November 25, 2009

தமன்னாவும்.. சில ஹெச்.ஆர்.களும்...


சில ஹெச்.ஆர்கள்தான் பதிவுக்கான மேட்டர்.. போலாமா??

நான் இதுவரைக்கும் பெரிய CMM 5லெவல் ஹெச்.ஆர். எல்லாம் பார்த்தது இல்லீங்க.. அட்டெண்ட் பண்ணது எல்லாம் சில சுமாரான ஹெச்.ஆர்கள்...

உதாரணமா ஒன்னு சொல்லலாம்.. கெல்லீஸ்ல.. அபிராமிகிட்ட.. ஒரு கம்பேபேபேனி இருக்கு.. அங்கயும் வேல தேடி போனோம் நண்பர்கள் சகிதம்..
கம்பேனி அட்ரெஸ் கண்டுபுடிச்சு போனா அங்க ஒருமளிகை கடை இருக்கு,,, அரே பாபாஜி இது என்ன சோதனைன்னு வானத்த நிமிர்ந்தா...

மூணாவது மாடில கம்பெனிக்கான போர்டு இருக்கு.. பாபா டபுள் க்ரேட்ன்னு சொல்லிட்டு நடைய கட்டினோம்.. மாடி ஏறு வழியில்..

நான் :” மச்சான்... கம்பேபேபேனி அட்டகாசமான எடத்துல இருக்கு

நண்பன்: “ஆமா மச்சான்..”

நான்: இங்கெல்லாம் என்னடா சம்பளம் தரப் போறாங்க.. தம்பி மாச கடைசில உப்பு புளி கீழ கடைல வாங்கிக்கங்கப்பான்னு சொல்வாங்கடா

நண்: அந்த மாமி மெஸ்ல இட்லி சொல்லிட்டு சில்ற நீ கொடுத்துடு ராஜான்னு சொல்வாய்ங்களே அந்த மாதிரியா..

நான்: போற வர்றதுக்கு பஸ்பாஸ் தருவாங்கடா.. அதுக்கு மேல என்ன கேக்குறது..

சிரிப்பை அடக்க முடியவில்லை.. பழைய பாழடைந்த பங்களா மாதிரி.. மோகினி இருக்குமோ அது இதுன்னு கலாய்த்தவாறே 3வது மாடியை அடைந்தோம்..

அங்க போனா அதுக்கு மேல காமெடி.. ஒருத்தன் வெய்டிங்கி இண்டர்வியூக்கு.. நாங்களும் அவனுக்கடுத்து அமர்ந்தோம்.. ஒரு தடுப்பு மாதிரி போட்டிருந்தாங்க.. அதுக்கு உள்ள இருந்து வெளிப்பட்ட பெண் அந்தப் பையனை உள்ளெ அழைத்தது.. ஆனால் அந்தப் பெண்தான் ஹெச்.ஆர்.. கூப்பிடக்கூட அளில்லை.. அட என்னட இதுன்னு நொந்துட்டோம்..

அடுத்து எங்கள் முறை.. நான் உள்ளே போனேன்... செம திமிரா என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு.. உள்ளே போய் 15 நிமிஷம் கதரகதர கேள்வி கேட்டாங்க.. ஒரு மண்ணுக்கும் பதில் தெரியல.. சமாளிக்க கூட முடியல..

எனக்கடுத்து என் நண்பன் முறை.. செத்துட்டான்.. உட்டா போதும்னு ஓடி வந்தோம் அங்கருந்து..

இத ஏன் சொல்றேன்னா.. ஹெச்.ஆர்ங்கிறவங்க எங்க இருந்தாலும் இப்பிடிதான்.. சில பேர் இங்க்லீஷ் பேசுறேன்னு நம்மளவிடமட்டமா பேசி மானத்த வாங்கிக்குவாங்க..

ஒரு கம்பேபேபேனி ஹெச்.ஆர். என் குடும்பத்தை பற்றி மட்டும் கேட்டு விட்டு நல்லா மொக்க போட்டு அனுப்சாங்க... nothin els...

நான் பாத்தவங்கள்ளயே செம கெத்துகளும் உண்டு.. இந்த மாதிரி குடுசைகளில் பார்த்த கெத்துகள் காலத்துக்கும் மறக்காது..

