January 05, 2010

எஞ்ஞினியா வா! -- 3



பழச படிக்க இங்க க்ளிக்குங்க..

கம்யூட்டர் பொட்டி அறிமுகமாகி.. அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து பல பண முதலைகள் (ஏங்க கெட்ட பணக்காரங்கள பண மொதலனு சொல்றாங்க??) அதன் வீரியத்தை உணர்ந்து உடனே தனியார் காலேஜ்கள் தொடங்க வில்லை..

அதுக்கு கொஞ்சம் காலமாச்சு.. ஆனால் அது அதன் பீக்கில் இருந்தது 95-2000 வரை.. அந்தக் கால கட்டத்தில் எஞ்ஞினியர் என்றாலே தனி மதிப்பு..

அந்த காலகட்டத்தில் பள்ளி படித்து கொண்டிருந்த (என் போன்ற) பிள்ளைகளுக்கெல்லாம் அப்போ வெளிநாடு போனா அண்ணங்களும் அக்காளும்தான் பெரிய இன்ஸ்ரேஷன்.. அத மனசுல வெச்சுதான் பெத்தவங்களும் அடுத்தடுத்து பிள்ளைகளை செர்க்க எஞ்ஞ்னியரிங் கல்லூரிகளைத் தேடி அலைந்தனர்..

ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி எந்த வெள்ளக்காரன அனுப்பினோமோ அவங்கிட்ட சேவகம் செய்ய பிள்ளைகளை தயார் பண்ணியது சமூகம்.. இளைஞ்ர்களின் முகம் மாறிப் போனது..

மிக அதிகமான பணம் விளையாடியது.. இளைஞர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு சென்றனர்.. பிள்ளைகளைப் பார்க்க பெத்தவங்களும்..

ஆனா என்னதான் கண்டிப்பாக இருந்த காலேஜ்களை இந்த மாதிரி கெளப்பி விட்டாலும்.. எண்ணிக்கை அதிகரித்தாலும்.. நமக்கு இன்னும் உலகக மார்க்கெட்டுல டிமாண்ட் இருக்குங்க...


இவ்ளோ பேர எஞ்ஞினியரா மாத்துறது தப்பில்ல இந்த சமூகத்துல.. ஆனா நாட்டுக்கு இது நல்லதில்லை.. சொல்வதை செய்யும் கிளிப்பிளைகள் தயாரிக்கப் படுகிறார்கள்..

அப்புறம் எப்புடிதான்பா படிக்கிறது?? அதுக்குன்னு எதுனா வழி இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு.. 2000 ல உடனே கெடச்ச அந்த பணமும் சமுதாய மதிப்பும் கெடைக்கும்னு நெனக்காம உண்மையாக படிக்கும் எஞ்ஞினியருக்கு தன் தனிதன்மையை காக்கும் எஞ்ஞினியருக்கு காலம் வாய்ப்பளிக்கும்..

எப்பூடி...???


--தொடரும்..

( ஆணி அதிகம்.. எனவே அதிகமாக எழுத முடியவில்லை.. .. பின்னூட்டமிடுங்கள்.. விவாதிக்கலாம்.. )

12 comments:

கலையரசன் said...

பின்னூட்டதில் கேள்வி கேட்க டைம் இல்லை..
அடுத்த பதிவுக்கா பார்க்கலாம்... பை! பை!!

Raju said...

நல்லாத்தான் போகுது பாஸ்.
நடத்துங்க.

ஸ்ரீராம். said...

தொடருங்கள் படிக்கலாம்.

hayyram said...

gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

ஜெட்லி... said...

//gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com
//

ஆண்டவா....உங்க பின்னூட்டம் தான் பாஸ் எல்லாம்
ப்ளாக்ளையும்...

gud. continue!!

சுடுதண்ணி said...

//ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி எந்த வெள்ளக்காரன அனுப்பினோமோ அவங்கிட்ட சேவகம் செய்ய பிள்ளைகளை தயார் பண்ணியது சமூகம்.. இளைஞ்ர்களின் முகம் மாறிப் போனது..
//

உண்மை..
அருமையாக எழுதிகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.

கடைக்குட்டி said...

பின்னூட்டதில் கேள்வி கேட்க டைம் இல்லை..
அடுத்த பதிவுக்கா பார்க்கலாம்... பை! பை!!


//

கலை..

தப்புதான்.. ஒத்துக்குறேன்..

ஒரு கேப்பு கெடச்சா பூந்துகலாய்க்கிறீங்களேய்யா...

கடைக்குட்டி said...

நன்றி ராஜூ..

கடைக்குட்டி said...

தொடருங்கள் படிக்கலாம்.
//
ஸ்ரீராம்...

நீங்க படியுங்கள் தொடரலாம் :-)

கடைக்குட்டி said...

என்ன அழகான டெம்ப்ளேட் பின்னூட்டங்க...

அரே ராம்...

கடைக்குட்டி said...

ஆண்டவா....உங்க பின்னூட்டம் தான் பாஸ் எல்லாம்
ப்ளாக்ளையும்...

gud. continue!!

//

ஏங்க ஜெட்லி.. கலாய்க்குற ஆர்வத்துல பதிவ பத்தி எத்வுமே சொல்லலியே ராசா... :-(

கடைக்குட்டி said...

அன்பிற்க்கு நன்றி.. சுடுதண்ணி.. :-)