச்சி தட்டு :-)

கடைக்குட்டி said...

புவனேஷ் கமெண்ட் டெலீட் பண்ணிட்டேன்..

கண்டிப்பா அடுத்த சந்திப்புக்கு சேந்து போவோம்.. :-)

கடைக்குட்டி said...

ஸ்ரீராம். said...
படிச்சுட்டு எழுதறவங்க கூட உரையாடுங்க...படிக்காம டெம்ப்ளேட் பின்னூடத்திற்கு பதில் சொல்லுங்க...பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்து என்ன நடந்ததுன்னு எழுதுங்க...யார் படிக்கறாங்கன்னு தயக்கப் படாம என்ன தோணுதோ எழுதுங்க....
//
கண்டிப்பாக...

அன்பிற்க்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

சங்கர் said...
//என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..//

படிச்சிட்டு போடுறாங்களோ படிக்காம போடுறாங்களோ, போடுறது தான் முக்கியம், அதனால் எல்லாத்துக்கும் நன்றி சொல்லலாம், (தனித்தனியா நன்றி சொன்னா, நாளைக்கு பார்க்கும்போது பின்னூட்டம் எண்ணிக்கை அதிகமா தெரியும், ஒரு தன்னம்பிக்கை வரும்)

//
அதென்னவோ கரெக்டுதான்... :-)

(தலைவா உங்க பேச்சுக்கு பதில் சொல்ற மாதிரி இல்ல..:-)

கடைக்குட்டி said...

நம்ம ஜெட்லி, வாரத்துக்கு 3 - 4 போதும்ன்னு சொல்றாரு, என்னை பொறுத்தவரை எழுத மேட்டர் கிடைச்சா உடனே எழுதிடணும்
//

இது உருப்படியான பின்னூட்டம் :-)

எழுத மேட்டர் கெடச்சாலும்.. இதுக்கு முன்னாடி இருக்குறதையே படிச்சாங்களான்னு தெரியாம எப்பிடி புதுசா????

கடைக்குட்டி said...

12 ன்னு சொன்னாக்கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்
//

யோவ் சங்கரு.. உன் நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா??? :-) பயபுள்ள எப்புடி பேசுது பாரேன்..

கடைக்குட்டி said...

கலையரசன் said...
// நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???//

ஓ... நீங்க நேரத்தை வீனாக்காமதான் எல்லாதையும் சொய்வீங்கலோ???
நன்றி சொன்னா, நன்றி சொன்னத்துக்கு நன்றி ன்னு நாங்க திருப்பி நன்றி
சொல்லுவாம்முல்ல??

//

ஹி ஹி.. ஒன்னும் பேசுறாப்புல இல்ல.. ஆனா கெடக்குற கொஞ்ச நேரமும் இப்புடி போகுதேன்னு சொல்ல வந்ததுதான் அது..

ரைட்டு விடுங்க.. :-)

இனிமே நன்றி..

நன்றிக்கு நன்றி..

நன்றிக்கு நன்றிக்கு நன்றின்னு இறங்கிடலாம்....

கடைக்குட்டி said...

கலையரசன் said...
//ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க???//

ம்... ஒன்னே முக்கா கிலோ மீட்டரு!
எதுக்குய்யா.. இடைவெளி எல்லாம் கேக்குற.. கொழந்தையா பெத்துக்க போற??

//
தப்புதான் கேட்டது தப்புதான்...

கேப்பியா கேப்பியா கேப்பியா????

இனிமே தோனுறப்பலாம் ..
எழுதிடலாம்.. :-)

கடைக்குட்டி said...

சங்கர் said...
//நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..//

இந்த வார வேட்டைன்னு வைக்கலாம், (அந்த பரிசை நீங்களே வைத்துக்கொள்ளவும்)
//

உண்மைலேயே பெயர் நல்லா இருக்கு,.,.,.

உங்கச் மெயில் ஐடி தாங்க.. பரிசு தரணும்.. :-)

(வரப்போகும் விளைவுகளுக்கு கம்பேனி பொறுப்பல்ல.. :-)

கடைக்குட்டி said...

இதுக்கு நீ நேரடியவே அவர்தான்னு சொல்லியிருக்கலாம்...
யேய்! ஆனா.. என்னை சொல்லலையில்ல??
//

கலை..

என்ன இப்பூடி அகப்பட்டுடீங்களே... :-)

கடைக்குட்டி said...

ஜெட்லி said...
//என்ன ஜெட்லி போலாமா???)//

கண்டிப்பா

//
அன்பிற்க்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

T.V.Radhakrishnan said...
அடுத்த பதிவர் சந்திப்புக்கு நீங்க என் கூட வர்றீங்க..

//
அன்பிற்க்கு நன்றி :-)

கடைக்குட்டி said...

லோகு said...
நீ சொல்ற எல்லா தயக்கமும் எனக்கும் இருக்கு மாப்ள.. என்ன பண்றதுன்னு தெரியல
//

ம்ம்ம்...

கடைக்குட்டி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
நான் வருவதற்கு முன்பே ஐந்து தமிழ்மண ஓட்டுக்கள் தல,, வாழ்த்துக்கள்
//

நன்றி தல:-)

கடைக்குட்டி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
தல தலைப்பை மாத்துங்க..,

//

இல்ல தல.. எல்லார் கவனத்த ஈர்க்க மட்டும்ந்தான் இந்த தலைப்பு..

கடைக்குட்டி said...

சுடுதண்ணி said...
தயக்கமில்லாமல் நோக்கம் போல் இருங்க ம்ச்சி :D..

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

//

நன்றி :-)

வாழ்த்துக்கள் உங்களுக்கும் :-)

கடைக்குட்டி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்

//வாழ்த்துக்கள் உங்களுக்கும் :-)

கடைக்குட்டி said...

நண்பர்களுக்கு நன்றி :-)

ஒரு தெம்பா இருக்கு...

அடுத்த வருஷம் பாப்போம்...

ILLUMINATI said...

Happy new year friend........
I'm new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/

Mrs.Faizakader said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/