ஹெச்.ஆரை சமாளிக்க என்ன வழி குறிப்பாக புதியவர்கள்..
1* உண்மைய பேசுங்க..
2*நெறயா பேர மீட் பண்ணுங்க.. இன்பர்மேசன் ஸ் வெல்த் தலைவா.. நிறயா அனுபவத்தை சேத்துக்கங்க .. க ல க் க லா ம்.:-)
********************************************************



சரி தமன்னாவுக்கு என்னன்னு கண்ணும் ஜொள்ளுமா கேக்கும் நண்பர்களுக்காக.. இது சீரியஸ் மேட்டர். பகிர்ந்து கொள்ள தோணியது..போன ஞாயித்துக்கிழமை.. சன் டி.வி.யில தமன்னா பேட்டி..

பேட்டி எடுப்பவர் : “நீங்க படத்துல பேசுர டயலாக் எல்லாம் சூப்பர் மேடம்..
தமன்னா ; ஓ.தாங்க் யூ..
பே எ: அதுவும் பரத் உங்கள நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமான்னுகேப்பாரே அதுதான் கலக்கல்..
தம: ஹோ.. ஸோ நைஸ் ஆஃப் யூ..
பே எ : அந்த எடத்துல ஏங்க பீஸ்ன்ற வார்த்த வந்துச்சு..
தம:ஹி ஹி..
பே..எ: நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஹி ஹி
பே.எ: சொல்லுங்க நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஆமா.. நான் ஒரு ஒரிஜினல்பீஸ்..
பே.எ: சிரித்தவாறே.. ஏன் அங்க பீஸுன்னு சொல்றாங்க மேடம்..
த்ம. அப்போத் தான் ஒர்ரு கிக்கூ.. no substitute for me .. ha ha...

என்ன கருமம் புடிச்ச பேட்டி இது.. எனக்கு சுத்தமா புடிக்கலைங்க.. மொழி தெரியாத பொண்ணுன்னா என்ன வேணா பேசிட்றதா???

அரே ஹோ பாபாஜிஜிஜிஜி.... :-)

11 comments:

ஹாய் அரும்பாவூர் said...

hurray vaaah
enjoy the world

ஸ்ரீராம். said...

தமன்னாவுக்காக வோட் போடவில்லை....சொல்லப் பட்ட போது அறிவுக்காகத்தான் போட்டேன்...நிசம்ம்.....மா....

ஸ்ரீராம். said...

உங்களை மாதிரியே எனக்கும் தப்ப்பாயடிச்சி...ஹி..ஹி... போது அறிவு இல்லே...பொது அறிவுன்னு வாசிக்கவும்..

சங்கர் said...

Original Piece எப்போ தமிழ் வார்த்தை ஆச்சு?
இது கூட புரியாம இருக்குமா?
என்ன கொடுமை இது கடைக்குட்டி?

ஜெட்லி... said...

யோ தமன்னாகும் எச்.ஆர்க்கும் என்னய்யா சம்பந்தம்??? சொல்லு சொல்லு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரிஜக்டட் பீஸ் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன் முரளிக்கண்ணன் தன் இடுகையில் உபயோகப் படுத்தியிருந்தார். அந்த கதையின் ஓட்டத்திற்கு மிக அழகாக அந்தப் பதம் பொறுந்தியிருந்தது. அநேகமாக அதன் தாக்கத்தில் எழுதப் பட்ட வசனமாக இந்த ஒரிஜினல் பீஸ் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

கடைக்குட்டி கலக்குங்க...

Unknown said...

ஹா..ஹா.. நானும் அந்த பேட்டி பாத்தேன்.. டென்ஷன் ஆகிட்டேன்...

கடைக்குட்டி said...

arumbavur -- சரிங்க :-)

***
ஸ்ரீராம் -- நம்பிட்டேன் :-)

கடைக்குட்டி said...

ஒரிஜினல் பீஸ் இங்கிலீபீசுதான்..

அதன் உள்ளர்த்தம் தமிழ்தானே சங்கர்..

************

அட என்ன ஜெட்லி இதெல்லாம பப்ளிக்ல கேப்பாய்ங்க..???

கடைக்குட்டி said...

அப்டியா டாக்டரே?? கலக்குறீங்க போங்கோ.. உஞ்க தகவல்கள் சூப்பர்..

****
நன்றி மலிக்கா..

****

ம்ம் பேநாமூடி.. :-)

என்ன கொடும இதெல்லாம்...